தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் தமிழை, இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி அதனை பெருமைப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க.வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு உள்ளது. ஆகையால் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். அந்தவகையில் சென்ன…
-
- 1 reply
- 500 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைதுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்பானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தகுதி தேர்வு எழுதுவது இந்தியா முழுவதும் கட்டாயமாகும். இந்த தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பிளஸ் 2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களுக்கு குதிரை கொம்பாக உள்ளது. வினாத்தாள் கடினமாக இருக்கிறது. அதிலும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிற…
-
- 2 replies
- 679 views
-
-
ஜெயலலிதா பேரவை -அம்மா சாரிடிபிள் டிரஸ்ட் மூலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது. இன்று ப்ளஸ்டூ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரை வேலம்மாள் கல்லூரியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை, போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களுக்கு உதவும். விவசாயியாக பிறந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடியார், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்க…
-
- 0 replies
- 455 views
-
-
கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...! -மு.க.ஸ்டாலின் மடல் .! சென்னை: கீழடியை நேற்று நேரில் பார்வையிட்ட நிலையில் தனது அனுபவத்தை திமுக தொண்டர்களுக்கு மடலாக எழுதியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில் கீழடியின் பெருமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவருக்கு அங்கிருந்த தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு குறித்து விவரமாக விளக்கியதாகவும், அதனை தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய மடலில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…
-
- 0 replies
- 600 views
-
-
குதிரையை வைத்து அச்சுறுத்தியதாக கனடா பெண் முறைப்பாடு – குதிரையோட்டி கைது! சுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது பிறிதொரு குதிரையோட்டி தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனை தான் பயணித்த குதிரை மிரண்டு போய் தன்னை கீழ் தள்ளிவிட்டு ஓடியதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்த குதிரையை வைத்து கனடா பெண்ணை அச்சுறுத்தியதாக கூறப்படும் குதிரை ஓட்டியான செந்தில் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டை சேர்ந்த டொய்னா கட்டான என்ற பெண் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தப…
-
- 0 replies
- 531 views
-
-
15 ஆண்டுகளுக்குப் பின்னர் கேரள – தமிழக முதல்வர்கள் சந்திப்பு September 25, 2019 கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வரும் தமிழக முதல்வரும இன்று (செப்டம்பர் 25) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்…
-
- 0 replies
- 540 views
-
-
அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் கோரிக்கை தமிழகத்தில் அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கே.பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்று வரும் 3-வது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தார். இதன்பின்னர், மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் படேலை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட அறிக்கையினை மத்திய அமைச்சரிடம், அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்கினார். மேலும், கீழடியின் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகை…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழக தேர்தல் : விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டி? தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபைக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க இளைஞர் அணியின் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விருப்ப மனுவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரதான கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில…
-
- 1 reply
- 929 views
- 1 follower
-
-
ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்: முடியுமா, தொடருமா? எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 06:10 Comments - 0 ஹிந்தித் திணிப்பு என்பது, மீண்டும் வலுவாகத் தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஹிந்தி தினத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பொது மொழியாக, ஹிந்தி வர வேண்டும். ஹிந்திதான் நாட்டுக்கு ஓர் அடையாளத்தை உலக அரங்கில் கொடுக்க முடியும்” என்றார். இந்தப் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், தமிழகத்திலிருந்து முதலில் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம். மீண்டும் எங்களைக் களம் காண வைக்காதீர்கள். ஹிந்திதான் …
-
- 0 replies
- 830 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 557 views
-
-
தெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்ல.. வெறுப்பை கக்கும் ராதாரவி!! தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும்பங்கு வகிப்பது தெலுங்கு இனம் தான். தேனி, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் தான் போட்டி போடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள் தான் தமிழ்நாட்டில் வென்றிருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை வளர்ந்திருக்காது. நாங்கள் திராவிடம் என்கிறோம். நீங்கள் எங்களை வேறு இனம் என்று கூறுகிறீர்கள். நான் …
-
- 0 replies
- 922 views
-
-
நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின்படி ஊழலில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஊழல், லஞ்சம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. எஸ்டிஜி - 2018 தரவுகளை ெகாண்டு, நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் லஞ்சம், ஊழல் முறைகேட்டில் மூன்றாமிடம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 1,677.34 குறியீடுகள் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், அடுத்தடுத்த இடங்களில் சட்டீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு கோடி மக்கள் என்ற அடிப்படையில், 2,492.45 ஆகவ…
-
- 0 replies
