வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
எனக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று முப்பே சொல்லியிருக்கிறன் தானே. வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று செய்து அதில் அல்லிகள் இரண்டும் மீன்களும் வளர்கிறேன். கடந்த இரு வருடங்களாக அல்லியும் மீன்களும் நல்ல விளைச்சல். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தொடர்ந்து பூத்தன அல்லிகள். எனக்கோ வித்தியாசம் வித்தியாசமாகப் பூங்கன்றுகள் வாங்குவதும், அதற்காகக் கணவரிடம் திட்டு வாங்குவதும் பிடித்த பொழுதுபோக்கு. கடந்த வருடம் தற்செயலாக தமிழ் பாடப் புத்தகத்தில் ஆம்பல் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தபோது என் வீட்டிலும் வளர்த்தால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். ஒன்லைனில் தேடியும் கிடைக்கவில்லை. ஈழத்துக்கு தொலைபேசியில் கேட்டால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்திலும் கண்டத…
-
- 17 replies
- 6.2k views
-
-
தேவை: விழிப்புணர்வும், எச்சரிக்கையும் வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை போல, நம்மவர் சிலரது முட்டாள்தனத்தினை நினைக்கையில் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை. பிரித்தானியாவில், குடியுரிமை பெற, 'citizenship test' பாஸ் பண்ண வேண்டும். இதற்கு அரசு புத்தகம் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதனை படித்து பரீட்சை செய்ய வேண்டும். எனினும் ஆங்கிலம் தெரியாதோருக்கு ஒரு சலுகையாக, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆங்கிலம் படித்து, அதில் புலமை உள்ளதாகக சான்றிதழ் கொடுத்தால், அதனை அரசு ஏற்றுக் கொண்டது. நாளடைவில் புத்தீசல் போல பல போலி நிறுவனங்கள் உருவாகி, தமிழர்களை முகவர்களா கொண்டு, விளம்பரம் செய்து, பலருக்கு இந்த இரண்டாவது வழிமுறை தான் ஒரேவழி என்பது போல தகவல்களைக் கொடுத்து, மூன்று மா…
-
- 2 replies
- 901 views
-
-
நயாகராவில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் உடல் - கனேடியப் பொலிஸார் விசாரணை மார் 10, 2013 ஈழத்தை பூர்வீகமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்யராஜ் மகேந்திரன் என்பவரது உடல் நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள கிங்க்ஸ் பிரிட்ஜ் பூங்காவில் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்து ஏப்ரல் 21 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு மீட்க்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பொலிஸார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் சத்யராஜை யாரோ சிலர் நயாகரா நகரின் வெளியே கொலை செய்து விட்டு உடலை மட்டும் பூங்காவில் போட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஸ்காபுரோ மற்றும் மார்க்கம் பகுதி மக்களின் சாட்சியங்களுக்காக நயாகரா நகர காவல்துறை அதிகாரிகள் மீண்டும் இச்சம்பவம் குறித்து த…
-
- 0 replies
- 522 views
-
-
புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை, 09 மார்ச் 2013 18:26 -தேவ அச்சுதன் சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள ப…
-
- 1 reply
- 419 views
-
-
**ஆடம்பரக்கதவுகளோரம் & வெளிநாடு ** நாட்டில் எல்லோரும் இப்படி இல்லை. சில பேர் மட்டும் தான் . இது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை. வெளிநாடு வாழ்க் கையின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சி மட்டும் தான். http://www.youtube.com/watch?v=YRy0qHxgODM&list=UUcE9vV6mKEMwi-NVgOf-jrw&index=2
-
- 0 replies
- 647 views
-
-
இனப்படுகொலைக்குள்ளான தமிழினத்திற்கும் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பரிய பணிகளைச் செய்த தமிழீழத்தலைநகரான திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட வெண்புறா மூர்த்தி என அழைக்கப்பட்ட நமசியாயம் சத்தியமூர்த்தி கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் இயற்கை எய்தினார். 1980களின் ஆரம்பத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்கள் சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டடில் விடுதலைப்போராத்திற்காக பணியாற்றிய நாட்டுப்பற்றாளர் மூர்த்தி அவர்கள் தமிழீழத்தேசியத்தலைவரால் தமிழர் புனர்வாழ்வுகழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவராகவும் இணைந்து பணியாற்றினார். 1987ம் ஆண்டுப்பகுதியில்…
-
- 3 replies
- 510 views
-
-
