Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு சில அதிசயங்கள் ரகசியமாகவே நடந்தேறிவிடுகிறது. நடந்தேறிவிட்ட ரகசியங்கள் கூட சிலவேளைகளில் மட்டும் தான் எம் காதுகளுக்கு எட்டுகிறது. யாரிந்தப் பதிவர் என்பதே இந்த வருட ஆரம்பத்தில் தான் எனக்குக் கிடைத்தது. எமது முதல் அறிமுகம் ஒரு சர்ச்சையில் நாம் சிக்கும் போது எழுதிய பெரும் மடல் ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்தது. அத்தொடர்பிற்கு எமது கவிக்கிழவனாக இருந்த யாதவண்ணா தான் காரணமாக இருந்தார். அன்றொரு நாள் ஒரு மெயில் வந்திருந்தது “தம்பி விரைவில் வெளிநாடு ஒன்றிலிருந்து ஊர் வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும்“ என்று இருந்தது. அத்துடன் தானும் வன்னியின் இறுதிப் போர் வரை அங்கே இருந்த ஒர…

  2. இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு நானும் போனேன். மண் மறவா மனிதர்கள் என 17 பேரைப்பற்றி வி.ரி. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு எழுதி புத்தகமாக வெளியிட்டார். அணிந்துரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் வாழ்த்துரையை கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசுவும் எழுதியிருக்க மேடையில் ஒவ்வொருத்தர் பற்றி ஒவ்வொருத்தர் பேசினர். 1- சர்வதேசரீதியில் புகழ்பெற்ற சண் பற்றி முன்னைநாள் ஈழநாட்டில் வேலைசெய்தவரும் ரிரின் மற்றும் தீபம்தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியருமான கந்தசாமி அவர்களும் 2- டானியல் பற்றி வண்ணை தெய்வம் அவர்களும் 3-பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் பற்றி நடிகர் கோமாளிகள்புகழ் அப்புக்குட்டி அவர்களும் 4- எல்லோருக்கும்இனிய மனிதர் சிவகுருநாதன் பற்றி அவர…

  3. தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள். கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான…

  4. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய அறிவியல் புனைவுகள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்தது பிரளயமும், இந்தக் கதையும் மட்டும்தான். வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் சொல்லலாம். கதையின் ஒன்லைன் என்று பார்த்தால், உலகை காப்பாற்ற விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஷிப்பில் இன்னொரு கிரகத்துக்கு போகும், சாதாரண அறிவியல் புனைவு என்றுதான் சொல்ல முடிகிறது. ஆனாலும் அதை எண்டமூரி அவருடைய ஸ்டைலில், காதல், நட்பு, பாசம், மனித நேயம், ஏமாற்றம், கொஞ்சம் சஸ்பென்ஸ், நிறைய அறிவியல் விளக்கங்கள் என்று கலந்து கொடுக்கும் பொழுது, நிச்சயமாக சொல்வேன்; பொன்னியின் செல்வனை வாசிக்க ஆரம்பித்தால், எப்படி புத்ககத்தை கீழே வைக்காமல் படித்து முடிப்பீர்களோ, அதே போல், இந்த கதையையும் இரண்டு பக்கங்கள் படித்தாலும், அப்புறம் முடிக்கு…

  5. அண்மையில் இந்தியா சென்று வந்த ஒரு உறவு சில ஜெயமோகன் புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். கடந்த வாரம் ரப்பர், உலோகம் மற்றும் இரவு ஆகிய மூன்று ஜெயமோகன் நாவல்களையும் வாசித்து முடித்தேன். மூன்றாண்டுகள் முன்னர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தபோது ஜெயமோகன் என்ற எழுத்தாழனை அறிந்திருக்கவில்லை. அந்த நாவல் ஏற்படுத்திய பிரமிப்பில் (இதை ஜெயமோகனே திரைக்கதை எழுத படமாக்கிய பாலா சொதப்பியது வேறு கதை. இது பாலாவிற்கு மட்டுமான பிரச்சினை அல்ல. பல ஆங்கில நாவல்களிற்கும் நடந்துள்ளது. எந்த நாவலையையும் படத்தால் வெல்ல முடியாது—விஞ்ஞானப் புனைவுகள் புராண அல்ல பூதக் கதைகள் தவிர) ஜெயமோகனின் அனைத்து நாவல்களையும் வாசித்துவிடவேண்டும் என்று ஒரு வெறித்தனமான ஆசை எழுந்தது. கனடாவில் சிற…

