தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர் சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடு…
-
- 2 replies
- 1k views
-
-
ஜெயலலிதா மரண விசாரணை: லண்டன் வைத்தியருக்கு அழைப்பாணை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, லண்டன் வைத்தியர் ரிச்சர்ட் பீலேயை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைக்கு எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி காணொளி காட்சி ஊடாக முன்னிலையாகுமாறு ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்காததால் ஜனவரி 7ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு இரண்டாவது முறையாகவும் ஆணையகத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜனவரி 8 ஆம் …
-
- 0 replies
- 1k views
-
-
எங்கள் தமிழ் மக்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய ஆவணப்படம்: அறப்போர் 29.06.2013 சுவிஸ், ரிசினோ (Ticino) மாநிலத்தில் நடைபெற்ற மாணவர் எழுச்சி நாள் அன்று, அறப்போர் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் அங்கு கூடியிருந்த எல்லா மக்களின் கவனத்தையும் எட்டிப்பிடித்தது. அறப்போர் ஆவணப்படம் மூலம், தமிழ் இனத்திற்கு எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் எதற்காக போராடுகிறார்கள், மாணவர்கள் எதற்காகக் குரல் எழுப்புகிறார்கள் என்று, இந்த ஆவணப்படத்தில் சரியான வசனத்தோடு, சரியான காட்சிகளோடு கூறி இருக்கிறார்கள். தமிழ் இனத்திற்கு நடக்கின்ற பல பிரச்சனைகளில் ஒன்றை எடுத்து நன்றாக காட்டி இருக்கிறார்கள். நான் பலரிடமிருந்து தெரிந்து கொ…
-
- 5 replies
- 1k views
-
-
ராஜராஜ சோழனின் பிறந்தநாளை 1000 ஆண்டுகளாக தமிழ்நாடு கொண்டாடுவதன் பின்னணி கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க. பதவி, பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் வாழும் காலத்திலும் மறைந்த காலத்திலும் பிரம்மாண்ட பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என்பது ஒரு சிலருக்கே அமைகின்றது. தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது மறைந்து ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் பிறந்த நாள் கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜ ராஜசோழனுக்கு மட்டுமே. அப்படி அவர் என்ன செய்தார்? எதற்காக இந்த ‘சதய விழா’ ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகின்றது? சாமானியர் முதல் தமிழ்நாட்டு முதலமைச்சர் வரை அரசு விழாவாகவே அறிவித்து தொடர்ந்து கொண்டாடி …
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
ஐந்து நாள், 'பரோல்' முடிந்து, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால், சசிகலா மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார்; அத்துடன், கலக்கமும் அடைந்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வராத தாலும், எதிர்பார்த்த அரசியல் மாற்றங்கள் நிகழாததாலும், விரக்தியில் உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்ரவரி மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை …
-
- 0 replies
- 1k views
-
-
காரைக்கால் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த கத்தாழை மீன்கள் 1½ டன் சிக்கியது - ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது காரைக்கால், ‘நிவர்’, ‘புரெவி’ புயல் மற்றும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர், கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை எச்சரிக்கை முடிந்ததை அடுத்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் சென்றனர். அவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். அவர்க…
-
- 1 reply
- 1k views
-
-
ஜெ., குடியிருந்த வீட்டில் கும்மாளமிடும் சசி சொந்தங்கள் * அமைச்சர் பாண்டியராஜன் ஆவேசம் ''சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், அவரை முன்னி றுத்தி, ஓட்டு கேட்பது தற்கொலைக்கு சமமானது,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: * முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம், திடீரென தோன்றியது ஏன்? ** கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், என்னை தொடர்பு கொண்டனர். முதல்வர் பன்னீர்ச…
-
- 0 replies
- 1k views
-
-
100% தமிழக மக்களை நம்புகிறோம்: சீமான் நாங்கள் 100% தமிழ் மக்களை நம்புகிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சீமான் பேசும்போது, மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அரை நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு மாற்றாக தான் நாங்கள் கட்சியை தொடங்கியுள்ளோம். அவ்வாறு இருக்கையில் அந்த கட்சிகளுடன் எவ்வ்வாறு கூட்டணி வைத்து கொள்ள முடியும். அந்த தவறை செய்ய நான் தயாராக இல்லை. நாங்கள் 100% நான் தமிழ் மக்களை நம்புகிறேன். அதனால்தான் நான் தனித்து நிற்கிறேன். எந்த குழப்பமும் இல்லாமல் இத்தேர்தலில் ஒரு…
-
- 3 replies
- 1k views
-
-
தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்! தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு. பெங்களூர்: மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார் .கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை ஆலோசிக்காமல், முடிவு எடுக்கப்படாது என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், 5,912 கோடி ரூபாய் செலவில், 66 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, புதிய அ…
-
- 0 replies
- 1k views
-
-
