தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
பிபிஇ உடையில் வந்து வாக்களித்த கனிமொழி மின்னம்பலம் இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுதும், 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் உள்ளதால் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் இதையொட்டி, சட்டசபைத் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டன. பிபிஇ உடை அணிந்து தேர்தல் அலுவலர்கள் தயார் நிலையிலிருந்தனர். இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி, மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, பிபிஇ உடையுடன் வந்த…
-
- 2 replies
- 649 views
-
-
திராவிடம் என்ற சொல் தமிழர்களை திட்டமிட்டு அழிக்க உருவாக்கப்பட்ட சொல் (தங்கபச்சான்)
-
- 2 replies
- 536 views
-
-
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – இன்றுடன் பிரசாரம் நிறைவு! தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், மேலும் 2 மணி நேர பிரசாரத்துக்கு அனுமதியளித்துள்ள தேர்தல் ஆணையம், இரவு 7 மணி வரையில் பிரசாரத்தில் ஈடுபடலாமென அறிவித்துள்ளது. இந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் திகதி தேர்தல் நடைப…
-
- 8 replies
- 861 views
-
-
எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?- வாக்களித்தபின் சீமான் கேள்வி வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான். சென்னை பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வாக்க…
-
- 0 replies
- 438 views
-
-
தேர்தல் திருவிழா இன்று நிறைவு: கடைசி நேரம் வரை தொடர்ந்த நாடகங்கள்! மின்னம்பலம் இவ்வளவு பரபரப்பான, கடுமையான, சவால்கள் நிறைந்த தேர்தலை என்று சொல்வதை விட, இவ்வளவு கேவலமான நாடகங்கள் நடந்த தேர்தலை தமிழகம் இதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணா–காமராசர், கருணாநிதி–எம்.ஜி.ஆர், கருணாநிதி–ஜெயலலிதா என்று துருவ அரசியலில் ஊறித்திளைத்த திராவிட பூமி தமிழகம். இந்தத் தேர்தலில் ஸ்டாலின்–எடப்பாடி பழனிசாமி என்ற இரண்டு புதுமுகங்களுக்கு எதிரான துருவ அரசியல் அறிமுகம் செய்யப்பட்டது. இருவருமே அரசியலிலும், அதிகாரத்திலும் அனுபவங்களைப் பெற்றவர்களாயினும், தனியாக தேர்தலை எதிர்கொண்டது முதல்முறையாக இப்போதுதான். இருவருக்குமான வேற்றுமைகளை விட பொது ஒற்றுமைகளும் பல உண்டு. …
-
- 0 replies
- 528 views
-
-
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதம் – தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 29 Views முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு கண்காணிப்பு அமைப்பு ( Multi Dimensioal Monitoring Agency ) அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என தமிழக அரசுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் எழுதிய கடிதத்தின் நகலை வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் ம…
-
- 0 replies
- 364 views
-
-
``உங்க வீட்டுப் பெண்ணா இருந்திருந்தா இப்படிச் செஞ்சிருப்பீங்களா?" - ஆவேசம் அடைந்த அனிதாவின் அண்ணன்! கு.ஆனந்தராஜ் அனிதாவுடன் மணிரத்னம் ``நீட் தேர்வுக்கு எதிரான அனிதாவின் போராட்டத்தை, என் தங்கைப் பெயரைப் பயன்படுத்தியே கொச்சைப்படுத்தியிருக்கார் அமைச்சர் பாண்டியராஜன்." நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுக்கக் கொதிப்பலை எழுந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக அனிதா பேசுவதுபோல இடம்பெற்றிர…
-
- 2 replies
- 813 views
-
-
நாமக்கல்: `அதிமுக ஓட்டுக்கு பணம் தரலை!' -சாலை மறியல் செய்த மக்களால் போலீஸார் அதிர்ச்சி துரை.வேம்பையன் சாலை மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள் போலீஸார், மக்களிடம் சாலை மறியல் செய்வதற்கான காரணத்தை கேட்க, 'எங்க ஊர்க அதிமுக தரப்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்க. ஆனா, எங்களுக்கு கொடுக்காம, ஏமாற்றிவிட்டுட்டாங்க. எங்களுக்கும் பணம் கொடுக்கணும்' என்று சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பது சிதம்பர ரகசியமாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது, வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் வாங்குவதும் வெளிப்படையாக நடக்கிறது. அதையும் தாண்டி, 'எங்களுக…
-
- 0 replies
- 456 views
-
-
திமுகவுக்கு எதிரான அதிமுக விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா? மின்னம்பலம் என். ராம் பேட்டி தமிழகத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று (ஏப்ரல் 4), தமிழ்நாட்டில் வெளிவரும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் செய்திகளைப் போல வெளிவந்த விளம்பரங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இது வாக்காளர்களை ஏமாற்றுமா, அவர்களது முடிவுகளைப் பாதிக்குமா, பத்திரிகைகள் இவ்வாறு செய்வது சரியா என்பதெல்லாம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் தி இந்து குழுமத்தைச் சேர்ந்தவருமான என். ராம் பிபிசி தமிழிடம் பேசினார். கே. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று (நேற்று - ஏப்ரல் 4) பல நாளிதழ்களில் அ.தி.மு.க. அளித்திருக்கும் விளம்பரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்…
