யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
கடந்த சில நாட்களாக யாழில் shoutbox (திண்ணை ?) இனை பார்க்க கூடியதாக இருக்கு. அதில் பலர் வந்து கதைப்பதனையும் அளவளாவுவதையும் காணக் கூடியதாக இருக்கு. ஆனால் நான் பார்த்த வேளைகளில் பல தடவை பலர் அநாகரீகமாகவும், கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவற்றை கதைப்பதையும் காணக் கூடியதாக இருக்கு. பலர் மற்றவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூட கேட்டு பெறுகின்றனர். நேற்று இரு கள உறவுகள் மிக மோசமாக மிருகங்களின் பெயரை எல்லாம் அழைத்து வசைபாடி கொண்டதையும் நான் பார்த்தேன். எனவேதான் எமக்கு (யாழுக்கு) இவ் shoutbox தேவையா என கேள்வி எனக்கு வருகின்றது 24 மணித்தியாலமும் ஒரு மட்டு திருத்தினர் இருந்து இதனை கவனிக்க முடியுமாயின், கவனித்து தேவையற்றதைக் கதைப்பவர்களை அகற்ற முடியுமாயிமன் shoutbox இருப்பதில் பிரச்ச…
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழில் hackers அன்பான உறவுகளே நேற்றிரவில் இருந்து எனது பெயரில் யாரோ யாழில் உலாவுகிறார். அத்தோடு திண்ணையில் பல உறவுகளை புண்படுத்தியும் உள்ளார். எனது பாஸ்வேட் களவாடப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.(நான் உண்மையில் எனது உறவுகளின் மனதை புண்படுத்தாமல் இருந்த போதும்). எனவே மோகன் அண்ணாவோ அல்லது வலைஞனோ ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். நானும் தமிழ்லினிக்ஸ்ம் திண்ணையில் தர்க்கப்பட்டது மட்டும் உண்மை. எனது நிலையை புரிவீர்கள் என எண்ணுகிறேன். மிக்க நன்றி.
-
- 25 replies
- 2.9k views
-
-
கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::... …
-
- 15 replies
- 2k views
-
-
புதிய ஆண்டில் பிரவேசித்துள்ள யாழ்களமானது, நடந்து வந்த பாதையை மீளாய்வு செய்யும் நேரமிது!!! தொடர்ச்சியாக செய்திகளை வெட்டி ஒட்டும் தளமாக இருக்க வேண்டுமா? (அச்செய்திகளை தாங்கி இன்று ஆயிரம் இணையத்தளங்கள் வந்து விட்டன!!) அல்லது புலத்தில், நாம் என்ன செய்ய முடியும், அழிவின் விளிம்பில் நிற்கும் எம்மக்களுக்கு? உருப்படியாக எதனையும் செய்ய வேண்டும்!!! மிரட்டல்களுக்கும், பயங்களுக்கும் தொடர்ச்சியாக அடங்கிப் போவதா??? புலத்தில் என்ன செய்ய வேண்டும், முடியும் என்பதனை இனம் காட்டுவோம்!!! இன்னும் இன்னும் எம்மக்களை நோக்கிய செயற்பாடுகளை விடுத்து, ஒன்றில், புலத்து மக்களை இலக்கு வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றையது புலத்தில் எம்மக்களிப்ன் அழிவில் எக்காலமிடும், துணைப…
-
- 5 replies
- 1k views
-
-
இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது. நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன். இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.) யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது. புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!
