நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர். எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த பழம் தற்போது மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது. கிவியா? அப்படியென்றால்? அதன் மருத்துவ குணம் என்ன? என அறிய ஆவலாக இருந்தால் தொடர்ந்து வாசிக்கவும். கிவி கனியில் கொழுப்புச் சத்து குறைவான அளவில் இருக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உண்ணலாம். அத்துடன் இதில் விற்றமின் சி கூடுதலாக இருக்கிறது. அதனால் நோயை தடுக்கும் ஆற்றலை வழங்குகிறது, அத்துடன் எம்முடைய உடலில் கட்டுப்பாடின்றித் திரியும் ரேடிக்கிள் தான் பலவ…
-
- 0 replies
- 320 views
-
-
Courtesy: Raman, kalakad வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச் செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது. உண்மையில் வெற்றிலை போடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவெருக்கத் தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்! அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்)…
-
- 0 replies
- 481 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் ரசாயனம் போன்று செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை (களிம்பு) பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற தயாரிப்புகளை 'எந்த வகையிலும்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டனின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எல்ஜிஏ எனும் உள்ளூர் நிர்வாக அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பல களிம்புகளில் வெளுத்துப்போக செய்யும் ரசாயனமான ஹைட்ரோகுவினோன் இருந்தது. இத…
-
- 3 replies
- 635 views
-
-
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது. 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம். 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வித்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு …
-
- 0 replies
- 633 views
-
-
நான் இப்பவெல்லாம் தேங்காய் எண்ணெய் நல்லதா இல்லை கூடாதா என்ற ஆட்டத்துக்கே போவதில்லை. எதைப் பொரிப்பது என்றாலும் நல்லெண்ணையையே பாவிக்கின்றேன். நல்லெண்ணை (Sesame oil) என்பது processed எண்ணெய் இல்லை என்பதால் அதன் மேல் நம்பிக்கை அதிகம். ஆனாலும் என் ஜமெய்க்கா நண்பனுடன் (ஒலிம்பிக்கில் ஜமெய்க்கர்கள் தான் ஓட்டப் போட்டியில் முன்னுக்கு வருவார்கள் என்று பலர் சொல்லினம். ஓட்டப் போட்டி என்று நான் சொல்வது ஒலிம்பிக்ஸ் மரதன் ஓட்டத்தை) கதைக்கும் போது அவன் சொன்னது, தேங்காயில் இருந்து அப்படியே எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் (extra virgin) நல்லெண்ணையை விட நல்லதாம் அதனால் தான் தமக்கு இருதய நோய் இல்லையாம். என் மண்டைக்குள் சில கேள்விகள் ஒரே குடைச்சல் தருகின்றன 1. நல்லெண்ணைய் நல்லதா…
-
- 18 replies
- 7.5k views
-
-
குழந்தைகளுகளால் விரும்பி சுவைக்கப்படும் உணவு நூடுல்ஸ்.மிக விரைவாக தயாரித்துத் தந்துவிடமுடிகிறது.ஆனால் அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத்தெரியாது.விளம்பரங்களில் சொல்லப்படுவதை நம்பியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். விளம்பரங்களில் உள்ள தகவல்களுக்கும் உண்மைக்கும் இருக்கும் இடைவெளியை நாம் அனுபவித்திருக்கிறோம். நுகர்வோர் கவசம் என்ற இதழை தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிடுகிறது.சென்றமாத இதழில் தலையங்கமாகவும் ஒருபக்க செய்தியொன்றும் நூடுல்ஸ் பற்றி இருக்கிறது.குஜராத்தில் நுகர்வோர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்று நூடுல்ஸ் குப்பை உணவு என்பதை தெரிவிக்கிறது.படித்த்தில் நினைவில் உள்ளவை இவை. அனுமதிக்கப்பட்ட அளவை விட …
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போகும். ஏனெனில் பிறந்த குழந்தையானது புது உலகத்தைப் பார்ப்பதால், அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது, பிறந்த பின்னர் கிடைக்காததால் அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைக்கு போதிய தூக்கம் கிடைக்காமல், அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும். சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்…
-
- 7 replies
- 1.2k views
-
-
தனிமையும் தனிமையுணர்வும் மீள வழியுண்டா? டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (SL) குடும்ப மருத்துவர் கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் …
-
- 1 reply
- 798 views
-
-
(அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்) உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை. வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் த…
-
- 0 replies
- 3.5k views
-
-
மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும். இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல். நமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள…
-
- 2 replies
- 965 views
-
-
மருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரே மருத்துவரிடம் தொடர்ந்து சென்று சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளிள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இவ்வாறு செய்வதால் கிடைக்கின்ற நன்மைகள் பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பொருந்துகின்றன.…
-
- 0 replies
- 302 views
-
-
மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
தினமும் ஊறுகாய் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு! [Monday 2015-01-05 12:00] நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். செரிமான பிரச்சனைகள்: ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள …
-
- 0 replies
- 645 views
-
-
பல்லுப்போணா சொல்லுப்போச்சு கன்னதில் குளிவிழும், கதைக்க சொக்கை ஆடும், நினைத்ததனை லபக் என்று சப்பி சப்பிடமுடியாமல் போகும். ஆகவே பற்கள் தான் முகத்துக்கு அழகு. இரவு சாப்பிடு விட்டு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை வாயில் விட்டு ஒரு பத்து நிமிடம் வாயினில் வைத்து இருக்கவேண்டும்.( பேசக்கூடாது ஆனா ரிவீ பார்க்கலாம் ) .பத்து நிமிடம் கழித்து கொப்பளித்து துப்பி விடலாம். பல்லும் பளிச்சென்று வந்துவிடும். வாயில் உள்ள புண்ணும் குண்மைந்துவிடும், பற்கள் உறுதியாக வேற இருக்குமாம். இது ஒரு பல் டாக்டரின் அறிவுரை.
