நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
முன்பெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைக்குப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிக்கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. இப்படிப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங…
-
- 0 replies
- 1k views
-
-
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? [Tuesday, 2011-07-12 13:53:33] உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும் பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பு இளம் வயதினரை (30 � 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒ…
-
- 3 replies
- 2.6k views
-
-
வயிற்றுவலி வந்தவுடன் சாப்பிட்டால் வலி உடனே நிற்கிறது என்ற விஷயம் சிந்தனைக்குரியது. உங்களுக்கு வயிற்றில் புண் இருப்பதற்கான அறிகுறியை இது வெளிப்படுத்துகிறது. சாப்பிட்ட உணவு ஜ“ரணமாகும் போது புண் சிறுகுடலின் முதல் பகுதியிலோ, நடுப்பகுதியிலோ இருந்தால் இரைப்பையிலிருந்து சிறுகுடலில் நுழையும் போது, இப்புண்ணில் படும்போது, சாப்பிட்ட உடன் நின்ற வலி மறுபடியும் வந்துவிடுகிறது. 18 வயதுக்குட்பட்டவருக்குப் பொதுவாக இந்த உபாதை ஏற்படுவதில்லை. உணவில் கட்டுப்பாடின்றி கண்டபடி தின்று கொண்டிருக்கும் வாலிப வயதினருக்கு அதிகமாய் இந்த உபாதை ஏற்படுகிறது. வயிற்றில் வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்பு தேவைப்படுகிறது. எண்ணெய…
-
- 4 replies
- 4.1k views
-
-
கொழுப்பை குறைத்தால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம்! ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைத்து அழகாக இருக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும். கொழுப்புக்…
-
- 0 replies
- 707 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிஷல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் ஹெல்த் எடிட்டர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு 45 வயது இருக்கலாம். அப்போது, உங்கள் உடலில் உள்ள இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றுக்கும் 45 வயது தானே ஆக வேண்டும். ஆனால் சிலருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது, இளம் வயதில் சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படுகிறது. அதாவது உங்களுக்கு 45 வயதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகத்தின் வயது 60 ஆக இருக்கலாம், இருதயத்தின் வயது 65 ஆக இருக்கலாம். உங்கள் உண்மையான வயதைவிட உங்கள் உறுப்புகள் பல்வேறு காரணங்களால் வேகமாக முதிர்வடைந்து வருகின்றன. இது எப்படி நமக்குத் த…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
நீங்களும் ஆகலாம் சர்க்கரை நோயாளி... உபயம்: குளிர்பானங்கள் உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள். இந்நோய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், செயற்கை ஜூஸ் வகைகளால் தான் என்று உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலே சொன்ன நோய் வகைகளால் ஏற்படும் மரணங்களுக்கு 80% சர்க்கரை கலந்த பானங்களால் தான் காரணியாக இருக்கின்றனவாம். 6.6 கோடி சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன், உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. கூடிய விரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா மாறும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்தியாவ…
-
- 1 reply
- 691 views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிறருக்கு உதவி செய்தல் அல்லது அறச்செயல்களுக்கு சிறிது நேரத்தை செலவிடுதலில் நம் எல்லோருக்கும் மன திருப்தி கிடைக்கும் என்பதுடன், உடல் ரீதியாகவும் சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பெட்டி லோவேக்கு 96 வயதாக இருந்தபோது அவரைப் பற்றி பத்திரிகைகள் எழுதின. ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டரில் சால்போர்டு ராயல் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சேவை செய்து வந்தார். காபி நிலையத்தில் இருந்த அவர், காபி பரிமாறுதல், பாத்திரங்கள் கழுவுதல், நோயாளிகளுடன் உரையாடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார். பிறகு லோவே 100 வயதை எட்டினார். …
-
- 1 reply
- 558 views
-
-
மூக்கு தோண்டுது ஒரு கேட்ட பழக்கமாகவும், அப்படி செய்பவரை அசிங்கமாக பார்ப்பதும் சமூக பழக்கம். மூக்கில் இருக்கும் சளி போன்ற பதார்த்தம் மூக்கை பாதுகாப்பதுடன், பக்ரீரியாக்கள், தூசு என்பவை உடலினுள் செல்லாமல் தடுத்து வருகிறது. மூக்கை தோண்டி அதை உண்ணும் பொது உடலினுள் செல்லாத பக்ரீரியாக்கள் உடலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு செயன் முறையை தூண்டி விடும் சாத்தியம் அதிகரிக்கிறது. இப்படி கனடாவின் சஸ்கச்சுவான் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் சொல்கிறார். இது இன்னும் விஞ்ஞான ரீதியில் நிருபிக்கப்படவில்லை. அவர் இதை ஒரு கருதுகோளாகவே பிரேரித்து உள்ளார். http://www.ctvnews.ca/health/picking-your-nose-could-be-good-for-you-says-sask-scientist-1.1255167
-
- 1 reply
- 795 views
-
-
கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடை குறைய கொடம்புளி.
