யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யார் எங்கே நகர்த்தியது? நேற்று இரவு நான் எழுதிய ''பெரியார் உண்மையில் என்ன சொன்னார்'' என்கிற தலைப்பும்,'' கடவுள் மறுப்பு ஏன் அவசியம்'' ஆகிறது என்னும் இரண்டு தலைப்புக்களையும் யார் எங்கே நகர்த்தியது.இது பற்றி எந்த மட்டுறுதினரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, இவை எவ்வாறு எங்கே ஏன் மாயமாக மறைந்தன என்பதை களப்பொறுப்பாளர் விளக்குவாரா?
-
- 2 replies
- 1.1k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2023 அன்று யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்கள் கடந்த வருட நடுப்பகுதியில் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். எனினும் யாழ் கள உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைய, பல தொழில்நுட்பச் சவால்களுக்கு மத்தியிலும் பிற நிர்வாக உறுப்…
-
- 40 replies
- 3.7k views
- 1 follower
-
-
மோகன் அண்ணா தெருநாய் என்று ஒரு சொறிபிடிச்ச குட்டை நாய் வருது கவனம் கடிச்சா நிலமை மோசம் :P
-
- 8 replies
- 1.9k views
-
-
நிறையப் பேர்கள், தமிழில் கருத்து எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றே. ஆனால், அசட்டை காரணமாக மூத்த கள உறுப்பினர்கள் கூட, எழுத்துப் பிழைகளை விடுகின்றார்கள். இவர்களின் தமிழ் அறிவு குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ண,ன,ந வில் பிழை விடுவது. அல்லது, "ா" போடுவதில் தவறு விடுவது என்று நிறையவே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. ஆரம்பகாலத்தில் எழுதுவது தட்டச்சுத் தவறாகக் கணித்தாலும் கூட, குறைந்தபட்சம் 500 கருத்துக்களைத் தாண்டிய பின்னரும் விடப்படுகின்ற எழுத்துப் பிழைகளை எவ்வாறு கருதுவது? அது வேண்டுமென்று செய்கின்ற செயலாகத் தானே கருத முடியும்? உப்புச்சப்பில்லாத அரட்டைகளுக்கு செலவளிக்கும் நேரத்தில், எழுதிய பின்னர், எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் பார்த்தால் குறைந்தா போய்வி…
-
- 18 replies
- 5.7k views
-
-
உறவுகளே!!! உங்களை நாம் கைவிடப் போவதில்லை- உதவி செய்ய முற்படும் புலம்பெயர் தமிழர்கள். http://www.newjaffna...php?id=MjMxNzc= இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் நம்பகத்தன்மையை எவராவது உறுதி செய்து கொள்ள முடியுமா..??! உண்மையில் இது பாதிக்கப்பட்ட உறவுகளின் மீதான கருசணையின் நிமித்தம் விடுவிக்கப்பட்ட கோரிக்கையா.. நிச்சயமாக இது அவர்களின் மீட்சிக்கு உதவி நிற்குமா..????! நியூயாவ்னா என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த.. முன்னாள் பெண் போராளிகள் உட்பட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவத் தயாராக உள்ளனர் என்ற இந்த அறிவிப்பு.. உண்மையில்.. பாதிக்கப்பட்ட உறவுகள் வறுமை.. வருமானமின்மை காரணமாக தவறான வழியில் செல்லாது.. …
-
- 2 replies
- 762 views
-
-
பிரண்ட்ஷ்! திண்ணை பகுதியில் சட் பண்ணும் போது சொன்ன விடயம் தொடர்பாக யாரும் எதையும் மனசில் வைக்காதீர்கள். திண்ணை பகுதியில் சட் பண்றது செய்தியாக வரும் என்பது எனக்கு தெரியாது. எப்பவுமே சீரியசாக கதைப்பதை விட கொஞ்ச நேரம் பொழுதுபோக்கா,செல்லமா சண்டை பிடிப்பம் என்று தான் சொன்னேன். நான் சொன்னது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 768 views
-
-
மோகன் அண்ணா எனது பெயரை தமிழில் தியா என்று மாற்றி விடுவீர்களா?.
