நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
நமது விருப்பத்திற்குரிய அங்கமாயிருக்கும் காதலென்னும் சிலுவையும், பெருந்திணையின் வசீகரமும். – உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’. கதைகள் எப்போதும் தன்னகத்தே ஒரே முகத்தைக் கொண்டிருப்பதில்லை, அதிலும் குறிப்பாக காதல் கதைகள். அவை அனேக முகங்களைக் கொண்டவை. பெருந்திணையும் சேர்ந்துவிட்டால் எண்ணிக்கையில் இன்னும் கொஞ்சத்தைக் கூட்டிக் கொள்வது ஒன்றும் சமூகக் குற்றமில்லை. தமிழில் சொற்கள் அனேகமாய் இருப்பதாலோ என்னவோ நம்மவர்கள் கைக்கிளை, பெருந்திணை, என பல்வேறு வகையாய் காதலைக் கூறுபோட்டு வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு காதல் கதை ஏதோவொரு வகையில் சுவாரஸ்யமானதாகவும், எல்லோருக்கும் பொருந்திப்போகக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம். நாம் வாசிக்கும் புத…
-
- 4 replies
- 1.1k views
-
-
வரலாற்றின் தன்னிலைகள் ராஜ் கௌதமன் சுமைகளிலெல்லாம் பெருஞ்சுமை அன்னியனைச் சுமப்பது’’ (மெகாலே பிரபு) என்ற வாக்கியம் இங்கே எல்லாச் சாதிகளாலும் அன்னிய சாதிகளாக்கப்பட்ட தலித்துகளுக்கே உரிய வாசகமாகும். தமிழக நெடிய வரலாற்றில் தெலுங்கரின் ஆட்சிக்குப் பின் வந்த ஆங்கிலேயே வணிகமுதலாளிய காலனியாட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துச் சாதிய அமைப்பாலும் பிரிட்டனின் வணிக முதலாளியத்தின் ஏகாதிபத்தியக் கொள்ளையாலும் தலித் மக்கள் சுமந்த பெருஞ்சுமையையும் வெற்றுச்சடலங்களாக மடிந்து மக்கிப்போன பேரவலத்தையும் ஜெயமோகனுடைய வெள்ளையானை (எழுத்து 2013) என்னும் வரலாற்று நாவல் காலம், இடம், கருத்தியல் மற்றும் அரசியல் பிரக்ஞையோடு படைத்துக் காட்டுகின்றது. இந்தப் படைப்பு தனியாக இன்றிப் படைப்புக்குள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக வாசகர்களின் உற்சாக வருடாந்திரத் திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சி வாசகர்கள் எண்ணிக்கை, வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, விற்பனையான தொகை என எல்லா விதங்களிலும் இதுவரை இல்லாத புது உச்சத்தைத் தொட்டு புதன்கிழமையோடு நிறைவடைந்தது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 37-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரமாண்ட புத்தகக் காட்சியில் 435 தமிழ்ப் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 ஊடகப் பதிப்பாளர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புக…
-
- 9 replies
- 4.5k views
-
-
இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள். அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான்.…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஆவா குறூப்பா நாமா? திருமறை கலாமன்றத்திற்கு வாருங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை! யோ.கர்ணன் இப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இலக்கிய கூட்டங்களிற்கு செல்ல மிகுந்த தயக்கமாகவும் அச்சமாகவும் இருக்கின்றது. அச்சம் குறித்த விரிவான பதிவொன்று எழுதலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தயக்கம் குறித்து உடனடியாக எழுத வேண்டியதாகி விட்டது. இலக்கிய கூட்டங்களிற்கு செல்வதற்கு எதனால் தயக்க வேண்டியுள்ளது என்பது குறித்து இப்பொழுது சிறிய குறிப்பொன்று. அச்சம் குறித்து பின்னர் விரிவாக எழுத வேண்டும். அண்மையில் நண்பரொருவரிற்கு நேர்ந்த துயரமிது. யாழ்ப்பாணத்தில் அவர் புத்தக வெளியீடு நடத்தினார். அவர் பிறப்பில் ஒரு இந்துவாக இருக்க வேண்டும். இலக்கியவாதியாகிற்றே. இப்பொழுது ஒரு மதமும் கிடையா…
-
- 0 replies
- 852 views
-
-
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம் பிரபு கே பாலா ஜோனாதன் ஜேம்ஸ் ஆகிய ஜே.ஜே., ஆல்பெர் காம்யு இறந்த நாளுக்கு மறுநாள் இறந்து போகும் எழவுச் செய்தியுடன் தொடங்குகிறது நாவல். மலையாள எழுத்தாளனான ஜே.ஜேவைப் பற்றி தமிழில் ஏன் எழுத வேண்டுமென்று பாலு என்ற கதைசொல்லியின் வியாக்கியானத்தை முன் வைத்து கதையைத் துவக்குகிறார் சுந்தர ராமசாமி. உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்ல…
-
- 1 reply
- 4k views
-
-
சாகித்திய அகாதெமி விருது 2013 2013 ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஜோ டி குருஸ் - இன் 'கொற்கை' நாவலுக்குக் கிடைத்துள்ளது என்பதை வாசகர்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம்.