    • 13 replies
    • 6.4k views
  6. ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே இத்தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது. கவித்துவம் நிரம்பிய இத்தொகுப்பு வாசிப்பாளனுக்கு ஈழப்பெண் போராளிகளைப் பற்றிய புதிய அனுபவங்களைத் தருகிறது. “இதுவல்லோ கவிதை” என்கிற எண்ணம்தான் ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணரமுடிகிறது. இந்நூலை வாசிக்கத் தொடங்கும்போது பிடித்தமான வரிகளை அடிகோடிடுவதற்கு வண்ணம் பூசும் பேனாவை எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணர்கிறேன், பிடித்தமான வரிகளை வண்ணமிடுவதென்றால் எல்லா வரிகளையும் வண்ணமிட வேண்டும். இருப்பினும் சில வரிகளையாவது…

  7. http://muelangovan.b...og-post_10.html ஈழத்துப்பூராடனாரின் அண்மைக் காலத்து நூல்கள்... தமிழழகி காப்பியம் கனடாவில் வாழும் தமிழீழத்தைச் சார்ந்த மட்டக்களப்புக்கு அருகில் உள்ள செட்டிப்பாளையம் என்ற ஊரில் பிறந்த அறிஞர் க.தா.செல்வராசகோபல் அவர்கள் கடந்த பதினாறு ஆண்டுகளாக எனக்கு இலக்கியத் தொடர்புடைய உறவினர்.அவர்தம் நூல்களைக் கற்று அடிக்கடி பல புதுச்செய்திகளை அறிபவன்.இதுவரை நேரில் இருவரும் சந்தித்ததில்லை எனினும் மார்க்சு ஏங்கெல்சு நட்பு போன்றது எங்கள் நட்பு.அவருக்கும் எனக்கும் அகவை வேறுபாடு மிகுதி.எனினும் உணர்வாலும் இலக்கிய ஆர்வத்தாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். கனடாவில் வாழ்ந்தபடியே தொடர்ந்து தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்துவருகிற…

  8. தமிழினப்படுகொலைகள் 1956 - 2008 வெளியீடு: மனிதம் வெளியீட்டகத்தினர்.

    • 1 reply
    • 1.3k views
  9. புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழ…

  10. ஈழ விடுதலை என்றாலே இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்ற கருத்துத் தளத்தில் இருந்து இயங்கும் ஜெயமோகன் ஈழ விடுதலை அவா கொண்டு அனைத்து தளத்திலும் இலக்கியம் ஆக்கம் படைப்பு என்று இயங்கும் தீபச் செல்வனை 'சின்னப் பையன்' என்ற ஒரு அடைமொழியில் ஒழித்து வைக்கின்றார் இதனை வாசிக்கவும் சுரா 80- இருநாட்கள் கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம். இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்குக்கு கன்யாகுமரிக்கு வந்த பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்தச் சூழல் உதவியாக‌ இருந்தது என்றார்கள். கிட்டத்…

  11. ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா. - பிரவீண் நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை. மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் , , தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி – எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் மேலாண்மையை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சார்ந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமு…

  12. ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா நிறைவை ஒட்டி, கொரிய அரசாங்கம், சாகித்ய அகாடமியின் பரிந்துரைகள் வழியாக இந்தியாவில் உள்ள எட்டு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு 'தாகூர் விருது’ வழங்கியது. அந்த எட்டு எழுத்தாளர்களில், நம் எஸ்.ராமகிருஷ் ணனும் ஒருவர். 'யாமம்’ நூலுக்காக விருது பெற்றுள்ள எஸ்.ரா, தென்னிந்திய மொழிகளில் தாகூர் விருது பெற்றுள்ள ஒரே எழுத்தாளர்! ''விருது பெற்ற மனநிலை குறித்தும் விருதுகளோடு எழும் சர்ச்சைகள் குறித்தும் சொல்லுங்களேன்?'' ''ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப் பவனுக்கு குளூகோஸ் தருவதைப்போலத் தான் இந்த விருதுகள். மேலும் ஓடத் தூண்டும் என்பதற்கான குளூகோஸே தவிர, 'ஓடியது போதும், ஓய்வெடுங்கள்’ என்பதற்கான சமிக்ஞை அல்ல விருதுகள். நூற்றாண்டுகளைக…

    • 0 replies
    • 1.1k views
  13. தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான், அகிலன் நினைவு விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருகிறார். தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய இதழாக விளங்கிய ‘சொல் புதிது’ சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இவருடைய ‘ரப்பர்’, ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘ஏழாம் உலகம்’, ‘கொற்றவை’, ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’, ‘கன்னியாகுமரி’ போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோயிலில் வசித்து வரும் ஜெயமோகன், தொலைபேசித் துறையில் பணியாற்றி வருகிறார். ‘கஸ்தூரிமான்’, ‘நான் கடவுள்…