ஆஸி. தலைநகர் கன்பராவில் தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி (13 – 03 – 13)! தமிழர் தாயகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு பறைசாற்றி, தமிழர் நீதிக்கான எழுச்சிக்குரல்கள் மேலெழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசின் மனிதவுரிமைகள் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துகின்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கும் தமிழர் நீதிக்கான குரல்கள் ஒலிக்கிகன்றன.இனப்படுகொலையின் சாட்சியங்களை பிரதிபலிக்கும் சனல் 4 இன் ”போர் தவிர்ப்பு வலயம்” என்ற காணொலியும் எதிர்வரும் நாட்களில் ”மறைக்கப்பட்ட சாட்சியங்களை” வெளிக்கொண்டுவரவிருக்கின்றது. தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் இன்னொரு பரிணாமத…
-
- 0 replies
- 582 views
-
-
படகில் அவுஸ்திரேலியா செல்வோருக்கான பகிரங்க அறிவித்தல் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள் தொடர்வதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையிலிருந்து தமது நாட்டிற்குள் படகுகள் மூலம் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்தல்களை விடுத்துள்ளது. தமது நாட்டில் தொழில் வாய்ப்புகள் இல்லை, அநேகமாக மீண்டும் இ…
-
- 1 reply
- 663 views
-
-
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை 7.03.2013 லுட்சேர்ன் தமிழ் மன்றத்தில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். 07.03.2013 வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்இ செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன்இ பா.அரியநேந்திரன்இ மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தமிழ் உறவுகள…
-
- 0 replies
- 377 views
-
-
-
- 0 replies
- 568 views
-
-
கடந்த இரண்டு வார காலமாகவே ரொறொன்ரோ மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களையும் , திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் பார்த்தால் முழு நீள ஹாலிவுட் படமே எடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு மோசமான வன்முறைப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது ரொறொன்ரோ மாநகரம். எப்படியாவது இது போன்ற துப்பாக்கி கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் கடந்த சில நாட்களாகவே ரொறொன்ரோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்ளான இடங்கள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே இகுருவியில் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். தொடர்பான செய்தி ஸ்காப…
-
- 0 replies
- 432 views
-
-
02.03.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி ஒஸ்ரியா நாட்டை கடந்து இத்தாலி நாட்டை வந்தடைந்ததும், இத்தாலி நாட்டில் தமிழ் மக்கள் குறைந்த தொகையில் வாழ்ந்த பொழுதும் பல தமிழ் இளையோர்கள் உற்சாகத்துடன் தமிழ்வானை வரவேற்றார்கள். தமிழ் இளையோர்கள் இத்தாலி மொழியிலான துண்டுப்பிரசுரங்களை இத்தாலி வாழ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் வழங்கி தமிழினவழிப்பை தெளிவுபடுத்தினார்கள். இத்தாலிய மக்களும் வேற்றின மக்களும் ஆர்வத்துடன் தமிழினவழிப்பை கேட்டறிந்தார்கள். "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி தரித்து நின்ற இடத்திற்கு வந்த இத்தாலிய ஊடகங்கள் தமிழினவழிப்பை கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார்கள். மேலும் இத்தாலிய காவல்துறை உயரதிகாரிகளும் தமிழினவழி…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை: ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த …
-
- 3 replies
- 1.2k views
-
-
எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது. இன்னும் வேறும் இருக்கலாம். இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான். எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில் என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும் அதுவே பழகிவிட்டது. திருமணமா…
-
- 147 replies
- 25.9k views
- 1 follower
-
-
பிரிட்டிஷ் எலிசெபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கனடா முழுவதிலும் வழங்கப்பட்டு வரும் பாராட்டுப் பதக்கங்களை நமது தமிழர் சமூகத்தின் சேவையாளர்கள் பலர் தொடர்ச்சியாக பெற்றுவருகின்றார்கள். இந்த வாரம் நமக்கு கிpடைத்த செய்திகளின்படி நான்கு சேவையாளர்கள் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் கலாபம் தொலைக்காட்சி நிறுவன அதிபரும் முதுதமிழர் நலன்களில் அக்கறை கொண்டவருமான திரு ஸ்ரீனிவாசன் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோ டானியல் அவர்களால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அடுத்த சேவையாளர் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரி முன்னாள் அதிபரும் கனடா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவருமான திரு சின்னையா சிவனேசன் மற்றும் ஸ்காபுறோ தமிழ் மு…
