நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பைன் பருப்புகள் / கொட்டைகள் சாப்பிட்டால் ஆண்களுக்கு Vigra பாவிக்க தேவையில்லை என்று வேலை தள உடல் நல கூட்டத்தில் சொன்னார்கள். யாரவது பயன்படுத்தி உள்ளீர்களா? இது உண்மையா? பைன் பருப்புக்கு தமிழ் சொல் என்ன? http://www.nutrition-and-you.com/pine-nuts.html http://www.healthdiaries.com/eatthis/6-health-benefits-of-pine-nuts.html http://www.siberiantigernaturals.com/extravirginpinenutoil.htm
-
- 1 reply
- 2.8k views
-
-
பைப்றோ மையால்ஜியாக்குரிய சிகிச்சை நீண்ட நாள்களுக்கு தலை முதல் கால் வரையில் பகுதிகளில் வலி இருந்தாலும், அந்த வலி நாளுக்கு நாள் புதிய புதிய இடங்களில் தோன்றினாலும், சோர்வு, தலைவலி, ஞாபக மறதி, தூக்கமின்மை, காலையில் எழும்போதே உற்சாகமேயில்லாமல் எழுவது ஆகியவை தோன்றினாலும் உங்களுக்கு பைப்றோ மையால்ஜியா பாதித்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். உடனே சிலர் அது என்ன பைப்றோ மையால்ஜியா? என கேட்பர். மருத்துவத்துறையினர் இதற்கு முன்பு பைப்றோ சைட்டீஸ் என குறிக்கப்பட்ட தசை வலி நோய் தான் இந்த பைப்றோ மையால்ஜியா. இது வாழ்க்கை முழுவதற்கும் எம்மோடு பின்னி பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகம் முழுவதும் உள்ளது. இதன் முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால், இதனால் …
-
- 0 replies
- 279 views
-
-
கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு. நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின் உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம் சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள் ( கண்ணுக்குத் தெரியாத) இந்த பகுதிகளின் உட்புறத்திலே படும் போது அந்தப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் உண்மையில் அந்த துணிக்கைகளின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே ஏற்படுகிறது. இவ்வாறு நம்மை பாதுகாக்க ஏற்படும் மாற்றங்களே நமக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதுவே அலர்ஜி (allergic reaction)எனப்படுகிறது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் காற்றிலே…
-
- 2 replies
- 836 views
-
-
சிறுநீரகங்களை கவனியுங்கள் இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்! ரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும். ரத்த அழுத்த அளவானது 140-க்கு அதிகமாகவும், 90-க்கு குறைவாகவும் இருப்பது சிறுநீரக செயலிழப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது. மதுப்பழக்கமும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க…
-
- 1 reply
- 543 views
-
-
உணவும் உடல்நலமும்: குடல் நாளத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை மகிழ்விக்க 5 வழிகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, உடல்நலத்துக்கு நன்மை செய்யக்கூடிய பல்லாயிரம் கோடி நுண்ணுயிரிகள் குடல் நாளத்தில் இருக்கின்றன. உங்கள் குடலில் இருக்கும் சிலவகை பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் உங்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் பெரிய பங்காற்றுகின்றன. இவை நுண்ணுயிரி குழுமல் (microbiome) என்று அழைக்கப்படுகின்றன. மனித உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உடலுக்குத் தருவது, பசியைக் கட்…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 266 views
-
-
-
- 3 replies
- 532 views
-
-
பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள். ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்.வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள். ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள். பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம். பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள். சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள். காய்கறிகள் புரோக்கோலி, காய்ந்தபட்டாணி 3-5 நாட்கள். முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள். வெள்ளரிக்காய் ஒரு வாரம். தக்காளி 1-2 நாட்கள். காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம். காளான் 1-2 நாட்கள். பால…
-
- 0 replies
- 630 views
-
-
பிறந்த மகளுக்கு தன் மார்பில் பாலூட்டிய தந்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தங்களின் குழந்தையை பெற்றெடுக்க விஸ்கான்ஸின் ஜோடி ஒன்று மருத்துவமனைக்குச் செல்லும்போது தாய்க்கு மட்டும் அது மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அக்குழந்தையின் தந்தைக்கும்தான். கனவில் கூட நினைத்துப்பார்க்காத செயலைச் செய்தார் அந்த தந்தை. படத்தின் காப்புரிமைMAXAMILLIAN KENDALL NEUBAUER ஏப்ரல் …
-
- 0 replies
- 661 views
-
-
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில.. 1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. 2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் …
-
- 7 replies
- 1.2k views
-
-
இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது. ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண…
-
- 0 replies
- 656 views
-
-
அசைவ உணவுகளில் ஒன்றான ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள்: விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மருத்துவ பயன்கள்: ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்ப…
-
- 0 replies
- 856 views
-
-
மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும் : மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி : "மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,"கர்குமின்' (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது,மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது; பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.மஞ்சளில்…
-
- 5 replies
- 2.2k views
-
-
மெதுவாக நடப்பவர்களுக்கு 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது மெதுவாக நடந்து பழகியவர்களுக்கு அல்சைமர் போன்ற நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மெதுவாக நடப்பவர்களின் நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. இந்த அறிகுறிகள் வயதானவர்களுக்கு ஏற்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும் வேகமாக நடப்பவர்களை விட மெதுவாக நடப்பவர்களுக்கு ஐ.க்யூ திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே நடப்பதெல்லாம…
-
- 1 reply
- 553 views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 497 views
-
-
மகளிர் உடல்நலமும் ஹோமியோ மருத்துவமும் ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோ…
-
- 0 replies
- 2.9k views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 17 நவம்பர் 2025, 02:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்? தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் …
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி! இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள் சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்…
-
- 0 replies
- 666 views
-
-
சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம் சிறுநீரகக் கற்கள் தற்போது இளைஞர், இளைஞிகளுக்கும் கூட தோன்றுகிறது. இதற்கு பல காரணம் இருந்தாலும், இதனை சரிபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்றவற்றை இது ஏற்படுத்தக் கூடும். இதற்கு, சில எளிய வைத்திய முறைகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் இவை கூறப்பட்டுள்ளன. அதாவது, வாரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி என வைத்துக் கொள்ளலாம். இந்த கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து லேசாக(வெதுவெதுப்பாக) சூடாக்கி, அதனை வயிறு, முதுகு, …
-
- 11 replies
- 5.9k views
-
-
உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். இயற்கை சார்ந்த உணவு முறைகள் தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை , 1. புரதங்கள் ( Proteins ) 2. மாவுச்சத்து ( Carbohyrates ) 3. கொழுப்பு ( Fats ) 4. தாதுக்கள் ( Minerals ) 5. உயிர் சத்துக்கள் ( Vitamins ) 6. தண்ணீர் ( Water ) ஆகியன ஆகும். இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. பு…
-
- 0 replies
- 459 views
-
-
நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES …
-
- 0 replies
- 276 views
-
-
அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரைகிலோவுக்கும் அதிகமாக…
-
- 1 reply
- 474 views
-
-
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு வதும் தாய்ப்பால்தான். உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றhன மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று* எனவேதான் நாம் பாலுட்டி இனத்தைச் சார்ந்தவர்களாகப் பகுக்கப்படுகின்றோம். பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. எங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
புத்திசாலியான குழந்தைகள் வளர.... ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு பொற்றோர்களின் கடமை ஆகும். குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும். அதன்பிறகு குழந்தைகள் அணி…
-
- 11 replies
- 4k views
-
-
இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலியல் ஊக்க மருந்துகளைப் பாவிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். "பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது" எனக் கூறும் அவர், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமளித்தார். "மருத்…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-