Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர் நூலுக்கான முன் குறிப்பு ——————————————– ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். சமூக ஆய்வியலில் அவரது ஈடுபாட்டிற்குரிய பல்வேறு விடயங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனத்துவம், சமூக அர…

  2. விமானப் பயணங்கள் பற்றிய கனவுகள் எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதில் இருந்தன. முதல் வேலையில் பூனா (அப்போது அதுதான் பெயர்) சென்று திரும்புகையில், இயந்திரப் பழுது என்று பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார்கள். எல்லாமே பிடித்திருந்தது அப்போது. முதல் பயணமல்லவா? பிறகு நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கையில் ரயில் பயணத்தைப் போல ஒரு விமானப் பயணம் என்றுமே இனித்ததில்லை. விமானப் பயணம் என்றாலே விறைப்பான மனிதர்கள், போலி நாகரீகம், அசௌகரிய அமைதி, இறுக்கமான சூழ்நிலை என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனாலும் நேரத்தை சேமிக்கும் விமானத்தை விலக்க முடியவில்லை. என் எண்ணத்தை எதிரொலிக்கும் புத்தகமாக ‘எய்ல் பி டாம்ட்’ எனும் புத்தகத்தைக் கண்டேன். Swaying hips, …

  3. எழுத்துக்கு முழுக்கு: எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவிப்பு எழுத்தாளர் பெருமாள் முருகன் | கோப்புப் படம் தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துள்ளார். திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் …

  4. ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்... அறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந்துள்ளது. 292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில் பேரறிவுபெற்ற…

  5. சமீபத்தில் கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து வெளியிட்டிருந்த "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்தப் புத்தகத்தை ஊரிலிருந்து வரும் நண்பனிடம் வாங்கிவரச் சொல்லியிருந்தேன். வாங்கி வரச் சொல்லிவிட்டு ரொம்ப சங்கடப் பட்டுவிட்டேன். அவன் ஏதும் இதை ஆபாசப் புத்தகம் என்று நினைத்து விடுவானோ என்று. புத்தகத்தை படித்தவுடன் தான் தெரிந்தது ஒரு கெட்ட வார்த்தை கூட இந்தப் புத்தகத்தில் கிடையாது என்பது. புத்தகத்தில் பதியப்படிருந்த இந்த வார்த்தைகள் போதும் இந்த நூலை பற்றி அறிந்து கொள்வதற்கு "பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம் காலமாக கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருபவை. இவை ஆபசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தே…

  6. விடுதலை இராசேந்திரன் எழுதிய "ஒப்பந்தங்களைச் சீர்குலைத்தது யார்? " என்ற நூலின் ஒரு பகுதி. http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=5

  7. இலங்கையின் தமிழ் இலக்கியம் கருணாகரன் இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது செழித்துப் பொலியவில்லை. என்றபோதும் இலங்கையின் வடபுலத்தை ஆட்சி செய்த ஆரிய சக்கரவர்த்திகளின் காலத்தில்தான் ஓரளவுக்கு மருத்துவம், சோதிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான செய்யுள்கள் பல இயற்றப்பட்டன. இதேவேளை இந்தக் காலகட்டத்தில்தான் ரகுவம்சம், கதிரமலைப…

  8. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் January 12, 2019 சென்னையில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளர்களாகிய வெற்றிச்செல்வி, தீபச்செல்வன், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா, நிஜத்தடன் நிலவன் போன்றோரின் புத்தகங்களும் பிபிசி தமிழோசையின் வடமாகாண செய்தியாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்தின் புத்தகமும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கண்காட்சி 20 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. வெற்றிச் செல்வியின் போராளியின் காதலி, ஈழப்போரின் இறுதிநாட்கள், ஆறிப்போன காயங்களின் வலி ஆகிய நூல்களும், தீபச்செல்வனின் நடுகல் நாவல், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகாவின் (லதா கந்தையா) கவிதைத் தொகுப்பாகிய…

  9. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்

      • Thanks
      • Like
    • 8 replies
    • 1.5k views
  10. அம்மாவின் ரகசியம் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் த…

    • 15 replies
    • 5k views
  11. அனுக் அருட்பிரகாசத்தின் 'A Passage North' இளங்கோ-டிசே I எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதைகளைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப்போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பி எழுதிப்பார்த்ததால்தான் அனுக் அருட்பிரகாசத்தின் 'வடக்கிற்கான பயணம்' (A Passage North) கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத 'மான் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வரை (short list) அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது. இந்த ந…

  12. தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேட புறப்பட்டன… ஆய்வாளர் மு.திருநாவுகரசின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல்வெளியீடு இன்று(24) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.. தமிழாய்வு மையம் இலங்கை- பிரித்தானிய…