-
- 0 replies
- 609 views
-
-
சட்டப் பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனு. அதேநேரம் பாதுகாப்பு பணிகளுக்காக 1.58 இலட்சம் பொலிஸார் மற்றும் துணை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இறுதி பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதிகளுக்கு தொடர்பில்லாத அனைவரும் உடனடியாக வெளியேற வே…
-
- 0 replies
- 296 views
-
-
தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன! தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1950 என்ற இலக்கத்தை பயன்படுத்தி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுற…
-
- 0 replies
- 280 views
-
-
ஜூனியர் விகடன் தேர்தல் மெகா சர்வே முடிவுகள்: ஜூனியர் விகடன் சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படும் விதிகளின் அடிப்படையில் செய்த கருத்துக்கணிப்பின் சாராம்சம் இது. இந்த மெகா கருத்துக்கணிப்பில் நிகழ்ந்த சுவாரசியமான விடயங்களுக்கும் ஒவ்வொரு தொகுதிவாரியான கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் ஜூனியர் விகடனை பார்க்கவும். --------- ஊர் கூடித் தேர் இழுத்திருக் கிறோம். நமக்குக் கிடைத்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வாசகர்கள் முன்பாக சமர்ப்பிக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில், பணம் ஒரு பிரதான பங்கு வகிக்கும். சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘எந்த அடிப்படையில் வாக்களிப்பீர்கள்’ என்ற கேள்விக்கு ‘பணம்’ என்ற பதிலை 10 சதவிகிதம் பேர் க…
-
- 15 replies
- 1.6k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நேரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல, நீட் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அனிதா அ.தி.மு.கவுக்கு வாக்கு கேட்பதைப் போல வீடியோ ஒன்றும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் தி.மு.கவின்…
-
- 1 reply
- 653 views
-
-
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குரல் பதிவு, டிஜிட்டல் திரையில் பிரச்சாரம்: சந்தைகள், பூங்காக்கள், குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்தி வாக்கு சேகரிப்பு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் திரை பொருத்திய பிரச்சார வாகனங்களை அனுப்பி, அதன்மூலம் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவை ஒளிபரப்பி பிரச்சாரம் செய்கின்றனர். படம்: பு.க.பிரவீன் கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இத்தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவும், டிஜிட்டல் திரைக்காட்சியும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.6) நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால…
-
- 0 replies
- 267 views
-
-
அணிவகுக்கும் கருத்து கணிப்புகள்... வந்ததும் தந்ததும் ஒன்றுதானா? மின்னம்பலம் ‘‘இது கருத்து கணிப்பு இல்லை; கருத்து திணிப்பு!’’ எல்லாத் தேர்தல்களின்போதும் வருகிற டயலாக்தான். ஆனால் சொல்கிற நாக்குகள்தான் தேர்தலுக்குத் தேர்தல் வேறாகின்றன. எந்தக் கட்சிக்கு ஆதரவாக வருகிறதோ, அந்தக் கட்சியினருக்கு அது கருத்துக் கணிப்பு; எதிராக வந்தால் அது கருத்துத் திணிப்பு. உண்மையை ஒப்புக்கொண்டு களத்தை எதிர்கொள்கிற பக்குவம், நம் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் இல்லையென்று சொல்லமுடியாது; அமெரிக்காவில் இருக்கிற அரசியல் தலைவர்களுக்கே அந்தப் பக்குவம் இல்லை. உலகம் முழுக்க அரசியல்வாதிகளுக்கு ஒரே மனசு!. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையி…
-
- 1 reply
- 491 views
-
-
சிறப்புக் கட்டுரை : இந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? மின்னம்பலம் ராஜன் குறை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துவங்கி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இரண்டு திராவிட கட்சிகளின் இருதுருவ அரசியல் என்பதே தமிழக அரசியலை நிர்ணயிப்பதாகவும், அதன் வழியாக இந்திய அரசியலிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், நிகழ்வுப் போக்குகளை தீர்மானிப்பதாகவும் இருந்து வந்துள்ளது. இதன் ஒருமுனையில் 1969 முதல் தி.மு.க-வினை தலைமையேற்று நடத்திய கலைஞர் 2018-ஆம் ஆண்டு மறைந்தார். எதிர்முனையில் எம்.ஜி.ஆர் 1987-ஆம் ஆண்டே மறைந்தாலும், அவரால் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்கப்பட்டு, பலரால் எம்…
-
- 0 replies
- 484 views
-
-
கமல்ஹாசன் பேட்டி: "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?" #BBC_Exclusive தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 3 ஏப்ரல் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைபெறுகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலில் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பயணம் செய்கிறார், மக்களை சந்திக்கிறார். இதற்கு நடுவில், தமிழக சட்டமன்ற தேர்தல், திராவிட கட்சிகள், பிராமணர் - பிராமணர் அல்லாதோர் விவகாரம் ஆகியவை குறி…
