வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
வெள்ள அனர்த்த நிவாரண உதவி கோரல். வணக்கம் யாழ்க் கள உறவுகளே! வெள்ள அனர்த்த நிவாரண உதவிகளை சேகரிக்கும் செயற்பாடுகளை யேர்மனிய ஊடகம் மற்றும் நகரங்கள் ஈடுபட்டுள்ளன. யேர்மன் வாழ் தமிழ் உறவுகள் அறிந்திருப்பார்கள். இங்கே கீழே ரியர் மாவட்டத்தினுடைய அவைத்தலைவர் நிதி உதவிக்கான கணக்கொன்றை அறிவித்துள்ளார். விரும்பியவர்கள் உதவலாம். நாம் வந்தபோது எம்மை வரவேற்றவர்கள் துன்பத்தில், எமது இனம் சார்ந்து யேர்மனியிலே வாழும் தமிழ் உறவுகளில் விரும்பியவர்கள் உதவலாம். Kontoinhaber: Verbandsgemeinde Trier Land IBAN: DE13 5855 0130 0001 1273 80 BIC : TRISDE55XX நன்றி
-
- 0 replies
- 545 views
-
-
கனடாவில் ஆபத்தானவர்களாக அறிவிக்கப்பட்டு தேடப்படும் இரு தமிழர்கள் கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் தேடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் டொராண்டோ பொலிஸார், தேடப்படும் இருவர் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்களான 42 வயதுடைய மார்க்கம் பகுதியை சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், டொராண்டோவை சேர்ந்த கோகுலநாத…
-
- 0 replies
- 595 views
-
-
சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர் “ மதிப்பளிப்பு! AdminJuly 16, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக, பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில், தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலங்களில் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ததுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் இரகசிய மற்றும் மருத்துவத் தேவைக்கான கடற்போக்குவரத்து உதவிகளையும் வழங்கிப் பெரும்பங்காற்…
-
- 0 replies
- 433 views
-
-
லண்டனில் costco நிறுவனத்தில் கடைக்கு பொருட்கள் வாங்கிய தமிழர், காரில் வைத்துவிட்டு, மறந்துவிட்ட இன்னுமொரு பொருள் வாங்க போன போது, காரை உடைத்து கொள்ளை அடித்துள்ளார்கள். costco நிறுவனம் போலீசை அழைத்து திருடர்களின் கார் இலக்கத்தினை எடுத்துள்ளார்கள். தமது கார்பார்க்கில் நடந்ததால், அந்த பொருட்களை, bad publicity கிடைத்தால், ஆட்கள் வர பயப்படுவார்கள் என்பதால், costco நிறுவனம், மீள கொடுத்துள்ளார்கள். எந்த சூப்பர் மார்க்கெட் ஆனாலும், காரில் பெறுமதியான பொருளை வைத்தால், காரை விட்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளது. விஸ்கி, வைன், சிகரெட் போன்ற பொருட்களை திருட என்று ஒரு கூட்டமே அலைமோதுது. கடைகளுக்கு பொருள் வாங்குவதனால், குறைந்தது, இன்னோருவருடன் செல்லுங்கள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். 11ஆம் வகுப்பு படித்து வரும் திவ்வியேஷ், யோகாவில் டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உக்கிரேன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து சாதனை படைத்திருந்த நிலையில், அவருடையை சாதனையை திவ்வியேஷ் முறியடித்துள்ளார். https://www.ilakku.org/eelamtamilboy-worldrecord-tamilnadu-refugee-camp/
-
- 5 replies
- 874 views
-
-
பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் தரமிக்க படமாக தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ள இந்த திரைப் படத்தை உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுடன், அதனை மிகப் பெரும் பொருளாதார வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதுவே கலைஞர்களையும், படைப்பாளிகளையும் எமது வரலாற்றின் உண்மையான படைப்புக்களை நோக்கி நகர்த்தும் என்பதுடன், பொய்யான வரலாறுகளை தாங்கி வெளிவரும் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராகத் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் தேர்வு ஜனநாயகச் செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது. கடந்த (ஜூன்) 19ம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை அமர்வின் போது, பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாகத் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு செயற்பாட்டளராக இணைத்துக் கொண்டவர். பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளதோடு, நாடு…
-
- 0 replies
- 959 views
-
-
