Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொலிக்க…

  2. கொடநாடு கொலை, கொள்ளை... வழக்கில் இருவர் கைது! கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனபால், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்வங்கள் நடத்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246773

    • 8 replies
    • 692 views
  3. எழுத்தாளர் செளபா, திடீர் மரணம்! மகனைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் செளபா என்கிற செளந்தரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது மரணச் செய்தி வந்துள்ளது. செளபாவின் கைது அதிர்ச்சியிலிருந்தே அவரது நண்பர்களும், வாசகர்களும் மீளாத நிலையில் அவரது மறைவு மேலும் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.எழுத்தாளர் செளபாவின் மகன் விபின். 27 வயதான இவர் குடி அடிமை ஆவார். தாய்க்கும், தந்தைக்கும் பல்வேறு வழிகளில் சித்திரவதையாக இருந்து வந்தார் விபின். இந்த நிலையில், ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் …

  4. பா. ஏகலைவன் உப்புப் போட்டு திங்கிற காங்கிரஸாருக்கு. ஒரு நிமிடம் நின்று படித்துவிட்டு........... ---------------------------------------------------------------- விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்திருப்பது சரியா என்று புதிய தலைமுறையில் ஒரு விவாதம். நண்பர் குணசேகரன் நெறிப்படுத்தியிருந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக அமெரிக்கை நாராயணன் பேசும் போது ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்கள் புலிகள் என கடுமையாக கொதித்தார்.. ‘தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றார்கள்’ என்ற காரணத்தையே திரும்ப திரும்ப சொல்லி குமுறினார். எல்லாவற்றையிம்விட சிறுவன் பாலசந்திரன், பிரபாகரன் படத்தை எல்லாம் வைத்து பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்று ரத்தக் கொதிப்பு வந்தவராக, இல்லை வந்துதான் கத்தினார். நல்லது…

  5. எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக …

  6. படத்தின் காப்புரிமைThinkstock சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு இந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி ஆகிய ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, விருப்பப்பாடமாக பிரெஞ்சு மற்றும் இந்தி வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சம…

  7. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாசில்தார் மீது அவரது மருமகள் மதுரை கலெக்டரிடம் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் முத்திரைத்தாள் தாசில்தாராக இருப்பவர் ஞானகுணாளன். இவரது மகனுக்கும், போடியைச் சேர்ந்த குருசாமி மகள் லட்சுமிபிரியாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக லட்சுமிபிரியா போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் ஞானகுணாளன், அவரது மகன் ராம் ஜவகர் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், லட்சுமிபிரியா இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் "எனக்கும், ராம் ஜவகருக்கும் கடந…

    • 0 replies
    • 691 views
  8. சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி! சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு பார்த்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த கூற்றை தமிழக அரசு நிராகரித்து விட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸார் யாரையும் இதுவரை பிடித்து வைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தீவிரவாத தாக்குதலாக பார்த்தால் அதிமுக அரசின் மீதான இமேஜ் போய் விடும் என்ற பயத்தால் தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்பட்டு வருவ…

  9. தமிழகத்தில் இருந்து இத்தனை அவதூறு வழக்குகள் ஏன்?- அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி "ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்களே தவிர, இவை தனிநபருக்கு எதிராக இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்குகள்?" என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி. தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. …

  10. பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் …

  11. 4 இலங்கை தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும்! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஈழத்தாயகத்தைச் சேர்ந்த முகமது கலீல், முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் ஆகிய 4 மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து மீன் பிடிக்கக் கிளம்பியவர்கள், படகின் இயந்திரம் பழுதானதால் உண்ண உணவின்றி, மூன்று வேளையும் பச்சை மீனை சாப்பிட்டும், கடல் நீரைக்குடித்தும…

    • 0 replies
    • 691 views
  12. ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக வந்தÂ பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில்Â Â கருப்புக் கொடி போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உட்பட 1000 பேர் கைதுÂ Â http://www.dinaithal.com/tamilnadu/18062-velmurugan-including-the-arrest-of-1-000-people.html

    • 8 replies
    • 691 views
  13. ராஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்: போலீசார் அதிரடி நடவடிக்கை.! தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதை அடுத்து அனைத்து மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தமிழகத்திலும் அனைத்து ராஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு மர்ம கும்பல் திருடி சென்று விட்டது என்பதும் இதுகுறித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள ராஸ்மாக் கடை ஒன்றில் சுவரில் ஓட்டை போட்டு ரூபாய் 45 ஆயிரம் …

    • 2 replies
    • 691 views
  14. டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் ஜனவரி 18ல் தீர்ப்பு அளித்திருந்தது. கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்ய பல ஆண்டுகள் ஆனதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=85794

  15. வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே! – சீமான் முழக்கம் வீழ்ந்த இனம் வீழ்ந்ததாகவே இருக்கட்டும் என வீழ்த்தியவர்கள் இறுமாந்து இருக்க, அதை முறியடித்து, வீழந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே என்பதை தமிழர்கள் தமக்குள்ளாகவே உறுதிசெய்யும் எழுச்சி நாளாக முள்ளிவாய்க்கால் நாள் அமைகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈழப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெறுகிறது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, “விடுதலைப்ப…

