தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
திமுக பிரமுகர் தூண்டுதலில் ஆணவப் படுகொலையா? கும்பகோணம் இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கும்பகோணத்தில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். `என் தம்பியின் காதலால் பிரச்னை வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், கொலை வரையில் செல்லும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என கலங்குகிறார், கொலையான பிரபாகரனின் சகோதரி பிரியங்கா. என்ன நடந்தது? கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூரில் உள்ள வேட்டமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். 24 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்…
-
- 0 replies
- 498 views
- 1 follower
-
-
சீமானை கைது செய்: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்! மின்னம்பலம்2021-10-12 காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை , கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் இன்று (அக்டோபர் 12) சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரான செல்வப் பெருந்தகை, “தொடர்ந்து சீமான் அவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது. அவர் வாங்குகிற கூலிக்கு சரியாக வேலை பார்க்கிறார் என்று தோன்றுகிறது. உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்கிறார…
-
- 0 replies
- 330 views
-
-
சீமான் Vs விடுதலைச் சிறுத்தைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் குழந்தையா சீமான்? வி.சி.க. முன்வைக்கும் 3 குற்றச்சாட்டுகளின் பின்னணி NAAM TAMILAR விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவின், அண்மைக்கால ட்விட்டர் பதிவுகளில் நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனம் வெளிப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆம் தேதி வன்னி அரசு வெளியிட்ட பதிவில், ` தேசிய இனங்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே மதவழிப்படுத்த பா.ஜ.க முனைகிறது. அதற்கு போலித் தமிழ்த்தேசியம் பேசுவோர் உதவுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ` ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க…
-
- 1 reply
- 465 views
- 1 follower
-
-
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா ஊடாக கண்காணிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு சீட்டுகளில் ஏதேனும் திருத்தம் செய்து விடக்கூடாது என்பதற்காக ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை. பதிவான வாக்குகளை குறிப்பதற்காக பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவி…
-
- 0 replies
- 202 views
-
-
”தமிழர்களை கட்டாப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப மாட்டோம்.” October 11, 2021 அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாப்படுத்தி இலங்கை அனுப்பமாட்டோம். அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஊடகவியளாலர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர்…
-
- 2 replies
- 412 views
-
-
தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதாக நாம் தமிழர் கட்சி நேற்று தக்கலையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சாட்டை துரைமுருகன் தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தக்கலை காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், நாங்குனேரியில் துரைமுருகனை காவல்துறையினர் கைதுசெய்து சிறைக்கு கொண்டுசென்றனர். முன்னதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தலைவர்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. சாட்டை துரைமுருகனை 25ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டு…
-
- 1 reply
- 430 views
- 1 follower
-
-
17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும் ஆய்வு! மின்னம்பலம்2021-10-10 தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்முதலாக அகழாய்வு நடந்த இடம் ஆதிச்சநல்லூர். 1876 ஆம் ஆண்டுக்கு பிறகு 1903 - 1914 வரை அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு 2004 முதல் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சத்தியமூர்த்தி குழுவினர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். 600 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்த இந்த ஆய்வுப் பணியில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள…
-
- 0 replies
- 514 views
-
-
முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.வி. எஸ். ரமேஷ் திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சந்தேக மரணமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம…
-
- 2 replies
- 427 views
- 1 follower
-
-
ஒரு கோடி ரூபாய் நிதியளித்த விஜய் சேதுபதி மின்னம்பலம்2021-10-03 திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நேற்று மாலை (2.10.2021) சென்னையில் நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன…
-
- 1 reply
- 565 views
-
-
விடுதலை புலிகள் ஆதரவாளருடன் சீமானுக்கு தொடர்பு : நடவடிக்கை எடுக்குமாறு அழகிரி வலியுறுத்தல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் செயல்படும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே. எஸ். அழகிரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, '' முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்தியாவை பொருத்தவரை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்…
-
- 0 replies
- 588 views
-
-
சீமான், அண்ணாமலை கருத்து: தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டம் தேவையற்றதா? கள நிலவரம் கூறுவது என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்திவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மனித உழைப்பை வீணடிப்பதாகவும் இதனால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கூறுவது சர்ச்சையாகியிருக்கிறது. இந்தத் திட்டம் உண்மையில் வீணா? தமிழ்நாட்டில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின் செ…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
"புலம்பெயர் தமிழர் நல வாரியம்" தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலம் பெயர் வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 நபர்களைக் கொண்டு இந்த வாரியம் ஏற்படுத்தப்படும். 5 கோடி புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு வாரியம் உருவாக்கப்படும். புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊர் …
-
- 0 replies
- 465 views
-
-
