Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜா கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும…

  2. எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு சந்திப்பு நேர்காணல்: காண்டீபன் துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். கணிணித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலே…

    • 1 reply
    • 660 views
  3. யாழ்ப்பாணத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதி ஒருவர் கனடாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இறந்து உள்ளார். சதாயினி விஜயகுமார் – வயது 17 என்பவரே மார்க்ஹம் நகரத்தில் இருந்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது எதிர்பார்த்து இராத விதமாக இறக்க நேர்ந்தது. காட்டில் இவர்கள் இறைச்சியை நெருப்பில் வாட்டி உண்டனர். இவரே இறைச்சியை நெருப்பில் வாட்டி, தயார் செய்து, ஏனையோருக்கு உண்ண கொடுத்து உள்ளார். இதற்கு பிற்பாடு இவர் உண்ண தொடங்கினார். இறைச்சியோடு இருந்த எலும்பு இவரது மூச்சுக் குழாயில் சிக்கியது. கூட சென்று இருந்தவர்கள் இவரை காப்பாற்ற பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர். இவர்கள் வந்திருந்த இடம் காட்டுப் பகுதி என்பதால…

    • 0 replies
    • 1.1k views
  4. லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: 02 ஜூலை 2014 லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14) அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து…

  5. OPPEN LATTER TO S.BALASUBRAMANIYA ATHITHAN அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் பாலசுபிரமணியன் ஆதித்தன் அவர்கட்க்கு தினத்தந்தி நிறுவனம். ‘மாலை மலர் 27-6-2014 இதழ் பக்கம் 5ல் ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி உதை. சிங்கள படத்தை ஆதரித்ததால் தமிழ் அமைப்பினர் ஆவேசம்.’ என என்னை அவமானப்படுத்தும் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நிகழ்வில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. என்னை யாரும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை. இயக்குனர் பிரசன்ன விதானகே வன்னியில் ஈழ போராளிகளின் அபிமானத்தைப் பெற்றிருந்தவர். அரசுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் எதிரானது என இலங்கையில் தடைசெய்ய பட்டிருந்த அவரது படம் சென்னையில் திரையிடப் பட்டது. போராட்டத்தின் ஆதரவாளரான இயக்குனரை எத…

  6. காதல் விவகாரம் - இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை! [Friday, 2014-06-27 09:01:09] இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் க…

  7. எனது தோட்டம் இத்தனை நாட்களாக வைத்துள்ளேன். எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. இப்ப ஒரு வாரமாக நரி என் ரோசாக் கண்டுகளின் வேர்களின் அடிப்பகுதியைத் தோண்டுகிறது. கடையில் நரிக்கு என்று கேட்டு வாங்கினால் விலை ஆறு பவுன்ஸ்சுகள். சரி நரி வராமல் விட்டால் சரி என்று வாங்கிவந்து போட்டால் அடுத்த நாளே போட்ட்ட இடத்திலும் கிண்டி வைத்திருக்கிறது. என்ன செய்யலாம் ???? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோவன்.

    • 29 replies
    • 4.7k views
  8. தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! [Friday, 2014-06-20 21:22:05] 'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்... "பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள். காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழ…

  9. இங்கிலாந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட இரு வர்த்தகர்களுக்கும் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கீழ்பிரிவு லீக்ஒன்றின் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்தமை தொடர்பான இவ்வழக்கு பேர்மிங்ஹாம் நீதிமன்றத்தல் 4 வாரங்களாக நடைபெற்றது. மைக்கல் போட்டேங் (22) எனும் வீரரும் சான் சங்கரன் (34), கிருஷ்ணா கணேசன் (44) ஆகிய வர்த்தகர்களும் லஞ்சம் விவகாரத்தில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கரன், இலங்கையில் பிறந்த கிருஷ்ணா கணேசன் ஆகியோருக்கு தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இரண்டாம் பிரிவு லீக் போ…

    • 0 replies
    • 642 views
  10. இலங்கை தமிழராக பிறந்த நாம் சிலர் இன்று அமெரிக்கர்களாக இருக்கிறோம். அமேரிக்கா எங்கள் நாடு. எங்கள் எதிர்காலம். எமது நலனும் வளமும் அமெரிக்க நலனிலும் வளத்திலும் தங்கி இருக்கின்றன. எங்கள் அமரிக்க நலனுக்கும் வளத்துக்கும் எந்த வகையிலும் உதவாத இலங்கை தமிழருக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? யாராவது விளக்கம் தருவீர்களா? நீங்கள் கேட்பது மனிதாபிமான உதவி என்றால் உங்களிடம் அந்த மனிதாபிமானம் இருப்பதாக தெரியவில்லையே? ஏனைய மக்களுக்கு உங்கள் மனிதாபிமானம் காட்டப்பட்டிருந்தால் நாங்களும் உங்களுக்கு மனிதாபிமான உதவி செய்யலாம். அப்படி நீங்கள் ஏனைய மக்களுக்கு மனிதாபிமானம் காட்டியிருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்?