கின்னஸ் சாதனையும்.. சேலம் திருநங்கையும்... Published : 11 Apr 2019 11:00 IST Updated : 11 Apr 2019 11:00 IST வி.சீனிவாசன் கடும் உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். வெற்றிச் சிகரத்தை அடைய எதுவுமே தடையாக இருக்காது என்பதை நிரூபித்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த திருநங்கை அர்ச்சனா. கின்னஸ் சாதனை புரிந்த குழுவில் இடம் பெற்றது மட்டுமின்றி, பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இவர். சேலம் பழைய சூரமங்கலத்தில் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வரும் அர்ச்சனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ‘தாய்’ திட்டத்தின் கீழ் 2007-ல் அழகுக் கலை பயிற்சி முடித்துள்ளார். பாலின வேறுபாட்டா…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்! தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை முதல்வரின் மனைவி பொது நிகழ்வில் பங்கற்றது இல்லை. முதன் முறையாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி, பொது நிகழ்வில் கலந்து கொண்டது, அரசு ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாதான், முதல்வராக பொறுப்பேற்க வ…
-
- 1 reply
- 1k views
-
-
போலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது இலங்கையர்களை இந்தியர் போன்று போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைகத்த சந்தேக நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . 38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில்; போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்…
-
- 1 reply
- 1k views
-
-
தபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ …
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குமரி தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எனப் பெரும்படையே சீட் கேட்டுக் காத்து நிற்கிறது. இதேபோல் காங்கிரஸிலும் விஜயதரணி, வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் எனப் பலரும் சீட் கேட்கின்றனர். ஆனாலும் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாததால் பாஜக, காங்கிரஸ் முகாம்களில் இதுவரை தேர்தல் சூடுபிடிக்கவில்லை. அதேநேரம் கடந்த தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 17,015 வாக்குகள் மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சியானது, குமரி இடைத்தேர்தலுக்குப் பிரதான கட்சிகளை முந்திக்கொண்டு வேட்பாளராக வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வினை அறிவித்துள்ளது. அவர் பிரச்ச…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான மதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)30 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கிறார். 1992, ஜூன் மாதம் 20ம்தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் ஒருவர்தான் மதி. சென்னையில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவாரத்தில் அமைந்து…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை! KaviDec 12, 2024 08:14AM இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பேசுப்பொருளாகி உள்ளது.. இலங்கை தமிழரான 37 வயது ஜாய், தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, நேற்று (டிசம்பர் 11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் ச…
-
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
ராஜினாமா பண்ணு இல்லனா.. கமல் சொன்ன அந்த வார்த்தை மௌனம் கலைத்த மகேந்திரன்
-
- 0 replies
- 1k views
-
-
வங்கக் கடலோரத்து சிறு மணல் திட்டு மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை! சென்னப்பட்டிணம் உருவான கதை... சிங்காரச் சென்னைக்கு இன்று வயது 379. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கென்று ஒரு நீண்ட தனித்துவமான வரலாறு உண்டு. கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதலே பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் மிக முக்கியமான வியாபார கேந்திர மையமாகவும், ஆட்சி அதிகார மையமாகவும் விளங்கியிருப்பதாக சரித்திரச் சான்றுக…
-
- 3 replies
- 1k views
-
-
`ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்கள…
-
- 3 replies
- 1k views
-
-
சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு! மின்னம்பலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைகள் மற்றும் பொதுத் தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் பாதுகாப்பு வளையங்கள் அமைக்க பத்து நாட்கள் கெடு விதித்துள்ளது டிஜிபி அலுவலகம். சமீபநாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலையை அவமதித்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரியாருக்கு காவி சாயம், எம்.ஜி.ஆருக்கு காவித் துண்டு என அணிவிக்கப்பட்டது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற அருவருப்பான சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை நிலைநாட்ட முதல்வர் எடப்பாடி பழனிசா…
-
- 3 replies
- 1k views
-
-
அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது? ஆர். மணி மூத்த பத்திரிகையாளர் Getty Images (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள். இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ க்களுடன் சட்டசபையில் இருந்து கொண்டிருக்கிறது. திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்…
-
- 3 replies
- 1k views
-
-
“அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’ ‘’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளி…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில…
-
- 5 replies
- 999 views
-
-
படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர் 22 ஏப்ரல் 2023 அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ 'போலி' என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார். அந்த ஆடியோவில் பேசிய…
-
- 9 replies
- 999 views
- 2 followers
-