நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
எனக்கும் ஆட்டுக்கும் யார் அதிகம் இலை குழை சாப்பிடுவது என்று போட்டி வைத்தால் ஒரு ஆட்டை வெல்லக் கூடியளவுக்கு நான் பச்சை இலைகளை சாப்பிட்டுக் காட்டுவன். அந்தளவுக்கு நான் பச்சை இலைகளை வார நாட்களில் உண்பதுண்டு. வார இறுதி நாட்களை முற்றிலும் அசைவ உணவுகளுக்கு என்று ஒதுக்கி வைத்து இருப்பதால் வார நாட்களில் ஆகக் குறைந்தது 2 நாட்களாவது தனியே மரக்கறி, இலை வகைகளாலான சலாட்டினையும் சாப்பிடுவதும், மிச்ச வார நாட்களில் இரண்டு இலை / கீரை வகை உணவை சேர்ப்பதும் வழக்கம். சரி, இவ்வாறு பச்சை இலைகளை தெரிவு செய்யும் போது அவற்றில் என்னென்ன சக்தி இருக்கு என்று பார்த்து தெரிவு செய்வது வழக்கம். ஒவ்வொன்றிலும் என்னென்ன சக்தி இருக்கு என்று மேலோட்டமாகவேனும் தெரிந்து வைத்திருப்பது எம் உணவு முறையை Ba…
-
- 24 replies
- 10k views
-
-
அமெரிக்காவின் பாஸ்டன் சயின்டிஃபிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புதிய கருவியின் பெயர் 'வாட்ச்மேன்'. பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்டிரோக் தாக்கும் அபாயம் உள்ளது;அச்சமயம் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்தும் உண்டு. இதனால் ஆபத்தில் உள்ளவர்கள், எந்த நேரமும் துரத்தும் மரணத்தைத் தவிர்க்க மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதற்கு பதிலாக இதயத்தில் பொருத்திக் கொள்ளும் கருவியாக இதை உருவாக்கியுள்ளனர். முதற்கட்ட பரிசோதனையில், இது பாதுகாப்பானது என்று உறுதியாகிவிட்டது. எனவே இன்னும் சில வாரங்களில் இது இறுதி வடிவம் பெற்று விற்பனைக்கு வரக் கூடும். http://seithy.com/breifN…
-
- 0 replies
- 514 views
-
-
தேவைக்கேற்ற அளவு அயோடின் சத்து அவசியம் என்கிறது ஆய்வு கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல அயோடின் சத்து அதிக அளவிலுள்ள கடற்பாசியி…
-
- 0 replies
- 451 views
-
-
முடிந்தால் வார இறுதி நாளிலாவது உண்போம். முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (Probiotic bacteria) (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து…
-
- 9 replies
- 3.6k views
-
-
40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள் 40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். என்னென்ன நோய்கள் வரும்? உடல் எடை அதிகரித்தல் மன அழுத்தம் சர்க்கரை நோய் அதிக அளவில் கொழுப்பு சேருதல் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் எலும்பு மூட்டு நோய்கள் புற்று நோய் வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் : மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், …
-
- 4 replies
- 1.1k views
-
-
மூக்கில் நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம். “ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளு…
-
- 0 replies
- 3k views
-
-
மலேரியா நோய்க் கிருமிகளை தாங்கி வருகின்ற கொசுக்கள் மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலேரியா நோய்க் கிருமியைத் தாங்கிவரும் கொசு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் கொசுவைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்தக் கிருமிகளை தாங்கி வருகின்ற கொசுவினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறு நோய்க்கிருமிகளை தாங்கிவரும் அந்தக் கொசுக்கள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும…
-
- 0 replies
- 347 views
-
-
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம். ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய க…
-
- 1 reply
- 40k views
-
-
புதிதாக கண்டறியப்பட்ட நோவல் கொரோனாவைரஸ் (NCoV) என்ற புதிய வகை வைரஸ் நெருக்கமான தொடர்பில் உள்ள மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இன்னொரு நபரிடமிருந்து பரவியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்ற இந்த வைரஸினால் பீடிக்கப்பட்ட இரண்டாவது நபரை பிரான்ஸின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். என்கோவ் (NCoV) வைரஸ் நிமோனியாவையும் சில வேளைகளில் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் அதிகளவில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது…