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தவர்கள் கவனத்துக்கு பிரெக்ஸிட் பின்னான, வதிவிட விண்ணப்பத்துக்கு, இம்மாதம் 30ம் திகதியே கடைசி திகதி ஆகும். நீங்கள், சுவிஸ் அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இங்கே வந்து தங்கி இருந்தால், கட்டாயம் விண்ணப்பிக்கவும். ஐந்து வருடங்கள் இங்கே தங்கி இருந்ததை உறுதிப்படுத்தினால், நிரந்தர வதிவுரிமை கிடைக்கலாம். நான் இங்கே நீண்ட நாட்களாக இருக்கிறேன், கடை வைத்து இருக்கிறேன், வியாபாரம் செய்கிறேன், வரி கட்டுகிறேன், பிள்ளையள் இங்க படிக்கினம். எமக்கு ஆட்டோமேட்டிக்காக கிடைக்கும் என்று பலர் இருக்கிறார்கள். நீங்கள் விண்ணப்பிக்காமல் கிடைக்காது என்று அறிவிக்கப்படுள்ளது. உங்களுக்கு பின்னால் வந்து தோலை தட்டி, இந்தாருங…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை 29 Views இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாகக் கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அல்லது அடைக்கலம் தேடியவர்கள் என்று கருதப்பட்டு, நடத்தப்படுகின்றார்கள். இந்தியா ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையகத்தில் கையெழுத்து இடாத நாடாக இருக்கிறது. அதனால் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான முகாம்களில் பணியாற்ற முடியாது. இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள், ஈழ அகதிகள், பர்மிய, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து ஏத…
-
- 0 replies
- 425 views
-
-
நாடு கடத்தலுக்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம் – Bremen மனித உரிமைகள் அமைப்பு முன்னெடுப்பு June 18, 2021 Imrv – மனித உரிமைகள் அமைப்பு – Bremen மற்றும் Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் ஆகியன இணைந்து, 77975 Ringsheim (Bahnhof ) தொடருந்து நிலையம் முன்பாக, இன்று 18.06.2021 காலை 11.30 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளன. ஜேர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நாடு கடத்தல் தொடர்பான முடிவுகளை இன்று பரிசீலிக்க உள்ள நிலையில் இப் போராட்டம் நடைபெறுகிறது. தயவுசெய்து முடிந்தவரையில் உறவுகள் கலந்துகொள்ளவும். கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை மனித உரிமைகள் நிலமை தொடர்பாக காத்திரமான ஓர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்…
-
- 0 replies
- 570 views
-
-
அறம் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனது வீட்டுக்கு அருகில் தாதியாக பணி புரியும் நோர்வீயப் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் நோர்வேயில் உள்ள முக்கியமான பெரிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் பிரிவில் வேலை செய்கிறாள். மிகவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட அழகான இதயம் கொண்டதொரு பெண்மணி இவள். இவள் காலையில் வேலைக்கு போகும் போதெல்லாம் வழியில் எந்த மனிதரைக் கண்டாலும் காலை வணக்கம் சொல்லி சிறு நிமிடம் அன்பாக உரையாடி செல்வார்.வெள்ளை கறுப்பு என்று எந்த இனவாதம் இல்லாததொரு அன்பான மனித நேயம் கொண்டவர். தனது வளர்ப்பு நாயுடனும் என் நேரமும் போகும் போதும் அந்த நாயோடு அவர் உரையாடிக் கொண்டு போவதை பார்க்கும் போதெல்லாம் இவர் ம…
-
- 0 replies
- 687 views
-
-
பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்! AdminJune 15, 2021 பிரான்சில் ஜுன் 20ம் திகதி முதற்சுற்றும் 27ம் திகதி இரண்டாம் சுற்றுமாக மாவட்ட, மாகாணத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில் தமிழீழத்தின் பிள்ளைகள் அடுத்தகட்ட அரசியற் பாய்ச்சலிற்குத் தயாராகி உள்ளனர். நகரசபைகளிற்கான ஆலோசனை உறுப்பினர்களில் இருந்து மாவட்ட ரீதியில், பல நகரங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட சபை உறுப்பினர்களாகவும், கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் களமிறங்கி உள்ளனர். முக்கியமாக வல்-துவாசிலும் செய்ன் சன்-துனியிலும் தமிழீழத்தின் இளவல்கள் களமிறங்கி உள்ளனர். இல்-து-பிரான்சிற்காக, வல்-துவாசில் வில்லியே-லு-பெல் மற்றும் ஆர்னோவில் நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை இ…
-
- 109 replies
- 8.6k views
-
-
புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் தமிழ்நாட்டிற்கு கொரோனா நிதியுதவி 267 Views தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூபாய் ஆறு இலட்சம் (ரூ.6,00,000/-) நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த உதவியை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிஞர் கவிபாஸ்கர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நேரில் வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா பெருந் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ‘தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு’ ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்…
-
- 1 reply
- 558 views
-
-
பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்துக் கொடுக்க அவுஸ் அரசு இணக்கம் பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மீளவும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நிலைவரை சென்று, பின்னர் தடைமுகாமில் அடைக்கப்பட்டு வாழ்ந்துவந்த ஈழத் தமிழ் அகதிகளின் குடும்பத்திற்கு அவுஸ்த்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையினை வழங்கிட அவுஸ்த்திரேலிய அரசு இணங்கியிருப்பதாக ஆஸியின் பிரபல செய்திச் சேவையான ஏ பி ஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் கீழே, "கிறிஸ்த்துமஸ் தீவுகளில் பல்லாண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் குடும்பம் அவுஸ்த்திரேலியாவில் சுதந்திரமாக வாழும் அந்த…
