Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "புலம்பெயர் தமிழர் நல வாரியம்" தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலம் பெயர் வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 நபர்களைக் கொண்டு இந்த வாரியம் ஏற்படுத்தப்படும். 5 கோடி புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு வாரியம் உருவாக்கப்படும். புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊர் …

  2. வேலூரில் மது குடித்த 5 வயது பேரன், தாத்தா மரணம் - என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதிர். இவர்களுக்கு ரூத்தேஷ் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் ரூத்தேஷின் தாத்தா சின்னசாமி (வயது 62) வீட்டில் மது அருந்தியுள்ளார். பிறகு பாட்டிலில் மீதமிருந்த …

  3. தமிழ்நாட்டை... அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை, மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் தற்போது…

  4. ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்? ஏ. ஆர். மெய்யம்மை பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / TWITTER திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 'தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்' என்ற பெயர் கிடைத்தது ஒருபுறமிருக்க, அவர் ஏன் பாப்பாபட்டி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மு. கருணாநிதி தலைமையில் முந்தைய திமுக அ…

  5. மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு! மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும், ஆற்றல் படைத்த ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் ஒவ்வொரு கடலோர கிராமங்களுக்காகச் சென்று சோதனையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1242738

  6. கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு மின்னம்பலம்2021-08-02 தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் ப…

    • 9 replies
    • 1.1k views
  7. கோயில் நகைகள்: மோடி வழியில் ஸ்டாலின் மின்னம்பலம்2021-10-03 தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் இருக்கும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இருக்கும் நகைகளை உருக்கி அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அந்த வட்டிப் பணத்தை கோயில்கள் திருப்பணிக்கு செலவு செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதில் ஊழல் நடக்கும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறி வருகிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபு மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். “சமயபுரம் கோயிலில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது பெருமதிப்பிலான தங்க நகைகள் அப்படியே கட்டி வைக்கப்பட்டி…

  8. கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா என்பவரே காணாமல் போயுள்ளார். இவர் ரஷ்யாவில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை வந்த தன்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் அவரை தேடிய உறவினர்கள், சி.சி.டி.வி காட்சியை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணி அளவில் வெள்ளை நிற காரில் தன்யா ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பொலிஸில் பெற்ற…

  9. ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும் - ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த பிரதீப் வி பிலிப் ஐ.பி.எஸ் ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் (வலது) ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வுபெறும் நாளில் ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் வைத்த கோரிக்கை சற்று வித்தியாசமானது. ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின் சாட்சியாக இருக்கும் தனது போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் அது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் ஓய்வுபெறும் நாளில் அந்தத் தொப்ப…

  10. காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை எம்.ஏ.பரணிதரன் பிபிசி தமிழ் 9 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER இன்று காமராஜர் நினைவு நாள். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம். இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்பு மட்டுமே. 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக அரச…

  11. தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது? ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VANNI ARASU/FACEBOOK படக்குறிப்பு, வன்னி அரசு. `ஆபரேஷன் 'டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் `ரவுடிகள் ஒழிப்பு வேட்டை', அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்ல…

  12. இலங்கைக்கு கஞ்சா கடத்தினாரா யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கிய பின்னணி என்ன? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நாகை கடலோர பகுதியில் ஃபைபர் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள் நாகையில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 270 கிலோ கஞ்சா, நாகை மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளால் பைபர் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'நாகை மீனவன்' யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் குணசீலன் உட்பட நான்கு சந்தேக நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள்…

  13. பத்திரிகையாளர்களை 'Presstitutes' என்றும் நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணப்பாளர் சீமானின் தாயார் குறித்தும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. மோகன் என்பவர் இயக்கிய 'ருத்ரதாண்டவம்' படத்தின் சிறப்புக் காட்சி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி, சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. அந்தச் சிறப்புக் காட்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஹெச். ராஜா. ருத்ரதாண்டவம் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக கூறிய ஹெச். ராஜா அதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். அப்போது செய்தியாளர் …

  14. விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு? மின்னம்பலம்2021-09-28T07:30:02+5:30 விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தான் ஆரம்பித்துள்ளதாக சென்ற ஆண்டு திடீரென்று எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இதனை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். உடனேயே இந்த மக்கள் இயக்கத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், இந்த அமைப்பில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய். கூடவே இந்த இயக்கத்தில் நிர்வாகிகளாக இருந்த தனது அப்பா, அம்மா மற்றும் சிலர் மீத…

  15. 7 அதிசயங்களை விடவும்... அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்! உலகின் 7அதிசயங்களை விடவும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று அவர் நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரிய கோவிலின் சிறப்புக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241449

  16. கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ராஜசேகர், அதிமுக ஒன்றிய செயலாளர் கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாகக் கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில்…

  17. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக தமிழ்நாட்டின் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் யார் என்று தெரியாத சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மீனவருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் கடற் கொள்ளையர்களால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்…

  18. 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின் மின்னம்பலம்2021-09-25 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக மக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “மக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்த…

  19. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன். தமிழ்நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொடுமை நடைப…

  20. கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி கொடூர கொலை - 3 சிறார்கள் உள்பட நால்வர் கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வெட்டிக் கொல்லப்பட்ட காந்திமதி கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஒருவரின் மனைவி வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று சிறார்கள் உள்பட நால்வரைக் கைது செய்துள்ளது காவல்துறை. என்ன நடந்தது? கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட குப்பன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் ‌மனைவி காந்திமதி. இவருக்கு வயது 29. காந்திமதியின் கணவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அன்று கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து, தி…

  21. பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் - வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தைச் சார்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 40 வயதாகிறது. …

  22. தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 100 இலங்கையர்கள் September 21, 2021 தூத்துக்குடி கடற்கரை வழியாக 100 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் அண்மைய நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற மோசடியில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினரின் அறிக்கைகளை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையர்கள் தூத்துக்குடிக்கு ஐந்து குழுக்களாக உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படகுகளில் வருகை தந்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். தமிழ்நாட்டை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் உ…

  23. நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட் 21 செப்டெம்பர் 2021, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர். மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. மருத்த…

  24. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 19 செப்டெம்பர் 2021, 03:03 GMT பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY படக்குறிப்பு, கொடுமணல் அகழ்வுப்பணி தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுக…

  25. உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்: போட்டியிட அனுமதி கிடைத்ததின் பின்னணி என்ன? ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER@ACTORVIJAY காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. களத்தில் இறங்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.