-
- 3 replies
- 3.1k views
-
-
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் கலை, கலாச்சாரம், தமிழகம், தமிழீழம் சார்ந்த படைப்புக்களை மட்டுமே வெளியீட்டு வரும் தமிழ் மண் பதிப்பகம், மற்றுமோர் அரிய படைப்பாகிய உலக இசைகளுக்கு மூல இசையாம் தமிழிசையின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தமிழிசை அறிஞர் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் எனும் தமிழிசைக் களஞ்சியம் (1907,1917,1946 வெளிவந்த) 1 முதல் 7 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. கலையுலகில் பயணிக்கு ஒவ்வொருவரும் படித்துகொள்ளவேண்டிய இவ் கலை பொக்கிஷம், உலக இசைகளுக்கு மூல இசை தமிழ் இசை என்பதை உணரவைக்கும். http://www.sankathi24.com/news/36523/64//d,fullart.aspx
-
- 0 replies
- 2.4k views
-
-
அல்பேர் காமு: தமிழுலகில் புரிந்தும் புரியாமலும் இருக்கும் பிரான்ஸிய இலக்கிய ஆளுமை -தேவகாந்தன்- அண்மையில், மூன்றாவதாக இப்போது அமைந்துவரும் என் நூலக அடுக்கிலிருந்த அல்பேர் காமுவின் மரணத்தையொட்டி ழீன் போல் சார்த்தரும், செர்ஜி துப்ரோவ்ஸ்கியும் வெளியிட்ட பிரெஞ்சு மொழியிலான இரங்கல் செய்திகளின் ஆங்கிலம் வழியிலாக நண்பர் தேனுகா தமிழில் மொழிபெயர்த்து ‘அகரம்’ வெளியிட்டிருந்த ஒரு கையடக்கமான சிறுநூல் மறுபடியுமான எனது வாசிப்புக்குத் தட்டுப்பட்டது. வாசிப்பின் பின்னூட்டமாய் தொடர்ந்து விளைந்த யோசிப்புக்களின் காரணமாக, தமிழ்ப் பரப்பில் அல்பேர் காமு என்கிற பேராளுமைபற்றிய அறிகை பெரிதாக ஏற்படவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. ஓரளவு ஏற்பட்டிருந்தாலும், விமர்சகர்கள் படைப்பாளிகள் வாசகர்க…
-
- 0 replies
- 749 views
-
-
‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும் தயாஜி முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு முன்னரே மலேசியா வந்துவிட்டார் ஷோபாசக்தி. ஏற்கனவே சில முறை மலேசியா வந்திருந்தாலும் இலக்கிய நிகழ்வுக்காக ஷோபா வருவது இது இரண்டாவது முறை. இதுதான் மலேசியா என ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் க…
-
- 0 replies
- 938 views
-
-
சமீபத்தில் கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து வெளியிட்டிருந்த "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்தப் புத்தகத்தை ஊரிலிருந்து வரும் நண்பனிடம் வாங்கிவரச் சொல்லியிருந்தேன். வாங்கி வரச் சொல்லிவிட்டு ரொம்ப சங்கடப் பட்டுவிட்டேன். அவன் ஏதும் இதை ஆபாசப் புத்தகம் என்று நினைத்து விடுவானோ என்று. புத்தகத்தை படித்தவுடன் தான் தெரிந்தது ஒரு கெட்ட வார்த்தை கூட இந்தப் புத்தகத்தில் கிடையாது என்பது. புத்தகத்தில் பதியப்படிருந்த இந்த வார்த்தைகள் போதும் இந்த நூலை பற்றி அறிந்து கொள்வதற்கு "பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம் காலமாக கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருபவை. இவை ஆபசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தே…
-
- 5 replies
- 5.8k views
-
-
ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் Francis Harrison Francis Harrison பல ஆண்டுகள் பிபிசியின் அயல் செய்தியாளராக ஆசியாவில் பணியாற்றினார். 2000 - 2004 வரை பிபிசியின் இலங்கைச் செய்தியாளராக செயல்பட்டார். இவர் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த Still Counting the Dead எனும் நூலின் தமிழாக்கமே இந்த நூல். புத்தகம் படிப்பதே தமிழர்களிடத்தில் குறைந்து வரும் நிலையில் இது போன்ற எமது வரலாற்றை தாங்கி நிற்கும் நூல்களை புலம்பெயர்ந்த இளம் சமூகம் வாசித்திருக்க சந்தர்ப்பங்கள் குறைவு என்றே நான் நினைக்கின்றேன். எமது கதையை எமக்காக வேறினத்தவர் ஒருவர் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழினம் உள்ளது என்பது வருந்ததக்கது. இந்த கதைக்கு சொந்தக்காரர்கள் யாரையாவது நாம் சந்தித்தால் எம்மால் அவர்களி…
