Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில் இருப்பவர் உண்மையில் யார்? சின்மயி விளக்கம் மேலே இருக்கும் படம்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் ஒரு மொபைல் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். 'இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்" என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரையே அழைத்து கேட்டோம். "இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வ…

  2. பிரதமர் மோடிக்கு சசிகலா திடீர் கடிதம்! குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆகியோருக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராகுல் காந்தி, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு வரை பங்கேற்றார். …

  3. திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ By RAJEEBAN 20 DEC, 2022 | 09:25 AM விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் நேற்று கைது செய்தனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில்…

  4. தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை எதிரொலி.. வருது… வருது… மஞ்சள் பைகள். நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வர உள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிக்கும் பணி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அ…

  5. ஜெ. உடலை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் என்ன.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி சென்னை: ஜெயலலிதா வாரிசு என கூறும் வழக்கில் அம்ருதாவிடம் ஏன் டிஎன்ஏ சோதனை செய்யக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார். டிஎன்ஏ சோதன…

  6. விமான நிலைய பேட்டி: வருத்தம் தெரிவித்தார் ரஜினி விமான நிலையத்தில் ரஜினி பேட்டி- கோப்புப் படம் மிரட்டும் தொனியில் பத்திரிகையாளரிடம் பேசியதாக எழுந்த புகாரில் பலத்த கண்டனம் எழுந்ததை அடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ரஜினி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இதுவரை கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் வெளியிடவில்லை. ஒவ்வொரு தடவையும் அரசியல் அழுத்தம் வரும்போது மட்டும் கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் மாற்றிக்கொள்வதும் ரஜினியை சர்ச்சையில் சிக்க வைத்தது. ஐபிஎல் போராட்டத்தில் ஆரம்பத்தில் ஆதர…

  7. கருணாநிதி-ஸ்டாலின் மோதல் "உச்சகட்டம்"... கதிகலங்கும் திமுக நிர்வாகிகள்.சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திமுக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்... திமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகாலமாக கருணாநிதிதான் இருந்து வருகிறார். இப்போது திமுக என்றால் 'தளபதி' ஸ்டாலின் என்ற நிலை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தில் ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரியும் தன்னை முன்னிறுத்திப் பார்த்தார். ஆனால் இந்த யுத்தத்தில் அழகிரி தோற்றுப் போனார். கனிமொழிக்கு ரெட்கார்ட் அழகிரியைப் போலவே கனிமொழியும் தம் பங்குக்கு தலைதூக…

  8. பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "இது என்னுடைய கட்சி. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம். அது யாராக இருந்தாலும்..." - பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக சனி அன்று (டிசம்பர் 28) அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை. கட்சியின் இளைஞரணி தலைவராக தனது மகள்வழிப் பேரனை முன்னிறுத்தியதற்கு எதிராக அன்புமணி கோபப்பட்டதால், ராமதாஸ் இவ்வாறு கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் என்ன நடந்தது? ராமதாஸ் உடன் அன்புமணி வார்த்தை மோதலி…

  9. அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் படக்குறிப்பு, அந்தமானில் பெயரிடப்படாத 21 தீவுகளில் ஒன்றுக்கு தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேதாஜியின் 126ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார். இதில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் உள்ளது. இந்த தீவுகள் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக…

  10. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்.பி.க்கள் இருவர் ஆதரவு; சசிகலாவுக்கு தொடரும் பின்னடைவு ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ நாமக்கல் எம்.பி. பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் ஆகிய இருவர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது, சசிகலா அணிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அதிமுக எம்.பி.க்கள் நாமக்கல் பி.ஆர். சுந்தரமும், கிருஷ்ணகிரி அசோக்குமாரும் சென்றனர். அங்கு ஓபிஎஸ்ஸை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் ந…

  11. விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது: வைகோ மதிமுக பொதுச் செயலர் வைகோ விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. அதற்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மாவட்ட பிரச்சாரப் பணிகளை மார்ச் 28-ம் தேதி தொடங்க உள்ளோம். மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. விஜயகாந்துடன் கூட்டணி பேச்ச…

  12. தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகியவை மிக…

  13. Editorial / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 05:08 - 0 - 50 பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து பரீட்சை எழுத வைத்த சம்பவம் குறித்து பாடசாலை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 5-ம் திகதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு பரீட்சைகள் நடைபெறுவதால் பர…

  14. கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம் திமுக மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால்தானே, அதை மிரட்டி தமிழக நலன்களுக்காக சிலவற்றை சாதித்துக் கொள்ள முடிகிறது; 6 வது முறையாக திமுக மிரட்டல் என்று தினமணி கேலிக்காகக் கூறினாலும், அதனால் விளைந்த நன்மைகளை யாரும் மறைக்க முடியாதே என்று திமுக தலைவர் கருணாநிதி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென…

    • 7 replies
    • 1.2k views
  15. மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி... சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு. …

  16. தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு By RAJEEBAN 20 DEC, 2022 | 01:18 PM தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த மனு மதுரை ஐகோர்ட் கி…

  17. கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி மு.க.அழகிரி | கோப்புப் படம். சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார். இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை 1…

  18. திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா ரஜினி?- அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ரஜினிகாந்த் - கோப்புப் படம் திமுக தலைவர் கருணாநிதியை இன்று (புதன்கிழமை) மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாகவும் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்…

  19. அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. …

  20. தமிழக பந்த் மறியல்... தலைவர்கள் கைது நிலவரம்! காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக சென்றனர். அங்கு, ரயில் மறியலில் ஈடுபட சென்ற ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் அங்கு கோஷங்கள் எழுப்பினர். அதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து அங்கு தயாராக நிறுத்…

  21. முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்ததாக கருணாநிதி குற்றச்சாட்டு திமுக தலைவர் கருணாநிதி. | படம்: ஜே.மனோகரன். முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது. அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக…

  22. மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் ஜெயலலிதா இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராஜபக்சே வருவதால் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராஜபக்சே வருவதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ள…

    • 7 replies
    • 1.1k views
  23. சசிகலா கணவர் நடராஜனுக்காக மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல், திருச்சியிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் வரவழைக்கபட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகாலாவின் கணவர் நடராஜன், 74, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'நுரையீரல் பாதிப்பும் உள்ளதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்…

  24. சென்னை விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. சென்னை விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையம் ரூ.2,200 கோடியில் அண்மையில் கட்டப்பட்டது. இந்தநிலையில், இண்டிகோ விமானத்திற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. 300 அடி நீளமும், 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மழை மற்றும் ஏசி தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னால் இதே பகுதியில் மேற்கூறை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி நக்கீரன்.

    • 7 replies
    • 681 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.