Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்தார் | படம்: எல்.சீனிவாசன். 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங…

  2. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு செல்போன் வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. 092121-98181 என்ற எண்ணுக்கு இலங்கை மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை தேவை என்றால், ஆம் என்றும், தேவையில்லை என்றால் இல்லை என்றும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ் மூலம் கருத்தை தெரிவிப்போருக்கு வாக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸை ஆம்னெஸ்டி அமைப்பு அனுப்பி வைக்க இருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இணையம் வழியாகவும் கருத்தை பதிவு செய்யலாம். இதற்காக http://act.amnesty.org.in/demand_justice_in_sri_lanka என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும…

    • 3 replies
    • 753 views
  3. கூட்டணிக்கு புதிய பெயர், மோதி படம் இல்லாத பேனர் - புதிய முன்னணியை அமைக்கிறதா அ.தி.மு.க? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 1 பிப்ரவரி 2023, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த ஜன…

  4. இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) "வட இந்திய - தென்னிந்திய முஸ்லிம்களுக்கு இடையிலேயான கல்வி மற்றும் வியாபாரம் குறித்த ஒப்பீட்டு ஆய்வு" என்ற தலைப்பில் வட இந்திய பத்திரிக்க…

  5. கருணாநிதி சிலை திறக்க சென்னை வருகிறார் சோனியா காந்தி : November 29, 2018 1 Min Read அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பா…

  6. “வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர். மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழக…

  7. கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2020-ம் தேதி மார்ச் 14 இந்தோனேஷியாவில் பெருநிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த 54 வயதான அவர், அதே நிறுவனம் தென் அமெரிக்காவில் தொடங்கவிருந்த புதிய ஆந்த்ராசைட் புரொஜெக்டிற்காக (Anthracite Project) பெரு நாட்டிற்கு செல்லும் வழியில் சொந்த ஊரான சென்னைக்கு வந்திருந்தார். புதிய புராஜெக்டில் சேரும் முன்பாக, தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காக, சென்னை வந்திறங்கிய அவர் அதன் பிறகு, தான் இதுகாறும் பணிபுரிந்து வந்த இந்தோனேஷியாவுக்கோ அல்லது புதிய புராஜெக்டிற்காக பெருவுக்கோ செல்லவே இல்…

  8. திருவள்ளுவருக்கு சிலுவைய போடு, இல்ல குல்லா போடு, எனக்கு என்ன..?? அசால்டா பேசி அதிரவிட்ட கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்..!! திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். என்னைப் பொருத்தவரையில் அவருக்கு குல்லா போட்டாலும் சிலுவை போட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல புகைப்படம் வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்…

  9. அமைச்சர்கள்... தவறு செய்தால், பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்…

  10. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அசோக் (அமர்ந்திருப்பவர்) ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்திருக்கின்றனர். காலையில் துவங்க வேண்டிய நிகழ்ச்சி 7 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு துவங்கியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக், 668 பேர…

  11. தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி இல்லை – கமல்ஹாசன் திட்டவட்டம் தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாரில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை ஈச்சம் பாக்கத்தில் உள்ள கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அத்துடன் அரசியலில் நான் 8 மாத குழந்தை, இருந்தாலும் சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “என் கொடியும், நானும் பரபரப்பாகப் பறப்பது மக்களுக்காக தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு …

    • 3 replies
    • 752 views
  12. "ஏங்க ஓட்டு மெஷினையே உத்து பார்க்குறீங்க..?"- கிராமத்து வாக்குச்சாவடி சுவாரஸ்யங்கள் #MyVikatan விகடன் வாசகர் Election 2021 இவர்களின் முகங்கள் வேறு வேறாயினும் அனைவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். ஓட்டே போடாமல் விடுமுறையை டிவி பார்த்து கழிப்பவருக்கு மத்தியில் தேர்தல் திருவிழாவில் பங்கெடுத்த உத்தமர்கள்... இவர்கள் வணங்கப்பட வேண்டியர்கள்! பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! உரிமையுள்ள…

