கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
652 topics in this forum
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/200…
-
-
- 3 replies
- 394 views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். …
-
- 0 replies
- 101 views
-
-
"காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமா…
-
-
- 3 replies
- 352 views
-
-
"கார்த்திகை தீபம்" [சிறுகதை ] இன்று கார்த்திகை தீபம், 2022. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள…
-
-
- 2 replies
- 235 views
-
-
நாவினால் சுட்ட வடு( சிறுகதை) அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார். அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கே…
-
-
- 1 reply
- 532 views
- 1 follower
-
-
"மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர். எனக்கு அங்கு நடப்பதில் …
-
- 0 replies
- 356 views
-
-
"காத்திருப்பேன் உனக்காக" படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. …
-
- 0 replies
- 312 views
-
-
"விதவையின் கனவு" நான் பதினெட்டு வயதை தாண்டிய குமரிப்பெண்ணாக இருந்தபொழுது, காதல் , காமம் பற்றிய எண்ணங்கள் திறந்தவையாக எனக்கு இருந்தன. நான் ஒளிவு மறைவு இன்றி என் நண்பிகளுடன் சுதந்திரமாக அரட்டை அடிப்பேன். ஆனால் என் கணவர் அதற்கு எதிர்மாறு. அவர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பாரம்பரியமான கட்டுப்பாடுகளுடன் காணப்பட்டார். நாம் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிய பொழுது, மூன்று நான்கு முறை சந்தித்த பின்பு தான் முதல் முத்தமே தந்தார். நானும் ஒவ்வொரு சந்திப்பிலும் அவருக்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியும் பார்த்தேன், ஆனால் அவர் என்னைப்பற்றி முழுதாக அறிவதிலேயே காலம் கடத்தினார். என்றாலும், காலம் ம…
-
- 0 replies
- 518 views
-
-
"தவறான தீர்ப்பு" அக்டோபர் / நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எட்டாவது ரி 20 உலகக்கோப்பை தொடரில், 06/11/2022 அன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் துடுப்பாட்டம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. யார் வெல்லுகிறார்களோ அவர்கள் அரை இறுதி ஆட்டத்துக்குப் போக தகுதி அடைவார்கள். இந்த சூழ்நிலையில் தான் பங்களாதேஷ் அணித் தலைவரும் சிறந்த துடுப்படி வீரருமான சகிப் அல் ஹசன் மைதானத்துக்குள் சென்றார். அப்பொழுது, பங்களாதேஷ் நல்ல நிலையிலும் இருந்தது. அவர் முதல் பந்தை தடுத்த பொழுது, பந்து மட்டையில் பட்டு காலில் பட்டது. அதை சரியாக கவனிக்காமல், மூன்றாவது நடுவர் கூட தவறான தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புத்தான் பாகிஸ்தானை அரை இறுதிக்கு இட்டுச்சென்றது. இதை பார்த்துக்கொண்…
-
- 1 reply
- 319 views
-
-
"நன்றியுள்ள நண்பன்" [நாய்] பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் நாயின் மேல் எனக்கு ஒரு அருவருப்பு எப்பவும். அது. மட்டும் அல்ல, ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும் அதே நாய், வெறி பிடித்து விட்டால், பிஸ்கட் போடுபவனையே கடித்து குதறியதும் கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்னவோ நான், நாய் வளர்ப்பதை எங்கள் வீட்டில் தடுத்துவிட்டேன். என்றாலும் பக்கத்து வீட்டில் நல்ல அழகான நாய் வளர்ந்து வந்தது. நான் வேலைக்கு போகும் பொழுது அல்லது திரும்பி வரும் பொழுது, அந்த வீட்டு அம்மா, தன் செல்ல நாயுடன் படலையில் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்பார். என்னை கண்டால் தம…
-
-
- 4 replies
- 628 views
-
-
"வானம் பார்த்த பூமி" காலநிலை அறிக்கையின் படி, இலங்கையின் வட, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் நீரின் அளவு மிக குறைவாக காணப்படுவதாக கூறுகிறது. அதிலும் மன்னார் காய்ந்த, வறண்ட பிரதேசம் ஆகும். அங்கு நான் ஒருமுறை விடுதலையில் ஊர் சுற்றிப் பார்க்க போனபொழுது, தற்செயலாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அவளைச் சந்தித்தேன். அவள் மிகவும் அழகாகவும் அதே நேரத்தில் எளிய அடக்கமான தோற்றத்திலும் இருந்தாள். அவளின் பெயர் மகிழ்மதி. அவள் அங்கு பெற்றோருடன் வந்து இருந்தாள். இது கிபி ஏழாம் எட்டாம் …
-
- 1 reply
- 597 views
-
-
"விட்டுக்கொடுத்துப் பழகு" 'விட்டுக்கொடுத்துப் பழகு', கேட்க நல்லாத்தான் இருக்குது. ஆனால் பழகின எனக்குத்தான் தெரியும் அதன் கொடுமை . 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் இன்னும் அடி வாங்காதவர்கள் என்றே எண்ணுகிறேன்! காலம் மாற கோலம் மாறும் என்பது உண்மையே! அப்படித்தான் என் மனம் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. நான் என் மனைவியை காதலிக்க ஆரம்பிக்கும் பொழுதே , 'என் மனதுக்கும் உண்மைக்கும் ஒவ்வாத ஒன்றில் நான் என்றும் ஈடுபட மாட்டேன். என் உணவு சைவம் , உடை , அலங்காரம் பகட்டு இல்லாமல், தேவையின் அடிப்படையில். அது என் தனிப்பட்ட கொள்கை, அதே போல நீ…