-
- 0 replies
- 388 views
-
-
புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கும் உணவுகள்? புற்றுநோயைத்தடுக்க என்னென்ன சாப்பிடவேண்டும் என்று ஒருவர் கேட்டார்.புற்றுநோய்க்கு புகை,பரம்பரை,வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன.உணவின் மூலமாக முற்றிலுமாக புற்றுநோயின் ஆபத்திலிருந்து தப்புவது சாத்தியமல்ல! ஆனால் சில உணவுகள் மூலமாக ஆபத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.க்ரீன் டீ பற்றிபேசும்போதெல்லாம் புற்று நோய்,இதய நோய் வராமல் தடுக்கும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.க்ரீன் டீ பிரதேசமான ஜப்பானில் புற்றுநோய் மிகவும் குறைவாக இருக்கிறது.க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள்தான் காரணம். நமது உடலின் வளர்சிதை மாற்றத்துக்…
-
- 1 reply
- 2.2k views
-
-
சில வயது வந்த அனுபவஸ்தர்கள் தாங்கள் மது அருந்தும்போது இது மருந்திற்காக அருந்துவது என்பார்கள்.ஆனால் அது உண்மை என பலருக்கும் தெரிவதில்லை.எதையுமே அளவாகப் பாவித்தால் அவை உடல் நலத்திற்குக் கேடாக அமைவது குறைவு. அதே போல நீங்கள் விஸ்கிப் பிரியர்களாக இருந்தால் இந்த இணைப்பு உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கலாம் விஸ்கியின் மருத்துவக் குணங்கள் ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை…
-
- 15 replies
- 9k views
-
-
ரத்த அழுத்தமா, புற்று நோயா.? வெயிலில் நில்லுங்கள்..! வியாழன், 9 மே 2013( 13:25 IST ) சூரிய ஒளி உடலில் பட்டால், ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் குறையும் என லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மனித உடலுக்கு சூரிய ஒளியால் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சூரிய ஒளியால் நமது ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம் உற்பத்தி ஆகி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது என லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வெல்லர், இந்த ஆய்வுக்காக குறிப்பிட்ட சிலரை புறஊதா கதிர்வீச்சுக்கும், மேலும் சிலர் மின்விளக்கின் ஒளிக்…
-
- 0 replies
- 650 views
-
-
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். பொஸ்டன் கல்லூரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவிலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப…
-
- 0 replies
- 498 views
-
-
குழந்தைகளின் வளர்ச்சிக்கு 16 உணவுகள். 0 வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு. நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின் உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம் சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள் ( கண்ணுக்குத் தெரியாத) இந்த பகுதிகளின் உட்புறத்திலே படும் போது அந்தப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் உண்மையில் அந்த துணிக்கைகளின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே ஏற்படுகிறது. இவ்வாறு நம்மை பாதுகாக்க ஏற்படும் மாற்றங்களே நமக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதுவே அலர்ஜி (allergic reaction)எனப்படுகிறது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் காற்றிலே…
-
- 2 replies
- 836 views
-
-
நியூயார்க்: போலி வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு ஆண்மைக்குறைவு போன்ற பின்விளைவுகளால் ஆண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, எல்லோருக்கும் உண்மையான வயாக்ரா மாத்திரைகள் சென்றடையும் நோக்கத்தில், ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதாம் ஒரிஜினல் வயாக்ராவைத் தயாரிக்கும் பைசர் நிறுவனம். 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'வயாகரா' மாத்திரை ஆண்மை சக்தி குறைபாடுள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந்தாகும். கடந்த 15 ஆண்டுகளாக உலகின் அதிக நாடுகளில் விற்பனையாகும் இந்த மாத்திரைக்கு இந்தியாவிலும் கடும் கிராக்கி நிலவுகிறது. மவுசு கூடினால் மலிவு விலையில் போலிகள் உலவும் தானே. 'வயாகரா' என்ற பெயருக்கு நெருக்கமான பெயர்களை கொண்ட பல போலி மாத்திரைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தள்ளுபடி விலையில் இணை…