  13. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய அறிவியல் புனைவுகள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்தது பிரளயமும், இந்தக் கதையும் மட்டும்தான். வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் சொல்லலாம். கதையின் ஒன்லைன் என்று பார்த்தால், உலகை காப்பாற்ற விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஷிப்பில் இன்னொரு கிரகத்துக்கு போகும், சாதாரண அறிவியல் புனைவு என்றுதான் சொல்ல முடிகிறது. ஆனாலும் அதை எண்டமூரி அவருடைய ஸ்டைலில், காதல், நட்பு, பாசம், மனித நேயம், ஏமாற்றம், கொஞ்சம் சஸ்பென்ஸ், நிறைய அறிவியல் விளக்கங்கள் என்று கலந்து கொடுக்கும் பொழுது, நிச்சயமாக சொல்வேன்; பொன்னியின் செல்வனை வாசிக்க ஆரம்பித்தால், எப்படி புத்ககத்தை கீழே வைக்காமல் படித்து முடிப்பீர்களோ, அதே போல், இந்த கதையையும் இரண்டு பக்கங்கள் படித்தாலும், அப்புறம் முடிக்கு…

  14. கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)

    • 5 replies
    • 952 views
  15. தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் இரண்டாவது நாவல் பயங்கரவாதி. தமிழ்நாட்டில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் இந் நூலை வெளியிட்டுள்ளது. இன்று கிளிநொச்சியில் 3மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார். அத்துடன் முன்னாள் …

  16. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற எனது முதலாவது சிறுகதைத்தொகுப்பு வெளியாகி பதின்னான்கு மாதங்களின் பின் இப்பொழுது ‘சேகுவேரா இருந்த வீடு’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எழதி பிரசுரமான சில கதைகள், பிரசுரமாகாத கதைகளென பதின்மூன்று கதைகள் இதிலிருக்கின்றன. ஈழ நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வரும் வடலிதான் இதனையும் வெளியிடுகிறது. முன்னர் ஒரு காலத்தில் கதைகள் எழுதுவதிலும், புத்தகங்கள் வெளியிட வேண்டுமென்பதிலும் அலாதி பிரியமிருந்தது. அப்பொழுதெல்லாம் நிறையக்கதைகள் எழுதித்தள்ளினேன். ஆயினும் அப்பொழுது எந்தப்புத்தகமும் வெளியாகியிருக்கவில்லை. ஒரு புத்தகத்திற்கு முயற்சி செய்து இறுதி வரை வந்து கைவிட வேண்டியதாயிற்று. அப்பொழுது அது பெரிய கவலையான விடயம்தான்.…

  17. ஈழ தமிழ் நூல்கள் வெளியீடு .! வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் 1. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு 2.இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றிதொரு ஆய்வு 3.புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓர் உலகளாவிய ஆய்வு. என்ற புலமைசார் மூன்று ஆய்வு நூல்கள், இன்று வெளியிட்டு வைக்கப்பட்டன. கனகராயன்குளம் புதுக்குளம் தங்கம்மா முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு நிகழ்வில், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியலிங்கம் பிரதம அதிதியாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர் ரி. கணேசலிங்கமும் வவுனியா ஆசிரியர் நடுவகத்தின் முகாமையாளர் சு. ஜெயச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தனர் -க. அகரன் …

  18. நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை - கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ இருக்கிறது. வாழ்க்கை புதிய தளங்களில் அகலிக்கும்போதும் வேர்விடும்போதும் …

    • 1 reply
    • 832 views
  19. நிமித்திகனின் தேர்ந்த சொற்கள் - யுவால் ஹராரியை முன்வைத்து எந்த ஒரு திருவிழாவிலும், அதன் உற்சாகத்திற்கு மத்தியில் சிலரை நாம் நிச்சயம் காணவேண்டியிருக்கும், ஒரு குழந்தைக்கு பஞ்சுமிட்டாய்காரனும் , பலூன்காரனும் போல. பெரியவர்களை குறிவைத்து திருவிழா தோறும் செல்பவர்கள், நிமித்திகர்கள். கிளிஜோசியம் , கைரேகை , எலிஜோசியம், சோளி உருட்டி ஜாதகம் கணிப்பவர், குடுகுடுப்பைக்காரர். என, அது ஒரு முக்கியமான குழு. தம் வாழ்க்கை பற்றி ஏற்கனவே தெரிந்தவற்றையோ, அல்லது உண்மை என நம்பாவிட்டாலும் வருங்காலத்தை பற்றியோ , அல்லது நடப்பு சிக்கலுக்கான பரிகாரம் என, எதோ வடிவில் மனிதர்களுக்கு நிமித்திகர்கள் சொல்லால் கேட்பதில் அலாதி விருப்பம் இருக்கவே செய…