-
- 5 replies
- 2.4k views
-
-
கங்கணம் - திருமணம் ஆகாதவனின் அவஸ்தைகள் வா.மணிகண்டன் இப்பொழுதெல்லாம் ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கல்யாணம் ஆகாத ஆடவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது. நாற்பது வயதிலும் தனியாகப் படுத்து பாயை பிறாண்டிக் கொண்டிருக்கும் கவுண்டப் பையன்களைக் கணக்கெடுத்தால் ஒரு தனி சாதிப்பிரிவே உருவாக்கலாம். அத்தனை பேச்சிலர்கள். கடந்த இருபது முப்பது வருடங்களாக கவுண்டர் சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. குறையாமல் என்ன செய்யும்? திருமணம் ஆனவுடன் முதல் குழந்தை பையனாக பிறந்துவிட்டால் போதும். ‘ஒன்றே போதும்’ என நரம்பைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தப்பித்தவறி முதலில் பெண் குழந்தை பிறந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்திற்கு பெண் வாரிசு. இப்படி…
-
- 0 replies
- 3.2k views
-
-
ஒரு உளவாளியின் கதை உலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல. தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க…
-
- 0 replies
- 790 views
-
-
சில வருடங்களிற்கு முன் எனது ஆசரியர் ஒருவர் இந்த புத்தகத்தை படித்து பார் பின்னர் உலகில் நடக்கும் பல சம்பவங்களை நீ வேறொரு கண்ணால் பார்ப்பாய் என்றார். இதையே இந்த புத்தகத்தை படிக்காதவர்களிற்கும் நான் கூற விரும்புகின்றேன். இந்த புத்தகம் தமிழில் வெளிவரவில்லை. யாராவது இதை மொழிபெயர்க்க வேண்டும். பூமியில் நடைபெறுகின்ற இயற்கையான/செயற்கையான அழிவுகள் அனைத்துமே யதார்த்தமாக நடந்துவிடுவதில்லை. இயற்கை அழிவுகளை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கின்றது. அதனை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு. இந்த பணத்தாசை பல மக்களின் உயிரை பலி கொடுக்கவும் தயங்காது. இந்த கூட்டம் உலகத்தின் அதிகார நாற்காலியில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. ஈராக் போரின் காலத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு ஆயு…
-
- 3 replies
- 778 views
-
-
தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர் நூலுக்கான முன் குறிப்பு ——————————————– ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். சமூக ஆய்வியலில் அவரது ஈடுபாட்டிற்குரிய பல்வேறு விடயங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனத்துவம், சமூக அர…
-
- 1 reply
- 706 views
-
-
ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்... அறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந்துள்ளது. 292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில் பேரறிவுபெற்ற…
-
- 3 replies
- 2.5k views
-
-
கடந்த மூன்று வார இறுதியிலும் வேறுபட்ட சில நிகழ்வுகளுக்கு போயிருந்தேன் . இலக்கிய சந்திப்பு ,தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பிற்கு எதிரான கண்டன கூட்டம்,லண்டனில் இருந்து வருகை தந்திருந்த யமுன ராஜேந்திரனின் ஈழஅரசியல் பற்றிய பார்வை ,தமிழ் சினிமா பற்றிய பார்வை ,வெள்ளி வேலை முடிய குயின்ஸ் பாக்கையும் எட்டி பார்த்துவிட்டு (சனமில்லை ) வந்தேன் . புத்தகங்கள் சில வாங்கினேன் . கூண்டு -இலங்கை போரும் விடுதலைப் புலிகளின் இறுதிநாட்களும் ,(ஆங்கில மொழிபெயர்ப்பு ) -இப்போது தான் வாசிக்க தொடங்குகின்றேன் . மேலிஞ்சி முத்தனின் -பிரண்டையாறு (சிறுகதை தொகுப்பு ) .வாசித்து முடித்துவிட்டேன் .எனக்கு மிகவும் பிடித்திருந்தது .மிக யதார்த்தமாக தனக்கே உரிய பாணியில் எமக்கு துளியும் அறிமுகம் இல்லாத ஒ…
-
- 2 replies
- 1k views
-
-