-
- 0 replies
- 189 views
-
-
"வறுமையின் சிறகினை அறுத்தெறி" அண்மையில் குண்டு தாக்குதலால் கால் இழந்த தந்தையையும், அயல் வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளில் ஈடுபடும் தாயையும், ஆறு பிள்ளைகளில் மூத்தவனாகவும் இன்று நான் இருக்கிறேன். எனக்கு வயது பதின்நான்கு எம் குடிசை "இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்" போல், உணவின்றி வருந்தி, மாறி மாறித் தோண்டி எலிகள் மடிந்த சுவருடையதாக இருக்கிறது. தாயோ "பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வனொடு" என்பது போல பால் காணாது, பால் குடிப்பதையே நிறுத்திவிட்ட பிள்ளையுடன், என் கடைசி தம்பியுடன் வாடி நிற்கிறாள். …
-
- 0 replies
- 363 views
-
-
"சோம்பல் தவிர்" "முயற்சியை தடுக்க கூடியவன் ஒருவனே! அவனே, சோம்பல்!!" ஒரு முறை ஆசிரியர் ஒருவர், சோம்பல் மாணவர்களை கொண்ட வகுப்பறைக்கு அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கமுடன் போனார். எனவே அவர் அங்கு போனதும் மாணவர்களைப் பார்த்து ' நான் இந்த வகுப்பறையில் இருக்கும் அதி கூடிய சோம்பல் மாணவருக்கு ஒரு வெகுமதி கொடுக்கப் போகிறேன், யார் சிறந்த சோம்பல் மாணவர்களோ கை உயர்த்துங…
-
- 0 replies
- 348 views
-
-
"சிவப்பு உருவம்" இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிம…
-
- 0 replies
- 253 views
-
-
"போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். …
-
- 2 replies
- 448 views
-
-
"தேவதை" யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பொறியாளர் ரவி, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், பல வருட கடின உழைப்புக்குப் பிறகு ஒரு மைல்கல்லாக உணர்ந்த ஒரு பயணத்தைத் தொடங்கினான். அவன் தனது இருக்கையில் அமர்ந்ததும், பயணிகளுக்கு உதவி செய்யும் விமானப் பணிப்பெண்ணை அவனால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. விமான அறையின் வரம்புகளை மீறியதாகத் தோன்றும் ஒரு அழகிய அழகை அவள் பெற்றிருந்தாள். அவளது அழகும் வசீகரமும் ரவியை வசீகரித்தது, உண்மையிலேயே அசாதாரணமான ஒருவளை தான் சந்தித்த உணர்வை அவனால் அசைக்க முடியவில்லை. அவளைச் சுற்றி எதோ ஒரு அமைதியும் இனம் தெரியாத அரவணைப்பும் இருந்தது, அது அவனை உள்ளே இழுத்து, அவனை மயக்கியது. ஆனால் எனோ இது கண்டவுடன் ஏற்பட்டது அல…
-
- 0 replies
- 292 views
-
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] …
-
- 0 replies
- 511 views
-
-
"காதல் தந்த தண்ணீர் குடம்" நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன். இது தான் என் இரவு சாப்பாடும் கூட. நான் இந்த ஊருக்கு அண்மையில் வேலை மாற்றம் பெற்று வந்தவன். எனக்கான அரச விடுதி பெற ஒன்று இரண்டு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். ஆகவே தற்காலிகமாக ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளேன். ஆகவே சமையலுக்கு அங்கு பெரிதாக வசதி இல்லை. எனவே காலை, மதிய உணவை வேலை தளத்திலும், இரவு உணவை இலேசாக இந்த பெட்டி கடையிலும் இப்போதைக்கு சமாளிக்கிறேன் ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லத்தான் வேண்டும், இந்த பெட்டிக் கடையுடன் சேர்ந்த வீட்டில் தான் கடைக்கார…
-
-
- 4 replies
- 318 views
-
-
"விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆ…
-
- 0 replies
- 378 views
-
-
"காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இ…
-
- 2 replies
- 416 views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும்18 வயது ரவியும்…
-
- 0 replies
- 183 views
-
-
"மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இரு…
-
- 0 replies
- 419 views
-
-
'என் தங்கை' நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " [அகநானூறு 12] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இள…
-
- 0 replies
- 256 views
-
-
"தத்துப் பிள்ளை" இலங்கையின் கிழக்கே; வடதிசையில் வெருகலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே அம்பாறை மாவட்டத்தினையும் மற்றும் மேற்கே பொலன்னறுவை மாவட்டத்தினையும் எல்லைகளாகக் கொண்டமைந்த, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பூர்வீகம் கொண்ட, கிழக்கிலங்கையின் நடு நாயகமாகத் திகழ்கின்ற மீன்பாடும் தேனாடு என வர்ணிககப்படும் மாவட்டம் தான் மட்டக்களப்பாகும். "பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங் கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து கால் பெருகும் கல்லார்கும் சொல்லாட்சி மிகப் பெருகும் நூல் பெருகும் கிடையார்கு நுவலறங்கள் பெருகுமால்" என அனைத்தும் பெருக்கெடுக்கும் மீன்பாடும் தேனாடு பற்றி, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பெரும…
-
- 0 replies
- 231 views
-