வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
கனேடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 15ஆம் திகதி ஸ்காபரரோவில் அமைந்துள்ள குளோபல் கிங்டம் அரங்கில் நடைபெற்ற ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்லின மக்களாலும் தேசிய ஊடகங்களாலும் ஆய்வாளராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாக இது அமைந்தது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்தி அதில் பெருவெற்றியும் கண்டுள்ளது. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். ஏனைய சமூகங்களுக்கு முன்னோடியாகக் கனேடியத் தமிழர் விளங்குவதுடன் கனேடிய அரசியலில் அவர்களின் முக்கியத்துவமும் பங்களிப்பும் இந்த நிகழ்வால் வெளிப்படையாகியுள்…
-
- 0 replies
- 549 views
-
-
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகும் என்று நினைக்குமாம் அதுபோல்தான் இலங்கை இனவாத சிங்கள அரசும். எந்தச் சாட்சியமும் இல்லாமல் இனப்படுகொலை செய்ததாக நினைத்திருந்தது. ஐ.நா சபையும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. தர்மத்தை சூது கௌவ்வும். தர்மம் மறுபடி அதனை வெல்லும். இப்போது இனப்படுகொலைக்கான சாட்சியங்களை ஐ.நா.சபை தேட முனைகிறது. இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்களாகிய நாம் முற்றாகப் பயன்படுத்த அனைவரும் தங்களால் இயன்ற சாட்சியங்களை ஐ.நா சபை மனித உரிமைக் குழுவுக்கு சமர்ப்பிக்க ஏன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவறாமல் இப்பணியினை உங்களால் முடிந்தளவு செய்து இறந்தவர்களின் ஆன்மாவை அமைதியடையச் செய்யுங்கள்.
-
- 0 replies
- 679 views
-
-
அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற சமூகத் தலைவர் ஒருவர் தீவிபத்தில் பலியாகியுள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல சமய, கலாசார, கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவரும், பிரதேசவாசிகளின் நன்மதிப்பை வென்றவருமான எஸ்.எம்.பரமநாதன் வெள்ளிக்கிழமை மாலை தமது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். 73 வயதான பரமநாதனின் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேறியதை அவதானித்த அயலவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் பூஜையறையில் சிக்கியிருந்த பரமநாதனை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். தாம் தீச்சுவாலைகளை அணைத்து பரமநாதனை வெளியே கொண்டு வந்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லையென மவுன்…
-
- 14 replies
- 906 views
-
-
கனேடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளர்களிடையேயான விவாதம் சனிக்கிழமை 12 ஆம் திகதி ஸ்காபரோவில் இடம்பெறவுள்ளது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் ஸ்ரின்ஸ் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் திரு.…
-
- 0 replies
- 566 views
-
-
ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க ஒன்று சேருமாறு பிரித்தானி வாழ் ஈழத்தமிழர்களுகு அழைப்பு விடுக்கின்றனர் புதுச்சேரியில் வசிக்கும் மாணவிகள் தேன்மொழி மற்றும் தமிழ்நிலா ஆகியோர்.
-
- 0 replies
- 591 views
-
-
சுவிட்சலாந்தில் வீரமக்கள் தினத்தில் புலிகளின் தலைவர் தொடர்பில் சித்தாத்தன் கருத்துத் தெரிவித்திருந்தார் இதற்கு முக நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளன அவற்றின் கருத்துக்கள் உரையின் முழு வடிவம் தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடா பிராம்டனில் தடை தகர்த்து பிரமாண்டமாக அமைகிறது ஈழம் சாவடி: - கனடிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து [Friday 2014-07-11 09:00] கனடாவில் சிங்களத்தின் கடும் எதிர்ப்பையும் முறியடித்து இரண்டாவது தொடர் வருடமாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமான பிராம்டன் பல்கலாச்சார விழாவில் அமைகிறது ஈழம் சாவடி. கனடாவில் ஒன்ட்டாரியோ மாகாணத்தில் பிராம்டன் மாநகரில் வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்(ஊயசயடிசயஅ ) எனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் ஈழ மக்களும் இரண்டாம் வருடமாக இந்த வருடமும் தமது கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு விழாவினை வெகு விமர்சையாக நடத்துகின்றனர். கனடாவின் மூன்று முக்கிய கட்சிகளில் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்த…
-
- 0 replies
- 782 views
-
-
விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. எப்போதாவது நண்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
இன்று மனித நேய செயல்பாட்டாளர்களின் இறுதி விசாரணை .............பார்வையிடுவதற்காக .நானும் உயர் நீதி மன்றம் சென்றிருந்தேன் ....இன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி வார்த்தையை சொல்லவேண்டும் .இம்மாதம் 18 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் இதுவே உயர் நீதி மன்றத்தின் திட்டம் ............. ஆனால் இன்றைய வழக்கில் எல்லாம் தலைகிழாக மாறியது..........எமது மனித நேய செயல்பாட்டாளர்களின் வழக்கறிஞ்சர்கள் மிகவும் பிரமாதமாய் வாதாடி எதிர் தரப்பு வாதிகளின் பல பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து விட்டார்கள் .....அதன்பின் பிரதான நீதிபதி எழுந்து இப்போது தீர்ப்பு வழங்க முடியாது ..செப்டம்பர் ,ஒக்டோபரில்தான் தீர்ப்பு வழங்க லாம் என்றும் ,குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதி வார்த்தை கூட இன…
-
- 12 replies
- 1.3k views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜா கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும…
-
- 4 replies
- 1.5k views
-
-
எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு சந்திப்பு நேர்காணல்: காண்டீபன் துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். கணிணித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலே…
-
- 1 reply
