நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
வெற்றிலையின் பலன்கள் குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும். சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும்.... பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து…
-
- 0 replies
- 580 views
-
-
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது. சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=4]ஹேர் கலரிங், கன்னா பின்னா டிரஸ்ஸிங், வாக்கிங் என பெரிசுகள் எல்லாம் இளமையாகும் ரவுசு தாங்க முடியலை. வயதைக் குறைத்துக் காட்டுவதில் இவர்கள் படும் பாடு பலரையும் டென்சன் கரைய சிரிக்க வைக்கிறது. இது கிண்டலடிக்கும் விஷயம் மட்டும் இல்லை. யோசிக்க வைக்கும் விஷயமும் கூட. வெளிப்புற அழகுக்காக மெனக்கெடுவதுடன் கண்டிப்பாக உடல் நலத்தை, தோலின் மினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.[/size] [size=4]மழலைச் செல்லம் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரது தோற்றத்தையும் மினு மினுக்க வைக்கும் மகத்துவம் மாதுளையில் உள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[/size] [size=4]மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்துக்கள் மாதுளையில்…
-
- 0 replies
- 796 views
-
-
கடந்த பல மாதங்களுக்கு முன் இடப்பக்கத்தில் உள்ள மேற்பகுதியின் மூலையில் இருக்கும் கொடுப்புப் பல் ஒன்றில் வலி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாகி இப்ப அடிக்கடி கடுமையாக வலிக்குது. பெரிய சாப்பாடு (இறைச்சி, ஆட்டு எலும்பு போன்றன) எல்லாம் சாப்பிடும் போது அப்பாவியாக தானுண்டு தன் பாடுண்டு என இருக்கும் பல் கடுகு, தானியங்களின் தோல், பர்கர் துண்டு, கடலை போன்ற சின்ன உணவு சாப்பிடும் போது மட்டும் உயிரே போற மாதிரி வலிக்குது. சின்ன உணவுகள் மாவாக அரைபடும் போது, அவை போய் பல்லில் அடையும் போதுதான் இந்த வலி கடுமையாக வருகுது. என்னடா சாப்பாட்டு ராமன் எனக்கு இப்படிச் சோதனை வந்துட்டுதே என்று பல் வைத்தியரிடம் போய் பல்லைக் காட்டினால், அந்தாள் இதுதான் சாக்கு என்று பல X-Ray களை எடுத்துப் பார்த…
-
- 27 replies
- 18.6k views
-
-
[size=5]பிளம்ஸ்(plums) பழங்கள்..![/size] மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன. பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இ...வற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !! சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை…
-
- 0 replies
- 2.4k views
-
-
குடல்வால் கண்டறிய ஏற்படும் அறிகுறிகள் (APPENDICITIS) சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர் சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது. அன்றாடம் உட்கொள்ளும் உணவி...ல், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும். Appendicitis (அப்பன்டிசைடிஸ்) - என்பது பொதுவாக கல்டைசல் வலி என எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.உண்மையில் இவ்வருத்தமானது குடல் வளரி தாக்கப்படுவதால் ஏற்படுகின்றது. க…
-
- 0 replies
- 3.4k views
-
-
சுரைக்காய் ஒரு உன்னத மருந்து..! மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம். ... சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும். சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. உடல் சூடு நீங்க இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவ…
-
- 0 replies
- 437 views
-
-
[size=6]காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாதா!!![/size] [size=4][/size] [size=4]எடை குறைக்க வேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இப்போது இருந்து உண்ணும் பழக்கத்தை கொள்ளுங்கள். மேலும் அப்படி ஏன் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று பல காரணமும் இருக்கிறது. அத…
-
- 1 reply
- 757 views
-
-
உளுந்து (Black Gram) இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. ... 1. தென்னிந்திய உணவு வகை, 2. வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவ…
-
- 1 reply
- 535 views
-
-
சுண்டக்காயின் மருத்துவ குணம்..! சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் ...கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான…
-
- 0 replies
- 2k views
-
-
(Aloe vera) கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எ...த்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ…
-
- 12 replies
- 4.9k views
-
-
[size=4]சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம்செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு.[/size] [size=4]மற்றும் கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவு தான் கோவைக்காய் பச்சடி தயார்.[/size] […
-
- 0 replies
- 387 views
-
-
பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மட்டும் தான் பற்கள் வெள்ளையாகுமா என்ன? இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. ஒன்று டூத் பிரஸ்-ஆல் அல்லது விரலால் பற்களை துலக்குவது. மற்றொன்று, இப்போது எங்காவது வெளியூருக்குச் செல்லும் போது சில சமயம் பிரஸை மறந்து விடுவோம். அப்போது ஒரு சில உணவுகளை உண்டாலே பற்களானது சுத்தமாகிவிடும். அது என்னென்ன உணவுகள் என்று படித்துப் பாருங்கள்... ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசி…
-
- 0 replies
- 610 views
-
-
*****மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன. **** சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. ******சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்க…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
[size=6]இளமையைத் தரும் ஆலிவ் ஆயில்!!![/size] [size=4]வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதிலும் முப்பது வயது ஆகிவிட்டால் போதும் கிழவி என்றே பெயர் வைத்து விடுவர். அவ்வாறெல்லாம் தெரியாமல் அழகாக இளமையோடு இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா? அதற்கு சிறந்த வழி ஆலிவ் ஆயில். இது உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்றும் கூட சொல்லலாம். இத்தகைய சிறப்பை உடைய ஆலிவ் ஆயிலை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!![/size] [size=4]1. உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேல…
