யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
நண்பர்களே நான் ஏற்கனவே கருத்துக்களை பதிந்தாலும், நான் முறைப்படி என்னை அறிமுகப்படுத்தவில்வை....ஏனெனில் எனக்கு இப்படி ஒரு அங்கம் யாழில் இருப்பது தெரியாது... நான் யாழின் நீண்டகால வாசகன். எனது கருத்துகள் எவரையும் மனம் வருந்த வைக்காது விசுகர் பிழையை சுட்டி காட்டியதற்காக நன்றி.... யாழ் என்று தான்.... எழுத இருந்தேன்... ஆனால் தவறுதலாக...யாழ்ப்பாணம் என்று எழுதிவிட்டேன்..
-
- 12 replies
- 1.4k views
-
-
இனிய வணக்கம் என் இனிய உறவுகளே . உங்களுள் ஒருத்தியாக என்னையும் இணைத்து ஆதரவு தருவீர்கள் எனும் தளராத நம்பிக்கையுடன் குந்தவையாக நான் உங்கள் முன்.
-
- 16 replies
- 795 views
-
-
உங்கள் உறவுப்பாலத்தில் முழுமதியாய் நானும் இணைந்து வரத் தயார். வரவேற்பீர்களா?
-
- 49 replies
- 2.3k views
-
-
நான் Junior என்னையும் சற்று துாக்கி நிறுத்துங்கப்பா..
-
- 24 replies
- 1.4k views
-
-
யாழில் இணைந்துகொண்டமை மகிழ்ச்சி. எம்மைபற்றிய அறிமுகம்: செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENGODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம். நன்றி.
-
- 11 replies
- 863 views
-
-
யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 37 replies
- 2.8k views
-
-
தமிழ் வாழ்க! என் இனிய தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் மாறன் நமது யாழ் பொதுமன்றத்தில் என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு முகவரி இல்லை .... நான் உங்களில் ஒருவன்... தமிழன் !
-
- 21 replies
- 1.8k views
-
-
வணக்கம் பாருங்க கிட்ட தட்ட எட்டு வருஷம் எண்டு நினைவு ..மீள் இங்கே இணைகிறேன் . சில யாழ்உறவுகளை ஒரு விழாவில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன் அப்போது அவர்கள் இட்ட கட்டளைக்கு இணங்க இங்கே இணைகிறேன் .. யாவரும் நலமாகா உள்ளீர்களா ..? வாங்க பேசலாம் ..? வந்த வழித்தடத்தை வழியில மறந்தவர்கள் நின்று நிலைத்ததில்லை நீடூழி வாழ்ந்ததில்லை ...
-
- 12 replies
- 874 views
-
-
யாழ் இணையத்துடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்திருக்கும் என்னை உற்சாகமாய் வரவேற்று களவீதிகளில் உல்லாவமாக உலாவர ஆக்கமும் ஊக்கமும் தருவீர்கள் என நினைத்து இந்த அறிமுகத்தை உங்களுடன் பகிர்கிறேன்...
-
- 16 replies
- 996 views
-
-
பிருந்தன் என்பது எனது புனைபெயர். ஏற்கனவே பல தடவைகள் இதற்குள் எழுத முயன்று இதற்குள் புகுவது எனக்குச் சிரமமாகப் போய்விட்டது. சந்தர்ப்பம் வரும் போது எனது உண்மைப் பெயரை வெளிப்படுத்துவேன். நடைமுறைப் பிரச்சினைகள் சார்ந்து உரையாடுவோம். யாழ் இணையத்தளம் இதற்கான களமாக அமைவது குறித்து மகிழ்ச்சி! நன்றி! பிருந்தன்
-
- 17 replies
- 1.9k views
-
-
'இனப் படுகொலை' என்றால் என்ன ? என்பது குறித்த விவாதங்கள் அனைத்துலக அளவில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருபவைதாம். ஹிட்லரின் ஜேர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூதப் படுகொலைகளின் பின்னாலும் ருவாண்டாவில் 'டுட்சி' இனப்படுகொலைகளின் பொழுதும் பொஸ்னியாவில் நடைபெற்ற முஸ்லீம்களின் துடைத்தழிப்பின் போதும் இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்தவைதாம். வரலாற்றில் இதற்கு மேலும் இது குறித்த பல சாட்சியங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பேரவலத்தை நடைமுறையில் உள்ள உலகளாவிய சட்டங்களை வைத்துக்கொண்டு உணர்ந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். //தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக்குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக நிலை சார்ந்தும் உயிர…
-
- 1 reply
- 557 views
-
-
-
வணக்கம் நண்பர்களே, எனது பெயர் நிரோஷன். திருகோணமலையில் பிறந்து, இன்று ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து எனக்கு அறிவியல் என்றாலே மிகவும் பிடிக்கும். இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும், காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.
