நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
-
- 4 replies
- 689 views
-
-
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள். குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ: இதயத்தை பாதுகாக்க யோசனைகள் *********** 1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம். 2. உண்ணாமல் டயட்…
-
- 1 reply
- 978 views
-
-
அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும். முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர். நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிக…
-
- 0 replies
- 493 views
-
-
நான் ஒரு உணவுப் பிரியை. நன்றாக வேறு சமைப்பேன். சமைத்துவிட்டு சாப்பிடாமல் இருப்பது எப்படி??? ஆனால் எனக்கு எதை உண்டாலும் ஒருமணி நேரத்தில் சமிபாடடைந்துவிடும். அதனால் ஒரு நாளில் நான்கு தடவையாவது உண்ண வேண்டும். ஆனால் நான் மிக ஆரோக்கியமானவள். பசிப்பது நல்லது தானே என என் குடும்ப வைத்தியரும் கைவிரித்துவிட்டார். பதினெட்டு வயதில்லையாயினும், கொடியிடை இல்லாவிட்டாலும், மெலிந்து இருக்க ஆசை. அதற்காக என்னை சரியான குண்டு என்று கற்பனை செய்ய வேண்டாம். பசிக்காமல் இருந்தால் நான் ஏன் அதிகமாக உண்ணப் போகிறேன். அதனால் உங்கள் ஆலோசனை தேவை. கூற முடியுமா உறவுகளே????
-
- 37 replies
- 10.3k views
-
-
கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans) அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது. எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது. ‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.’ என்றாள். அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம…
-
- 1 reply
- 777 views
-
-
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது..? துரதிஷ்டவசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது, நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ, அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரைஈரலுக்கு ஆச்சிஜன் சீ…
-
- 6 replies
- 819 views
-
-
தற்புனைவு ஆழ்வு நோயின் அறிகுறிகள் பிறந்த குழந்தைகளின் மூளையைத் தாக்கி அவர்களது இயல்பான நிலையை பாதிக்கச் செய்யும் நோய் தான் ஆட்டிசம் எனப்படுகிறது. இதன் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் இந்நோய் குறித்து மருத்துவ உலகால் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பிறந்த 6 மாதத்தில் செய்ய வேண்டிய சின்ன சின்ன செயல்களைக் கூட செய்யாமல் முடங்கி இருக்கும். அதாவது தாயின் முகத்தை அடையாளம் காணுதல், சிரித்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு கூட விளையாட மற…
-
- 14 replies
- 4.9k views
-
-
மருத்துவ ‘ஐலெட்’ (Islet) மாற்றுத் திட்டத்தில் ஆய்வுகூட நுட்பவியலாளர் பணிபுரி கின்றனர். ‘ஐலெட்’ ‘செல்கள்’ கொடையாளியின் கணையத்திலிருந்து (‘பங்கிறி யஸ்’) அறுவடை செய்யப்பட்டுக் கட்டுப்படுத்த முடியாமல் துன்பப்படும் வகை 1 நீரிழிவு நோயாயளர்க்கு மாற்றப்படுகின்றது. அல்பேட்டா பல்கலைக் கழகத்து மருத்துவ நிலையம் உலகில் அதிக ‘ஐலெட்’ மாற்று மருத்துவத்தைச் செய்கின்றது. எட்மன்டன் — இரவு நடுவில் ஒரு அழைப்பு வந்தால், மிகுந்த அனுபவமும் கெட்டித்தனமும் உள்ள ஆய்வு நுட்பவியலாளர், கணுக்கால் நிலத்தைத் தொடும் வண்ணம் குனிந்திருந்து, அழகிய எட்மன்ட்டன் ஆய்வுகூடத்தில், கொடையாளியின் கணையத்திலிருந்து ஆயிரக்கணக்கான ‘ஐலெட்’ ‘செல்களை’ புறம்பாக்குவது, கடும் நீரிழிவு நோயாளியின் வாழ்க்கையை மாற்றுவதற்கான…
-
- 0 replies
- 459 views
-
-
முருங்கை - Moringa oleifera:- தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்ப்புதம் தான். இது கடவுளின் கொடை . சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் , இல்லை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை .. இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம் மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் ,இன்னும் என்னவோ உபயோகம் . ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு…
-
- 18 replies
- 5.5k views
-
-
ஒரு 2 வருடங்களுக்கு முன்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யும் போது என் உடம்பில் கொழுப்பு கூடியுள்ளதாக மருத்துவர் சொல்லியிருந்தார் ("உங்களுக்கு கொழுப்பு கூட இல்லாட்டித்தான் அதிசயம்" என்று என் மனைவி சொல்லியிருந்தார். அதுவும் *** இல் கொழுப்பு கூட என்று). Cholesterol இல் இருக்கும் triglycerides அதிகரித்துள்ளதாகவும், அது கூடாது என்றும் மருத்துவர் சொல்லியிருந்தார். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் (high blood pressure: BP) இருப்பதால் கொலஸ்ரோல் அதிகரிப்பு என்பது சாவை வெத்தலை பாக்கு சுண்ணாம்பு தடவி புகையிலையும் போட்டு வரவேற்பது மாதிரியான விடயம். கொழுப்பு குறைய மருந்து எழுதித் தருவதாக மருத்துவர் சொன்னபோது வேண்டாம் மருந்து இல்லாமல் குறைக்க முயல்கின்றேன் என்று கூறியிருந்தேன். …
-
- 35 replies
- 3.3k views
-
-
இன்றைய மின்னஞ்சலில் வந்தது... தொப்பை எனக்கில்லாவிடினும், யாழ்கள உறவுகளுக்கிருந்தால் பயன்படுமே! என்றவிதத்தில் இதை பதிகிறேன். தொப்பையா...? மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக…
-
- 17 replies
- 6.2k views
-
-
உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு? ஞாயிறு, 17 பிப்ரவரி 2013( 17:52 IST ) காலை எழுந்த உடன் முதல் வேலை பல் துலக்குவது தான். அந்த பற்பசை பற்றி நம்மில் பலருக்கு சில விசயங்கள் தெரிவதில்லை. நம்முடைய முன்னோர்களின் பற்கள் இன்றைக்கும் உறுதியாக இருக்க காரணம் அவர்கள் ஆலும், வேலும் பயன்படுத்தி பல்துலக்கியது தான். ஆனால் இன்றைக்கு விலை உயர்ந்த பேஸ்ட், ப்ரஸ் பயன்படுத்தினாலும் நம்முடைய பற்கள் சொத்தையாகின்றன. எளிதில் ஆட்டம் கண்டு 50 வயதிற்குள் சிலருக்கு பற்கள் விழுந்து விடுகின்றன. எனவே நாம் பயன்படுத்தும் பற்பசை எந்த மாதிரியானது. எப்படி பல் துலக்க வேண்டும் என்று விளக்குகிறார் பிரபல பல் மருத்துவர் ஒருவர். பற்பசையில் என்ன இருக்கு? பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான அப்ரசிவ்…
-
- 3 replies
- 771 views
-
-
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். ‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும…
-
- 1 reply
- 577 views
-
-
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை. 1.சுக்கு,மிளகு,திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும். …
-
- 0 replies
- 517 views
-
-
தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது. ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) …
-
- 1 reply
- 5k views
-
-
உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறத…
-
- 1 reply
- 382 views
-
-
கறிவேப்பிலை நீரிழிவிற்கு சிறந்த மருந்து! கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் ம…
-
- 14 replies
- 1.1k views
-
-
தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும் கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன. உள் அறையில் உலகத்தைச் சுற்றி …
-
- 2 replies
- 994 views
-
-
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இ…
-
- 5 replies
- 2.1k views
-
-
கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்களாகும். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்: இஞ்சியைத் தோல் சீவி அரைத்து…
-
- 0 replies
- 493 views
-
-
போதை பழக்கத்தை விட ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மது, சிகரெட்டை நிறுத்திவிடலாம்! பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் நான் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவது, சிகரெட் பிடிப்பது, கண்டதையும் ஓட்டல்களில்சாப்பிடுவது, ரெüடித்தனமாகப் பேசுவது, செயல்களில் ஈடுபடுவது என்றெல்லாம் பழகிவிட்டேன். ஆனால் அவை தவறு என்பதை தற்சமயம் உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. நான் திருந்தி வாழ ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?கோவிந்தராஜ், வில்லிவாக்கம்.தீய நண்பர்களின் சேர்க்கை தோஷத்தினால் உடம்புக்கும், உள்ளத்துக்கும், பொருளுக்கும் கெடுதியையும் அழிவையும் உண்டு பண்ணும் தீய பழக்கங்கள் சிலகாலம் தொடர்ந்து பழக்கப்பட்டதாக ஆகிவிட்டால் அவற்றை எப்படியும் ஒழிக்க …
-
- 0 replies
- 3.6k views
-
-
பீட்ரூட்டை சமைத்தோ அன்றி பச்சையாகவோ உண்டுவந்தால் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். ஏனைய கீரைவகைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் உண்ணலாம். அல்சர் என்று சொல்லப்பம் வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாவற்றையும் இந்தக் கீரை குணமாக்கவல்லது. மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுகநிவழகள, பீட்ரூட் சாறறுடன தண்நீர் சேர்த்து, இரவுவேளை தூங்கத்திற்க்கு முன்னர் பருகிவிட்டு சென்றால் பலன் பல கிடைக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்கும் சக்தியும் இதுக்கு இருக்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 2.7k views
-
-
மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி? சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற…
-
- 0 replies
- 496 views
-
-
ஆண்களுக்கு, நுரையீரல், வயிறு, கல்லீரல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களுக்கும், 18 சதவிகித பெண்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இப்போது எல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனால், முதல் காட்சியே குலை நடுங்கவைக்கிறது. புகையிலையின் அபாயத்தைப் பொளேரென விளக்கும் வகையில் சிலருடைய புற்றுநோய்ப் பாதிப்புத் துயரங்கள் விளம்பரப் படமாகத் திரையில் விரிகிறது. அதிர்ச்சியில் உறைகிறது நெஞ்சம். புற்றுநோய் குறித்து உங்களை மேலும் அச்சப்படுத்துவதற்காக அல்ல இந்தக் கட்டுரை. ப…
-
- 3 replies
- 3k views
-
-
பால் கலக்காத தேநீர், அதாவது பிளாக் டீ, அருந்துபவர்களுக்கு டைப்- 2 வகை நீரிழிவு நோய் வர சாத்தியங்கள் குறைவு என்கிறது புதிய ஆய்வு ஒன்று. டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள ஆய்வுச் செய்திகளின் படி 50 நாடுகளில் மக்கள் அதிகம் பால் கலக்காத பிளாக் டீயை அருந்துகின்றனர். இந்த நாடுகளில் சர்க்கரை நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பிற நாட்டைக் காட்டிலும் குறைவாக்வே உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தேநீர் அதிகம் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு எதிராகவும் வேலை செய்வதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். கிரீன் டீயை பிளாக் டீயாக மாற்றும் புளிக்கவைக்கும் நடைமுறையினால் இயற…
-
- 0 replies
- 577 views
-