நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ 1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். 2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 3. பால் மற்றும் பால்…
-
- 2 replies
- 3.3k views
-
-
அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வில் இருந்து ஆண் பெண் இருபாலாரிடமும்.. அதிக புற்றுநோய் தோன்றக் காரணம் உணவு வழக்கங்களே என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களில் அநேகருக்கு.. புகை.. மதுபானம்.. சமைக்காத காய்கறிகளை.. பழங்களை உண்ணாமை இப்படியானவை இதற்கு முக்கியமான காரணியாக.. அமைய.. பெண்களிலோ.. உடற் பருமன்.. புகை.. மதுபானம்.. இதர நுண்கிருமித் தொற்றுக்கள் என்பவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. எமது அன்றாட உணவு வழக்கத்தை சீர்செய்வதன் மூலமும்.. இவ்வாய்வு பரிந்துரைக்கும் வழியிலும்.. நாம் வாழப் பழகிக் கொண்டால்.. புற்றுநோய்க்கான வாய்ப்பை நாம் வெகுவாகக் குறைக்க முடியும்..! மேலும் இங்குள்ள காணொளியை பாருங்கள்.. விடயங்களை அறிந்து உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் சொல்ல…
-
- 15 replies
- 1.6k views
-
-
தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? Image credit: www.flickr.com அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன். பலன் என்ன…
-
- 8 replies
- 2.5k views
-
-
வயதை சொல்வதிலிருந்து தப்பவேண்டுமா? மாதுளம் பழம் சாப்பிடுங்கள்!!! உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது. மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை இத்தகைய பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டத…
-
- 10 replies
- 1.5k views
-
-
உங்களுக்கு களைப்பாயிருக்கா? உங்களுக்கு மட்டுல்ல..... மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள்.டொனிக் குடித்தால், அல்லது ஒரு சேலைன் ஏற்றினால் அது குணமாகிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா? காய்ச்சல் வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள் களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள் கூட களைப்பு எனச் சொல்லிக் கொண்டு வருவார்கள். 'சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்த மாதிரிக் கிடக்கு', 'உடம்புக்கு ஏலாதாம்', 'ஒண்டுமே செய்ய முடியுதில்லை' இப்படி …
-
- 2 replies
- 5k views
-
-
1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரியவந்துள்ளது. ஒலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி உணவுகளில் கலந்து சாப்பிடுவது நல்லது. 2. தயிர்: ஒரு உயிருள்ள உணவு. இதிலுள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல கிருமிகள் நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவி வழி வகுக்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது. 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்? மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம். 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்? முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்? நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும். 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என…
-
- 2 replies
- 886 views
-
-
உபவாச சிகிச்சை! உடல் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே நோய் என்று நோய் இயல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். உடலை மறுபடியும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இயற்கை மருத்துவ சிகிச்சையின் நோக்கம். மற்ற சிகிச்சை முறைகளில் உள்ளது போல நோய்க்குத் தகுந் தவாறு மருந்துகள் என்று இதில் இல்லை. எந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இதன் நோக்கம். இந்த முறைகளில் உபவாச சிகிச்சை தலை சிறந்தது. இயற்கை மருத்துவத்தின் மற்ற எந்த சிகிச்சையையும் விட உபவாச மும், பிராணாயாமமும் உடலை சீக்கிரம் தன் சகஜ நிலைக்குத் திருப்பி விடுகிறது. உபவாசத்தை ‘பட்டினி கிடப்பது’ என்று பலர் குறிப்பிடுகிறார்கள். பட்டினிக்கும் உபவாசத்திற்கும் ஒரு வேற…
-
- 2 replies
- 3.6k views
-
-
டாக்டர் K.M.முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறார். எனது வேண்டுகோளுக்கிணங்க அவரது பதிவுகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார். எனவே அவரது ஆஸ்த்மா பற்றிய கட்டுரையை வெளியிடுகிறேன். டாக்டர் முருகான்ந்தம் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி. அவரது நண்பர் திரு கண்ணன் சங்கரலிங்கம் மூலம் முதன்முதலில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்த்மா கலங்க வேண்டிய நோயல்ல 'கறுமவியாதி, எனக்கு வந்து கழுத்தறுக்கிறது" என பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி அங்கலாய்க்கிறாள். குளித்ததால் வந்ததா? மு…
-
- 3 replies
- 865 views
-
-
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முதலுதவிக் குறிப்புகள் எதிர்பாராத ஒரு ஆபத்தில் சிக்கி காயப்பட்ட அல்லது உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஒருவரைக் காப்பாற்றுவதற்கு அனுபவப்பட்ட இன்னொருவரால் உடன் செய்யப்படும் உதவியே முதலுதவி எனப்படும். வைத்தியர் வரும்வரை அல்லது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்வரை உயிரை தாக்குப் பிடிக்கச் செய்யப்படும் சிகிச்சை, அல்லது நிலைமை மேலும் மோசமாகாது இருக்க செய்யப்படும் சிகிச்சை என்றும் கூறலாம். ஆபத்து எபோதும், எங்கேயும் எதிர்பாக்காமல் நிகழலாம். அதில் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை, உறவை அல்லது எம்மையே காப்பற்றிக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவம் மிக்க நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். உரிய நேரத்தில் சில உதவிகளைச் செய்வதன் மூலம் பேரிழப்பு…
-
- 1 reply
- 2k views
-
-
இனி எப்பொழுதும் எலுமிச்சை தோல் கழிவில்லை. எலுமிச்சை பழம் பொதுவாக Vitamin C சத்து கூடியது என்பது அனைவரும் அறிந்தவையே. எலுமிச்சையிலிருந்து பெறப்படும் தயாரிப்புகள் அதனுடைய சத்…
-
- 5 replies
- 4k views
-
-
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது. தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட…
-
- 0 replies
- 951 views
-
-
பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும். உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போது…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடர்ந்து Paracetamol உட்கொள்பவர்கள் மரணிக்கும் ஆபத்து.! தொடர்ந்து அளவுக்கதிகமாக பரசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு வரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை அமெரிக்காவின் எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை…
-
- 0 replies
- 1k views
-
-
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: * தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வ…
-
- 0 replies
- 602 views
-
-
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம். அவரைக்காய இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெ…
-
- 2 replies
- 2.7k views
-
-
வேப்பில்லை இலையை பறித்து அதனுடன் சிறுது (கொஞ்சம் தாளரமாகவே) தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தலையில் தடவி ஊற வைத்து 30 நிமிடம் கழித்து குளித்தால் . பொடுகு shampoo எனக்கு எதுக்கு ??என கேள்வி கேட்பீர்கள்.. அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து, சீயக்காய் போட்டு தலையை அலசுங்கள். இப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று தலைக்கு குளித்துவந்தால், இரண்டு வாரங்களிலேயே தலை அரிப்பு சுத்தமாகப் போய்விடும். சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும். இதற்கும் ஒரு எளிய சிகிச்சை இரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்போதுமே இளமையாக இருக்கலாம். அதெப்படி பிரச்சினைகள் வரும் போது மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்கலாம். முடியும். எதையும் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் எந்த சூழ்நிலையிலும் உடைந்து போகாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒரு நகைச்சுவை இருக்கிறது. அதாவது நீங்கள் வாழ்க்கையில் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாவற்றிற்குமே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. ழ்க்கையில் ஒன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் அல்லது நோய்வாய்ப்படுவீர்கள். முதலில் நீங்கள் நலமாக இருக்கிறீர…
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்று உலக நீரிழிவு நோய் தினமாகையால் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும். தவிர்க்க வேண்டியவை: அ. சர்க்கரை, தேன், வெல்லம், குளுக்கோஸ், எலக்ட்ரால் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் முதலிய இனிப்பு வகைகளையும் பேரீச்சை, காய்ந்த திராட்சை, போன்ற உலர்ந்த பழங்களையும் தவிர்க்கவும். ஆ. கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, அரிசி முதலியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சி, களி மற்றும் கூழ் வகைகள். இ. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், திராட்சை. ஈ. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அறவே கூடாது. …
-
- 10 replies
- 1.8k views
-
-
இனிப்பு அதிகம் சாப்பிடவில்லை எனில் சர்க்கரை நோய் வராது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்தாலும், சர்க்கரை நோய் குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை. அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விடாது. ஒருவர் இனிப்பே சாப்பிடுவதில்லை என்பதால், அவருக்கு சர்க்கரை நோய் வராது என்று சொல்லவும் முடியாது. கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்காமல் போனால், அல்லது குறைவாக சுரந்தால், அவர் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் கூட, சர்க்கரை நோய் வரும். இன்சுலின் இயல்பாக சுரக்கும் தன்மை கொண்ட ஒருவர், இனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது. ஆனால், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரித்து, அது சர்க்கரை…
-
- 5 replies
- 3.4k views
-
-
நேற்று அவுஸ்திரெலியா தொலைக்காட்சி 7ல் வந்த காணொளியினைப் பார்வையிட Outbreak of a brain-eating disease http://au.news.yahoo.com/sunday-night/video/watch/27241011/ One of the most frightening parasites on the planet is on the move.
-
- 0 replies
- 557 views
-
-
கண் பார்வை. உலக சுகாதார நிறுவனம், அக்டோபர் 13-ம் தேதியை உலக பார்வை தினமாக அறிவித்துள்ளது. உலக பார்வை தினம் என்று அறிவிப்பதன் முக்கிய நோக்கம், பொதுமக்கள் மத்தியில் கண் நலம் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்துவதேயாகும். இதனைக் கருத்திற்க்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கண் மருத்துவர்கள், மருத்துவ சமூகவியலாளர்கள் மற்றும் கண்ணியாலாளர்கள் கண் நலம் பற்றிய செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் 2010 வருட ஆய்வின்படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோ விஷன்' என்று சொல்லக்கூடிய மிகக்குறைந்த பார்வை என்னும் குறை பாட்டினால் …
-
- 1 reply
- 1.1k views
-
-
சில நேரங்களில் நோயைவிட அதன் வைத்தியம் கடுமையானதாக இருக்கும். மார்பக அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் வரும் Pathology அறிக்கையைக் கொண்டுதான் அடுத்து செய்ய வேண்டிய வைத்தியம் குறித்து தீர்மானிக்க முடியும். கீமோதெரபி என்பது வேண்டாத செல்களை அழிக்கக்கூடிய திறன் படைத்த மருந்துகளாகும். இதனைப் பொதுவாக இரத்த ஓட்டத்தில் கலக்குமாறு, டிரிப்பின் மூலம் இரத்தக்குழாயினுள் செலுத்துவார்கள். வியாதி திரும்பவும் வருவதை தடுக்கவும், அதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் கீமோதெரபி உதவுகிறது. நோயாளியின் உயரம், எடை மற்றும் வியாதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எவ்வளவு மருந்து, எத்தனை ஊசி என்பதெல்லாம் தீர்மானிக்கப்படும். எல்லா வயது நிலையில் இருக்கும் பெண்களுக்கும் கீமோத…
-
- 0 replies
- 3.6k views
-
-
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அக்கடமி, குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் முடிவில், 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அத்தகைய குழந்தைளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க, இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம், சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட, வலியை ஏற் படுத்தி, கழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவது, வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம். ஒரே கோணத்தில், வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால், சரியான முறையில் அமர்ந்த…
-
- 16 replies
- 1.6k views
-