  14. புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் தருமு சிவராம், தமிழ்ச் சமூகம் கொண்டாடிப் பெருமிதம் கொள்ளவேண்டிய நவீன கவிஞர். இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ் மரபிலக்கிய பரிச்சயமும், உலக இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கிய பார்வையும், தனக்கே உரிய மேதைத்துவமும் கலந்த இரசவாதத்தில் வெளிப்பட்ட உன்னதப் படைப்பாளி. "படிமக் கவிஞர்" என்றும், "ஆன்மிகக் கவிஞர்" என்றும் சிறப்பிக்கப்பட்டவர். இலங்கையிலுள்ள திரிகோணமலையில், 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்தார். அறுபதுகளின் இறுதியில் தமிழகத்துக்கு வந்து தமிழ் எழுத்தாளராகவே அறியப்பட்டார். - கண்ணாடியுள்ளிருந்து - கைப்பிடியளவு கடல் - மேல்நோக்கிய பயணம் - தமிழின் பின் நவீனத்துவம் - வானமற்றவெ…

    • 0 replies
    • 1.3k views
  15. தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் - அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் மீதான பற்று சமுகத்தின் மீதான பொதுநல உணர்வை நாமும் நமக்குள்ளும் நிறைத்துக் கொள்வோம்! என் கவிதையை படிக்கும் முன்பு தங்கள் அனைவரிடமும் ஒரு மன்னிப்பினை கோரிக் கொள்கிறேன்.. வன்மம் உள்ள வார்த்தைகளை இதுபோன்ற கவிதைகளில் கையாளும் நிமித்தம் உள்ளது. பொதுவாக, நாய் என்றெல்லாம் எழுத நானே விரும்புவதில்லை - அதிலும் குறிப்பாக நாயிற்கு ஒப்பீடாக மனிதனை எண…

  16. ஜெயமோகனின் உலோகம் நூல் பற்றி ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி தனது வலைதளத்தில் எழுதியது.. அண்மையில் கனடாவுக்குப் போயிருந்தபோது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைச் சந்தித்தேன். ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் தொய்வின்றித் தொடர்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் சொற்கள் தீர்ந்துபோனதாக உணர்ந்த தருணத்தில் இருவரும் எழுந்துவிட்டோம். அ.முத்துலிங்கம், ஜெயமோகனின் எழுத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாசகத்தை வழியெங்கும் நினைத்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். (இந்த வாசகத்தை எங்கோ வாசித்திருக்கிறேனே…) “தமிழில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவராக ஜெயமோகனை வாசிக்கும்போது உணர்கிறேன். அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டாலே அது சாத்தியம். தகுதியானவர்கள் முன்வந்து அதைச் செய்யவேண…

  17. தமிழக புத்தகக் கண்காட்சியில் புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து கி.செ.துரையால் அலைகள் இணையத்தளத்தில் பதினெட்டு தினங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டு தற்போது தமிழகத்தில் நூல் வடிவில் வந்துள்ள புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூல் தமிழக புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. கண்காட்சியில் நூல்களை வாங்குவோரிடையே இந்த நூல் பெரிதும் ஆர்வமாக வாங்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு கோடி நூல்கள் விற்பனைக்கு வந்துள்ள பெரும் புத்தகச் சந்தையில் ஈழத் தமிழரின் புதுமாத்தளன் சோகம் ஆர்பாட்டங்கள் எதுவுமின்றி அமைதியான பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த நூலின் வெளியீட்டுவிழாவும் அறிமுக விழாவும் விரைவில் டென்மார்க்கில் நடைபெறவுள…

  18. நூலில் அடங்கியவை 1. ஈழ இனப்படுகொலை துயரங்களை காட்டும் 371 புகைப்படங்கள். 2. 4 முக்கிய அட்டவணைகள் (i) ஈழத்தமிழ் இனப்படுகொலைகள்ள் 1956 -2009 . (ii) தோல்வி அடைந்த ஓப்பந்தங்களும் , பேச்சு வார்த்தைகளும், (iii) ஈழத்தமிழரின் அறவழிப் போராட்டங்கள். (iv) இலங்கைத்தீவில் தமிழரின் பூர்வீகம். 3. ஈழம் குறித்து உலகப்பிரமுகர்களின் முக்கிய கருத்துக்கள். 4.நீதி கேட்கும் 80 மனித நேய கூற்றுக்கள் 5. மனித உரிமை போராளிகளின் அணிந்துரைகள் (i).V.R.கிருஷ்ணய்யர், முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி. (ii). டாக்டர். எலன் சாண்டர் , மனித நேய மருத்துவர் அமெரிக்கா. (iii) விராஜ் மென்டிஸ், தலைவர், சரவதேச மனித உரிமைகள் கழகம…

