தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனா…
-
- 1 reply
- 509 views
- 1 follower
-
-
சென்னை: கடற்கரை நகரில் 'காற்று வியாபாரம்' இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது. மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல்…
-
- 0 replies
- 509 views
-
-
நாகர்கோவில்: தே.மு.தி.க.வில் இருந்து விலகிய ஆஸ்டின், கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் தேமுதிகவில் மாநில துணைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். 2009-ல் லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். 2011-ல் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டும் தோற்றார். தேமுதிகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சிட்க் பணிகள் எதிலும் ஈடுபடாமல் விலகி இருந்து வந்த ஆஸ்டின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வில் சேர வலியுறுத்தினர்…
-
- 0 replies
- 509 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவ…
-
- 1 reply
- 509 views
-
-
09 APR, 2025 | 10:41 AM காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தி…
-
-
- 6 replies
- 509 views
- 1 follower
-
-
வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை -சி.எல்.சிசில்- இலங்கையின் வடக்கில் கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களைப் பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அயல் நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவித்துள்ள மாநில புலனாய்வுப் பிரிவு கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோ…
-
- 6 replies
- 509 views
-
-
இலங்கை அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலையில் சோனியா காந்தி உருவபொம்மையை எரித்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கிருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மத்திய அமைச்சர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13077
-
- 0 replies
- 509 views
-
-
தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது - இந்திய பிரதமர் மோடி தமிழக மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தாராபுரம், மதுரை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி நேற்று மாலை கன்னியாகுமரியில் அத்தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்தும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக -பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி…
-
- 0 replies
- 508 views
-
-
காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது. Image captionஉயர்நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலி…
-
- 0 replies
- 508 views
-
-
'ஓட்டெடுப்புக்குச் செல்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!' -கார்டன் கொந்தளிப்பின் பின்னணி ' பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் ஆவார்' என மன்னார்குடி உறவுகள் பேசி வந்தாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. 'முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவாரா என்பதைக் காட்டிலும் அவரது மௌனம்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அண்ணா தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அதேநேரம், ' கட்சிக்கும் ஆட்சிக்கும் சின்னம்மாவே தலைமை தாங்க வேண்டும்' என அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். நேற்று மக்கள…
-
- 0 replies
- 508 views
-
-
ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா மின்னம்பலம்2022-01-11 நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.…
-
- 0 replies
- 508 views
-
-
போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணம்: மேலும் 4 பேர் கைது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை சிபிசிஐடி கைதுசெய்துள்ளது. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் குமார், ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் என நான்கு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளன…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PONMUDI 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம். ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
சென்னையில் பாரிய தீ விபத்து – போராடி அணைத்த வீரர்கள்! சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு அருகில் அரசாங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பேரில் நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும், சிலர் செல்போன்களில் டோர்ச் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சில இடங்களில் பட்டாசுகளையும் வெடித்தனர். இந்நிலையில், சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புக்கு அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான…
-
- 0 replies
- 508 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில், சுப்பிரமணிய சாமி மீண்டும் மதுரையில் போட்டி? மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 1998ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுப்பிரமணிய சாமி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராம்பாபுவை தோற்கடித்தார். தேர்தலில் வெல்லும் முன் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்றெல்லாம் புருடா விட்டார். ஆனால், மதுரைக்கு உருப்படியாக எந்த வேலையையும் செய்யவில்லை. மாலையில் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, முகத்துக்கு நேராக போகஸ் லைட் அடித்துக் கொண்டு, கருப்புப் பூனைப் படையினரின் சைர…
-
- 0 replies
- 508 views
-
-
பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI படக்குறிப்பு, பாடகி இசைவாணி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பாடகி இசைவாணியால் பாடப்பட்ட 'ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி புகார்களை அளித்து வருகின்றன இந்து அமைப்புகள். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்? பாடகி இசைவாணியால் பாடப்பட்டு, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவால் உருவாக்கப்பட்ட 'ஐ யாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' என்ற பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இந்தப் பாடலை உருவாக்கி, பாடியவர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் பல கா…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
ரஜினி பிறந்தநாள்: ஓபிஎஸ் வாழ்த்து! மின்னம்பலம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்த கையோடு அவரது பிறந்த நாள் வந்துள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் செய்வது, அன்னதானம் செய்வது, கோயிலில் பூஜை என பல்வேறு திட்டங்களை அவரது ரசிகர்கள் வைத்திருக்கிறார்களாம். அதுபோன்று, ரஜினியின் ரசிகர்கள் நள்ளிரவில் 12 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டி , ‘ஹாப்பி பர்த்டே தலைவா’ என்…
-
- 1 reply
- 508 views
-
-
அசாம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. வசமானது! இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன்படி, அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களையும் ஏனைய கட்சிகள் இரு இடங்களையும் கைப்பற்றுகின்றன. அத்துடன், புதுச்சே…
-
- 0 replies
- 508 views
-
-
கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக காங்கிரஸ் அரசு? பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான் காங்கிரசில் இணைந்த சித்தராமையா முதல்வரானது முதல் கட்சிக்குள் புகைச்சல்தான். முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கிளப்பி குழி பறித்த கதை மறக்கவில்லை என்பதால், சித்தராமையா மிகவும் மெத…
-
- 1 reply
- 508 views
-
-
அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு! * * * * * மதிப்பிற்குரிய மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.த.முருகேசன் அவர்களுக்கு நல்வணக்கம்! தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையில் பொதுமக்களான எங்கள் கருத்தையும் கேட்க முன்வந்தமைக்கு முதலில் என் இனிய நன்றி! நம் கல்விக் கொள்கையில் கட்டாயம் இடம்பெற்றாக வேண்டியதாக நான் கருதும் ஒன்றே ஒன்றை மட்டும் இக்கடிதத்தின் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். அதுதான் தாய்மொழி வழிக் கல்வி! அறிஞர் பெருமக்களும் கல்வியியல் ஆய்வுகளும் …
-
- 1 reply
- 508 views
-
-
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்- முதல்வர் தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு செய்யவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நீதியரசர்களும், ஆசிரியர்களும் இறைவனுக்கு சமமானவர்கள். சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டு வருகிறன. தற்போது எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் விரைவில் நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். …
-
- 2 replies
- 508 views
-
-
05 MAY, 2024 | 06:19 PM தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்தனர். இந்தியாவின் மகாராஸ்ட்ரா மாநிலம், தானே பகுதியில் செயற்பட்டுவரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த மகராஸ்ட்ரா மாநிலத்தின் 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரியிருந்தனர். இந்தியா / இலங்கை இரு நாட்டு அனுமதி…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்தவர் சைலேந்தர். இவரும் இவருடைய தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்கள். அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டில் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு …
-
- 0 replies
- 508 views
-
-
“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?” “கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பா…
-
- 0 replies
- 508 views
-
-
தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு By General 2013-03-10 11:19:21 காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(23), கருப்பையா(48), கண்ணப்பன்(63), பொன்னுசாமி(49), வைரக்கண்ணு(43) ஆகிய 6 பேர் கடந்த 5-ஆம் திகதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை அவர்கள் நாகை மாவட்டம், கோடியக்கரைக்குக் கிழக்கே…
-
- 0 replies
- 508 views
-