-
- 0 replies
- 479 views
-
-
கனிமொழிக்கு கொரோனா மின்னம்பலம் திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கனிமொழி எம்பி கடந்த சில நாட்களாக தென் மாவட்ட தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அந்த வகையில் தேனியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது லேசான காய்ச்சல் ஏற்படவே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். மேலும் கொரோனா சோதனையும் மேற்கொண்டார். அதையடுத்து இன்று (ஏப்ரல் 3) காலை 11 மணிக்கு கனிமொழிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை முடிவு பாசிட்டிவ் என்று கிடைத்துள்ளது. ஏற்கனவே தனக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் கனிமொழி. மேலும் இன்று…
-
- 6 replies
- 678 views
-
-
குஷ்புக்கு ஆதரவு திரட்டி சென்னையில் அமித்ஷா தேர்தல் பிரசாரம் பா.ஜ.க.வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். நேற்று சென்னைக்கு வருகை தந்த அமித்ஷா, துறைமுக தொகுதி பா.ஜ.கவேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பா.ஜ.கவேட்பாளர் குஷ்புக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று காலை 10 மணிக்கு தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா ஈடுபடுகின்றார். மேலும் தேனாம்பேட்டையில் இருந்து திறந்த வானில் பாண்டிபஜார் நோக்கி பேரணியாக செல்லும் அமித்ஷா, கூட்டணிக் கட்சி, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தேர்த…
-
- 1 reply
- 462 views
-
-
தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது - இந்திய பிரதமர் மோடி தமிழக மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தாராபுரம், மதுரை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி நேற்று மாலை கன்னியாகுமரியில் அத்தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்தும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக -பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி…
-
- 0 replies
- 507 views
-
-
துறைமுகம் தொகுதியில் சீமான் கட்சி விண்ணப்பம் நிராகரிப்பு சென்னை துறைமுகம் தொகுதியில் முகமது கடாபி என்னும் வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்படு விட்டது. ஆயினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில், உதகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், கிடைத்த அனுபவம் மூலம், இரண்டாவது ஆள் ஒருவரை நியமிப்பதும், முதலாவது விண்ணப்பம், ஏற்றுக் கொள்ள பட்டவுடன், இரண்டாவது விலக்கிக் கொள்வது என்ற சிறு தந்திரம் மூலம், கடாபிக்கு பதிலாக, வேறு ஒருவர் துறைமுகம் தொகுதியில், சீமான் கட்சி சார்பில் போட்டி இடுகிறார். அவரது விண்ணப்பத்துடன், சீமான் கட்சி 234 விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 601 views
-
-
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தப…
-
- 1 reply
- 424 views
- 1 follower
-
-
மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை பட மூலாதாரம், GETTY IMAGES தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் உள்பட தி.மு.க தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. என்ன காரணம்? சென்னை நீலாங்கரையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு இருக்கிறது. இன்று காலை செந்தாமரையின் வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கணக்கு விவரங்களை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சபரீசனின் நட்பு வளையத்தில் இருக்கும் கார்த்திக், `ஜீ ஸ்கொயர்' பாலா ஆகியோரும் வருமான வரித்துறையின் வளையத்தில் சிக்கியுள்ளனர். …
-
- 4 replies
- 810 views
-
-
அண்ணா சிலைக்கு தீ:தலைவர்கள் கண்டனம்! மின்னம்பலம் கள்ளக்குறிச்சி அருகே பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பது, காவிசாயம் பூசுவது, தீ வைப்பது, குல்லா அணிவிப்பது உள்ளிட்ட பல அவமதிப்பு செயல்கள் நடந்து வந்த நிலையில், தற்போது அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி என்ற கிராமத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. இது, 1978 ஆம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ எஸ்பி.பச்சையப்பன் தலைமையில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிலை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால்,…
-
- 0 replies
- 382 views
-
-
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பரப்புரை கூட்டத்தில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். திருக்கோவிலூர் விஷ்ணுவும் சிவனும் அமைந்த சிறப்பான இடம் என்று குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார் அவர். "இந்த தேர்தலை பாரதிய ஜனதா கட்சி நடத்தவில்லை, தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஏப்ரல் 6 என்பது பாஜக நிறுவப்பட்ட நாள், அந்நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியானது இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். …
-
- 3 replies
- 620 views
-