-
- 18 replies
- 1.9k views
-
-
யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா. பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது. நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே.. பங்கு வர்த்தகம்" பற்றிப் …
-
- 10 replies
- 1.6k views
-
-
ஆய்வுகள் பெரும்பாலானவை ஊர்ப்புதினம் பகுதியில் தான் இருக்கின்றது ஆனால் சில ஆய்வுகள் மட்டும் மட்டுநிறுத்தினரால் நகர்த்தப்படுகிறது அதுவும் யாழ்பாடியினால் நகர்த்தப்படுவதில் தனிப்பட்ட கவனம் சில ஆய்வுகளில் காட்டப்படுகிறது இது இணைப்பவரைப் பொறுத்தா ? அல்லது ஆய்வுகளைப் பொறுத்தா ? எழுதியவரைப் பொறுத்தா ? தவிர கிளிநொச்சி போரியல் பார்வை மோகனினால் ஒரு கருத்து நீக்கப்பட்டது அப்போது அவரால் அது அது நகர்த்தப்பட்டவில்லை பின்னர் வேறு ஒருவரால் நகர்த்தப்பட்டது அதுவும் யாழ்பாடி என்று நினைக்கின்றேன் ஆனால் அதன் பின்னர் வந்த கிளிநொச்சி ஆய்வுகள் ஊர்ப்புதினத்தில் தான் இருக்கிறது ஆகவே இது தொடர்பான் விளக்கம் தேவை ?? நன்றி
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ்களம் மிக அதிகமான தமிழர்களால் பார்கப்படும் களம். இதன் ஊர்புதின பகுதியில் இணைக்கப்படும் செய்திகள் சில எமது போராட்டத்தில் புலம்பெயர் ஆதரவாளர் மட்டத்தில் சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துகிறது. அப்படியான செய்திகளை அகற்றினால் என்ன?? உதாரணத்துக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=48085 http://www.yarl.com/forum3/index.php?showtopic=48079 பனங்காய் அண்ணா இந்த செய்திகளை நல்ல நோக்கத்துக்கு இணைத்திருந்தால் கூட விளைவுகள் எதிராகவே இருக்கும் என்பது எனது கருத்து. பனங்காய் அண்ணா உற்பட பலரின் கருத்து எதிர்பாக்க படுகிறது.
-
- 1 reply
- 652 views
-
-
மறுபடியும் யாழ் தளம் வேலைசெய்யு இல்ல... தட செஞ்சுட்டாங்கலோ?
-
- 19 replies
- 3.3k views
-
-
எனது பெயரில் உள்ள ,இது வரை பதிந்த சிறுகதை, கவிதைகளை எப்படி தொகுப்பாக பார்ப்பது.எவற்றை அழுத்த(கிளிக்)வேண்மென்று அறியத்தரவும் கருத்துக்கு இடது பக்கம் காண்பிக்கும் உங்கள் பெயரினை click செய்து அதில் Find Member's Posts அல்லது Find Member's Topics என்பதில் click செய்து தொடங்கிய கருத்துக்களையோ, பதில்களையோ பார்வையிடலாம்.
-
- 20 replies
- 3k views
-
-
-
வணக்கம் உறவுகளே, youtube வீடியோவை, மோகன் அண்ணா குறிப்பிட்ட முறையில் இணைத்தேன். ஆனால் வேலை செய்யவில்லை. யாராவது உதவ முடியுமா??? நன்றி
-
- 1 reply
- 730 views
-
-
யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்க…
-
- 35 replies
- 4k views
- 1 follower
-
-
எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது. களத்தில் ஒரு சில நல்ல கருத்…
-
- 163 replies
- 23.2k views
- 1 follower
-
-
-
தயவு செய்து என்னையும் யாழ் இணையத்தினுள் இணையுங்கள். மோகன் அண்ணா அல்லது இணையவன் அண்ணா யாராவது பார்த்து உதவி செய்யுங்களன். நன்றி வணக்கம். தாயகத்தில் உறவுகள் மிகப்பாரிய மனித அவலத்திலும் சகேதரர்கள் இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தும் களத்தில் போராடும் இந்த இக்கட்டான நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் வாதப் பிரதி வாதங்களை விட்டு எமது போராட்டம் என்ற நினைவுடன் எம் உறவுகளுக்கு கைகொடுங்கள்.35 வருட போராட்ட அனுபவத்தில் தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் போர் ஆரம்பிக்கும் காலம் இடம் என்பவையும் எமது பலமும்.ஆகவே இன்னமும் சிறிது காலம் பொறுமையாக இருந்து தாயக மக்களுக்கும் எமது புலி வீரர்களுக்கும் கைகொடுப்பேம்.