-
- 14 replies
- 2.4k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விதைகள் வயிற்றுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை. புடலங்காயில், புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புசத்து 0.3 கிராமும், ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வ…
-
- 0 replies
- 419 views
-
-
தயிரின் (Yoghurt ) மருத்துவ குணங்கள் தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் இதுவும் ஒன்று. தயிர் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் இனி அறிவோம்: *** நாம் ( நம் முன்னோர்கள் ) கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர். இன்று அது அனைத்து உலகிலும் ஒரு பொதுவான உணவாக ஆகிவிட்டது. அது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. * மிகவும் முந்தைய பழமையான காலங்களில் தயிரானது தானே இயங்குகின்ற வகையில் லாக்டோபசில்லுஸ் தேல்ப்றுஎச்கஈ சுப்ச்ப். புல்கரிகஸ் (Lactobacillus delbrueckii …
-
- 7 replies
- 9.5k views
-
-
பஞ்சபூத குளியல்! நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான். கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழிகள்" என்கிறார் இயற்கை மருத்துவ ஆலோசகர் பூபதி வர்மன். நீர் குளியல் நீர் குளியல் என்பது கழுத்து வரையுள்ள நீரில் குளிப்பதுதான். இன்றைய நகரங்களில்…
-
- 2 replies
- 829 views
-
-
இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன. வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள…
-
- 3 replies
- 19.5k views
-
-
இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உடல் உள ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மதுசாரப் பாவனை விளங்குகின்றது. இப்பாவனை காரணமாக வருடமொன்றிற்கு உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால…
-
- 1 reply
- 1.1k views
-
-
கண் கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கவலை இல்லாமலும் கண்ணீர் வரும் கண்கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது. 'எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு' உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையா…
-
- 0 replies
- 2.1k views
-
-
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வித்தியாசமான செல்கள் அதாவது கலங்கள் மிதப்பதை தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். 111 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கை உயிரியல் பௌதீகம் குறித்த சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. இது மாரடைப்பு நோயாளிகளுக்கும், நோயற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரது இரத்தத்தில் இந்த பிரத்யேக செல்கள் இருக்கின்றனவா என்பதை அறியும் இந்த பரிசோதனையை வைத்து, ஒருவருக்கு மாரடைப்பு வரக்கூடுமா என்பதை முன்கூட்டியே அறியமுடியுமா என்றும் அவர்கள் தற்போது ஆராய்கிறார்கள். கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ஆய்…
-
- 0 replies
- 427 views
-
-
காரட் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள். யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு. யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும். யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும். யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோய…
-
- 1 reply
- 2.9k views
-
-
ஆஸ்த்மாவும் யோகமும் ஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது. புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும். ஆஸ்துமா பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது, வெகு சிலருக்கு நடுவயதில் ஆரம்பிக்கலாம். பரம்பரையில் இது யாருக்கேனும் இருந்தால், வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏ…
-
- 2 replies
- 803 views
-
-
இரத்த குழாய் அடைப்பு நீங்க...! வீட்டுவைத்திய முறை. [Monday 2014-08-25 22:00] பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்..!! தனது இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரம் ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் மறுமுனையில் நோயளிக்கு பரிந்துரைத்தார் அதனை செய்தவாறு நோயாளி இருந்தார். எனினும் மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறு…
-
- 6 replies
- 5.2k views
-