-
- 4 replies
- 992 views
-
-
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ஐந்தரை நிமிட வீதம் குறைந்து வருகிறது டாக்டர் ஜமுனா ஷ்ரீனிவாசன் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளில் மக்களிடையே நிலவிய பல்வேறு தீய பழக்கங்களைத் தவிர்ப்பது பற்றிய குறட்பாக்கள் உள்ளன. ஆனால், புகைத்தல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆதிகாலத்தில் புகைப்பழக்கம் அறவே இல்லாத நம் தமிழகத்தில் இப்பழக்கத்தை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் தான் உருவாக்கினர். இன்று இளைஞர் முதல் பெரியவர்கள் வரை வயது, இன, மத பேதமின்றி பலராலும் புகைபிடிக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல உடல் நலமுள்ளவரின் இரத்தச் சிவப்பணுக்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை 96 சதவிகிதம் உடலெங்கும் கொண்டு செல்லும் த…
-
- 10 replies
- 2.3k views
-
-
இதோ மீண்டும் இளமையை பெற்றிட பணத்தை மிகுதி படுத்த தலை டைக்கு டாட்டா சொல்ல............ இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும் இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் முடி உதிர்வதைத் தடுக்கவும் இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எட…
-
- 0 replies
- 579 views
-
-
ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார். மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த ஆய்வறிக்கையின் படி ” மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 000 க்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேகாப்பியாசம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இருதய, சுவாச அப்பியாசங்கள் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. ஜனவரி 1, 1991 முதல் டிசம்பர் 31, 2014 வரை 122,007 கிளீவ்லாண்ட் கிளினிக் தனது நோயாளிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து இது நிறுவப்பட்டிருக்கிறதென அமெரிக்க மருத்துவச் சங்க திறந்த வலையமைப்பின் கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமது நோயாளிகளை அதியுச்ச, உச்ச, சராசரி, சராசரியிலும் குறைவான, குறைந்த என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து பல தரங்களில் அப்பியாசங்களை அளித்ததாகவும் அவர்களில் அதியுச்ச அளவில் அப்பியாசங்களைச் செய்தவர்கள் நீண்டகால ஆரோக்கியமான வாழ்வை எட்டக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமென ஆராய்ச…
-
- 3 replies
- 957 views
-
-
உடம்பு பெருப்பது எதனால்? 4 மாதத்துக்கு முன் 82கிலோ இப்ப 92 காலை 10மணிக்கு வேலை தொடங்கி இரவு 12 மணிக்கு முடியும்.காலைச்சாப்பாடு சாப்பிடுவதில்லை . மத்தியானம் கிடைப்பதை சாப்பிடுவேன். இரவு வீடு போய் சாப்பிட்டுவிட்டு 2மணி வரை யாழைமேய்ந்து விட்டு நித்திரைக்குப் போய் விடுவேன். இது வழமையாக 5நாள் இருக்கும் 2நாள் லீவு யாராவது இதுக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.