- 441 views
-
-
படத்தை நீண்ட நாள் ஓட்டுவதற்காக நடிகர் விஜய் அரசியல் பேசுவதாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ” தற்போதுள்ள சூழலில் திரைப்படங்கள் பத்து நாட்கள், இருபது நாட்கள் ஓடுவதே சிரமமாக இருக்கிறது. இந்த சூழலில் திரைப்படங்களை பரபரப்பிற்குள்ளாக்குவதும், அதே சமயத்தில் அப்படத்தின் பெயரை வெகுஜன மக்களிடையே கொண்டு செல்வதற்கும் பரபரப்பு அரசியல் தேவைப்படுகிறது. சமீப காலத்தில் திரைத்துறைக்கு இதுபோன்ற பரபரப்பு அரசியல் தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கதையை நம்பி படமெடுத்தார்கள். அந்தக் கதையின் வலுவான கட்டமைப்பால் அந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்கு, சற்றேக்குறைய ஓராண்டி…
-
- 4 replies
- 702 views
-
-
தமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுறுத்தல் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விருதுகள், உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் விருதுகளை வழங்கினார். உடன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கா.மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார். படம்: ம.பிரபு சென்னை தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத்தவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழிலாளர் …
-
- 0 replies
- 515 views
-
-
"7 கோடி மக்களில் 70 ஓவியர்கள் கூட இல்லை" : சிவகுமார் ஆதங்கம்
-
- 0 replies
- 595 views
-
-
நான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி! பாஜக ஆதவாளனாக தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளால் ரஜினி வேதனை அடைந்திருப்பதாகவும் இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் அவர் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதை நினைத்து மன்ற நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, 1996ம் ஆண்டில் தொடங்கி சுமார் 21 ஆண்டுகள் ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார் அப்போது வருவார் என பரபரப்பாக ஊடகங்கள் பேசிக்கொண்டே இருந்தன. ஆனால் ரஜினி ஒருமுறைகூட வருவேன் என்பதை உறுதியாக சொல்லவில்லை. ஆனால் வரவே மாட்டேன் என்பது குறித்தும் ரஜினி எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி கட்சி ஆரம்பிப்பேன் என்று …
-
- 1 reply
- 1.1k views
-
-
பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் சுனில் கில்னானிவரலாற்றாசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவில் உள்ள பெண்களையெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக கருதிக்கொள்வோம். இந்திய பெண்கள் குடியரசு என அதனை அழைப்போம். 60 கோடி பேரை கொண்டிருக்கும் அந்த நாடு, உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். 2014ஆம் ஆண்டின்…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
காவிரியை விட மைசூர் பாகு ரொம்ப முக்கியம்.. காமெடி செய்யும் வாட்டாள் நாகராஜ்.!! சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மைசூர் பாகு வழங்குவதை போன்ற புகைப்படத்தை ஆனந்த் ராஜ் என்பவர் பதிவிட்டு அதற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சமூக ஊடகங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது. இதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. மைசூர் பாகிற்கான புவிசார் குறியீடை தமிழகத்திற்கு வழங்க கூடாது என்று கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருங்கிணைத்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், மைசூர் பாகை தமிழகத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ச…
-
- 1 reply
- 662 views
-
-
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah), இந்தி நாளான இன்று, ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி (Hindi) இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “இது இந்தியா; ‘இந்தி'யா அல்ல” என அமித்ஷாவின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்ட…
-
- 8 replies
- 989 views
-
-
மகள் வருகை தராதமையினால் ஏமாற்றத்துடன் சிறைக்கு திரும்புகிறார் நளினி லண்டனிலிருக்கும் மகள் வருகை தராதமையினால் அவரது திருமண ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் சிறைக்கு செல்வதனால் நளினி மன வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகளான ஹரித்ரா லண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, திருமணம் செய்து வைக்கவே ஆறு மாதங்கள் பிணையில் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கடந்த ஜூலை 25 ஆம் திகதி சிறையிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் வெ…
-
- 0 replies
- 680 views
-
-
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குப் பயணமாகியுள்ளது. பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர், செப்.1-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றார். முதல்வருக்கு முன்பே நியூயார்க் சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு, நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்த்தது. இக்குழுவிலேயே வெள்ளை வேட்டி சட்டை, பாக்கெட்டில் ஜெயலலிதா படத்துடன் சுற்றியது ராஜேந்திர பாலாஜி மட்டும்தான். அமைச்சர்கள் குழுவுடன் சென்றுள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் மட்டும் தமிழகத்தின் ஆயிரம் சிலைகள்.. ஒவ்வொன்றும் பல கோடி மதிப்பு.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பொன்.மாணிக்கவேல்!! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த குலசேகரமுடையார் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு இன்று காலை சென்னை வந்ததடைந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பொன்.மாணிக்கவேல் பேசினார். அவர் கூறும்போது, தமிழகத்தின் பழங்கால சிலைகள் அமெரிக்காவில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக தெரிவித்தார். அதில் 20 சிலைகளை மீட்க தீவிர நடவடிக்கைகள் தற்போது நடந்து வருவதாக கூறினார். அது போல சிங்கப்பூரில் இருந்த 18 சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருவதா…
-
- 0 replies
- 647 views
-
-
சந்திரயான் 2 திட்டத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்யும் என்பதுதான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக, சந்திரனை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இஸ்ரோ தலைவராக சிவன் பதவி ஏற்றதிலிருந்து அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. இந்தப் பள்ளிக்கு எதிரில்தான் இஸ்ரோ தலைவர் சிவனின் வீடும் இருக்கிறது. …
-
- 0 replies
- 822 views
-