-
- 0 replies
- 657 views
-
-
டீசல் புகையும் புற்றுநோயும் உலக சுகாதார சபையின் அறிக்கை ஒன்றின்படி டீசல் வாகன புகையால் சுவாசப்பை புற்றுநோய் வரும் சாத்தியங்கள் உள்ளன எனக்கூறப்பட்டுள்ளது. தரம் குறைந்த டீசல்கள் மூலம் இதன் சாத்தியங்கள் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதன் தாக்கங்கள் அஸ்பெஸ்டஸ் ஊடாக வரும் சுவாச புற்றுநோயுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. Diesel engine exhaust fumes can cause cancer in humans and belong in the same potentially deadly category as asbestos, arsenic and mustard gas, World Health Organization experts said on Tuesday. The (expert) working group found that diesel exhaust is a cause of lung cancer and also noted a positive association with an increased risk of bla…
-
- 0 replies
- 458 views
-
-
ஏழைகளின் ஆப்பிள்! மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம். தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம். இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 …
-
- 5 replies
- 1.5k views
-
-
காய்ச்சல், தலைவலி ரேஞ்சுக்கு மக்களுக்கு அறிமுகமான ஒரு உடல்நலப் பிரச்சினை சைனஸ். லேசாக ஜலதோஷம் பிடித்து மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்தாலே டாக்டர்... எனக்கு சைனஸ் பிரச்சினை...!' என்று தீர்மானமான முடிவோடு வந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு நம் மக்களின் சிந்தனையில் ஐக்கியமாகி விட்ட ஒரு வார்த்தை சைனஸ். பெரும்பாலான மக்கள் நினைப்பது போல எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. சைனசுக்கு ஜலதோஷம் தான் வித்திடுகிறது. ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம் தான் சைனஸ் என்றாலும் கூட இரண்டுக்கும் இடையே தெளிவான ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணம் அடைந்து விடக்கூடிய விஷயம். இந்த குறிப்பிட்ட காலம் கடந்தும் அது குணமாகவி…
-
- 0 replies
- 3k views
-
-
ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!! முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது. முருங்கையின் நன்மைகள் : 1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி…
-
- 1 reply
- 657 views
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.5k views
-
-
மனித வாழ்வை திசைமாற்றும் ஆரோக்கியமின்மை வீட்டிற்கு அஸ்திவாரம் போல், மனிதனுக்கு ஆரோக்கியம் முக்கியமானது. அந்த ஆரோக்கியத்தை வழங்குவது அவன் சாப்பிடும் உணவு. மனிதனுக்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவை, குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாக வழங்கிவரவேண்டும். பிறந்த குழந்தைக்கு மிகச் சிறந்த உணவான தாய்ப்பாலை ஒரு வருடம் வரை கொடுப்பது அவசியம். அதன் மூலம் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு கிடைக்கும். தாய்ப்பால் போதுமான அளவில் இல்லை என்றால், பசும்பால் கொடுக்கவேண்டும். அரைத்த பாதம்தூளை கால் தேக்கரண்டி எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளின் எடைக்கு பொருந்தும் அளவில் மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்துவந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் உயரமாக வளர்வார்கள். ஐந்தாவது மாதத்…
-
- 0 replies
- 354 views
-
-
கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இதன் மருத்துவ குணங்களுக்கு அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
CT ஸ்கான் என்று அழைக்கப்படும்.. computerised tomography ஸ்கான்.. இளம் பராயம் தொடக்கம் அடிக்கடி செய்யப்பட்டு வந்தால்.. மூளை மற்றும் இரத்தப் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அது அதிகரிக்கச் செய்வதாக... பிரித்தானிய நியூகார்சில் பல்கலைக்கழக ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் உள்ளக காயங்கள்.. மற்றும் உள்ளக நோய் தொற்றுக்களை அறிய CT ஸ்கான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் பரிந்துரையின் பிரகாரம்.. CT ஸ்கான் இயக்கத்தின் போது பாவிக்கப்படும் கதிரியக்கம் ஆபத்தான அளவை விட மிகக் குறைவாக தேவைக்கு ஏற்ப பாவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அடிக்கடி CT ஸ்கானை பாவிப்பதை தவிர்ப்பதும் நன்றென கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் இது தொடர…
-
- 1 reply
- 422 views
-
-
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம...்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும ். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன்சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள …
-
- 5 replies
- 1k views
-
-
''தண்ணிப்பால்தான் நல்ல பால்!'' சூரியன் இல்லாமல்கூட ஒரு நாள் நமக்கு விடிந்துவிடும். பால் இல்லாமல்? காபி, டீ, தயிர், மோர்... ஏதாவது ஒரு வடிவில் பாலை நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், பாலை எப்படிக் குடிக்க வேண்டும்; எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? பாலில் என்ன இருக்கிறது? பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். பால் தண்ணீரைப் போல இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனெனில், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது; 13 சதவிகிதம்தான் இதர வேதிப்பொருட்கள். இதில் நான்கு சதவிகிதம் கொழுப்பு; ஒன்பது சதவிகிதம் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள். இந்த நிலையில் உள்ள பால்…
-
- 4 replies
- 814 views
-