யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
41 topics in this forum
-
வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...! அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...! இது கொஞ்சம் வித்தியாசமானது...! மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...! மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...! மண்டலாவை வடித்த போது..., கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..! மகாத்மாவை வடித்த போது, கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...! அரேபிய அகதிகளுக்கு..., அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,! பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்..., தன் காதுகளை முழுதாக மூடியது...! முள்ளி வாய்க்காலில்..., முகத்தையே மூடியது..! பன்னாடைக்கு என்ன நடந்தது...? எல்லோரும் தேடினார…
-
-
- 23 replies
- 2.4k views
-
-
இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். …
-
-
- 5 replies
- 1.8k views
-
-
ஈழத்திருநாடே என் அருமைத் தாயகமே, உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே கொடும் பசி வாட்டுகிறதே பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயர் கூடுகிறதே. கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும் தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும் உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும் அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு வட்டி கட்டிட மேலும் கடனும் சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும் என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள் பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும் அரைவயிறு நனைகிறதா ? பத…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கர சுழற்சியின்போது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த குடும்பத்தில் ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள் பள்ளி செல்லும் காலம் வந்தது . இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில் அவளை பத்தாம் வகுப்புக்கு நகர்த்தியது. இவர்களின் வீட்டுக்கு உதவிக்கு வரும் வேலப்பனின் சகோதரி மாணிக்கம் குடும்பத்துக்கு அழகான ஐந்து குழந்தைகள் . வேலப்பன் தூரத்து உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன் வயல் வேலைகளோடு இவர்களுக்கும் உதவி செய்பவன். மாணிக்கம்,கணவன் கதிரேசனின் , வாத்தியார் சம்பளத்தோடு ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள். இவர்களும் …
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் ப…
-
-
- 27 replies
- 16.3k views
-
-
இயற்கையுணவே! எமக்கு வலிமை! ************************ கோர்லிக்ஸ்,வீவா, நெஸ்ரோமோல்ட் மைலோ.. இனும் பல.. இத்தியாதி,இத்தியாதி ஆரோக்கிய வாழ்வுக்கு அனைத்துச் சத்தும் நிறைந்ததென்று விளம்பரங்கள் செய்து விற்று பணமள்ளும் வெளிநாட்டு கம்பனிகளே! இதுகளை.. வந்தகொரோனாவுக்கு வாங்கிக்குடியென்று எந்த (சுகாதார) அமைப்பும் இதுவரையும் சொன்னதுண்டா! இஞ்சி,மஞ்சல் மிளகு,சீரகம் உள்ளி,கராம்பென்று இயற்கை உணவுகளே-எம் உடலைக்காக்குமென.. சித்தர்கள் சொன்னதுதான் இன்றும் சிறப்பென்று அறிந்தபின்னும். இதுபோன்ற.. போலிகளை புறம் தள்ளி …
-
-
- 6 replies
- 1.3k views
-
-
நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமு…
-
-
- 59 replies
- 6.8k views
- 2 followers
-
-
தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது…
-
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
புல்வெளியில் தூங்கும் நிழல்கள்! நீண்ட பயணத்தின் இடையிடையே பாலங்களைக் கடப்பதுபோல, என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி என்னைக் கடந்து செல்கின்றன. ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு, மாறிமாறி நான் பயணப்பட்டேன் . மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ் கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள். ஆளுறக்கம் கொள்கின்றன. பயங்கர சூறாவளி வீசுகிறது மரங்கள் வேருடன் குடைசாய்…
-
-
- 6 replies
- 1.4k views
-
-
இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டு…
-
-
- 32 replies
- 3.1k views
-
-
இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள். 2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள். “சரியான மூட்டைக் …
-
-
- 44 replies
- 6.3k views
- 1 follower
-
-
உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக…
-
-
- 61 replies
- 6.7k views
- 2 followers
-
-
ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்க…
-
-
- 6 replies
- 1.9k views
-
-
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. கள்ளச்சாவி போட்டாவது......! வீதியைப் பெரிதாக்க வேலியை வெட்டுகிறார்கள் வேலிக்கு மேலால் வாசமில்லா வண்ணம் கொண்ட போகன்வில்லா மனமில்லை ஆனால் மயக்கும் அழகு தரையில் விழுந்த கொடியில் சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள் பாக்கியமும் பர்வதமும் வேடிக்கை பார்க்க, வருகின்றாள் செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி என்ன செல்லாத்தை எங்க இங்கால ஒண்ணுமில்லை சும்மா வந்தேன் உன்னிடம் ஒன்று கேட்பேன் கோவிக்காமல் உத்தரம் கூறு வாசமில்லா மலர் கொய்த வனிதாவும் வியப்புடன் திரும்…
-
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
-
-
- 28 replies
- 2.8k views
- 4 followers
-
-
வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் ,…
-
-
- 26 replies
- 3.7k views
-