  20. தொலைவின் இடைவெளிகளை நிரப்பும் கதைகள் தர்மினி முதன்முதலில் ஆக்காட்டி சஞ்சிகையில் தான் அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதையொன்றைப் படித்தேன். அதைத் போல சதைகள் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக்கதைகளில் அரைவாசிக் கதைகளை சஞ்சிகைகளிலோ இணையத்தளங்களிலோ வாசித்திருந்தேன். ஆனாலும் மீளவுமொரு முறை இத்தொகுப்பில் அவற்றை வாசித்தது சலிப்பைத் தரவில்லை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு களங்களாகக் கதைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. திரும்பத் திரும்ப உள்நாட்டு யுத்தம் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நாடுகளில் வாழ்வு எனக் கதைகளைப் படித்துப் படித்து இந்தக் கதை எங்கே எப்படிப் போகப்போகிறது? எப்படி முடியப்போகிறத…

  21. [size=5]இலக்கியங்களும் வசீகர வரிகளும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா[/size] நான் தினமும் வாசிக்கும் த கார்டியன் நாளிதழில் g2 என்ற இணைப்பு வரும். அதில் ஆங்கில நாவல்களில் அதிசிறந்த கடைசி வரிகள் எவை என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குப் பெரும்பான்மையான த கார்டியன் பிரியர்கள் தேர்ந்தெடுத்தது ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசி வாசகம். ருசியப் புரட்சியைப் பற்றிப் பரிகாசமாக எழுதப்பட்ட நாவல் தரும் கருத்து அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் புரட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதுதான். நாவலின் முடிவில் பண்ணை உரிமையாளர்களும் அவர்களை எதிர்த்த பன்றிகளின் தலைமைப்பீடமும் ஒன்றுகூடுகிறார்கள். சிரிப்பும் பாட்டுச் சத்தமும் …

  22. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் சாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.இதுவே எனக்கு ஜெயகாந்தனின் முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே. ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.இந்த நாவலில் அறியாத வயதில் கற்பிலந்த பெண்ணாக கங்கா. ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான முரண்பட்ட போராட்டமே கதை.அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி எனகங்காவின் மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடு…

    • 1 reply
    • 3.5k views
  23. நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா? வா. மணிகண்டன் கே.என்.செந்திலைப் பற்றிய கட்டுரையை பதிவேற்றிவிட்டு நேற்று மதியத்துக்கு மேல் தபாலில் வந்திருந்த காலச்சுவடு இதழைப் புரட்டினால் அதில் கே.என்.செந்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையின் ஒரு பத்தியில் எனது பெயரும் வந்திருக்கிறது. திட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். நேற்று பாராட்டி எழுதிய அதே விரல்களால் இன்று சண்டைக்காக தட்டச்சு வேண்டியதாகிவிட்டது கட்டுரையில் அந்தப் பத்தி இப்படி இருக்கிறது- முகநூல் மற்றும் வலைப்பக்கம் வைத்திருப்பவர்களின் தாக்கத்தை இந்தப் புத்தகச் சந்தையில் அதிகமாகவே உணர முடிந்தது. படைப்பாளிகள் பல ஆண்டுகள் எழுதி அதன் வழி உருவான வாசக எண்ணிக்கையை விளம்பரங்களால் இவர…

  24. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக இலக்கியம் * அந்நியன்-ஆல்பெர் காம்யு; (பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம். * அன்னா கரீனினா- டால்ஸ்டாய்; (ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம். * கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே; (தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன். * கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி; (ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம். * நம் காலத்து நாயகன்- லெர்ம…

  25. கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன் அனைவருக்கும் வணக்கம். இரண்டு டீ வீ அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து கருணாகரனின் கவிதை தொகுப்பு பற்றி பேசுமாறு பௌசர் கேட்டிருக்கிறார். அறிவிப்பாளர்களின் பேச்சுவன்மை எனக்கு இல்லை. எனினும் நான் முடிந்தவரை முயற்சிக்கிறேன். நடந்துமுடிந்த கோரமான யுத்தத்தின் அனுபவத்தை, அதன் துயரத்தை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவராகவும் அம்மக்களுக்குள்ளேயே நின்று, பாதிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் ஆத்திரம் அவமானம் ஆதங்கம் அனைத்தையும் கவிதையாக வடித்திருக்கிறார் கருணாகரன். இது வெறும் சோகம் ததும்பிய தோல்வியின் வரலாறல்ல. இருள்சூழ்ந்த அந்தகாரத்தில் ஒரு சிறிய மின்மினிப்பூச்சியின் வழித்துணைகூட இன்றி யுத்த பேரிகைகளி…

    • 1 reply
    • 921 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.