-
- 18 replies
- 1.6k views
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு சுபிதாவின் அன்பு வணக்கங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நீண்ட கால இடைவெளியின் பின்பு உங்கள் அனைவருடனும் மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள் .
-
- 58 replies
- 4.4k views
-
-
எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ? எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா யாழ் இந்துவின் பெருந்தன்மை கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ? இருந்த உபகரணங்களை வைத்து ப…
-
- 23 replies
- 1.6k views
-
-
சிலகால வெளிகளுக்குப் பின் மீண்டும் யாழில் கள உறவுகள் அனைவரையும் சந்திப்பதில் மனமகிழ்ச்சி காரணம் பல உள களத்தினைக் கடந்து செல்ல ஆயினும் இது யாழ்க்களம் அல்லவா கண்டும் காணாது செல்ல அமைந்த களமா இது? விருப்பு வெறுப்புக்கு அப்பால் நட்பும் நயமான கருத்தும் தரும் களம் அல்லவா கடந்து போக முடியவில்லை தொடர்ந்தும் பயணிப்போம் அறியத்தராமல் சென்று உங்களை அவதிக்குள்ளாக்கியிருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 1.6k views
-
-
-
-
-
எல்லாருக்கும் ஒரு கும்பிடுங்கோ நான் பரியாரி யாழில் கால் வைக்கிறேன் கொஞ்ச நாளைக்குப் பாதையைக் காட்டுங்கோ பிறகு உங்களுக்கு ஏதும் பிரச்சனை எண்டால் பரிகாரம் செய்வேன்
-
- 23 replies
- 1.5k views
-
-
எல்லோருக்கும் முட்டாள்கள் தின நழ்வாழ்த்துகள் தவறாக எடுத்து கொள்ள கூடாது..
-
- 12 replies
- 1k views
-
-
வணக்கம்-/\- , என் இனிய யாழ் இணைய கருத்துக்கள ஜம்பவான்களே வணக்கம், நீண்ட நாளாய் இந்தப்பக்கம் வரமுடியல்லை, வேலை+நோய்= ஓய்வு, நீங்க எல்லோரும் நலமா? என்னை மறந்திட்டீங்களா? (ஆமா இவரு பெரிய VIP டேய் டேய்) எல்லோருக்கும் ஒரு கும்பிடு தொடர்ந்து இணைந்து இருப்போம்...
-
- 12 replies
- 892 views
-
-
1) எமது மக்களின் மனதில் இனப்பற்று இருக்கவேண்டும். 2) எமது மக்களில் பணிவன்பை, ஒற்றுமையை விதைக்கவேண்டும். 3) எமது வாழ்க்கை, இன்பம் இழந்து பரதவிக்கும் நிலையில் உள்ள நாம், எமது விடுதலைக்கு என்ன வேண்டும் என்றால், ஒன்று பட்டால் அதுவே போதும், பதவி ஈசை சுயநலம், எமது இனத்தை அழிக்கிறது. நாம் வாழவேண்டும், புலம் பெயர் மக்கள் வீடு திரும்பவேண்டும். எமது நிலத்தில் கால் பதித்து மகிழவேண்டும். தமிழ் மக்களே இதை மட்டும் சிந்தியுங்கள், உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள், அல்லது, பூமியை நோக்கிய அழிவு உங்களை நோக்கி வந்தால் அதை நான் வரவேற்பேன். காரணம், ஒன்று படாத இனம், எமது மக்கள் துயரை பார்த்து நெந்து போகாத மனம் இருந்து என்ன பயன். அருள் தெய்வேந்திரன், சோதிடர், கவிஞர், எழுத்தாளன்.
-
- 16 replies
- 1.1k views
-
-