-
- 24 replies
- 4.3k views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் ஃபெர்குஸ் வால்ஷ் ஆசிரியர், மருத்துவம் 9 மணி நேரங்களுக்கு முன்னர் புற்றுநோயின் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகைகளை கண்டறிய உதவும் அற்புதமான ரத்தப் பரிசோதனை ஒன்று, நோயறிதலை விரைவுபடுத்த உதவும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் முடிவு, இந்தப் பரிசோதனையால் பல வகையிலான புற்றுநோய்களை அடையாளம் காண முடிந்தது என்பதைக் காட்டுகிறது. புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டவர்களுக்கு முக்கால்வாசிப் பேருக்கு எந்தவிதமான ஸ்கிரீனிங்கும் இல்லை. பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டன, அதாவது அவற்றுக்கான சிகிச்சை எளிதானவை மற்றும் குணப்படுத்தக்கூடியவை. அமெரிக்காவ…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் எலும்பு பலவீனத்தை பெற்று இருக்கிறார்கள். அதாவது எலும்பில் வலு இல்லாமை. பெரும்பாலான குழந்தைகள் ரிக்கெட்ஸ் எனப்படும் (கால் கைகள் வளைந்த நிலைமை) நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இந்நிலையைப் (Osteomalacia) பெற்றிருக்கிறார்கள். இந்நோய்க்கு காரணம் விட்டமின் D பற்றாக்குறைதான். இந்த ரிக்கெட்ஸ் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறையால் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவது பெரிதும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் எலும்பு பலவீனம், தசை பலவீனம், கை, கால்கள் வளைந்த தோற்றம் ஆகிய பாதிப்பகள் வரும். விட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக் கொண…
-
- 2 replies
- 1.8k views
-
-
சென்னை, அறிஞர் அண்ணா மருத்துவமனையின் இயற்கை நல மருத்துவ பேராசிரியர் ஹிமேஷ்வரி: நல்ல உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருத்தரால், தான் நினைச்சதை அடையவே முடியாது.உங்க உடம்புக்கு, என்ன நேரத்தில், என்ன செய்யணும்னு, "செல்'களுக்கு நல்லா தெரியும். கண்ணுல தூசி விழுந்தா, கண்ணை, "டேமேஜ்' பண்ணாம, அந்த தூசியை வெளியே தள்ள, உங்களுக்கு தெரியாது. ஆனா குறிப்பிட்ட செல்கள், கண்ணீர் மூலமா வெளியே கொண்டு வந்துடும். இப்படி பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்ற செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியா நம்மை தாக்குது.நம்மகிட்டே, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குது.168 விதமான, "நெகட்டிவ் மெ…
-
- 2 replies
- 769 views
-
-
நான் ரூம் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டில் உள்ள அம்மம்மா வயதுடைய ஒருவருக்கு காலில் ஏதோ வெட்டி எலும்பு தெரியுமளவுக்கு காயம். ரத்தம் வந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காயத்தை சுற்றிக்கட்டி விட்டு அடுத்தநாளுக்கு appointment கொடுத்து பின்னர் பெரிய தையல் போட்டுள்ளார்கள். இன்று நான் என்ன நடந்தது என்று அது பற்றி கேட்டு அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது எனக்கு தலை சுத்த தொடக்கி விட்டது. நின்று கொண்டு கேட்டுக்கொண்டிருந்த நான் பக்கத்தில் கதிரை எதுவும் இல்லாததால் அப்படியே நிலத்தில் இருந்து விட்டேன். இவ்வாறான சம்பவங்கள் பற்றி அடுத்தவர் சொல்ல கேட்கும் போது அல்லது நீண்ட நேர வீடியோவில் பார்க்கும் போது எனக்கு வழமையாகவே இவ்வாறு தலை சுத்துவதுண்டு. அதை அவருக்கும் சொன்னேன். ச…
-
- 53 replies
- 4.5k views
-
-
ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களா நீங்கள் : ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல் வழமையாக அதிகநேர தூக்கம் தேவைப்படாமல் இரவு நேரங்களில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுவதோடு, அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என புதிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோய் ஆய்வானது சராசரியாக அறுபது வயதுடைய சுமார் 2500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக, தொடர்ச்சியாக தூங்கியவர்களுக்கு அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருமடங்கு இருப்பதற்கான சாத்தியக்க…
