தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
புதிய கட்சி தொடர்பாக ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கனவே நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தாா். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில்,…
-
- 12 replies
- 1.3k views
-
-
National Education Policy 2020 புதிய கல்விக் கொள்கை: உயர்கல்வியில் தமிழ் வழியில் படிக்கும் வாய்ப்பு என்னவாகும்? 31 ஜூலை 2020, 03:27 GMT புதிய கல்விக் கொள்கை - புத்தொளி வீசுகிறதா? புற்றில் இருந்து சீறுகிறதா? இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் முக்கியமான கூறுகளில் ஒன்றாக வாய்ப்புள்ள இடங்களில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி அல்லது தாய்மொழி வழியாகவே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருதப்படுகிறது. பள்ளிக் கல்வியில் தாய்மொழிக் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி எவ்வாறு பயன்படுத…
-
- 1 reply
- 1.6k views
-
-
புதிய தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டின் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளதாக தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். ஆனால், ராமமோகன ராவ் நீக்கப்பட்டதாக தகவல் இதுவரை வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/tamilnadu/75625-girija-appointed-as-new-tamil-nadu-chief-secretariat.…
-
- 2 replies
- 1.9k views
-
-
சென்னை - ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, கிண்டி போலீசார் சந்தேகத்துக்கிடமான 4 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் இயங்கி வரும் இந்து இளைஞர் சேனாவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 4 பேரும் இந்து இளைஞர் சேனா-வைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை சேனல் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவங்களை வைத்து, குண்டுகள் வீசிய சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்தவர்களிடமிருந்து இந்தக் குண்டுவீ…
-
- 0 replies
- 197 views
-
-
இந்திய தொலைக்காட்சிகள் ஈழத்தில் நடைபெறும் அவலங்களை சரிவர படம்பிடித்து காட்டுவது பெரும் குறைபாடு கொண்டதாக இருந்துவந்தது. தொடர்நாடக புகழ் சன் ரிவி, கலைஞர் ரிவி போன்றன தமிழகத்தின் மீடியா உலகில் தனியுரிமை சக்திகளாக இருந்தபோது இலங்கைப் போர் விடயத்தில் மோசமான அணுகுமுறையை கையாண்டன. 2009 வன்னியில் நடைபெற்ற போரின் பக்கங்களைகூட சரிவர தமிழக மக்களுக்கு காட்டாமல் நாடகமாடி வந்தன. இப்போது தமிழகத்தின் முதலாவது சிறந்த தொலைக்காட்சி என்ற பெயரைப் பெற்றுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி வந்த பின்னர் சன், விஜய், கலைஞர், ஜெயா போன்ற தொலைக்காட்சிகளின் குருட்டுப் பக்கங்களில் ஒளியடிக்க ஆரம்பித்துள்ளது. புதிய தலைமுறை உடனுக்குடன் தமிழக மக்களுக்கு சரியான பக்கத்தை அடையாளம் காட்டத் தொடங்கியிர…
-
- 6 replies
- 953 views
-
-
புதிய வடிவத்தில் பேனர், கறுப்புச் சட்டையுடன் நிர்வாகிகள்..! தொடங்கியது தி.மு.க செயற்குழுக் கூட்டம் #liveupdates தி.மு.க செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டார். தீர்மானத்தை டி.கே.எஸ் இளங்கோவன் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தில், 'பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவர்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ளக் கூடிய பல்கலைகழகமாக இருந்தவர் கருணாநிதி. தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஏற்றத்தாழ்வு போக்கி, சமத்துவம் உருவாக்குவதற்கு மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. பெரியாரின் விருப்பப்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட…
-
- 4 replies
- 767 views
-
-
புதிய விண்வெளி - பாதுகாப்பு தொழிற்கொள்கை: சாதிக்குமா தமிழ்நாடு? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்நாதன் பதவி,மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 23 நிமிடங்களுக்கு முன்னர் வானூர்தித் துறையிலும் பாதுகாப்புத் தளவாடத் துறையிலும் முதலீடுகளை ஈர்ப்பதையும் உற்பத்தியைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் துறைகளுக்கான பிரத்யேகமான தொழிற்கொள்கையை இரண்டாவது முறையாக வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் கொள்கைகள் எப்படிப் பலனளிக்கும்? தமிழ்நாடு அரசு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைக்கான கொள்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் இந்தத் …
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தி…
-
- 3 replies
- 629 views
-
-
புதுக் கட்சி தொடங்குவது குறித்து கமல் அதிரடி அறிவிப்பு! சமீப காலமாக தமிழக அரசியல் குறித்து தொடர் கருத்துகள் கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் சில நாள்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். அப்போது, 'கேரள முதல்வரிடம் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்' என்று வெளிப்படையாகவே அறிவித்தார். சீக்கிரமே கமல் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்று ஆருடம் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், 'தனிக்கட்சி தொடங்குவது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்து வருவதாக' கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் மேலும், 'நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது உ…
-
- 11 replies
- 1.6k views
-
-
புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை: சசிகலா அதிர்ச்சி 'தமிழக அரசியலில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது' என, நடிகர் ரஜினிகாந்தின் பரபரப் பான பேச்சு, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு,கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தன், அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமாக, ரஜினியின் பேச்சு அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். புதுக்கட்சியை துவக்குவதற்குரிய ஆலோசனை பெற, அரசியல் வி.ஐ.பி.,க்களை சந்திக்க, ரஜினி முடிவு செய்துள்ளார் என, அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. ரசிகர்கள் வேண்டுகோள் ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என…
-
- 0 replies
- 561 views
-
-
புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்: நெடுமாறன், ரகுபதி நேரில் வாழ்த்து ஈழப் பிரச்சணையை முன்னிருத்தி புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் நேற்று செவ்வாய் கிழமை காலை கல்லூரி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இங்கு மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் தமிழகம் எங்கும் பரவியதால் அனைத்து தமிழ் உணர்வாளர்களும் இந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதன் கிழமை காலை பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதே போல தி.மு.க முன்னால் மத்திய இணை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று மாணவர்களுடன் இருந்து அவர்களுக்க வாழ்த்து கூறினார். மேலும் பல தலைவர்களும் வந்து கொண்டிரு க்கின்றனர். இந்த மாணவர்களுக்கு துணையாக மேலும் பல மாணவர்கள் அர…