-
- 0 replies
- 416 views
-
-
சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள் நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்பட…
-
- 0 replies
- 516 views
-
-
அகதிகளை நாடு கடத்தும் திட்டம் தொடரும் - ஆஸி. குடிவரவு அமைச்சர் உறுதி அகதி அந்தஸ்த்து மறுக்கப்படும் இலங்கையர்களை நாடு கடத்தும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அகதிகள் பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில் இலங்கையில் அகதிகள் இரகசிய முகாமில் வைத்து பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுபோன்று 75 சம…
-
- 0 replies
- 417 views
-
-
-
- 0 replies
- 540 views
-
-
65 இலங்கைத் தமிழர்களை நாளைய தினம் நாடு கடத்தவுள்ளது பிரித்தானியா! [Wednesday, 2013-02-27 18:26:21] பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=76958&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 575 views
-
-
கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார். அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கி…
-
- 3 replies
- 626 views
-
-
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2009-ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போரில் 150, 000-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை …
-
- 3 replies
- 597 views
-
-
ஐ. நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் ஆவணத்தினை செயல்படுத்தினால் தமிழீழத்திற்கு நாம் அடிக்கும் கல்லறைப்பெட்டியாகவே இருக்கும். இதை இந்தியா ஆதரித்தால் என்ன ? ஆதரிக்காவிட்டால் என்ன?...தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிப்பது தமிழர்களின் கடமை. இனிமேலும் ஏமாற முடியாது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மாற்றப்படாவிட்டால் தமிழீழக் கனவுகள் முற்றிலுமாக சிதைக்கப்படும்... ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை முன்னிறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு, நாங்கள் எதிர் நிலையை எடுக்கிறோம். -- மே பதினேழு இயக்கம். http://geneva.usmission.gov/2012/03/22/sri-lank/ Noting with concern that the report does not adequately addr…
-
- 5 replies
- 916 views
-
-
கடந்த சில மாதங்களாக மொன்றியலில் 99.5 எப்.எம். சிறப்பலை வரிசையில் இயங்காமலிருந்த தமிழ் வானொலி அலைவரிசையில் தேமதுர வானொலி என்ற புதுப்பெயரில் பரீட்சார்த்த ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
-
- 0 replies
- 628 views
-
-
கனடா தமிழர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, February 21, 2013 கனடாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பணியாற்றிய ஜி.யு போப்பின் ஊடாகவே கனடாவுக்கும் தமிழுக்கும் முதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 1980-களின் பின் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களின் வருகையோடு தான் கனடா தமிழர்களின் முழுமையான வரலாறு தொடங்கியது. உலகம் முழுவதும் தமிழர்கள் விரவி வாழ்கின்ற போதும் மேற்கு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்வது கனடாவில் தான். அதுவும் டொராண்டோ பெரும்பாகப் பகுதிகளில் தான் மிக அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கனடா தமிழர்களைப் பொறுத்தவரை 85 % அதிகமானோர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட…
-
- 3 replies
- 5.1k views
-
-
நாளை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் மாபெரும் தமிழர் பணிப் படை பேரணி தமிழர் சமுதாயம், தமிழர் சக்தி ,மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் ? என 10 மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த பேரணிக்கு சிறப்பு வருகை தந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ் சீமான் முதல் முதலாக மலேசிய மண்ணுக்கு வருகை தருவது மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழ் மக்களின் உள்ளத்தில் பெரும் மகிழ்வு ஏற்பட்டுள்ளது நாளை நடைபெறும் இந்த எழுச்சி தமிழரின் புரட்சி தமிழீழ எழுச்சி !
-
- 15 replies
- 1.7k views
-