-
- 0 replies
- 324 views
-
-
ஆரோக்கியமான வாழ்வு . இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்! தட்டையான வயிற்றைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுப் பொருட்களால்இ இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்துஇ திருமணம் என்று வரும் போது 'அங்கிள்' போன்று காட்சியளிக்க நேரிடுகிறது. வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்! இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களால் வந்த தொப்பையை குறைக்க ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பதோடுஇ ஒருசில செயல்களை அன்றாடம் பின்பற்றி வந்தால்இ விரைவில் பானை போன்ற தொப்பையைக் குறைத்துவிடலாம். இங்கு இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்…
-
- 21 replies
- 8.3k views
-
-
இருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட் (ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் பேட் கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இரண்டாம் நிலை நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள முதியவர்கள் மத்தியிலேயே இது பெரிதும் காணப்படுகின்றது. ஏற்கனவே இது வருடாந்தம் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்துகின்றது. வேர்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தப் புதிய கொலஸ்ட்ரோல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு வகையான கெட்ட கொலஸ்ட்ரோல் அல்லது LDL பற்றிய விரிவான ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது. இந்தப் புதிய கொலஸ்ட்ரோலை MGmin-LDL எனக் குறிய…
-
- 2 replies
- 766 views
-
-
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது! கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். * 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது. * 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immu…
-
- 0 replies
- 565 views
-
-
நம் உடலில் உள்ள செல்கள் வேலை செய்வதற்கும், வளர்வதற்கும் தேவைப்படும் சத்தையும், பிராண வாயுவையும் எடுத்துச் சென்று வழங்கும் திரவமே ரத்தம். எலும்பு மஜ்ஜைகளிலிருந்து ரத்தம் உருவாகிறது. "ஹிமோகுளோபின்' என்ற பொருளின் காரணமாகவே ரத்தம் சிவப்பு நிறமாக உள்ளது. உடலின் மொத்த ரத்தம், உடல் எடையில் 8 சதவீதமே. வில்லியம் ஹார்வியால் 1616ல் மனித ரத்த ஓட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பின் ரத்த இழப்பை சரிசெய்யும் முயற்சியாக ஒரு நாயிடமிருந்து, மற்றொரு நாய்க்கு ரத்தம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். ஆனால், ரத்தம் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று 1678ல் தடை விதித்தார் போப் ஆண்டவர். அதன் பின் 150 ஆண்டுகள் யாரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
என்னால் வெளிப்படையாக அனைத்துவிடயங்களையும் பேசமுடியாதுவிட்டாலும் உங்களுக்காக சில செய்திகள் செய்தி 1) பேராதனையில் 21 வயதான மாணவி ஒருவர் Ceftriaxone என்ற மருந்து ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சைபலனின்றி இறந்தார். மருந்து மாறி ஏற்றப்பட்டுவிட்டது, தாதி தவறான மருந்தை ஏற்றிவிட்டார் என்ற வழமையான புராணங்களின் பின்னர் மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமையென உறுதிப்படுத்தப்பட்டது. செய்தி 2) அண்டி பயோட்டிக்ஸ் அலேர்ஜியினால் இதுவரை 15 மரணங்கள் ஏற்பட்டிருந்தாலும் 2 மரணங்களே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி 3) பல நோயாளர்களுக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மருந்து…
-
-
- 2 replies
- 544 views
-
-
காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான் விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான். விளக்கம் அடியில் இருக்கிறது. ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது. இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் …
-
- 0 replies
- 967 views
-