  13. ஜெயலலிதா இப்படிதான் நடப்பார்... நடித்து காட்டிய விஜயகாந்த்! சென்னை: ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ''கொள்ளையடிப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இத்தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்" என்றார். மேலும், மேடைகளில் ஜெயலலிதா இப்படி தான் நடப்பார், பேசுவார் என்று விஜயகாந்த் நடித்துக்காட்டினார். அதன்பின் மீண்டும் தனது பேச்ச…

  14. பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES “லுங்கி ஹடாவ், புங்கி பஜாவ்“ “ஸாலா மதாராஸி ஹட்டாவ்“ 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புல…

  15. யாருங்க இந்த ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே.! மார்க்கண்டேய கட்ஜு வேதனை.! சென்னை: ரஜினிக்கு மண்டையில் ஒன்னுமே இல்லை என்று அன்று சொல்ல ஆரம்பித்த மார்க்கண்டேய கட்ஜூ இன்றுவரை ரஜினி மீதான தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லை... "ரஜினிக்கு ஆன்மீகம் தவிர மக்கள் பிரச்சனை பற்றி ஏதாவது தெரியுமா?" என்று ட்வீட் போட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகிறார். சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழ்நாடு என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம்.. ஒரு இணைப்பு.. ஒரு பிணைப்பு.. இதற்கு காரணம் எல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, இப்படி நம் மாநிலத்தை அசைக்கும…

  16. ராகுல் ஏன் வந்தார்? ஜெயலலிதா-அப்போலோ-அரசியல்! ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...’ இந்த மூன்று வார்த்தைகளுக்குள், எத்தனை... எத்தனை... திட்டங்கள், நம்பிக்கைகள், மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்திய அரசியல் நன்றாக அறியும். கடந்த ஒரு நூற்றாண்டில், இந்திய அரசியலின், நிறம் மாறிய நிகழ்வுகள் அனைத்தும், இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து பிறந்தவைதான். ராகுல்காந்தியின் அப்போலோ வருகைக்குப் பின்னும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...” என்ற வார்த்தைகளே வந்து விழுந்துள்ளன. இவையும், இனிவரும் தமிழகத்தில்... ஏன் இந்திய அளவில்கூட, அரசியல் அதிர்வுகளை உண்டாக்கலாம். மரியாதை நிமித்தமா? அரசியல் நிமித்தமா? டெல்லியில் இருந்து, தனி விமானத்…

  17. இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Getty Images கோப்புப்படம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தத் தொகுதிகளின் நிலவரம் என்ன? மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஏப்ரல் 18ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ…

  18. மிஸ்டர் கழுகு: கண்டிப்பு காட்டும் கவர்னர் வருகிறார்! ‘‘இங்கே வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், டெல்லியில் இன்னும் குளிர் விடவில்லை’’ என்ற பீடிகையுடன் உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘ஓ! திடீர் டெல்லி விஜயமா? டெல்லியில் நடைபெறும் ஆலோசனைகள் எல்லாம் தமிழகத்தை மையப்படுத்தித்தான் இருக்கிறது போல...’’ - ஆவி பறக்கும் பிளாக் டீ கொடுத்தபடி விசாரித்தோம். ‘‘டெல்லி வாலாக்களின் இப்போதைய கவனம் முழுவதும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில்தான் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டியும் அவர்கள் அக்கறை காட்டும் ஏரியாவாக தமிழகம் இருக்கிறது! குறிப்பாக கவர்னர் நியமனம். ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்தது. உடனே புதியவரை நியமிக்காமல், மகாராஷ்டிர கவர்னர் வித…