-
- 0 replies
- 465 views
-
-
புதுக்கோட்டை கிராம குடிநீர் தொட்டியில் நாய் சடலம் - ஒருவர் கைது; மன நலம் பாதிக்கப்பட்டவரா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் புகட்டுவதற்காக நாயை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு மேலே தூக்கிச் சென்றதாகவும், அப்போது நாய் தவறி உள்ளே விழுந்துவிட்டதாகவும் அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அந்த மேல்நிலை குடிந…
-
- 0 replies
- 746 views
- 1 follower
-
-
தமிழகத்தின் புதுக்கோட்டை கீரமங்கல நெடுவாசல் போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் மாற்றப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நிலத்திலிருந்து எரிவாயுவை பெறுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் நிலத்தடிநீர் வளம் குறைவடையும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி முதல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடைய போராட்டங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப…
-
- 0 replies
- 414 views
-
-
புதுக்கோட்டை சிறுமி கொலை: முதல்வர் இரங்கல், குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு புதுக்கோட்டை, அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல…
-
- 0 replies
- 521 views
-
-
புதுக்கோட்டை சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றம் - உடல்நிலை எப்படி உள்ளது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா, நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றினர். இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவன் புகழேந்தியின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்துகுப் பிறகே தெரிவிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிய…
-
- 2 replies
- 476 views
- 1 follower
-
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் இருவர் இறந்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. கோப்புப் படம் புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் கிராமத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரின் முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது மாடு முட்டியதில் இரண்டு மாடு பிடி வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளாதாகவும் பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ''இன்று காலை புதுக்கோட்டை மட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் நான் …
-
- 2 replies
- 795 views
-
-
புதுக்கோட்டை: ஒதுக்கப்பட்ட பெண் ஒன்றிய பெருந்தலைவர்... கண்டித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்! அருண் சின்னதுரைமணிமாறன்.இரா பெண் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ''பதவியேற்ற நாள் முதல், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னை மதிப்பதில்லை, அரசு நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை.'' புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மாலா ரஜேந்திரதுரை தி.மு.க வேட்பாளாரகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், தான் பெண் என்பதாலும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அதிகாரிகள் உதாசீனப்படுத்தி, புறக்கணிப்பதாக மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், "இனிவரும் காலங்களி…
-
- 0 replies
- 250 views
-
-
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை?- காதலன் கண்ணீருடன் எஸ்.பியிடம் புகார் இருவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாததால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர். புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக் (20). பெயின்டர் வேலை செய்து வருகிறார். திருவரங்குளத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரி (19). இவர் புதுக்கோட்டை அரசுக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். விவேக்கும், சாவித்திரியும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சம…
-
- 1 reply
- 680 views
-
-
புதுக்கோட்டையில் இன்று கலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ராமதாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவிடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியினருக்கும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தலித் அமைப்பினரையும் காவல்துறை கைது செய்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13015:viduthalaisiruththai&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 474 views
-
-
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று …
-
- 0 replies
- 976 views
-
-
புதுச்சேரி கடல் வழியாக இலங்கைத் தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியா செல்ல முயற்சி? அண்மையில் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தில், இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் கணக்கில் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை கண்காணிக்க கடலோர மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 416 views
-
-
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய குந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது 16 வயது சிறார் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், சிறுமிகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இட…
-
- 0 replies
- 587 views
-
-
புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல் புதுச்சேரி ரிசார்ட்டில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டிடிவி தினகரன். - படம்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங…
-
- 0 replies
- 315 views
-
-
புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை ஜெ.முருகன்அ.குரூஸ்தனம் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண் பேடியின் அழைப்புக்காக சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 9 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பத…
-
- 0 replies
- 413 views
-
-
புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பதில்கள் 4 ஜூலை 2022, 01:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலரா புதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவிக்கிறது. நிலைமையின் தீவிரத்தன்மையைக் கணக்கில் கொண்டு, அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-