தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
என்னை பொருத்தவரை ஜெயலலிதா என்பவர்.. சொல்கிறார் சசிகலா
-
- 1 reply
- 934 views
-
-
சென்னை: மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு எதிராக எழிலரசு என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்தார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தனது மனுவில், "ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெளியிடப்பட்டால் தமி…
-
- 1 reply
- 442 views
-
-
தமிழக அரசை கவிழ்க்க லண்டனில்... வியூகம் தனிப்பட்ட பயணமாக, லண்டன் சென்றிருந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அங்கு, தினகரனின் துாதர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசைக் கவிழ்க்கவும், அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், இருவரும் பேசியதாகத் தெரிகிறது. ஸ்டாலின் நாளை, லண்டனிலிருந்து திரும்பியதும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.அ.தி.மு.க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், தற்போதைய நிலவரப்படி, முதல்வர் பழனிசாமி அணியில், 104; தினகரன் அணியில், 20; பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆலோசனை முதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணையும் பட்சத்…
-
- 1 reply
- 436 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வரலாறு என்ன? செவ்வாய்க் கிழமையன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பே…
-
- 1 reply
- 685 views
- 1 follower
-
-
பீப் பாடல் விவகாரம்: காலம் கடத்தும் சிம்பு... அவகாசம் கொடுக்கும் நீதிமன்றம்! பீப் பாடல் விவகாரத்தில், சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் சிம்பு ஆஜராக ஜன.29ம் தேதி வரை அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் சிம்பு மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல்துறையினரும், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பல நீதிமன்றங்களிலும் வழக்கு பதிவாகி உள்ளது. இதனிடையே, சிம்பு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் இன்று, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவலர்கள் முன்பு ஆஜர் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அ…
-
- 1 reply
- 553 views
-
-
உள்ளாட்சித் தேர்தல் (9 மாவட்டங்கள்): முன்னணி நிலவரம்: மாவட்ட கவுன்சிலர்கள் - 140 இடங்கள் தி.மு.க கூட்டணி - 75 அ.தி.மு.க கூட்டணி - 04 பா.ம.க - 00 நாம் தமிழர் - 00 மநீம - 00 அ.ம.மு.க - 00 தே.மு.தி.க - 00 பிற - 00 __________________________________________ ஒன்றிய கவுன்சிலர்கள் - 1,381 இடங்கள் தி.மு.க கூட்டணி - 228 அ.தி.மு.க கூட்டணி - 28 பா.ம.க - 08 நாம் தமிழர் - 00 ம.நீ.ம - 00 அ.ம.மு.க - 01 தே.மு.தி.க - 01 பிற - 11 தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்த…
-
- 1 reply
- 459 views
-
-
காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது: பிரதமரிடம் வாசன் வலியுறுத்தல்! புதுடெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தி்த்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 33க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. கனடா இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தியுள…
-
- 1 reply
- 393 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது. ஒரு மணி நேரம…
-
- 1 reply
- 647 views
-
-
சென்னை: தவறான நோக்கத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துக…
-
- 1 reply
- 481 views
-
-
‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 'மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 'சசிகலா குடும்பம் அல்லாத அ.தி.மு.க' என்ற ஒற்றை கோரிக்கையோடு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்துள்ளனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அவசர ஆலோசனையில், ‘ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும…
-
- 1 reply
- 602 views
-
-
சென்னை: காமல்ன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து, தமிழர் இனபடுகொலைக்கு காரணமான இலங்கையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் மாணவர்களிடையே மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்துவது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் பரிசு மற்றும் விருதுகளை வைக்கோ மூலம் வழங்குவது. 18 வயது ஆகும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி…
-
- 1 reply
- 405 views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், TWITTER படக்குறிப்பு, கோப்புப் படம் - சித்திரிப்புக்காக. தமிழ்நாட்டு விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும், தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்களிலும் அறிவிப்புகள் இனி தமிழில் முதலாவதாக இடம் பெறும் என்று தமிழ்நாடு தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகளையும் சந்தித்த பிறகு பத்திரிகையாளரிடம் அவர் இதை அறிவித்ததாக ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விமான சேவை நிறுவனங்கள…
-
- 1 reply
- 876 views
- 1 follower
-
-
வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக சசிக்கு அனுமதி சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகலாம் என, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. ஜெஜெ, 'டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்தல் மற்றும் வெளிநாடுகளில், சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்ததிலும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன் மற்றும் பாஸ்கரன் மீது1990 ல், அமலாக்கப்பிரிவு வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1 மற்றும், 2ல் நடந்து வருகிறது. இரட…
-
- 1 reply
- 405 views
-
-
தினகரன் கொடுத்தனுப்பிய, 'பென் டிரைவ்' விசாரணை கமிஷனில் ஒப்படைப்பு சென்னை : ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று தினகரன் சார்பில், 'வீடியோ' பதிவுகள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒப்படைக்கப்பட்டது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறி, 20 வினாடி வீடியோ காட்சியை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் அந்த வீடியோவை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார். அதேபோல், தினகரன், சசிகலா ஆகியோருக்கும், சம…