-
- 1 reply
- 722 views
-
-
-
இணையத்தளங்களில் வரும் எந்த ஒரு விடயமும் ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப் படுகின்றது. விடயத்தை இலகுவாக பிரதி பண்ணி வைக்கும் வசதியும் இருக்கின்றது. எனவே பொல்லை கொடுத்து அடி வாங்கும் சந்தர்பங்களை நாம் தவிர்க்க வேண்டும். சில செய்திகள் இன்று பொய் அல்லது உண்மை என்றாலும் அது வேறு வகையில் உண்மையாக அல்லது பொய்யாக இருக்க சந்தர்பம் உண்டு. செய்தியின் நம்பக தன்மை பற்றி நாமே இணையத்தளங்களில் விவாதிக்க வேண்டாமே. நேரடியாக ஈமெயில் மூலம் நிர்வாகிக்கு அறியதரலாமே? குறை இருப்பின் நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுவோம். நிறை இருப்பின் இணையத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுவோம். எமது இணைய தள உறவிற்கு இது ஆரோக்கியமாக இருக்கும்.
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ் களத்தில் தொழில்நுட்ப கோளாறா? அண்மையில் நான் சில பதிவுகளை யாழ் களத்தில் பதித்திருந்தேன். ஆனால் அவைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் பதிந்தவைகளை எனது அங்கத்துவத்தில் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இளையபிள்ளையின் மருத்துவக் குறிப்பிற்கு பதில்....புலிகளின் குரல் தொடர்பான செய்தி...களத்தில் தான் நம் தமிழரிற்கு காயம் என்றால் புலத்திலுமா....போன்ற தலையங்கங்களில் நான் யாழ் விதிமுறைகளிற்கு எதிரில்லாமல் எழுதி இருந்தேன்..இருந்தும் காணவில்லை. ஒருவேளை தொழில் நுட்பத்தில் ஏற்பாட்ட கோளாறுகளாக இருக்கலாம் என்று கருதி உங்கள் முன் இதனை பதிகின்றேன். இந்தப் பதிவும் வெளிவருமா?
-
- 1 reply
- 916 views
-
-
வணக்கம் கள உறவுகளுக்கு, களத்திலே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,யாழ்க்களத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றியும் சிறிது பார்க்கலாம். முதலில இந்த ஒட்டுக் குழுக்கள் எண்டால் என்ன?இவற்றை ஏன் இப்படி அழைக்கிறோம்?இது பற்றி விலாவாரியான கட்டுரைகளை நான் அரசியற் களத்தில் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இருந்து இணைத்துள்ளேன், நேரம் உள்ளவர்கள் எமது தேசிய விடுதலை அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் சென்று படியுங்கள். நீங்கள் அரசியற் தெளிவு பெற வேண்டும் என்றால் இவற்றை அர்த்தம் விளங்கிப் படிக்க வேண்டும்.ஒரு முறை விளங்கா விட்டால் மீண்டும் ஆறுதலாப் படியுங்கள். நமக்க…
-
- 18 replies
- 2.9k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936 இவ்வளவும் சொன்னனீங்கள்.. அவ்வாறு யாழ் உறவோசைப் பகுதியில் எழுதப்படுவன உடனே கடாசப்படும் என்பதையும் ஏன் சேர்க்கவில்லை....
-
- 1 reply
- 847 views
-
-
வன்னி மைந்தனுக்கு ஆப்பு... யாழ்கள நிர்வாகிகளால் அடுத்தடுத்து என் மீது பழிவாங்கும் நிலைகளை ஆடுத்தடுத்து தொடர்கிறது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி..எழுதப்புடும் ஆக்கங்கள் முடக்கப்படுகின்றன. தொடராக என் மீது அவர்கள் தமது பலப்பிரயோகத்தை மேற்க்கொண்ட வண்ணம் உள்ளனர். இது ஒரு ஊடக தர்மதை;தை மீறும் செயலாகும் வெளிப்படையாகவே வந்து தமது கருத்துக்களை அவர்களால் வைக்க முடியாது இவ்வாறான கண்மூடித்தனமான சம்பவங்களை மேற்கொள்வது.....ஏற்று கொள்ள முடியாததும்..கண்டிக்கதக்கதும
-
- 28 replies
- 4.4k views
-
-
கவிதைவீட்டின் கதவினை தட்டிப்பார்த்தேன் திறக்க மறுக்கிறதே...!
