Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளில் பரோல் மூலம் ஒரு நாள்கூட வெளியே வரவில்லை. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அதைக் கணக்கில்கொண்டு அவருக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க பேரறிவாளன் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்…

    • 0 replies
    • 399 views
  2. பேரறிவாளனுக்கு பரோல் - அரசு கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்வது பற்றி பரீசீலிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சட்டமன்றத்தில் கூறியதை அடுத்து, பேரறிவாளனின் விடுதலைக்காக குரல் கொடுப்போர் மகிழ்ச்சியையும், அதை எதிர்ப்பவர்கள் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும…

  3. பேரறிவாளனுக்கு பரோல்... விரைவில் வருகிறது அறிவிப்பு?! கால் நுாற்றாண்டு காலமாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் ராஜீவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளி பேரரறிவாளனுக்கு விரைவில் பரோல் வழங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உட்பட நால்வருக்கு விதிக்கபட்ட துாக்குதண்டனை சில ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துவரும் அவர்கள் நான்குபேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் கொலைவழக்கில் க…

  4. பேரறிவாளனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கும் பரோல்: மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரபராதியை விடுவிக்குமா? வீட்டின் பெயர் ‘செங்கொடி இல்லம்’ என மாற்றப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமானைப் பார்க்க ஒருமுறை நண்பர் அமீர் அப்பாஸ், இயக்குநர் மீரா கதிரவன், கீற்று ரமேஷ் மற்றும் என் உதவி இயக்குநர்களோடு சென்றேன். அப்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்கில் தொடர்பு உடையவர்களாயிற்றே.. சந்திப்பதா, வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது. ஆனாலும், அறிமுகப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று பேசத் தொடங்கினோம். எங்களைப் …

  5. வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவர் கோரும் மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தங்களது கருணை மனுவை காலதாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்யக் கோரி பேரறிவாளவன் உள்ளிட்ட மூவரும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கடிதம் அனுப்பியிருந்தார். வீடியோ கா…

  6. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! மின்னம்பலம்2021-07-28 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு …

  7. பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது! [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 01:11.36 AM GMT ] பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன. 2014, பெப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, “23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் புலனாய்வு செய்யப்பட்டு,…

  8. பேரறிவாளனை விடுவிக்க எந்த ஆட்சேபமுமில்லை - ராகுல் இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது. இருப்பினும் குறித்த இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசாங்கம் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியில் தடுத்து வைத்துள்ளது. இந் நிலையில் பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கி…

  9. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயார்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயாராக இருக்கிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பேசும்போது, ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யும் கைதிகளுடன் சேர்த்து சிறையில் நோயால் கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று பேசினார். அதற்…

  10. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் புது தில்லி: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 7 பேரை விடுவிக்க மறுத்த குடியரசுத் தலைவரின் உத்தரவு நகல் 7 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு மீண்டும் பரிசீலி…

  11. பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம் இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. …

  12. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு சென்னை பேரணியில் பங்கேற்று ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட படங்களுள் ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது. அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ…

  13. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு! சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் திரையுலக சங்கங்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கூறுகையில், "பேரறிவாளன் உட்பட 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு …

  14. பேரறிவாளன் உட்பட்ட... 7 பேரையும், மன்னித்து விட்டோம் – ராகுல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் 7 பேரையும் மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், 7 பேர் மீதும் எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (புதன்கிழமை) தமிழகம் வந்துள்ள இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் இன்று இடம்பெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்த…

  15. டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் ஜனவரி 18ல் தீர்ப்பு அளித்திருந்தது. கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்ய பல ஆண்டுகள் ஆனதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=85794

  16. பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம்! கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு, வேலைக்காக யாரும் திண்டாடக்கூடாது என்பதற்காக கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வருடத்திற்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த சைலேந்திர பாபுவால் இந்த திட்டம் புழல் சிறையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவ்வாறு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன் என்பது குற…

  17. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த டெல்லி விஜயத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து. கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர/

  18. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? என்பது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #RajivCase #SupremeCourt புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வ…

  19. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை, வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அர…

    • 0 replies
    • 356 views
  20. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை ஆளுநரின் கையில் தான் உள்ளது: சி. வி சண்முகம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை ஆளுநரின் கையில் தான் உள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. “பொன் மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான். ஆலையை திறப்பதற்கான எந்த வாய்ப்பையும் அரசு கொடுக்காது. கொள்கை முடிவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு துணை முதல்வர…

  21. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 73 Views முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர். 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் குறித்த 7 பேர் விடுதலையில் இது வரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அவர்களின் சி…

  22. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார்: அற்புதம்மாள் நம்பிக்கை [ Monday,1 February 2016, 06:20:46 ] தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்திபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்றும் அந்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வரும் என நம்புவதாக பேரறிவாளனின்தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஈரோட்டில் நேற்று பொதுக்கூட்டம்நடைபெற்றபோது அற்புத்தம்மாள் இவ்வாறு தெரிவித்துள்ளார். ’கடந்த 25 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்காக என் மகன் பேரறிவாளன் சிறையில் உள்ளார். பேரறிவாளனிடம் வாக்கு மூ…

  23. 'பேரறிவாளன் குற்றவாளி அல்ல....!' விசாரணை ஏஜென்சி வெளியிட்ட தகவல்! [ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2016, 12:45.32 PM GMT ] [ விகடன் ] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்ம முடிச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் குற்றவாளியே அல்ல, என விசாரணை ஏஜென்சி வெளியிட்ட தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 1999ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் பேரறிவாளன். இவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இ…

  24. கருணை மனுவை தாமதமாக நிராகரித்த காரணத்துக்காக ஒருவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று புல்லர் என்பவரின் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது இந்த தீர்ப்பு ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீடு செய்திருக்கும்; முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 தமிழர் நிலை என்ன என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அவர்களும் இதே காரணத்தின் அடிப்படையிலேயே தமது மேல்முறையீட்டை செய்துள்ளனர். இந்திய பயங்கரவாத எதிர்ப்பு படையின் தளபதி ; மனீந்தர் சிங் பீட்டாவை கொலை செய்யும் நோக்கில், 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மர…

    • 0 replies
    • 1k views
  25. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தன. அந்த வகையில்…

    • 13 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.