-
- 1 reply
- 357 views
-
-
படக்குறிப்பு, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விருதாச்சலத்தில் இருந்து சேத்தியோதோப்பு வழியாக கத்தாழை கிராமத்திற்குச் சென்றோம். மதிய நேர உச்சி வெயில் ஏற்படுத்திய களைப்புக்கு நடுவே, நெற்பயிர்களின் முற்றிய கதிர்களுடைய பால் வாசம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்தப் பால் வாசம் வீசிய நெற்பயிர்களுக்கு நடுவே, நிலத்தை அழித்து வேலை செய்துகொண்டிருந்த இயந்திரங்களின் சத்தமும் அதிகமா…
-
- 1 reply
- 651 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN POLICE 3 நவம்பர் 2023, 06:23 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த மூன்றே நாளில் இளம் தம்பதி தூத்துக்குடியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை: ஆணவப் படுகொலையா? என போலீசார் விசாரணை. தூத்துக்குடியில் காதலித்த பெண்ணை பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்து மண வாழ்க்கையைத் துவங்கி 3 நாள் கூட முழுமையடையாத நிலையில் வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் ஜோடியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து தப்பியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கி உள்ளனர். ஒரே சமூகத்தில் திருமணம் செய்தும் தூத்துக்குடியில் நடந்தது ஆணவப் படுகொலையா? சம்பவத்தின் பிண்ணனி என்ன? ஒ…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
கடும் மழையால், 137 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிவராத இந்து பத்திரிகை! இந்து பத்திரிகையின் 137 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இன்று வெளிவரவில்லை. கடும் மழை காரணமாக பிரிண்டிங் பிரஸ் இயங்கிய வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை இருந்ததால், பத்திரிகை அச்சிட முடியவில்லை என்று இந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான ஆங்கிலப் பத்திரிகை இந்து. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை தற்போது சென்னையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று வெளிவரவில்லை. மறைமலை நகரில் உள்ள பிரிண்டிங் பிரஸ் இயங்கி வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளத…
-
- 1 reply
- 437 views
-
-
கோடநாட்டில் பதற்றம் தணிக்க ஜெ.,க்கு 'ஆத்ம சாந்தி' பூஜை ஊட்டி:முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின், அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களை அடுத்து, கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 'ஆத்ம சாந்தி' பூஜை நடத்த, நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த, 1991 - 96ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், அரசியலில், 'பிசி'யான ஜெ., சில முறை மட்டுமே வந்து சென்றாலும், அங்கு தங்கியதில்லை. 2006ல், அங்கு நடந்த பிரம்மாண்ட பூஜைகளுக்கு பின், எஸ்டேட் பழைய பங்களாவில் அடிக்கடி தங்கி வந்தார். அங்குள்ள இயற்கை சூழல் அவரை கவர்ந்த …
-
- 1 reply
- 861 views
-
-
இந்திய முதல்வர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை! இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்…
-
- 1 reply
- 423 views
-
-
கேள்விக்கு என்ன பதில்?... நடிகர் விஷால்
-
- 1 reply
- 543 views
-
-
மணல் விவகாரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன், ரூ.60,000 கோடி சம்பாதித்தது தொடர்பான ஆடியோ வெளியிட்டால் அவரது பதவி இருக்காது என திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கூறியுள்ளார். துரைமுருகன் மீது குற்றச்சாட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் பேசியதன் காரணமாக திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதிலிருந்தே, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் மீது தொடர் குற்றச்சாட்டுகளை குடியாத்தம் குமரன் கூறியுள்ளார். ரூ.60,000 கோடி தற்போது, துரைம…
-
- 1 reply
- 478 views
-
-
'மருத்துவ சிகிச்சையா.... அப்படின்னா?' -பேரறிவாளனை வதைக்கும் சிறைத்துறை தமிழக சிறைத்துறை அதிகாரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 'முன்பைவிட உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் தடையாக இருக்கின்றனர்' என வேதனைப்படுகிறார் அவர். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக, அண்மையில் பிரமாண்ட பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று வேலூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞர்களிடம் பேசிய பேரறிவாளன், " மன…
-
- 1 reply
- 570 views
-
-
அப்போலோவில் ரஜினிகாந்த் முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். ரஜினியுடன் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார். உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/69772-rajinikanth-visits-apollo-to-check-regarding-jayalalithaas-health.art
-
- 1 reply
- 637 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு... புத்துயிர் அளிக்க முயன்ற, 14 இலங்கையர்களிடம்... விசாரணை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்ற 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பலிடம் இருந்து 60 செல்போன்கள் மற்றும் 50 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள ஒரு வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்திய போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20ஆம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில…
-
- 1 reply
- 489 views
-
-
இனப்படுகொளையாளன் ராஜபக்சவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இலங்கை சென்று வந்திருக்கும் ஹிந்தி நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று காலை மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை முற்றுகையிட்டுள்ளனர். ஹிந்தி நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை அறிவித்துள்ளனர். இதனால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. http://www.pathivu.com/news/36602/57//d,article_full.aspx
-
- 1 reply
- 608 views
-