Jump to content

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.

கழட்டின  @கிருபன் ஜிக்கே துன்புறுத்தல் எண்டா, பார்த்த சனத்துக்கு?🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:
படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு
-------------------------------------------------------------------
 
 
இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர். 
 
நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.
 
பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.
 
(தொடரும்........)

1. எனது உறவினர் ஒருவர். வீட்டில் இருக்கும் போதே மூளையில் வெடிப்பு ஏற்பட்டு ஆள் அவுட். கொழும்பில் ஒரு பிரபல ஆஸ்பத்திரி மகன் இலண்டனில் இருந்து போகும் மட்டும் வெண்டிலேட்டரில் வைத்து இழுத்தது மட்டும் இல்லாமல், போன பின்னும் முடிக்க மாட்டோம் என அடம்பிடித்தார்கள்.

பெரிய வாக்குவாதமாகி - நான் இனி ஒரு சதமும் தரமாட்டேன். வைத்திருப்பதானல் வைத்திருங்கள் என கூறிய பின்பே மூடினார்கள்.

ஏனைய நாடுகளை பற்றி தெரியாது…இந்த வகையில் யூகே சொர்க்கம்தான். முடியும் வரை காப்பாற்ற நினைப்பார்கள். இல்லை என்றால், வயது, தாங்கு திறனை வைத்து clinical reasoning அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

1. எனது உறவினர் ஒருவர். வீட்டில் இருக்கும் போதே மூளையில் வெடிப்பு ஏற்பட்டு ஆள் அவுட். கொழும்பில் ஒரு பிரபல ஆஸ்பத்திரி மகன் இலண்டனில் இருந்து போகும் மட்டும் வெண்டிலேட்டரில் வைத்து இழுத்தது மட்டும் இல்லாமல், போன பின்னும் முடிக்க மாட்டோம் என அடம்பிடித்தார்கள்.

பெரிய வாக்குவாதமாகி - நான் இனி ஒரு சதமும் தரமாட்டேன். வைத்திருப்பதானல் வைத்திருங்கள் என கூறிய பின்பே மூடினார்கள்.

ஏனைய நாடுகளை பற்றி தெரியாது…இந்த வகையில் யூகே சொர்க்கம்தான். முடியும் வரை காப்பாற்ற நினைப்பார்கள். இல்லை என்றால், வயது, தாங்கு திறனை வைத்து clinical reasoning அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்.

 

கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பற்றி அங்கே வேலை செய்த ஒரு வைத்தியர் சில விடயங்களை முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். வெறும் அடிப்படை சிகிச்சை ஒன்றை அளித்து நோயாளியை அப்படியே வைத்திருப்பது போன்றே அவர் சொல்வதாகத் தெரிந்தது. எல்லா வைத்தியசாலைகளும் இப்படியே என்றால், நோயாளிகள் எங்கு தான் நம்பிப் போவார்கள்?

அமெரிக்கா மருத்துவம் இன்னொரு வகை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களே ஏறக்குறைய எல்லா பெரிய முடிவுகளையும் கட்டுப்படுத்துகின்றன. என்ன மருத்துவம், சிகிச்சை, எந்த மருத்துவமனை, எப்ப செய்வது என்று எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆனால், ஒரெயொரு நல்ல விடயம், பெரும்பாலும் முடிவுகளை உடனேயே எடுத்து, சிகிச்சைகளை ஆரம்பித்து விடுகின்றனர்.

கனடாவில் நண்பன் ஒருவன் ஒரு எம்ஆர்ஐ எடுக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்பொழுது அங்கே வேறொரு சிகிச்சைக்காக அவனை ஒரு வருடம்  காத்திருக்கச் சொல்லியிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற கதைகளைக் கேட்டிருக்கின்றேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்

யோவ்! அப்ப எனக்கு 16 அல்லது 17 வயதுதான் இருக்கும்!😉

மேலாடை இல்லாமல் ஊரில் உலாத்துவதில் எனக்கு பிரச்சினை எதுவும் இருந்ததில்லை! 😎

மேலாடை இல்லாமல் நல்லூர் கந்தனுக்குள் போன மகிந்த ராஜபக்‌ஷவின் நிலையை யோசித்துப் பார்த்தேன்😜

16 hours ago, goshan_che said:

கழட்டின  @கிருபன் ஜிக்கே துன்புறுத்தல் எண்டா, பார்த்த சனத்துக்கு?🤣

ஆளரவம் இல்லாத நேரத்தில் சிவனும் அம்மனும்தான் பார்த்திருப்பினம்😬

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து
--------------------------------------------------------------------
நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார்.
 
முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால்,  இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார்.
 
மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார்.
 
இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர்.
 
கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது.      
 
ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்.  என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல.
 
சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை.
 
அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். 
 
போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்...........
 
(தொடரும்.............) 
  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

@ரசோதரன்

Fine Mart தானே

IMG-2154.gif

 

நாங்கள் போன கடையின் பெயர்: Queens Park.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சுன்னாகத்தில் பல இடங்கள் ஒரு விளம்பரத்துடன் இருக்குது போல........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்...

சந்தையை என்றாலும் சுற்றி பார்த்தீர்களா?

பெயர்போன சந்தை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

என் இரண்டு காதுகளிலும் ஓட்டைகள்  இருக்கின்றன. ஏதாவது பிரச்சினை வருமோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

என் இரண்டு காதுகளிலும் ஓட்டைகள்  இருக்கின்றன. ஏதாவது பிரச்சினை வருமோ?

🤣......

நீங்கள் அந்த மருத்துவர்கள் சொல்கின்ற 'வில்லங்கம்' பிடித்த ஆட்களில் ஒருவர். உங்களுடன் அவர்கள் மேற்கொண்டு கதைக்க மாட்டார்கள், வெறுமனே பில் மட்டும் தான் உங்களுக்கு தருவார்கள்.........

16 minutes ago, ஈழப்பிரியன் said:

சந்தையை என்றாலும் சுற்றி பார்த்தீர்களா?

பெயர்போன சந்தை.

சந்தையைக் கூட பார்க்கவில்லை, ஈழப்பிரியன். எதிரிலேயே Kings Park என்று ஒரு கடை. இன்னும் ஒரு பார்க் வேற இருந்தது. அவர்கள் மூன்று கடைகளுக்கும் போனார்கள். நான் கார் ஓட்டுனரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டுக் கொண்டிருந்தேன்.  

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரசோதரன் said:

🤣......

நீங்கள் அந்த மருத்துவர்கள் சொல்கின்ற 'வில்லங்கம்' பிடித்த ஆட்களில் ஒருவர். உங்களுடன் அவர்கள் மேற்கொண்டு கதைக்க மாட்டார்கள், வெறுமனே பில் மட்டும் தான் உங்களுக்கு தருவார்கள்.........

😃😄

சந்தையைக் கூட பார்க்கவில்லை, ஈழப்பிரியன். எதிரிலேயே Kings Park என்று ஒரு கடை. இன்னும் ஒரு பார்க் வேற இருந்தது. அவர்கள் மூன்று கடைகளுக்கும் போனார்கள். நான் கார் ஓட்டுனரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டுக் கொண்டிருந்தேன்.  

😄  புத்திசாலிக்   கணவன். 

ஸ்டைலுக்கு கடுக்கன் போடட ஓடடையை தானே சொல்கிறீர்கள்.?

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

ஸ்டைலுக்கு கடுக்கன் போடட ஓடடையை தானே சொல்கிறீர்கள்.?

1958 இனக்கலவரத்தின் போது, தலையை மணந்து நல்லெண்ணை மணக்கிறதா?, காதில் ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்தும் தமிழர்களை அடையாளம் கண்டு சிங்களவர்கள் தாக்கினார்கள். அதற்குப் பிறகு காது குத்தல் என்பது எங்கள் மத்தியில் மெதுவாக அழிந்து போயிற்று. பணத்தேவைக்காக காது குத்தல் நிகழ்வுகள் எனது ஊரில் ஆங்காங்கே நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது

நிலாமதி, நான் 1958க்கு முன்னர் பிறந்தவன். ஸ்டையில் எல்லாம் இப்பொழுது எனக்கு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. “காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு
----------------------------------------------------------------
குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் காலை முன் வைத்து ஒரு கடைத் தெருவில் இறங்கி விட்டால், சுன்னாகமும், தி நகரும் ஒன்றே. ஒரு கட்டத்தில் மதியம் தாண்டிய பின் இனிமேல் பசி பொறுக்க முடியாது என்ற நிலையில், சரி, சாப்பிடப் போவம் என்று வந்தார்கள். 'ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக் கடையாக பார்த்து நிற்பாட்டப்பா...' என்று ஓட்டுனரிடம் சொன்னதில் ஒரு வார்த்தை பெரும் பிழையான வார்த்தை. 'நல்ல' என்ற அடைமொழியை நான் சொல்லியிருக்கக்கூடாது. அவர் அங்கிருந்து இன்னும் தூரம் ஓடி திண்ணைவேலியில் இருக்கும் லவின்ஸ் என்னும் ஒரு கடைக்கு எங்களைக் கொண்டு வந்தார். உயர்தர இந்திய சைவ உணவு அல்லது அப்படி ஏதோ ஒன்று அக்கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது.
 
இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை.
 
இந்த 4000 ரூபாய் ஜூஸ் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் யாரோ செய்தி போட்டிருக்கின்றார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டோம்.
 
ஒரு செட் பூரி, பரோட்டா, ஒரு தோசை என்று மிகச் சாதாரண உணவுகளையே  எடுத்தோம். கறிகளையும் எடுங்கள் என்றார்கள் அங்கு வேலை செய்பவர்கள். ஏன், பூரி, பரோட்டா போன்றவற்றுடன் ஒன்றும் வராதா என்று கேட்டோம். வரும், ஆனால் அது  போதாது என்றனர். சரி என்று நான்கு கறிகளையும் எடுத்தோம்.
 
மிகச் சாதாரணமான ஒரு சாப்பாடு. அமெரிக்காவில் லிட்டில் இந்தியா என்னும் ஒரு பகுதியில் தான் என்னுடைய வீடு இருக்கின்றது. ஆதலால்  அருகிலேயே பல இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் சாதாரண, விலை மிகவும் குறைந்த ஒரு உணவகத்தில் இருக்கும் தரமே இங்கும் இருந்தது. அதே மணமும், குணமும், சின்ன சின்ன இரும்புச் சட்டிகளும். எதையும் சாப்பிட்டு முடிக்கவும் இல்லை. நான்கு கறிகளில் இரண்டு கறிகளை தொடக்கூட இல்லை. 24 ஆயிரம் ரூபாய்கள் என்று பில்லைக் கொடுத்தார்கள். நம்ப முடியவில்லை, கூட்டிப் பார்த்தேன், 24 ஆயிரங்களே.
 
பின்னர் கூகிளில் இந்த உணவகத்தினை தேடிப் பார்த்தேன். பொதுவாக எல்லோரும் நன்றாகவே சொல்லியிருக்கின்றனர். என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. 
 
இதே வேளையில், பின்னர் ஒரு நாள் நல்லூர் கோவிலின் வீதியில் இருக்கும் Lemon Tree Hotel என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இந்த தடவை நாங்கள் எட்டுப் பேர்கள். அதே 'இந்திய சைவ....' என்ற அடைமொழியுடன் இந்த இடமும் இருந்தது. இங்கும் சிற்றுண்டி வகைகளும், மதிய உணவு வகைகளும் இருந்தன. தென் இந்திய தாலி போன்று ஒரு மதிய உணவு கொடுத்தனர். வேறு உணவுப் பண்டங்களையும் எடுத்திருந்தோம். சிலவற்றை வீட்டுக்கு கட்டியும் கொண்டோம். மொத்தமாக ஆறு ஆயிரங்கள் என்று பில் வந்தது. என்னைக் கேட்டால், அந்த உயர்தர உணவகம் என்று போடப்பட்டிருந்த உணவகத்தில் இருந்தது போன்று அல்லது அதை விட சிறப்பாக இங்கு உணவுகள் இருந்தன. என்ன, சின்ன சின்ன இரும்புச் சட்டிகளில் இவர்கள் பரிமாறவில்லை என்பது மட்டுமே பெரிய வித்தியாசம்.
 
என்ன சொன்னாலும் சைவம் என்றால் எங்களுக்கு சரியாக அமைவது மலாயன் கபே என்பதில் பெரிதாக மாற்றுக் கருத்துகள் இருக்காது என்று நினைக்கின்றேன். என்றும் அந்த உணவகம் அப்படியே இருக்கின்றது. இரண்டாம் தடவை அங்கு போயிருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. முதல் தடவை பிள்ளைகளையும் அங்கு கூட்டிப் போயிருந்தோம். நன்றாகவே இருக்குது என்றார்கள். இரண்டு வாரங்களில் பிள்ளைகள் அமெரிக்கா திரும்பி விட்டார்கள். இருவருக்கும் வேலை, அதில் ஒருவர், இளையவர், இந்த வருடம் தான் வேலை ஆரம்பித்து இருக்கின்றார்.
 