Nadarajah Muralitharan இன்று காரில் சென்று கொண்டிருந்த பொழுது 99.1 FM இல் சிபிசி வானொலியை திருகி விட்டேன். பேசிக் கொண்டிருந்தவர் இலங்கையில் பிறந்து வளர்ந்து 1983களில் கனடாவுக்கு இடம்பெயர்ந்த "ஷியாம் செல்வதுரை". இவர் கனடாவில் ஆங்கிலத்தில் எழுதும் பிரபல எழுத்தாளர். இவரது Funny Boy, The Cinnamon gardens ஆகிய நாவல்களைப் பலரும் அறிந்திருப்பார்கள். "ஷீலா றோஜர்ஸ்" என்ற அறிவிப்பாளர் அவரைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார். "ஷியாம்" புதிதாக எழுதி வெளியிட்டுள்ள நாவல் (Hungrey Ghosts) குறித்து "ஷீலா" வினாக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தார். அவரது சுயசரிதைப் பாணியில் அமைந்த நாவல் தமிழ், சிங்கள உறவுகள் பற்றியதாகவும் அமைந்துள்ளது என்பதை அவரது நேர்காணலில் இருந்து அறிந்து கொண்டேன். நான் இன்று…
-
- 0 replies
- 728 views
-
-
இரண்டாவது ஆப்பிள் டிஜிட்டல் கடவுள் ஸ்டிவ் யாப்ஸ் நின்று, வென்ற கதை "ஃபாதர்! ஏன் ஆண்டவன் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்யவில்லை? " "ஸ்டிவ் இது உனக்கு புரியாத விடயம்" "எனக்கு புரியாத விடயம் இனி வேண்டவே வேண்டாம்" இது தான் தத்துப்பிள்ளையான ஸ்டிவ் யாப்ஸ்! சீவாத தலைமுடி, ஒரு வாரமாக குளியல் பார்க்காத அழுக்கு உடல், ஆனால் பார்வையில் கூர்மை, வியப்பளிக்கும் அறிவு, மனதில் திமிர்! கஞ்சா, எல்.எஸ்.டி, ஹிப்பி வாழ்க்கை.இது தான் இளவயது ஸ்டிவ் யாப்ஸ். கல்லூரிபடிப்பை இடையில் நிறுத்தி பல ஆண்டுகள் ஆண்மீகத்தை தேடியவர். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி முதலாவது வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து மூன்று தோல்விகள். திமிர் பிடித்த ஸ்டிவ் ஆப்பிள் நிறுவனத்திலிருந…
-
- 0 replies
- 704 views
-
-
கார்டன் வைஸ் எழுதிய "கூண்டு - இலங்கை போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும்" என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை பற்றிய எனது பார்வை. யாழில் இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே வேறொரு திரி இருந்ததை அவதானித்திருந்தேன். அதில் பல கருத்துக்குள் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சூடான விவாதம் நடந்தற்கான அடையாளமாகவே அதனை பார்க்கின்றேன். நான் இங்கு புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை கேள்விக்குறியாக்க விரும்பவில்லை. இந்த நூலின் பின் அட்டையில் தெளிவாக ஒன்றை சொல்லியிருக்கிறார் கார்டன் வைஸ். "பக்கச்சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை...." எனவே அவர் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் பற்றி நாம் ஆரா…
-
- 0 replies
- 561 views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவே அவன் தீக்குளித்தற்கு காரணம் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். மாநில அளவில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஒருவனால் வெறும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல. குடிகார அப்பா, குடும்பத்தை சுமக்கும் தாய், படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச்செல்லும் பிள்ளைகள். இது சினிமா கதையல்ல. முத்துக்குமாரின் செயல் போலவே அவன் வாழ்க்கையும் வியக்கத்தக்கது!
-
- 1 reply
- 2.6k views
-
-
எனது பார்வை ------------------------- பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். அமெரிக்காவில் பிறந்த John Perkins ஒரு பொருளாதார அடியாளாக வேலை செய்து பின்னர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அந்த வேலையை விட்டு வெளியே வந்து இந்த புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் ஆரம்பத்தில் ஒரு ஜெம்ஸ் பாண்ட் கதை போல் தோன்றினாலும் அடுத்து வந்த ஒவ்வொரு பகுதியும் நாமும் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க பேரரசின் அடியாள் வேலையை தான் செய்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வையே ஏற்படுத்துகின்றது. இதுவரை நாம் பார்த்து வந்த உலகை வேறொரு கண்களால் பார்க்க தூண்டியது. எம் கண்முன்னே…
-
- 4 replies
- 3.4k views
-
-
-
- 0 replies
- 667 views
-