  19. அடுத்து அழகிரியும் கனிமொழியும் கைதா ? பிரிவு: தலையங்கம் நேற்றைக்கு முந்தைய நாள் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது . அவர்கள் ராசினாமா கடிதத்தை முறையாக பிரதமர் மற்றும் திமுக கட்சி ஆதரவு வாபஸ் என்ற கடிதத்தை குடியரசு தலைவருக்கும் கொடுத்தார்கள் . இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அதன் தலைவர் கருணாநிதியால் மட்டுமே கட்சிக்குள் அழுத்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றும் அதற்க்கு அவர்கள் குடும்பத்தில் கனிமொழியை தவிர யாரும் ஆதரவு தரவில்லை என்றும் செய்திகள் கசிந்தன. இன்றைக்கு அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான ஸ்டாலின் வீட்டில் , எதற்கு , என்னவென்ற ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் சிபிஐ சோதனை இட்டு வருகிறது . அதே நேரம் மதுரையில் , முக அழகிரி மீது எந்நேரமும் வழக்கு பதிய படலாம் என…

    • 1 reply
    • 750 views
  20. ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தெரிவிப்பு! கொரோனா நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்ட ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்தை தொடங்கினார். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட…

  21. 19 JUN, 2025 | 03:33 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருக…

  22. ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்! தமிழகம், ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவே தெரிகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால். தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையிடமான, சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கு என்று ஒரு தனி அறை இருக்கிறது. இந்த அறையானது முதலமைச்சரின் அறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இது வெளியுலகில் உள்ள பலருக்கும், ஏன் அரசியல் வாதிகளிலேயே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதற்கு முக்கிய காரணம் அந்த அறைக்கு தமிழகத்தின் ஆளுநர்களாக இருப்பவர்கள் வருவது என்பது அரிதினும் அரிதானதாகவே இருந்திருக்கிறது. இந்த கட்டுரையாளரின் நினைவுகள் சரியாக இருக்குமானால், கடைசியாக அந்த ஆளுநர் அறைக்கு வந்தவர் ஆளுநர் …

  23. மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்! ‘‘அன்பாகப் பேசி விசாரணை வளையத்துக்குள் விவேக்கைச் சிக்க வைத்திருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி’’ என்றபடி, நம்மிடம் ஒரு புகைப்படத்தைக் காட்டினார் கழுகார். ஜெயலலிதாவுடன் பாசமான நெருக்கத்தில் இளவரசியின் மகன் விவேக் இருக்கும் அந்தப் புகைப்படம்தான் இந்த இதழ் அட்டையில் உள்ளது. ‘‘ஜெயலலிதாவை இப்படி ஒரு தோற்றத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்’’ என்றோம். ‘‘அதையேதான் ஆறுமுகசாமியும் சொன்னார். நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஒரு சடங்குபோல பலரும் ஆஜராகி வருகிறார்கள். இதேபோல, சம்பிரதாயமாகக் கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்துதான் விவேக் போனார். ஆனால், ஆறுமுகசாமி அவரிடம் பரிவும் கண்டிப்பு…

  24. தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை! சென்னை; எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்கியிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிஷ் இன்று காலை அவருடைய அறையில் பிணமாக கிடந்தது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 32 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் ஹரிஷ் திருமணமாகாதவர். பெங்களூருவைச் சேர்ந்த ஹரிஷ், 2009-ம் வருடத்திய ஐ.பி.எஸ். பேட்ச். பொதுவாகவே வெளிமாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகள், தமிழ்நாட்டில் சர்வீஸ் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். இங்குள்ள மக்களின் பண்பு, ஒரு சில மாநிலங்களில் 'கிடைப்பது' போல் அல்லாமல் இங்கு கிடைக்கும் கூடுதல் மரியாதை, பாதுகாப்பு அம்சம் இப்படிப் பல விஷயங்கள் இதில் அடக்கம். தமிழ்நாட்டில் ப…

  25. காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: மருமகனை வெட்டிக் கொன்று விட்டு மாமனார் சரண் படக்குறிப்பு, ஜெகன், சரண்யா 21 மார்ச் 2023 கிருஷ்ணகிரியில், மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை, உறவினர்கள் சிலரது உதவியுடன் தமது மருமகனை சாலையில் வழிமறித்து படுகொலை செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெகன் என்பவர் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.