நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
தெற்கிலிருந்து ஒரு சூரியன்! கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’ கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உ…
-
- 0 replies
- 752 views
-
-
Salam Alaik Book Launch Event | SHOBSAKTHI SPEECH | ஷோபாசக்தி பேச்சு
-
- 0 replies
- 708 views
-
-
பிரபாகரன் இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை! டி.அருள் எழிலன் ஓவியம் : ஸ்யாம் ''இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் …
-
- 34 replies
- 7.3k views
-
-
இன்னும் சொல்லாதவை - தெணியான் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். இன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளன…
-
- 0 replies
- 694 views
-
-
(தமிழ் பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் 2014 சரவ்தேச மகளிர்தின வெளியீடு) 2009 மே மாதம் முதல் பகுதியில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட அறிக்கையுடன் முடிவிற்கு வந்தது ஈழத்தமிழரின் முப்பது (30)வருடகால விடுதலைப் போராட்டம். யுத்தம் முடிவிற்கு வந்ததா? நாட்டிற்குப் போய் 4 நாள் நின்றுவிட்டு றாலும் கணவாயும் சாப்பிட்டு விட்டு கருப்பணியும் கள்ளும் குடித்துவிட்டு 'அங்கு இப்ப பறவாயில்லை' என்று கூறி ஈழமண்ணிற்கு பிரயாணிகளாய் போய் திரும்பிய சிலரின் யாழை மையமாக வைத்து கூறப்படும் இக்கருத்துக்கு அப்பால்; பூதாகரமாக வளர்ந்;து நிற்கும் யுத்தத்தின் நிழல்கள் யுத்தத்தின் எச்சங்கள் கூறும் உண்மைகள் மனிதர் எல்லோரையும் உலுக்கிப்போட வல்லவை என்பதை உரத்துக்கூறும் குமுறல்கோ…
-
- 2 replies
- 827 views
-
-
நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்த துடியான இளம்பெண் எனது ஹாங்காங் அடையாள அட்டையை வாங்கிப் பரிசோதித்தார். “இந்தப் பகுதிக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா? முகவரியையும் மாற்றிவிடலாமே” என்றார். நான் சொல்லச்சொல்ல முகவரியைக் கணினியில் உள்ளிட்டார். தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் ம…
-
- 1 reply
- 528 views
-
-
கலகம் விளைத்து வந்த நாவல்: நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி… ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது. ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முட…
-
- 0 replies
- 464 views
-
-
நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான். 'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey) ஆல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1989ல் வெளியானதிலிருந்து இற்றை வரை 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (துரதிஷ்டவசமாக, தமிழில் இன்…
-
- 12 replies
- 14.5k views
-
-
ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம் ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீத…
-
- 0 replies
- 633 views
-
-
-
- 1 reply
- 606 views
-
-
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக என்னை அரித்துக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் எழுதுவதும், லைக் வாங்குவதும், பலர் நம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமும் தீவிர எழுத்துக்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் ஃபேஸ்ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
புகைப்பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், அது தொடர்பான அனுபவங்களை முன்வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்களை ஆலன் கார், ஜாக்குலின் ரோஜர்ஸ் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். நேரடி அனுபவங்கள் என்பதால் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள் இவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அரிது. இந்நிலையில், ஷாஜஹான் எழுதியிருக்கும் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ புத்தகம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறத் துடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்துவந்த ஷாஜஹான் அதிலிருந்து விடுபட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் எழு…
-
- 0 replies
- 635 views
-
-
ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால் போய் அவரோடு கதைத்திருக்கலாம் எனச் சொன்னேன். ஆகக்குறைந்தது எப்போதும் படை, பரிவட்டம், பல்லக்குச் சூழச்செல்கின்றவர் என எண்ணியிருந்த எனக்கு இப்படித் தனித்துப்போனதை ஒரு படமாவது எடுத்திருக்கலாமெனத் தோன்றியது. பிறகு சாரு பற்றியே நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் அருகில் நிறுத்தியிருந்த காருக்குள் ஒருவர் ஏறியது…
-
- 0 replies
- 638 views
-
-
ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம் நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. 'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள…
-
- 5 replies
- 1.1k views
-
-
நந்தி கடல் பேசுகிறது நூல் அறிமுக விழா.
-
- 1 reply
- 1.2k views
-
-
வாசுதேவனின் கவிதைத் தொகுப்பு: தொலைவில் பாரிஸ் அகிலன் என்ற புனைபெயரில் சில காலம் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதியர் வாசுதேவன். வாசுதேவனின் கவிதை உலகம் தத்துவ நதியில் கால் நனைத்துச் செல்வது. இன்றைய தன்னுணர்வுக் கவிதைகளின் கழிவிரக்கம்இ பச்சாதாபம்இ முரண்தொடைத் துயரங்கள் போன்ற சமாச்சாரங்கள் இவரது கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். உலக இலக்கியப் பரப்பில் சில தேர்தெடுத்த படைப்புக்களின் உட்பொதிந்த சுருக்கம்இ காட்சிகள் மற்றும் அதில் வருகின்ற பாத்திரங்களினது பெயர்கள் போன்றவை பொருத்தமான தருணங்களில் தவிர்க்கமுடியாத கூறாகி வாசுதேவனின் கவிதைகளில் இடம்பிடிக்கின்றன. இத் தேர்வு வெறும் தற்செயலானதும் அல்ல. கவர்சிக்காக அணியப்பட்டவையுமல்ல. மாறாக இக் குறிப்பான்கள் வாசுத…
-
- 0 replies
- 1.9k views
-
-
வணக்கம் உறவுகளே . 'முகடு' தனது முதலாவது ஓலையை எடுத்து வைக்கிறது இலக்கிய வீட்டுக்கு அது 'முகடு' வரை நிறைந்து நிக்க உங்கள் ஆதரவு வேண்டி நிக்கிறோம் .. பாரீஸில் இருக்கும் உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்ப்பதில் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை மகிழ்ச்சி அடைகிறது ... அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . நன்றி 'முகடு' சஞ்சிகை குடும்பம் .