    • 6 replies
    • 2.4k views
  19. தீபச்செல்வனின் ‘ஈழம் - மக்களின் கனவு’ சித்திராங்கன் சென்னை புத்தகத் திருவிழாவில் கவிஞர் தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற புதிய நூல் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ்நகரத்தின் பொழுது ஆகிய மூன்று தொகுப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் இது தீபச்செல்வனின் நான்காவது நூலாகும். ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற இந்நூல் ஈழம் பற்றிய உரையாடல்களையும் வாக்குமூலங்களையும் கொண்டிருக்கிறது. தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நிகழ்த்திய ‘ஈழத்து மக்களும் கனவுமே எனது ஆதர்சம்’ என்ற நேர்காணல் தொடர்ச்சியான விமர்சனத்தினை எதிர்கொண்ட ஓர் உரையாடலாகும். அதேபோல் ‘பதுங்குகுழியில் இருந்து கொஞ்சம் சொற்கள்’ என்ற நேர்காணல் …

  20. Started by வீணா,

    Michael Crichton. Sci-fi நாவல்கள் படிக்கும் வாசகர்கள் நிச்சயமாக கடந்து செல்லும் ஒரு பெயர்.இவர் பெயர் உலகம் முழுக்க பிரபலம். இவர் யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம்.உங்களில் Spielberg இயக்கிய Jurassic Park பார்க்காதவரோ அல்லது கேள்விப்படாதவரோ இல்லை என்றே கூறலாம்.அந்த படத்தை நாவலாக எழுதியவர் தான் இந்த Crichton. இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்.இவர் எழுதியது ஏறக்குறைய அனைத்துமே technical thrillers.இவரது formula ஒன்றே. “நல்ல முயற்சிக்காக செய்யப்படும் ஒரு ஆராய்ச்சி,எப்படி கெட்டவர்களின் தலையீடால் அல்லது அஜாக்கிரதையால் பேரழிவு ஏற்படுத்துகிறது “ என்பதே அது.Jurassic Park கதை கூட இவ்வகை…

  21. உலகம் - நூல் அறிமுகம் தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வெளியீடு: பன்மைவெளி, | தஞ்சை | | பக்கங்கள்: 112 | விலை: ரூ.60 | கிடைக்குமிடம்: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 44-1, பசனை கோயில் தெரு,முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. http://www.arunabharathi.blogspot.com/

  22. பி. விக்னேஸ்வரன் 1970ஆம் ஆண்டு கே.எஸ். பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன் மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச் சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷிக்கக்கூடியவர் பாலச் சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ நாவலின் முகவுரையில் விவரித்திருக்கிறார். பாலச்சந்திரனின் …

  23. Started by putthan,

    சிட்னியில் கடந்த வெள்ளியன்று தமிழருவி மாத சஞ்சிகை வெளியிடப்பட்டது.ஓவ்வோரு மாதமும் இது வெளிவர இருக்கிறது.வெளியிடும் தமிழருவி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தொடர்ந்து பல இதழ்கள் வெளிவர வாழ்த்துக்கள். விசயத்திற்க்கு வருவோம் பெயர்: தமிழருவி தமிழருவி மணியன் வந்து போன கையுடன் அவரின் பெயரில் வரும் அடை மொழியில் ஈழத்தமிழன் சஞ்சிகை வெளியிடுகிறான்.நன்றிகள் ஈழத்தமிழா உனது தமிழ் பற்றுக்கு. பங்காளிகள்: அவுஸ்ரேலியா தமிழ் சங்கம் (இந்திய தேசியவாதிகளின் சங்கம்)அதன் தலைவர் இதை வெளியிட ஏனைய வரிசையாக போய் பெற்றுக்கொண்டனர்.தற்பொழுது அவுஸ்ரேலியா தமிழ்சங்கம் இல்லாத ஈழத்தமிழரின் மேடைகளே இல்லைஎன்று சொல்லலாம். முள்ளிவாய்க்காலுக்கு முதல் இந்த சங்கத்தினர் எம்மவ…

  24. ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து http://www.mediafire.com/?44yi387ccxeavd7

  25. இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன? எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக “ஒரு பேப்பர்’ பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அளவு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் ” நேற்றுப்போல இருக்கிறது” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இதுவும் எனது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலைப் போலவே வடலி வெளியீடாக வருகிறது. ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்.. விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.