வேலூரில் மது குடித்த 5 வயது பேரன், தாத்தா மரணம் - என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதிர். இவர்களுக்கு ரூத்தேஷ் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் ரூத்தேஷின் தாத்தா சின்னசாமி (வயது 62) வீட்டில் மது அருந்தியுள்ளார். பிறகு பாட்டிலில் மீதமிருந்த …
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டை... அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை, மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் தற்போது…
-
- 1 reply
- 341 views
- 1 follower
-
-
ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்? ஏ. ஆர். மெய்யம்மை பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / TWITTER திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 'தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்' என்ற பெயர் கிடைத்தது ஒருபுறமிருக்க, அவர் ஏன் பாப்பாபட்டி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மு. கருணாநிதி தலைமையில் முந்தைய திமுக அ…
-
- 0 replies
- 578 views
- 1 follower
-
-
மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு! மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும், ஆற்றல் படைத்த ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் ஒவ்வொரு கடலோர கிராமங்களுக்காகச் சென்று சோதனையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1242738
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு மின்னம்பலம்2021-08-02 தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
கோயில் நகைகள்: மோடி வழியில் ஸ்டாலின் மின்னம்பலம்2021-10-03 தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் இருக்கும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இருக்கும் நகைகளை உருக்கி அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அந்த வட்டிப் பணத்தை கோயில்கள் திருப்பணிக்கு செலவு செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதில் ஊழல் நடக்கும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறி வருகிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபு மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். “சமயபுரம் கோயிலில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது பெருமதிப்பிலான தங்க நகைகள் அப்படியே கட்டி வைக்கப்பட்டி…
-
- 1 reply
- 528 views
- 1 follower
-
-
கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா என்பவரே காணாமல் போயுள்ளார். இவர் ரஷ்யாவில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை வந்த தன்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் அவரை தேடிய உறவினர்கள், சி.சி.டி.வி காட்சியை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணி அளவில் வெள்ளை நிற காரில் தன்யா ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பொலிஸில் பெற்ற…
-
- 0 replies
- 381 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும் - ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த பிரதீப் வி பிலிப் ஐ.பி.எஸ் ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் (வலது) ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வுபெறும் நாளில் ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் வைத்த கோரிக்கை சற்று வித்தியாசமானது. ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின் சாட்சியாக இருக்கும் தனது போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் அது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் ஓய்வுபெறும் நாளில் அந்தத் தொப்ப…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை எம்.ஏ.பரணிதரன் பிபிசி தமிழ் 9 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER இன்று காமராஜர் நினைவு நாள். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம். இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்பு மட்டுமே. 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக அரச…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது? ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VANNI ARASU/FACEBOOK படக்குறிப்பு, வன்னி அரசு. `ஆபரேஷன் 'டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் `ரவுடிகள் ஒழிப்பு வேட்டை', அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்ல…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கஞ்சா கடத்தினாரா யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கிய பின்னணி என்ன? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நாகை கடலோர பகுதியில் ஃபைபர் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள் நாகையில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 270 கிலோ கஞ்சா, நாகை மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளால் பைபர் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'நாகை மீனவன்' யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் குணசீலன் உட்பட நான்கு சந்தேக நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள்…
-
- 0 replies
- 669 views
- 1 follower
-
-
பத்திரிகையாளர்களை 'Presstitutes' என்றும் நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணப்பாளர் சீமானின் தாயார் குறித்தும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. மோகன் என்பவர் இயக்கிய 'ருத்ரதாண்டவம்' படத்தின் சிறப்புக் காட்சி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி, சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. அந்தச் சிறப்புக் காட்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஹெச். ராஜா. ருத்ரதாண்டவம் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக கூறிய ஹெச். ராஜா அதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். அப்போது செய்தியாளர் …
-
- 0 replies
- 517 views
-
-
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு? மின்னம்பலம்2021-09-28T07:30:02+5:30 விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தான் ஆரம்பித்துள்ளதாக சென்ற ஆண்டு திடீரென்று எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இதனை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். உடனேயே இந்த மக்கள் இயக்கத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், இந்த அமைப்பில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய். கூடவே இந்த இயக்கத்தில் நிர்வாகிகளாக இருந்த தனது அப்பா, அம்மா மற்றும் சிலர் மீத…
-
- 0 replies
- 579 views
-