-
- 22 replies
- 3.6k views
-
-
மிலான் குந்தேராவின் 'அறியாமை' Ignorance by Milan Kundera மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட,அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இ…
-
- 0 replies
- 749 views
-
-
ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய " இலங்கை அரசியல் யாப்பு" (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. கிழக்கு லண்டன் - ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணி வரை இடம்பெற்றது. தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
அல்பேர் காமு: தமிழுலகில் புரிந்தும் புரியாமலும் இருக்கும் பிரான்ஸிய இலக்கிய ஆளுமை -தேவகாந்தன்- அண்மையில், மூன்றாவதாக இப்போது அமைந்துவரும் என் நூலக அடுக்கிலிருந்த அல்பேர் காமுவின் மரணத்தையொட்டி ழீன் போல் சார்த்தரும், செர்ஜி துப்ரோவ்ஸ்கியும் வெளியிட்ட பிரெஞ்சு மொழியிலான இரங்கல் செய்திகளின் ஆங்கிலம் வழியிலாக நண்பர் தேனுகா தமிழில் மொழிபெயர்த்து ‘அகரம்’ வெளியிட்டிருந்த ஒரு கையடக்கமான சிறுநூல் மறுபடியுமான எனது வாசிப்புக்குத் தட்டுப்பட்டது. வாசிப்பின் பின்னூட்டமாய் தொடர்ந்து விளைந்த யோசிப்புக்களின் காரணமாக, தமிழ்ப் பரப்பில் அல்பேர் காமு என்கிற பேராளுமைபற்றிய அறிகை பெரிதாக ஏற்படவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. ஓரளவு ஏற்பட்டிருந்தாலும், விமர்சகர்கள் படைப்பாளிகள் வாசகர்க…
-
- 0 replies
- 749 views
-
-
Date: 09/02/14 In: Books, News திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் கவிஞர் நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா , கவிஞர் மற்றும் அரசியில் ஆய்வாளர் நிலாந்தனின் தலைமையில் நடைபெற்றது. இலக்குவிய குவிய கீதம் அறிமுகத்தோடு, புத்தக வெளியீடு நடைபெற்றது. முதல் பிரதியினை நிலாந்தன் வழங்க மீராபாரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வரவேற்புரையை ஜே.வினோத் அவர்கள் வழங்கினார்கள். தலமையுரையினை வழங்கிய நிலாந்தன் அவர்கள், நெற்கொழுதாசனின் கவி ஆளுமைகள் பற்றியும், இலகுவான எழுத்துநடை பற்றியும் சிறப்பான பாராட்டினை வழங்கியிருந்தார். தொடர்ந்து வெளியீட்டுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார். “இளம் கவிஞர்கள் அதிகம் வாசிக்கவேண்ட…
-
- 31 replies
- 2.7k views
-
-
புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழ…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
கவிதைத் நூலைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை! ---------------------------------- உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை கருணாகரன் [size=4]நேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா விஷ்ணு இருந்தார். அப்படியே வலைஞர்மடம் கடற்கரைக்கும் போனோம். அந்தக் கடலின் வழியாகத்தான் விஷ்ணு தப்பிச் செல்ல முற்பட்டார். யுத்த்தின் இறுதி நாட்களில் தப்பிச் செல்வதைத் தவிர, வேறு வழியில்லாத ஒரு நிலையில், வேறு தெரிவுகளுக்கிடமில்லாத நிலையில், குடும்பத்தோடு விஷ்ணு தப்பிச் செல்ல முயன்றார். இப்பொழுதும் இந்தக் கடலின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர் பலர். ஆனால், இந்தத் தப்பிப் பிழைத்தல்களும் இவற்றி…
-
- 2 replies
- 790 views
-
-
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…. யாரும் பேசத் துணியாத விஷயத்தை முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன் என்றுதான் சொல்லவேண்டும். . தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய் இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அதில் எழுத்தாளர் மதிவண்ணன் அவர்களது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று. . ”ஒரு சின்ன நூல் வெளியீடு…. ஈரோடு வரமுடியுமா?” எனக் கேட்டதும் உடனே சரியென்று தலையாட்டினேன். . ஆனால் அச்சிறு நூலைப் பார்த்ததும் எனக்கு ஏனோ அடிவயிற்றைப் புரட்டியது. அதில் மதிவண்ணன் சாடோ சாடென்று சாடியிருந்த மனிதரோ தமிழகத்தின் ஆகப் பெரிய ஆளுமை. ஆய்வுத்தளத்தில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. . அவர்தான் : பேராசிரியர் நா. வானமாமலை. . அவரது…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
நூல்களின் வெளியீடு நிவேதா உதயராயனின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருக்கின்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இளையதம்பி தயானந்தா விமர்சகர்கள்: திரு. கந்தையா ராஜமனோகரன் திரு. பசில் அலி திரு.யமுனா ராஜேந்திரன் திருமதி. மாதவி சிவசீலன் திரு. தினேஷ் திரு. சாம் பிரதீபன் மரியநாயகம் திரு. முல்லை அமுதன் வெளியிட்டு வைப்பவர் : திரு பத்மநாப ஐயர் காலம் : 12 .07. 2014 – மாலை 5 மணி இடம் : 76 A238,Kingston Road, London, SW19 1LA South Wimbildon tube ஸ்டேஷன் அருகாமையில் அனைவரையும் அன்புடன் அழை…
-
- 59 replies
- 5.9k views
-