Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    கலாதி எஸ். றஞ்சகுமார் தீ (நாவல்) எஸ். பொன்னுத்துரை வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில். பக்கம்: 136 விலை: ரூ. 120 தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றும்’ என்று ரைக்கப்பட்ட பொதுப்புத்தியில் உழல்வதே சராசரித் தமிழ்மனம். ஒரு தளத்தில் மட்டிட்டு நோக்குகையில் இது மகா வாக்கியம் ஒன்றே. தீண்டும் இன்பத்தை இவ்வாறு அழகுறப் பிரசித்தப்படுத்தியவனும் இலேசுப்பட்டவனல்லன். தீண்டும் இன்பத்தைப் பற்றியதொரு விசாரமாக ‘தீ’ வெளியாகியபோது, கலையும் இலக்கியமும் தீண்டாமை, தீட்டு என்பன பற்றியதாக இருத்தலே சாலச் சிறந்ததும், காலப் பொருத்தமும் என்ற ஆக்ஞைகளுடனும் ஆய்க்கினைகளுடனும் ஈழத்து இலக்கியப் பரப்பு ‘கலாதி’யாக இயங்கிக் கொண்டிருந்தது. (கலாதி என்னும…

  2. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் புகழ்பெற்ற இரண்டு நூல்கள் தற்போது லண்டனில் பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம். 2009 ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான அமுதன் அடிகள் விருதை தஞ்சாவூரில் பெற்ற் கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற நாவலும், ஒருபேப்பரில் அவர் சுவைபட தொடராக எழுதிய "கடந்தது நடந்தது" கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த "நேற்றுப்போல இருக்கிறது" என்ற கட்டுரைத்தொகுதியுமே மேற்குறித்த நூல்களாகும். யாழ்களத்தில் இரண்டு நூல்களைப்பற்றிய கருத்துக்கள் நிறையவே பரிமாறப்பட்டது யாழ்கள் அங்கத்தவர்களுக்கு ஞாபகமிருக்கும். லண்டனில் East Ham பகுதியில் உள்ள பூபாலசிஙகம் புத்தகசாலயில் அவை கிடைக்கப்பெறும் என்று அறியத்தந்துள்ளார்கள். இங்க…

  3. இன்று பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன திருப்பூர் பனியன் கம்பெனிகள். இந்நிறுவனங்கள் இன்று பெருமளவில் உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வரலாற்றைப் பற்றி 'முகமற்றவர்களின் அரசியல்' என்ற புத்தகத்தில் கே.எம்.சரீப் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரச்சினையை அல்லது ஒரு புதிய செய்தியை முன்வைக்கிறது. கடற்கரையோர முஸ்லீம்கள் பற்றி 'நீண்ட கரையின் மிக நீண்ட கதை' என்ற கட்டுரையில் கடலோர முஸ்லிம் கிராமங்களைப் பற்றிய நாம் அறியாத பல செய்திகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமண சமயத்தை தழுவியவர்களாகவே இருந்தனர். தூய தமிழ் சொற்களான தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா …

    • 1 reply
    • 648 views
  4. தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள். கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான…

  5. தாய் மண் நினைவோடு வாழும் அன்புள்ள ஜோதிஜி. இது புத்தக விமர்சனம் கிடையாது. புத்தகம் பற்றியும் அதில் கூறப்பட்ட சம்பவங்கள் பற்றியும் ஒரு மனம் திறந்த மடல். இந்த புத்தகம் கொஞ்ச நாளைக்கு முன்னால் என் கண்ணில் பட்டது. இதைப் புரட்டி சாம்பிள் கூடப் பார்க்கவில்லை அப்போது. காரணம் ஒன்று தான். தலைப்பைப் பார்த்தால் இது ஒன்று தலைவர் பிரபாகரனைப் போற்றுவது போல் போற்றி அதே நேரம் அவரை ஒரு நாத்திகராகவும் முருகனை முப்ப…

  6. எனது முப்பது சிறுகதைகள் அடங்கிய *நிழற்குடை * சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கிறது. இந்த நூலை வெளியீடு செய்த தடாகம் பதிப்பகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி. 2009 தொடக்கம் 2016 காலப்பகுதியில் எழுதப்பட்ட போரின் கதைகள். ஒன்லைனில் புத்தகத்தை வாங்கலாம். கீழ் வரும் இணைப்பில் சென்று பாருங்கள் : https://www.panuval.com/nizharkudai-izhathu-sirukadhaikal-10020436 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு. இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு ந…

    • 3 replies
    • 644 views
  7. லண்டனில் ஆதி லட்சுமி சிவகுமாரின் நாவல் அறிமுகம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஞாயிறு நடக்கும் அறிமுக விழாவில் கலந்து கொள்ளலாம்.