-
- 5 replies
- 1.5k views
-
-
கீழ் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டிருந்த அக்கினிப் பறாவைகள் காணொளியை யாராவது தந்து உதவுவீர்களா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=43272
-
- 0 replies
- 819 views
-
-
நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது...... இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் …
-
- 13 replies
- 2.5k views
-
-
வணக்கம் உறவுகளே, யாழில் நான் படங்களை இணைக்கும் போது அவை மிகப் பெரிய அளவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. படங்கள் எவ்வாறு இணைப்பது? அவற்றை எந்த வடிவில், எந்த அளவில் சேமிக்க வேண்டும்? எவ்வாறு சிறிய அளவில் சேமிப்பது என்று கூறமுடியுமா? "Upload Skipped (This file was too big to upload)"
-
- 7 replies
- 1.1k views
-
-
அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன். போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன். அன்புடன்,
-
- 33 replies
- 4.5k views
-
-
அண்மைக்காலங்களாக வவுனியாவில் புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக வவுனியா வாசிகள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: வவுனியாவில் கடந்த சில காலங்களாக புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்கள் மக்களிடம் ஆயுத முனையில் கப்பம் அறவிட்டு வருவதாகவும், கப்பமாக கேட்கும் பணத்தை சில நாட்களுக்கும் கொடுக்க மறுத்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வதும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வர்த்தகர்களையும், மேற்கத்தைய நாடுகளில் வதியும் உறவினர்களைம் இலக்கு வைத்து இவ்வொட்டுக்கும்பல்கள் போட்டி போட்டு கப்பம் அறவிடுவதாகவும், வாகனங்களை கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் கடத்தி …
-
- 0 replies
- 794 views
-
-
"முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்." அணைத்து செய்திகளும் இங்கு வருகிறதே. நீங்கள் நீக்கியதாக தெரியவில்லை... எதற்கும் நீங்கள் எழுதியதை நீக்கி விடுங்கள்.
-
- 0 replies
- 564 views
-
-
புது பெயர்கள்...நல்லா இருக்கு யாழுக்கு...பல பெயர்கள் நான் கேள்விபட்டதேயில்லை...அண்ஸுக்
-
- 35 replies
- 11k views
-
-
உங்க கருத்து பதிவுக எல்லாம் பாத்தேங்க . அதில நீங்க சிரிக்கிறீங்க , அழுவுறீங்க என்மோல்லாம் செய்யீறீங்க . நானும் கருத்துங்க எழுதிறப்போ சிரிக்கணும் . வழிசொல்லுவீங்களா கள உறவுகளே ?
-
- 25 replies
- 3.7k views
- 1 follower
-
-
அம்மாமாரே ஐயாமாரே, உங்களில் பலர் ஒரே செய்தியை அல்லது ஒரு செய்தியின் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலான பிரசுரங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் இணைப்பதால் அது முதற்பக்கக்ங்களில் அதிக இடத்தை பிடித்து வேறு செய்திகளை பின்தள்ளிவிட செய்கின்றது. எனவே யாழ் தளத்தின் தேடியினை பயன்படுத்தி உங்கள் செய்திகள் எற்கனவே இடம்பெற்றுள்ளனவா என பார்த்து அதற்கு பின் புதிய செய்திகளை சேருங்கள். நன்றி
-
- 0 replies
- 895 views
-
-
பெயர் மாற்றங்கள் தலைப்புக்குள்ள நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது? எண்டு இதக் கொண்டு போய் செருகிப்போட்டன் பெரிய மனசு பண்ணி அத சரியான இடத்தில மாத்தி விடுங்க சாமியோவ்...
-
- 4 replies
- 728 views
-
-
புலம்பெயர்ந்த சமூகங்களில் அவர்களது கலாச்சார வாழ்வு முறைகள் பொழுது போக்குகள் பழக்கவளக்கங்களிற்கு ஏற்ற முறையில் கவனயீர்பு நிகழ்வுகளை எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பது பற்றி ஒரு போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு உங்களின் ஆர்வமான பங்களிப்பு வேண்டப்படுகிறது. போட்டியை ஒழுங்கமைக்கவோ அல்லது பங்குபற்றவோ விரும்புவர்கள் உங்கள் ஆர்வத்தை இந்த திரியில் தெரிவிக்கவும். மேலதிக விபரங்கள் விரைவில்.
-
- 5 replies
- 1.4k views
-