  16. ஜெயலலிதா என்னை அர்ச்சித்திருக்கிற வார்த்தைகளை எம்.ஜி.ஆர். கேட்டிருந்தால் கவலைப்பட்டிருப்பார் : கலைஞர். பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாதா? என்பது குறித்து, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், ஜவாகிருல்லா எம்.எல்.ஏ., பேராயர் எஸ்ரா. சற்குணம் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர். கலைஞர் பேசும்போது, ’’காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த எங்களை எப்படி நடத்தினார்? பக்தவச்சலம் கூட எப்படி நடத்தினார்? அவ்வளவு ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமை…

  17. சென்னையின் இந்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் நாற்பது சதவீதம் சரிவைச் சந்தித்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்டு’ (Cushman and Wakefield) ஆய்வின்படி 3,350 குடியிருப்புப் பகுதிகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் வெள்ள பாதிப்பும், இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தலும் ரியால்டி சந்தையைப் பெரியளவில் பாதித்திருக்கிறது. அத்துடன், உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடையாமல் இருப்பதும் இந்தச் சரிவுக்கான இன்னொரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இதனால், புறநகர்ப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை, நடுத்தரக் குடியிருப்புத் திட்டங்களும் குறைவான வெற்றி விகிதத்தையே அடைந்திருக்கின்றன. …

  18. திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் - காரணம் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செ…

  19. இயற்கை வேளாண் பொருள் விற்பனையில் கால்பதிக்க இருக்கிறார் சீமான். 'காய்கறிகளோடு நமது பாரம்பர்ய பொருட்களை விற்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சிறப்பு மாநாடு, உணவுக் கண்காட்சி என பரபரப்பாக இயங்குகிறார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சீமான். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்குவது ஒருபுறம் இருந்தாலும், 'நம்மாழ்வார் அய்யாவின் விருப்பப்படி, இயற்கை வேளாண் விற்பனையிலும் நாம் கால்பதிக்க வேண்டும் ' எனப் பேசி வருகிறார் சீமான். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒர…

  20. பாலியல் பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை மசாஜ் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி துடா சாலையில் சுரேஷ் என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இங்கு மூலம், குடலிறக்கம், பாலியல் குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த வினய்(26) என்பவர் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். ஆனால், வினய் தொடர்ந்து கிளினிக்கை நடத்தி வந்தார். இவரிடம் வரும் நோயாளிகளிடம் சாதாரண மருந்துகளை கொடுத்துவிட்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலித்து வந்தார். அவரிடம் சிகி…

  21. அன்புஜோதி ஆசிரமம்: அன்பின் பெயரால் ஆதரவற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி அனுபவங்கள் படக்குறிப்பு, ஜுபின், மரியா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆதரவற்றோரையும் கைவிடப்பட்டோரையும் பராமரிப்பதற்காக நடத்தப்பட்ட அன்புஜோதி என்ற தொண்டு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் கொடுமைகள், அத்தகைய இல்லங்கள் குறித்த கண்காணிப்புகள் மிக பலவீனமாக இருப்பதைக் காட்டியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது? ஒரு சாதாரணமான ஆட்கொணர்வு மனு இவ்வளவு பெரிய குற்றத்தை வெளியில் கொண்டு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த இல்லத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் பயங்கரங்கள், திரைப்படங்களில் காட்சிகள…

  22. இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது சரியா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் மத்திய அரசு, அதிகாரிகளை தேர்வு செய்வதால் அவர்கள் அதே பக்கம் நிற்பதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்து அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது என இந்திய ஆட்சிப்பணி…

  23. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்களின் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும், தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பிஜேபி., உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அ.தி,மு.க., தி.மு.க.,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு சென்று, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஐ.நா., மனித உரிமை சபையில்இந்தியா நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்க்குரியது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். நண்பகல் 12 மணிக்கு லோக்சபா கூடியபோது, இலங்கை தமிழர் பிரசனை தொ…

  24. சென்னை: வீரப்பனின் நண்பர்களான நான்கு தமிழர்களைக் காப்பாற்றாவிட்டால் நாளை நமது மூன்று தம்பிகளை காப்பாற்ற முடியாது போய்விடுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பை தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப் , பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனையை இரகசியமாக நிறைவேற்றிய மத்திய காங்கிரஸ் அரசு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கில் போட்டுக் கொன்று அதன் மூலம் நாட்டையும் சட்டத்தையும் காப்பதில் தாங்கள் உறுதியாக செயற்படுகின்றோம் என்று காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது. இந்த நான்கு பேர் மட்டுமல…

  25. சென்னை: மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழக அரசின் காரில் பயணம் செய்தபோது அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் காங்கிரஸ் கட்சி துண்டால் மறைக்கப்பட்டது. புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர்களை அழைத்துச் செல்ல தமிழக அரசு கார் உள்ளது. அந்த காரின் முன் இருக்கைகளின் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் புதுக்கோட்டை செல்லும் போதெல்லாம் மாநில அரசின் காரை தான் பயன்படுத்துவார். இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மிரட்டுநிலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரைக்குடி செல்ல தமிழக அரசின் கார் கொண்டு வரப்பட்டது. அந்த காரின் முன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.