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் ஊடகங்களின் பணி எதிவினை ஆற்றிக்கொண்டிருக்கின்றது! என்ற அடிப்படையில் மிகக்கடுமையான விமர்சனம் யாழ்களத்தில் இடையிடையே சூடுபிடிக்கின்ற விடயம். அருள்ஸ், இதயச்சந்திரன் இவர்களது கட்டுரைக்கள் அலசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது, இவர்கள் கட்டுரைகளின் பலாபலன் எமக்கு பாதகமானது என்று பலமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தவகையாக வாதிடும் தரப்பு மிகத்தெளிவாக பாதகத்தின் வகையை காட்டவும் இல்லை. சரியான வழி இதுதான் என்று தமது அறிவுக்கு எட்டியவரையாவது விபரமாக தரவும் முயற்சிக்கவில்லை. என்சிந்தனையின் ஊக அடிப்படையில் பகிரவரும் கருத்து, தன் எதிரியை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கக் கூடிய ஒரு அஸ்திரம்; அரசதரப்பின் கையிற்க்கு கிடைத்து விட்டதென்றால் அது போரில் வென்று விட்டதென்றே கொள்ளப்ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
Dailymotion video தளத்தில் இருந்த ஒளிப்பதிவுகளை யாழ் இணையத்தில் இணைக்க [dm]{content}[/dm] என்னும் குறியீட்டினை இணைத்து இணைக்க முடியும். இங்கு {content} என்பதில் dailymotion.com தள ஒளிப்பதிவு முகவரியில் இருந்து /swf/ என்பதற்கு பின்னால் வரும் முகவரியினை இணைப்பதன் மூலம் யாழ் களத்திலும் ஒளிப்பதிவினை நேரடியாகப் பார்வையிடச் செய்யலாம். இது தொடர்பாக மேலதிக உதவிகள் தேவைப்படுவோர் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 1.6k views
-
-
கருத்து மட்டும்தான் நீக்கப்பட்டதா? அல்லது தலைப்பே நீக்கப்பட்டுவிட்டதா? ஏன் கேட்கிறேன் எண்டால் வானொலி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் அதனை காணவில்லை அதுதான் கேட்டேன்
-
- 2 replies
- 1.2k views
-
-
-
எழுவான் அவர்களே, என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது? அல்லது எனது பதில் உங்களது சித்தாந்தத்தை தழுவியதாக அமையவேண்டும் என்ற எழுதாத விதியுள்ளதா? எனது பதில் பிடிக்காததால் நீக்கினீர்களா? அல்லது அதற்கு வந்த பதில்களால் நீக்கினீர்களா? மௌனமாக நழுவாமல் பதில் தாருங்கள் நண்பரே!
-
- 29 replies
- 5.2k views
-
-
இணையத்தள முகவரிகளை இணைப்பது எப்படி??? உதவிக்குறிப்பில் இது இல்லை மன்னிக்கவும்
-
- 1 reply
- 952 views
-
-
quote ஐ இணைப்பது எப்படி ??????????? எழுதுவதில் உதவி தேவை ???? மத்தியகுழு உறுப்பினர்கள் உதவ முடியுமா??????????????
-
- 9 replies
- 2k views
-
-
-
அம்மாமாரே ஐயாமாரே, உங்களில் பலர் ஒரே செய்தியை அல்லது ஒரு செய்தியின் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலான பிரசுரங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் இணைப்பதால் அது முதற்பக்கக்ங்களில் அதிக இடத்தை பிடித்து வேறு செய்திகளை பின்தள்ளிவிட செய்கின்றது. எனவே யாழ் தளத்தின் தேடியினை பயன்படுத்தி உங்கள் செய்திகள் எற்கனவே இடம்பெற்றுள்ளனவா என பார்த்து அதற்கு பின் புதிய செய்திகளை சேருங்கள். நன்றி
-
- 0 replies
- 895 views
-