  8. “ஒரு புத்தகமே போர்க்குற்ற வழக்கிற்கு வழிசெய்துவிடும் என எதிர்பார்ப்பது பிழை” - கார்டன் வெய்ஸ் தொகுப்பு: கானகன் தற்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் கார்டன் வெய்ஸ் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிரவாதம் மற்றும் மனிதநேயச் சட்டத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். இயற்கைப் பேரிடர்களுக்கும் போர்ச் சிக்கல்களுக்கும் உள்ளான போஸ்னியா, கொஸாவா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்ஃபூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காஸா, அஸே, ஹைட்டி போன்ற பல பகுதிகளில் பணியாற்றியவர். வானொலி மற்றும் அச்சு ஊடகங்களுக்குச் சுயேச்சையான செய்தியாளராகவும் இருந்தவர். ஸ்ரீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராக 2007 முதல் 2009வரை வெய்…

  9. ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால் போய் அவரோடு கதைத்திருக்கலாம் எனச் சொன்னேன். ஆகக்குறைந்தது எப்போதும் படை, பரிவட்டம், பல்லக்குச் சூழச்செல்கின்றவர் என எண்ணியிருந்த எனக்கு இப்படித் தனித்துப்போனதை ஒரு படமாவது எடுத்திருக்கலாமெனத் தோன்றியது. பிறகு சாரு பற்றியே நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் அருகில் நிறுத்தியிருந்த காருக்குள் ஒருவர் ஏறியது…

  10. Share0 ஈழத்தின் முதலாவது தமிழ் கவிதை இதழான தேன்மொழி இதழ் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் (15) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இந்த இதழ் வெளியீட்டு விழா அன்றைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. கவிஞல் சோ.பத்மநாதன் தலைமையில் இடம்பெறும் இந்த இதழ் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையை ந.பிரபாகர் நிகழ்த்த, தி.கோபிநாத்தால் நூலை அறிமுகம் செய்து வெளியிட்டு வைப்பார். அத்துடன் சிறப்பு கௌரவ பிரதியை வரதராசன் தேன்மொழி பெற, கருத்துரைகளை எழுத்தாளர் தி.செல்வமனோகரன் வழங்குவர். ஏற்புரையையும் நன்றியுரையையும் க.பரணீதரன் நிகழ்த்தவுள்ளார். https://newuthayan.com/தேன்மொழி-இதழ்-தொகு…

  11. புகைப்பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், அது தொடர்பான அனுபவங்களை முன்வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்களை ஆலன் கார், ஜாக்குலின் ரோஜர்ஸ் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். நேரடி அனுபவங்கள் என்பதால் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள் இவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அரிது. இந்நிலையில், ஷாஜஹான் எழுதியிருக்கும் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ புத்தகம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறத் துடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்துவந்த ஷாஜஹான் அதிலிருந்து விடுபட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் எழு…

    • 0 replies
    • 639 views
  12. வெற்றிச் செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான். சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது. அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்…

  13. தரவிறக்கம் https://noolaham.org/wiki/index.php/ஈழத்தமிழர்_இறைமை சில நூல்கள் அவசரத்துக்கு தேடினால் கிடைக்காது யாராவது இரவல் வாங்கி மறந்து விட்டு விடுவார்கள் அல்லது சேமிப்பு பகுதியில் எங்கு என்ன பெயரில் வைத்தோம் என்று தேட வேண்டி வந்திடும் இங்கு பதிவது இலகுவாக குறிப்புக்கள் எடுக்க உதவும் என எண்ணுகிறேன் நன்றி .

  14. ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம் ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீத…

  15. குஞ்சரம் ஊர்ந்தோர் ஜேகே யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே அமைந்துள்ள பாசையூர் கிராமத்தில் மீன் சந்தை ஒன்று தினமும் கூடுவதுண்டு. அங்கே காலை வேளைகளில் மீன் வாங்கச் செல்பவர்களுக்கு அந்த ஐயாவைத் தெரிந்திருக்கலாம். சந்தைக் கட்டடத்தின் கடற்கரைப் பக்க வாசலுக்கு அருகே ஒரு கதிரையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மிதப்பாக அமர்ந்திருந்தபடி அந்த வயோதிபர் சந்தையின் சந்தடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அந்தச் சந்தையே தன்னால்தான் இயங்குகிறது என்பதுபோல அங்கு நிற்கும் ஏல வியாபாரிகளையும் மீனவர்களையும் ஏய்த்தவண்ணம் இருப்பார். இடையிடையே பத்திரிகையை எடுத்து வாசிப்பார். மீன் வாங்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறுவார். ஒருநாள் ஆர்வமிகுதியில் வாங்கிய மீன்களைக் கழுவி அறுத்துக் கொடுக்கும…

    • 1 reply
    • 635 views
  16. கவிஞரும் சமூக ஆய்வாளரும் மொழி பெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா. சடகோபனின் கைவண்ணத்தில் உருவான கோப்பிக்கால வரலாற்று ஆவண நூலான கண்டிச் சீமையிலே நூல் அறிமுக விழா 05.06.2016 ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இல. 62, கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை, கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு தே.க.இ.பே. யாழ் பேரவை செயலாளர் மு.இராசநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான கௌரவ எம். திலகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் விமர்சன உரையையும், வரவேற்பு மற்றும் அறிமுக உரையை சோ.தேவராஜா (தே…