  11. புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல். செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த பிரேரணைகளை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், சிறிலங்கா அரசுக்கு துணையாக இருந்ததை நாம் அறிவோம். இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரி…

    • 0 replies
    • 523 views
  12. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி த…

  13. ஏற்கனவே, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளமை இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் 'சால்மொலினா' என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.…

    • 0 replies
    • 753 views
  14. பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர முதலுதவிச…

    • 0 replies
    • 856 views
  15. ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014 ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள். http://www.elections.on.ca/en-ca தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?! இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) இக்கட்சியின…

  16. அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரின் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் முருகப் பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகம், நேற்று புதன்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் இரவு எழுந்தருளி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். tamilmirror

  17. சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக…

  18. ஊர்வாதமும் தேசியவாதமும் ‘புலம்பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்’ என்பது பற்றிய எனது நீண்டநாள் எண்ணங்களை எம்மவரோடு பகிர விரும்புகிறேன். ஊர்ச்சங்கங்கள் ஊர்ப்பற்று என்பன பற்றி எமது தற்காலச் சூழலில் மிகவும் கவனமாகவே கதையாடல் செய்யவேண்டும். அது தேசியவாதத்தைக் குறுகத் தறிக்கும் கோடரி என்பர் சிலர். வள்ளுவம் சொல்லும் ‘யாதானும் நாடாமால் ஊர் ஆமால்’ என்ற தொடரினதும்; (குறள்- 397), சங்க கால ஒளவையின் பின்வரும் பாடல் வரிகளும் குறுந்தேசியக் குரல்கள் அல்ல. மாறாக இன்று மேற்குலக அரசியல் மேதைகள் சொல்லும் தேசங் கடந்த அடையாளம்(transnational identity) பற்றிப் பேசுபவை: நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழ…

  19. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் Facebook நிலைச் செய்தி இது. (திருமுருகன் காந்தி அவர்களின் நிலைச்செய்திகள் அவரது முழு சம்மதத்துடனே யாழில் பிரசுரிக்கப்படுகின்றது) ------------------ இன்று மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறி...ந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம். உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத…

    • 4 replies
    • 710 views
  20. கவிஞர் கி.பி. அரவிந்தன், மொழிபெயர்ப்பாளர் அப்பாசாமி முருகையன் ஈழத் தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலான ‘Le messager de l'hiver’, [‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்'] கடந்த ஜூன் மூன்றாம் தேதி அன்று, பாரீஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றரங்கில் எளிமையுடன் சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் கி.பி. அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை ‘றிவநெவ்’(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது க…

  21. நாடு கடத்தக்கூடும் என்ற அச்சத்திலேயே லியோ சிமான்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார் - 05 ஜூன் 2014 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்- நாடு கடத்தக் கூடும் என்ற அச்சத்திலேயெ லியோ சீமான்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த லியோன் சீமான்பிள்ளை தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தீக்குளித்தார். கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீமான்பிள்ளை கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29 வயதான சீமான்பிள்ளை கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடும் மன உல…

    • 2 replies
    • 892 views
  22. எனக்கெண்டு இப்பிடியானதேல்லாம் வருகுது நான் என்ன செய்ய ???? என்ர வீட்டில பன்னிரண்டு வருடப் பழைய தொலைகாட்சிப் பெட்டி தான் இன்றுவரைக்கும் இருக்கு. என்னவோ தெரியேல்ல எங்கட வீட்டை வாற எலெக்றிக் பொருட்கள் ஒண்டுமே லேசில பழுதாகாத வரத்தை கடவுள் தந்திட்டார். பெரிய பெட்டிதான் எண்டாலும் இந்தக் காலத்தில வயதுபோன கிழடுகள் கூட அதை வச்சிருக்காதுகள். என் கணவர் நப்பி எண்டு சொல்ல முடியாது. ஆனால் ஒன்று பழுதாகாமல் பாக்கக் கூடிய நிலையில் இருக்கேக்கை ஏன் புதுசு என்பது அவரின் கேள்வி. நானும் அடிக்கடி டிவி பாக்கிறது இல்லை. கடைசி மகளும் தகப்பனும் தான் மாறிமாறிப் பாக்கிறது. மாதத்தில ஒன்று இரண்டு படம் நான் பாக்கிறதோடை சரி. ஆனால் அந்த நேரங்களில எல்லாம் எனக்கு என் தங்கை வீட்டில் இருக்கும் பெரிய …

  23. வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர் ஆழ்வாப்பிள்ளை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது …

  24. தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.