-
- 3 replies
- 827 views
-
-
உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து- ஆய்வு அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பதைக் காட்டியது. சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்துபவர்கள் சுகாதாரமற்ற அளவிலான க்ரோமியத்தை தங்களது உடலில் உட்கொள்ளுகிறார்கள் என்றும், இது வயிற்றில் ஏற்படும் கட்டிகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதைவிட அதிகம் ப…
-
- 11 replies
- 1.4k views
-
-
பீட்ரூட் பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். பீட்ரூட் மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். 100 கிராம் பீட்ரூட்டில் C…
-
- 13 replies
- 1.3k views
-
-
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஏப்ரல், 2013 - 16:06 ஜிஎம்டி Facebook Twitter பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக மலேரிய கொசு கம்போடியாவின் மேற்குப்பகுதியில் உலகில் இதுவரை கண்டறியப்பட்ட மலேரியாவை தோற்றுவிக்கும் ஒட்டுண்ணிகளில் இல்லாத புதுரக மலேரிய ஒட்டுண்ணியை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் தாய்லாந்தில் இருக்கும் மஹிடால் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டிருப்பதாக இயற்கை மரபணுவுக்கான மருத்துவ சஞ்சிகையில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது மலேரியாவை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டாம் தலைமுறை மருந்துக்கு பெயர் ஆர்டிமிசினின…
-
- 1 reply
- 546 views
-
-
பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என…
-
- 0 replies
- 541 views
-
-
தொற்றுதல் இல்லாமல் மனிதர்களுக்கு அதிகமாக மரணத்தைக் கொண்டு வரும் உயிர்கொல்லிப் பிரச்சனைகளாக இருப்பன மாரடைப்பு, பக்கவாதம், சுவாச நோய்கள், புற்றுநோய்கள் போன்றவையாகும். பிரச்சனைகள் மேலே: காரணிகள் வேராக மறைந்து கிடக்கின்றன அவை வருவதற்குக் காரணங்கள் என்ன? வற்றாத சுனைகளாக என்றும் மனித உடல்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் அடிப்படை மருத்துவச் சிக்கல்கள் சிலதான் காரணமாகின்றன. நீழிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல் அதீத எடை ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு காரணங்கள் என்ன? கொழுப்புச் சாப்பாடுகளும் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும்தான் என எல்லோரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதற்கு மேலும் ஏதாவது அடிப்படைக் காரணம் உண்டா? ரெசிஸ்டின் எனும் புதிய…
-
- 0 replies
- 891 views
-
-
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை. மீன் எண்ணெய் என்றால் என்ன? இந்த எண்ணெய்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் உடல்நல கேடுகள்- ஆலோசனைகள்
-
- 0 replies
- 595 views
-
-
நாளாந்தம் தொலைக்கட்சிகளில் பல்வேறு பட்ட விளம்பரங்களை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்/ பார்ப்பீர்கள். அவற்றில் பல உணவு பொருட்களை விளம்பரப்படுத்துபவை. கனடாவில் அப்படியான உணவு விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றி பொருகளை விற்கும் தந்திரம் கொண்டவையாக இருக்கிறன. அதில் முதல் பத்து இடங்ககளை பெற்ற உணவு விளம்பரங்களை கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பட்டியல் இட்டுள்ளது. 1. Maple Leaf Foods' Natural Selections இந்த உணவு தயாரிப்பு நிறுவனம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகையை விற்கிறது (sausage/hotdog, ham, salami etc). இறைச்சி பதப்படுத்தலுக்கு நைத்திரேற்று சேர்க்கப்படுவது வழக்கம். இந்த நைத்திரேற்று இறைச்சிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் பொருளுடன் (மயொகுளொபின் ) சேர்ந்து புதிய ஒரு சே…
-
- 2 replies
- 2k views
-
-
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், * முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார். * வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு …
-
- 11 replies
- 1.1k views
-