    • 0 replies
    • 634 views
  17. சயந்தனின் ஆறா வடு குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 16 பெப்ரவரி 2012 ஈழத்தில் கவிதை அரசியல் மயப்பட்டிருப்பது போலவே இலக்கிய விமர்சனமும் அதி அரசியல்மயப்பட்டதாகத்தான் இருக்கிறது. கோவிந்தனின் புதியோர் உலகம் நாவலின்பின் முக்கியத்துவம் பெற்ற, விவாதிக்கப்பட்ட நாவல்களாக ஷோபா சக்தியின் கொரில்லாவும், விமல் குழந்தைவேலின் கசகறணம் போன்றனவும்தான் இருக்கின்றன. ஈழத்தின் அரசியல் விமர்சனத்தில் செயல்படுகிற அதே மன அமைவுதான் இலக்கிய விமர்சனத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலி ஆதரவு-எதிர்ப்பு எனும் இரு துருவப் பார்வையில் இருந்து ஏதேனும் ஒரு துருவத்தைச் தேர்ந்து கொண்டு எழுதுவதுதான் ஈழ இலக்கியத்தின் அரசியல்சார் தீவிரப் பண்பு என…

  18. Mubarak Abdul Majeeth 23 hrs · முபாற‌க் அப்துல் ம‌ஜீத் எழுதிய‌ இல‌ங்கையின் முத‌ல் பூர்வீக‌ம் முஸ்லிம்க‌ளே என்ற‌ நூலை காத்தான்குடியில் பின்வ‌ரும் முக‌வ‌ரியில் பெற‌லாம். யுனிக‌ம் புக் ஷொப் பிர‌தான‌ வீதி காத்தான்குடி. 0779114100

    • 0 replies
    • 630 views
  19. மாற்று வரலாறு பேசுவோம் ஆதவன் தீட்சண்யா இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறது. பிறகு அந்தக் கும்பலே அவரை கைது செய்யுமாறு காவல்நிலையத்திற்குள் வந்து அட்டகாசம் செய்திருக்கிறது. முருகேசன் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு முன்னும் இதேபோல துரை குணா, மா.மு.கண்ணன் போன்றவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெருமாள்…

  20. கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் சிறீறஞ்சனியும் அவரது மகள் சிவகாமியும் எழுதிய நூல். நூலின் பெயர் "சிந்துவின் தைப்பொங்கல்" ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு மொழியிலும் வெளியாகிறது. https://www.amazon.ca/dp/B08S7KTBNH புத்தகம் பற்றிய ஒரு கருத்துரை. “சிந்துவின் தைப் பொங்கல் உண்மையிலேயே ஒரு கனடாக் கதையாகும். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம், பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. எம்மை நிலைநிறுத்தும் இருமுகத்தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே இருக்கும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. தனிமயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய பொதுமையான கருப்பொருள்களை நாம் புரிந…

    • 0 replies
    • 629 views
  21. Manual of Vanni Districts(1985)-J.P.LEWIS. ஜே.பி .லூயிஸ் ஆங்கிலத்தில் எழுதிய கையேடு இப்போது தமிழில் தமிழாக்க குழு வன்னியால் வெளியிடப்பட்டுள்ளது . வன்னியின் அரசியல் ,பொருளியல் ,சமூக வரலாற்றுக்கான விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இதற்கு விரிவான முன்னுரையை வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதியுள்ளார் .

    • 0 replies
    • 629 views
  22. “தியாகமும் வீரமும் மலையென குவிந்தது தோல்வி அதளபாதாளத்திற்கு சென்றது” ஏன் கேட்டுப்பாருங்கள்..... தமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற நூல் அண்மையில் அவுஸ்திரேலியா வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவ் அறிமுக விழாவின் போது நூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய ஏற்புரை.நன்றிவெளியீடு தமிழாய்வு மையம் லண்டன்.

    • 0 replies
    • 625 views
  23. நேற்று பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின. எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். நிகழ்வில் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், சேரன், கற்சுறா, அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி, சிவவதனி பிரபாகரன் என்ற…

    • 1 reply
    • 621 views
  24. நட்புக்களே! எனது "அமெரிக்க விருந்தாளி " சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3 அன்று கொழும்பிலும், அறிமுக விழா 16/3 அன்று யாழ்ப்பாணத்திலும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளோர் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்🙏🏽 Virakesari.lkஎழுத்தாளர்.தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி” நூல் வ...எழுத்தாளர்.தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி” நூல் வெளியீட்டு நிகழ்வு

      • Like
      • Thanks
    • 13 replies
    • 618 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.