ஆரம்பத்தில் வருடத்திற்கே அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் தான் விடுமுறை கொடுப்பார்கள். இவருக்கு நான்கே மாதத்தில் சிறிது இரக்கப்பட்டு இரண்டு வாரங்கள் விடுமுறை கொடுத்தது அமெரிக்க சட்டக் கோவைகளுக்கு கொஞ்சம் எதிரான ஒரு விடயம்.
 
இரண்டாம் தடவை மலாயன் கபே போயிருந்த போது, ஒரு பருப்பு வடை எனக்கும், மனைவிக்கு ஒரு முக்கோண ரொட்டி என்றும் சொன்னேன். அதைக் கேட்டவர் சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டே நின்றார். நல்ல உயரமான ஒரு இளைஞன். போனவர் ஒரேயொரு உளுந்து வடையுடன் மட்டும் திரும்பி வந்தார். பருப்பு வடை என்றேன் மீண்டும். ஒரு வேளை கடலை வடை என்று தான் கட்டாயம் சொல்ல வேண்டுமோ என்று கடலை வடை என்றும் சொன்னேன். அந்த இளைஞன் மெதுவாக என் காதருகில் குனிந்தார்............... தான் தமிழ் இல்லை என்றும், ஒரு சிங்களவர் என்றும் மிகப் பணிவாகச் சொன்னார். சிங்களத்திலேயே சொன்னார். கொஞ்சம் ஆச்சரியமாகப் போய்விட்டது.
 
அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்களே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டுகின்றோம் என்று சொல்லி விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன். தான் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்றார். பீடம் கிளிநொச்சியில் இருக்கின்றது, இங்கு யாழ் நகரில் என்ன செய்கின்றீர்கள் என்றேன். அவர்களின் பயிற்சி ஒன்றுக்காக யாழ் நகரில் இப்போது தங்கியிருப்பதாகச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிக்காக மொத்தமாக ஆறு மாதங்கள் தென் பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் பயிற்சிக் காலத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்வது புதிய விடயம். அது அந்த இளைஞன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது.
 
அவரின் பெயர் சொன்னார். சொந்த இடம் கதிர்காமம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கிளிநொச்சியில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் சில விடயங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் கதைத்தோம்.
 
சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வரும் போது திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞர் ஒரு மேசையில் நாலு ஆட்களிடம் மாட்டுப்பட்டிருந்தார். சமாளித்து, கற்றுக் கொண்டு தான் வாழ்க்கையில் முன்னுக்கு போக வேண்டும். நாங்களும் இப்படித்தானே பயணித்தோம்.
 
மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
(தொடரும்...........) 
  • Like 6
  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை.
 

சுன்னாகத்தில் இருந்து மாவிட்டபுரம் தான் கிட்ட.அங்க போய் மாட்டுக் கொத்து சாப்பிட்டிருக்கலாம்.

நான் நாய்க் கொத்து என்று சொல்லல்லை.மாடு,மாடு,மாட்டுக் கொத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

சுன்னாகத்தில் இருந்து மாவிட்டபுரம் தான் கிட்ட.அங்க போய் மாட்டுக் கொத்து சாப்பிட்டிருக்கலாம்.

நான் நாய்க் கொத்து என்று சொல்லல்லை.மாடு,மாடு,மாட்டுக் கொத்து.

வருடத்தில் 350 நாட்களும் யாராவது ஓரளவிற்கு நல்லா சமைத்துக் கொடுத்தால், எந்தக் கொத்தென்றாலும் சாப்பிடுவம். ஒரு 15 நாட்கள் மட்டும் கடும் விரதம் சாப்பாட்டில். அந்த 15 இல் நான் போய் மாட்டுப்பட்டேன். 

சிவாஜிலிங்கம் ஊர் மீன் சந்தையை இரண்டு மாடிகளாக கட்டிக் கொடுத்திருக்கின்றார். அது அப்படியே ஆட்களும் இல்லாமல், மீன்களும் இல்லாமல் சும்மா கிடந்தது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

சிவாஜிலிங்கம் ஊர் மீன் சந்தையை இரண்டு மாடிகளாக கட்டிக் கொடுத்திருக்கின்றார். அது அப்படியே ஆட்களும் இல்லாமல், மீன்களும் இல்லாமல் சும்மா கிடந்தது.   

