Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. படக்குறிப்பு, சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னைய…

  2. தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏதாவது செய்வார்களோ என்ற அச்சம் இருப்பதாக அமமுக பொது செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் எதிர்வினை ஆற்றியுள்ளார். '100 பேர் மனித வெடிகுண்டு' கடந்த வாரம் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து சசிகலா வெளியேறினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, த…

  3. `ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு' - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? கு. ராமகிருஷ்ணன் விவசாயம் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்…

    • 1 reply
    • 431 views
  4. `2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள் லோகேஸ்வரன்.கோ சசிகலா ஒரேநேரத்தில் முதல்வரும் சசிகலாவும் நேருக்கு நேர் வேலூரைக் கடப்பது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரில் ஓய்வெடுத்துவரும் சசிகலா நாளை மறுநாள் (8-ம் தேதி) வேலூர் மாவட்டம் வழியாகச் சென்னை திரும்புகிறார். 7-ம் தேதியன்றே சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் சசிகலாவின் பயணத் திட்டம் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. 8, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேலூர் வரவிருந்தார். எட…

  5. திமுக எத்தனை? கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை? மின்னம்பலம் திமுக கூட்டணி இன்றைய நிலவரம் திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ”உங்களுக்கு இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்தது. உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும் தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா அதிர்ந்ததையும் நாம் …

  6. எழுவர் விடுதலை `அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆகவேண்டும். உச்சநீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது' என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தரப்பில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் …

    • 3 replies
    • 781 views
  7. முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி! முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகனுக்கு அழகு, திறமை, அறிவு என பல பெயர்கள் உள்ளதுபோல், தமிழ் கடவுள் என அழைப்பதை எவ்வாறு அரசிதழில் வெளியிட முடியும், என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக…

  8. ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: சீமான் 25 Views தற்போது ஈழத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் வெற்றி பெறட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டு கிளிநொச்சி கந்தசாமி கோயில் முற்றத்தில் நடைபெற்று வரும் பட்டினிப் போராட்டமும், பொத்துவிலிலிந்து தொடங்கியிருக்கும் நடைப்பயணமும் நம்பிக்கையைத் தருகிறது. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் கோர அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை மு…

  9. http://athavannews.com/wp-content/uploads/2021/02/Accident-1-720x380.jpg காஞ்சிபுரம், கல்குவாரியில்.. பாறைகள் சரிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு – 20இற்கும் மேற்பட்டோர் மாயம்! காஞ்சிபுரம் – உத்திரமேரூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், பாறைகள் சரிவு காரணமாக மீட்பு பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் – உத்திரமேரூர் அடுத்த மதூர் பகுதியில் சென்னையைச் சேர்ந்த முத்து என்பவருக்கு சொந்தமான ஆறுபடை என்ற கல்குவாரி இயங்கி வந்தது. இங்கு இன்று (வியாழக்கிழமை) காலை வழக்கம்போல் 40-க்கும் மேற்…

  10. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி 4 பிப்ரவரி 2021, 11:48 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAHAYAM FB தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 7 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த சகாயம் ஐ.ஏ.எஸ், இந்திய ஆட்சிப் பணியில் இருந்து கடந்த ஜனவரி 6ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்த சகாயத்தை, நூறு நாள்களுக்குப் பிறகு பணியில் இருந்து விடுவித்துள்ளது, தமிழக அரசு. அரசுப் பணியில் கிடைத்த அனுபவங்கள், ஓய்வுக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்…

  11. ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் சென்னை, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தி…

  12. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை அரசுக்குக் கண்டனம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரை கொலை செய்ததாகக் கூறி அது தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். திருச்சி சிவா உரையாற்றுகையில், கடந்த மாதம் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கா…

    • 0 replies
    • 343 views
  13. தி.மு.க.கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியும்- ம.தி.மு.க ‘சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அதில் அ.தி.மு.க. அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவை ம.தி.மு.க. எடுத்தது. அதேநிலை சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேர்தல் திகதி தொடர்பாக தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு ஓரிரு …

  14. ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைதேவை: தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் 73 Views “ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல்கள…

  15. நளினியைச் சந்திக்க அனுமதி கோரி சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு 14 Views நளினியைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும், தனக்கு சிறையில் விதிக்கப்பட்ட தடைகளை இரத்து செய்ய வேண்டும் எனவும் சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்-நளினி தம்பதி என்பதால் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண…

  16. இலங்கை கடற்படை அத்துமீறல் - மாநிலங்களவையில் கண்டனம் மாநிலங்களவையில் இன்று திமுக மற்றும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சனையை எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக பாராளுமன்ற உறுப்…

    • 0 replies
    • 386 views
  17. பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காதது அநீதி: ராமதாஸ் கண்டனம். எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: “பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுஇ 12 நாட்களாகியும் அதுகுறித்து இன்றுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கும்…

  18. ஏரல்:`எப்படித்தான் அந்தப் பாவிக்குக் கொல்ல மனசு வந்துச்சோ?!’ - எஸ்.ஐ பாலுவை நினைத்து உருகும் கிராமம் இ.கார்த்திகேயன்எல்.ராஜேந்திரன் இறுதி ஊர்வலம் ``ஏரல் ஸ்டேஷன்ல இவருக்குதான் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. சிகிச்சை முடிஞ்ச மறுநாளே டூட்டிக்கு கிளம்பிட்டார். ஊருலயும் சரி, ஸ்டேஷன்லயும் சரி அவர் அதிர்ந்துகூடப் பேசினதில்லை. ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வர்றவங்ககிட்டயும் கறார் காட்டுனதில்லை” என்றனர் ஊர் மக்கள். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் பாலு. அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த பொன் சுப்பையாவும் இவரும் ஏரல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். (கடந்த 31-ம் தேதி) இரவ…

  19. விலையில்லா மிதிவண்டி: `டோக்கனில் மாணவிகள் பெயரோடு சாதிப் பிரிவு!’ - மயிலாடுதுறையில் சர்ச்சை ஹரீஷ் ம சர்ச்சை மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அரசின் விலையில்லா மிதிவண்டிகளில், சாதிவாரியாக டோக்கன் வைக்கப்பட்ட சம்பவம் மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சர்ச்சையாகியிருக்கிறது. பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வின்றி, சமத்துவம் நிலைக…

  20. தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலக தலைவர்களிடம் வைகோ கோரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B.jpg தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவுஸ்ரேல…

  21. வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் சசிகலா: பலத்த பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ளார். பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக தடுப்பு காவலில் இருந்த சசிகலா, கடந்த 27ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அந்நேரம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தமையினால், சிறைத்துறை நிர்வாகத்தினர் நேரடியாக அங்குச் சென்று,விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். இந்நிலையில் தற்போது சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். எனவே இன்று (ஞாயி…

    • 2 replies
    • 1.1k views
  22. பிரதமர் மோடி தமிழகத்திற்கு விஜயம் செய்கிறார்! பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமான, வண்ணாரப் பேட்டை – திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், மேலும் பல திங்டங்களையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரதமர்-மோடி-தமிழகத்திற்/

  23. டங்களுக்கு முன்னர் அதிமுகவும் பாஜகவும் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா. மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வெளிவருவது இதுவே முதல்முறை. கடந்த நவம்பர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ.பன்ன…

  24. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.! மதுரை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, அவர்களுக்காகவே ஒரு கோவில் மதுரை அருகே அமைக்கப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதாம் வெண்கல சிலைகள் இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. …

    • 42 replies
    • 3.6k views
  25. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு…

    • 11 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.