-
- 7 replies
- 831 views
-
-
தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் -நிக்கோலாய் விலும்சன் M.P 9 Views நடந்த முடிந்த(10.06.2021) ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியப் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன், தமிழ் மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சனின் முழு உரையின் காணொளி வடிவம், https://www.facebook.com/watch/?v=473723187029714 https://www.ilakku.org/?p=52227
-
- 0 replies
- 610 views
-
-
கனடா நிராகரிப்பு – புதிய தூதுவர் நியமனம் June 13, 2021 கனடாவுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் வான்படைத் தளபதி சுமங்களா டயஸ் நியமிக்கப்பட்டபோதும், அதனை கனேடிய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு தற்போது புதிய தூதுவரை நியமித்துள்ளது. கனடாவின் முடிவை மாற்றுவதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயன்தராததால் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றிய ஹர்சா நவரத்தினாவை கனடாவுக்கான இலங்கை தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது https://www.ilakku.org/?p=52197
-
- 0 replies
- 699 views
-
-
-
ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல் திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம். இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு. ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது …
-
- 21 replies
- 2.3k views
-
-
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால் பிரதான நிலப்பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அந்த சிறுமி பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளன என்று அகதி குடும்பத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 10 நாட்களாக நோய்வாய்பட்ட சிறுமிக்கு உரிய நேரத்தில் போதிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்…
-
- 5 replies
- 911 views
-
-
அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட…
-
- 2 replies
- 494 views
-
-
கடந்த மார்ச் இரண்டாம் திகதி, லொக்டவுன் காலத்தில், ஒரு நண்பி வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பில், ஒரு ராஜதந்திரிகள் பாதுகாப்புடன் தொடர்பான 48 வயது போலீஸ்காரர் கைதாகி இருந்தார். பிரித்தானிய சட்டப்படி, இந்த பெண் எவ்வாறு இறந்தார் என்பதை சொல்லமாட்டார்கள். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் போதே தெரிய வரும் என்றும் இதுகுறித்த எனது பதிவில் சொல்லி இருந்தேன். இன்று, லண்டன் ஓல்ட் பெயிலி எனும் பழம் பெரும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தவாறே, அந்த பெண்ணை, கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார் அந்த கிராதகர். எனவே, வழக்கு இழுபடாமல், நேரடியாக தண்டனையினை முடிவு செய்யும…
-
- 1 reply
- 961 views
- 1 follower
-
-
டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு” AdminJune 4, 2021 டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய (Constitution Day) நாளை (ஜூன் 5ஆம் திகதி) கொப்பனேஹனில் (Copenhagen) நடைபெறவுள்ளன. சில தசாப்தங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதிகள் தொடர்புபட்ட ஒரு முக்கிய வழக்கு விவகாரம் பவுல் ஸ்லூட்டரின் பிரதமர் பதவியையும் அரசியல் எதிர்காலத்தையும் பறித்தது. மறைந்த தங்கள் தலைவரை நினைவு கூருகின்ற டெனிஷ் மக்கள் அந்தத் “தமிழ் வழக்கு” வரலாற்றையும் மீட்டுப் பார்க்கின்றனர். 1980 களில் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய ஈழத்தம…
-
- 0 replies
- 849 views
-
-
இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதிமன்றம் 54 Views இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செ…
-
- 0 replies
- 590 views
-
-
யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம் 71 Views யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள். மே 30, 2021இல் திறக்கப்படவுள்ள இந்த மெய்நிகர் நூலகத்தை இணையவழியாக உலகத் தமிழர்கள் பார்ப்பதுடன், இளையோரின் இந்த முயற்சியை மேம்படுத்த, அடுத்த சந்ததிக்கு இதை எடுத்துச் செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர். …
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தல் 17 Views இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைத் தடைகளை விதிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற தமிழினப்படுகொலை குறித்து பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, முள்ளிவாய்க்கல் நினைவு நாளில், இலங்கை மோதலின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் நினைவில் கூருகிறோம். தொழிலாளர் கட்சி தமிழ் சமூகத்துடன் நி…
-
- 0 replies
- 695 views
-