- 660 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதி ஒருவர் கனடாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இறந்து உள்ளார். சதாயினி விஜயகுமார் – வயது 17 என்பவரே மார்க்ஹம் நகரத்தில் இருந்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது எதிர்பார்த்து இராத விதமாக இறக்க நேர்ந்தது. காட்டில் இவர்கள் இறைச்சியை நெருப்பில் வாட்டி உண்டனர். இவரே இறைச்சியை நெருப்பில் வாட்டி, தயார் செய்து, ஏனையோருக்கு உண்ண கொடுத்து உள்ளார். இதற்கு பிற்பாடு இவர் உண்ண தொடங்கினார். இறைச்சியோடு இருந்த எலும்பு இவரது மூச்சுக் குழாயில் சிக்கியது. கூட சென்று இருந்தவர்கள் இவரை காப்பாற்ற பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர். இவர்கள் வந்திருந்த இடம் காட்டுப் பகுதி என்பதால…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: 02 ஜூலை 2014 லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14) அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து…
-
- 3 replies
- 988 views
-
-
OPPEN LATTER TO S.BALASUBRAMANIYA ATHITHAN அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் பாலசுபிரமணியன் ஆதித்தன் அவர்கட்க்கு தினத்தந்தி நிறுவனம். ‘மாலை மலர் 27-6-2014 இதழ் பக்கம் 5ல் ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி உதை. சிங்கள படத்தை ஆதரித்ததால் தமிழ் அமைப்பினர் ஆவேசம்.’ என என்னை அவமானப்படுத்தும் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நிகழ்வில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. என்னை யாரும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை. இயக்குனர் பிரசன்ன விதானகே வன்னியில் ஈழ போராளிகளின் அபிமானத்தைப் பெற்றிருந்தவர். அரசுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் எதிரானது என இலங்கையில் தடைசெய்ய பட்டிருந்த அவரது படம் சென்னையில் திரையிடப் பட்டது. போராட்டத்தின் ஆதரவாளரான இயக்குனரை எத…
-
- 16 replies
- 2k views
-
-
காதல் விவகாரம் - இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை! [Friday, 2014-06-27 09:01:09] இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! [Friday, 2014-06-20 21:22:05] 'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்... "பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள். காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழ…
-
- 0 replies
- 1k views
-
-
இங்கிலாந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட இரு வர்த்தகர்களுக்கும் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கீழ்பிரிவு லீக்ஒன்றின் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்தமை தொடர்பான இவ்வழக்கு பேர்மிங்ஹாம் நீதிமன்றத்தல் 4 வாரங்களாக நடைபெற்றது. மைக்கல் போட்டேங் (22) எனும் வீரரும் சான் சங்கரன் (34), கிருஷ்ணா கணேசன் (44) ஆகிய வர்த்தகர்களும் லஞ்சம் விவகாரத்தில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கரன், இலங்கையில் பிறந்த கிருஷ்ணா கணேசன் ஆகியோருக்கு தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இரண்டாம் பிரிவு லீக் போ…
-
- 0 replies
- 643 views
-
-
இலங்கை தமிழராக பிறந்த நாம் சிலர் இன்று அமெரிக்கர்களாக இருக்கிறோம். அமேரிக்கா எங்கள் நாடு. எங்கள் எதிர்காலம். எமது நலனும் வளமும் அமெரிக்க நலனிலும் வளத்திலும் தங்கி இருக்கின்றன. எங்கள் அமரிக்க நலனுக்கும் வளத்துக்கும் எந்த வகையிலும் உதவாத இலங்கை தமிழருக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? யாராவது விளக்கம் தருவீர்களா? நீங்கள் கேட்பது மனிதாபிமான உதவி என்றால் உங்களிடம் அந்த மனிதாபிமானம் இருப்பதாக தெரியவில்லையே? ஏனைய மக்களுக்கு உங்கள் மனிதாபிமானம் காட்டப்பட்டிருந்தால் நாங்களும் உங்களுக்கு மனிதாபிமான உதவி செய்யலாம். அப்படி நீங்கள் ஏனைய மக்களுக்கு மனிதாபிமானம் காட்டியிருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்?
-
- 3 replies
- 1.4k views
-
-
எனது தோட்டம் இத்தனை நாட்களாக வைத்துள்ளேன். எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. இப்ப ஒரு வாரமாக நரி என் ரோசாக் கண்டுகளின் வேர்களின் அடிப்பகுதியைத் தோண்டுகிறது. கடையில் நரிக்கு என்று கேட்டு வாங்கினால் விலை ஆறு பவுன்ஸ்சுகள். சரி நரி வராமல் விட்டால் சரி என்று வாங்கிவந்து போட்டால் அடுத்த நாளே போட்ட்ட இடத்திலும் கிண்டி வைத்திருக்கிறது. என்ன செய்யலாம் ???? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோவன்.
-
- 29 replies
- 4.7k views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல். செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த பிரேரணைகளை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், சிறிலங்கா அரசுக்கு துணையாக இருந்ததை நாம் அறிவோம். இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரி…
-
- 0 replies
- 524 views
-
-
ஏற்கனவே, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளமை இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் 'சால்மொலினா' என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.…
-
- 0 replies
- 754 views
-
-
பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர முதலுதவிச…
-
- 0 replies
- 857 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி த…
-
- 9 replies
- 1k views
-
-
சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக…
-
- 1 reply
- 753 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரின் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் முருகப் பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகம், நேற்று புதன்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் இரவு எழுந்தருளி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். tamilmirror
-
- 2 replies
- 700 views
-