நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
-
- 5 replies
- 1k views
-
-
சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு பச்சை கேள்வி! ஈழப்பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) தோழர்கள் எழுதிய நூல், பல தரப்பினரிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த நூலின் பெயர் ‘இலங்கை&துப்பாக்கிகள் மௌனித்த வரலாறு’ என்ற இந்நூலை எழுதியவர்கள் என்.மருத்துவமணி, மா.ராமசாமி. ஈழப்பிரச்னையில் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை நிலைநாட்ட, இந்நூல் மூலம் திரும்பத் திரும்ப முயற்சிக்-கின்றனர் இருவரும். இலங்கை இனப்பிரச்னை குறித்து, சி.பி.எம். அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கைகளையும் அவர்கள் பல்வேறு கட்டங்களில் எடுத்த நிலைப்பாடுகளையும் அச்சரம் பிசகாமல், இந்நூலில் வெளியிட்டு, தங்கள் கருத்துக்களையும் சி.பி.எம். மின் நிலையை ஒட்டியே முன்வைத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ யதீந்திரா - –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலர…
-
- 0 replies
- 777 views
-
-
மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்!… தெய்வீகன். அகரன்November 27, 2018 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குட…
-
- 1 reply
- 827 views
-
-
தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள். கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான…
-
- 0 replies
- 645 views
-
-
அந்த நிலவறை மனிதன் யார்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கானன் டாய்ல் படைத்த துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான், நவீன தடயவியல் என்ற புதிய அறிவுத்துறை உருவாவதற்கே வழிவகுத்தது. குற்றம் நடந்த தலம், குற்றம் நடந்த உடலைப் பரிசீலிப்பதன் வழியாக குற்றத்துக்கான சூழலையும் குற்றவாளியையும் நெருங்க முடியலாமென்ற சாத்தியத்தைச் சுட்டிக்காட்டியவர் ஷெர்லாக் ஹோம்ஸ். ஆர்தர் கானன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்ததற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னர், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தனது மிகச் சிறந்த படைப்பான கரமசோவ் சகோதரர்களைப் படைத்துவிட்டார். ஷெர்லாக் ஹோம்ஸின் குற்ற ஸ்தலம் உடல் என்றால், தஸ்தயேவ்ஸ்கியின் ஆர்வம் உடலுக்குள் சற்றே ஆழத்தில் உள்…
-
- 1 reply
- 985 views
-
-
புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் காமிக்ஸ் புத்தகத் தொடராக வெளியிட ஆரம்பித்துள்ளது. விளம்பரம் சென்னையைச் சேர்ந்த நிலா காமிக்ஸ் என்ற நிறுவனம், வெளியிடத் துவங்கியிருக்கும் இந்த காமிக்ஸ் வரிசையில் முதல் நூல் தற்போது வெளியாகியுள்ளது. ஐந்த…
-
- 0 replies
- 658 views
-
-
இரண்டு வகை வாசிப்பு மற்றும் எழுத்து வாசிப்பை செயலூக்கமுள்ளது (active) மற்றும் செயலற்றது (passive) என பிரிக்கலாம். இன்று மீடியா ஆதிக்கம் காரணமாய் செயலற்ற வாசிப்பு அதிகரித்துள்ளது. அல்லது இப்படியும் பார்க்கலாம். புதிதாய் இணையம் மற்றும் பத்திரிகை மூலமாய் வாசிக்க துவங்கி உள்ளவர்களின் வாசிப்பு செயலற்றதாய் உள்ளது. ஐ.டியில் பணிபுரிந்து பின்னர் ஒரு முக்கிய சினிமாவில் வில்லனாய் நடித்த ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் தான் இயக்குநராக விரும்புவதாய் தெரிவித்தார். எப்படி அதற்காய் தயாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார் “நான் யாரிடமும் உதவி இயக்குநராய் பணி புரியவில்லை. நானாகவே கற்றுக் கொள்கிறேன்” “எப்படி? சினிமா பற்றின புத்தகங்கள் படிக்கிறீர்களா?” “நான் புத்தகங்கள் அ…
-
- 1 reply
- 1.6k views
-
-
அனொனிமா – முகம் மறைத்தவள் -இளவேனில் அ.பள்ளிப்பட்டி- வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும் குருதிக் கறைகளாய் உறைந்து கிடக்கும் அத்தனை போர்களுக்கும் ஒருமித்த கருத்தியல்கள் சில இருக்கின்றன. போர் ஆண்களுக்கானது. வெற்றி, தோல்வி பேதமின்றி பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும். ஒவ்வொரு போரும் ஆயிரமாயிரம் அங்கவீனர்களை, அனாதைகளை, விதவைகளை, மனநிலை பாதித்தவர்களை, புலம்பெயர்ந்தோரை பரிசளிக்கும். வீரம், விடுதலை, இனமானம் இப்படி ஏதோ ஒரு காரணியை வைத்துப் போர்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. காலந்தோறும் எல்லா அரசுகளும், அதிகாரமையங்களும் போருக்குத் தயாராகவே காத்துக்கிடக்கின்றன. போர்களுக்கான தயார்நிலை, ஆளுமை, வெற்றி இவைகளைக் கொண்டே தேசங்களின் வளர்ச்சியும், பெருமையும், ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
காடு நாவல்: ஒரு வாசிப்பு. - சுயாந்தன் நவீன இலக்கியம் பலரது படைப்பின் தொடக்கத்துடன் நம்மிடையே அறிமுகமாகிறது. அந்தப் படைப்புக்களில் ஒரு சிலவே நம்மை அதற்குள் செல்ல அனுமதிக்கிறது, நம்மை அப்படைப்பின் சூழலுடன் ஒன்றிணைய வைக்கிறது, நமக்கான இலக்கியம் இதுதான் என்று உணரவும் தலைப்படுகிறது. ஜெயமோகனின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகக் காடு நாவலைக் கூறுவேன். அதனை அவரது படைப்பாக மட்டுமன்றி தமிழின் சிறந்த செவ்வியல் கூறுகள் கொண்ட ஒரு நாவலாகவும் குறிப்பிடலாம். கிரிதரன் மலைக் காட்டுக்குள் சென்று மாமனாரின் கொன்ராக்ட் வேலைகளுக்கு உதவி செய்வதும் அங்கு வேலையாட்களாக உள்ள குட்டப்பன், ரெசாலம், குரிசு மற்றும் எஞ்சினியர் நாகராஜ அய்யர் போன்ற கதாபாத்திரங்களும் கிரிதரன் …