ஏன்? என்ன நடந்தது?

மீன் பிடிக்கு பெயர்போன ஊராச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஏன்? என்ன நடந்தது?

மீன் பிடிக்கு பெயர்போன ஊராச்சே.

வருடத்தில் ஆறு மாதங்கள் ட்ரோலர் வகை மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயமே ஏனென்றால் இந்த வகை மீன்பிடி கடல் வளத்தை அழிக்கின்றது குட்டிக் குட்டி மீன்களை அழிப்பதன் வழியாக. ஆனால் எங்கள் மீனவர்களுக்கு மற்ற வகை மீன்பிடி முறைகளில், உதாரணம்: ஆழ்கடல் மீன்பிடி, நல்ல அனுபவமும், அதற்கேற்ற வசதிகளும் கிடையாது.

பலர் இந்த தொழிலை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றும் நினைக்கின்றேன். ஊரில் இருப்போர் கப்பலில் போகின்றனர், மற்றவர்கள் கப்பலில் போவதற்கான வகுப்புகளிற்கும் பயிற்சிகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கின்றனர்.

கனடா இப்பொழுது இலகுவாக்கியிருக்கும் விசா திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களில் இங்கிருந்து 600 பேர் வரை கனடாவிற்கு போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எதற்குமே போதிய ஆட்பலம் இல்லை என்ற ஒரு நிலை. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2024 at 19:12, ரசோதரன் said:

மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போனால் மாட்டிக் கொள்வீர்கள்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா
--------------------------------------------------------------------------------------
இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில்,  நடத்தப்படுகின்றது.
 
ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். 
 
இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது.
 
தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர்.
 
ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும்.
 
ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும்.
 
இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன.
 
இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது.
 
அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். 
 
அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........
 
(தொடரும்..........) 
Edited by ரசோதரன்
  • Like 7
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

போனால் மாட்டிக் கொள்வீர்கள்

🤣.........

தென் பகுதியுடன் ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இடைக்கிடை வாறதுக்கும் இது தான் காரணம் என்று கண்டு பிடித்தும் விடுவா....😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையை படமின்றி கண் முன்னே கொண்டு வருகின்றீர்கால்...நன்றி ரசோ..தொடர்க உங்கள் தொடர் கதையை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரசோதரன்........தொடர் நன்றாகப் போகின்றது........மனைவியரின் ஒவ்வொரு சொல்லும் துண்டில் புழு போன்றது ......கவனம் தேவை.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

வல்வெட்டித்துறையை படமின்றி கண் முன்னே கொண்டு வருகின்றீர்கால்...நன்றி ரசோ..தொடர்க உங்கள் தொடர் கதையை

நன்றிகள் அல்வாயன். இன்னும் ஒரு பகுதி எழுதினால் இந்தப் பயணம் முடிந்துவிடும். உங்களின் சிரிக்க வைக்கும் கவிதைகளை கொஞ்ச நாட்களாக காணவில்லை.......

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

தொடருங்கள் ரசோதரன்........தொடர் நன்றாகப் போகின்றது........மனைவியரின் ஒவ்வொரு சொல்லும் துண்டில் புழு போன்றது ......கவனம் தேவை.......!  😂

🙏.....

எப்பவும் அதே ஆச்சரியம் தான் - என்ன செய்தாலும் எப்படியும் கண்டு பிடித்து விடுகிறார்களே..........🤣.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது.

இப்போது நடைபெறும் இசை நிகழ:ச்சிகளில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள்.

முன்னர் போல் அல்லாது மது வாங்குவதற்கு இளைஞர்களின் கைகளில் போதியளவு பணமும் ஒரு காரணம்.

முன்னர் நாங்கள் வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல உறவினர்கள் ஊரவர்கள் என்று யாரைக் கண்டாலும் பயம்.

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @suvy 2007 உல‌க‌ கோப்பையில் அய‌ர்லாந்திட‌ம் தோத்து தான் பாக்கிஸ்தான் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறின‌வை.................அய‌ர்லாந் பாக்கிஸ்தானை சில‌து வெல்ல‌க் கூடும் இன்றும் த‌லைவ‌ரே............................
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.