-
- 3 replies
- 801 views
-
-
தினக்குரல்' வாரமலரில் வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட முதல் முப்பது கட்டுரைகளை கைதடி 'சிவகாமி பதிப்பகம்' தொகுத்து நூலாக வெளியிடுகின்றது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடி, கல்லூரி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கல்லூரியில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை பண்டாரவளை கல்வி வலய தமிழ் பிரிவு கல்விப் பணிப்பாளர் சி.மதியழகனும் வாழ்த்துரைகளை 'ஞாயிறு தினக்குரலின்' பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப்…
-
- 0 replies
- 575 views
-
-
புத்தகம்ன்னா புத்தகம்… அப்படி ஒரு புத்தகம். படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம். . எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான். . லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை எண்ணற்றவர்களிடம் உண்டு. அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம். . ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர் யார்? எப்படிப்பட்டவர்? எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது. . அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்…. தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில். . அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது. தமிழிலேயே தடுமாறும் நான் இந்த இங…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
மிக பிரபலமானவர்களை கொண்டு வெளியீடு செய்கின்றீர்கள் .வாழ்த்துக்கள் சாத்திரி .
-
- 7 replies
- 918 views
-
-
யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. திருமதி மைதிலி தயாபரன் எழுதிய சொந்தங்களை வாழ்த்தி (நாவல்), வாழும்காலம் யாவிலும் (நாவல்) மற்றும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் (கவிதை) ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ். இலக்கியக் குவியத்தின் தலைவர் வேலணையூர் தாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நூல்களுக்கான வாழ்த்துரையை கவிஞர் எஸ்.சத்தியபாலனும் அறிமுக உரையை சு.சிறீக்குமரனும் ஆய்வுரைகளை சி.ரமேஸ், க.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். h…
-
- 0 replies
- 664 views
-
-
கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
இமிழ் ; கதை மலர் April 20, 2024 — அகரன் — இமிழ் என்றால் ‘இனிதான முழக்கம்’ என்ற பொருள். ‘முழக்கம்’ எப்படி இனிதாகும்? என்ற கேள்வி எழும். ஒருசொல்லை உருவாக்குவது அப்படி ஒன்றும் இலகுவானதல்ல. பழந்தமிழரின் பாடல்களில் எங்கெங்கு‘இழிழ்’ பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்து இனிய முழக்கத்தை புரிந்துகொள்ளலாம். கடற்கரையை பலரும் விரும்புவர். நாம் எவ்வளவு சிறியவர் என்று அறிவித்தபடி கடல் இருக்கும். கடலை பார்க்க முதலே அதன் ஓசை காதுக்கு வந்துவிடும். அந்த அலைகளின் இசையை ‘இழிழ்’ என்கிறது ‘பாடு தமிழ் பனி கடல் பருகி…’என்ற பழந்தமிழ்ப் பாடல். உலகமெல்லாம் சூரியனை பூமி தொலைக்கும் நேரத்தில் சில பறவை இனங்கள் கூட்டமாக இருந்து அன்றைய…
-
- 0 replies
- 746 views
-
-
[size=4]இந்திய வரலாறு ஓர் அறிமுகம்[/size] [size=3][size=4]டி.டி. கோசாம்பி[/size][/size] [size=3] [/size] [size=3][size=4]வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 656, HB, விலை: ரூ. 350/-[/size][/size] [size=3][size=4]இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்.’ இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
01. யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஈழத்து கவ…
-
- 8 replies
- 6k views
-
-
இந்த நூற்றாண்டில் மேற்கொண்ட மிகப் பெரிய வாதை என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் உள்ளத்தில் உள்ள தேசப் பற்றை அழிக்கும் நோக்கில் மேற்கொண்ட வாதையே என்று கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் உரை வருமாறு, ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவராக வெற்றிச்செல்வி அக்காவினுடைய ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூல் வெளியீட்டு …
-
- 0 replies
- 602 views
-
-
இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு நானும் போனேன். மண் மறவா மனிதர்கள் என 17 பேரைப்பற்றி வி.ரி. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு எழுதி புத்தகமாக வெளியிட்டார். அணிந்துரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் வாழ்த்துரையை கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசுவும் எழுதியிருக்க மேடையில் ஒவ்வொருத்தர் பற்றி ஒவ்வொருத்தர் பேசினர். 1- சர்வதேசரீதியில் புகழ்பெற்ற சண் பற்றி முன்னைநாள் ஈழநாட்டில் வேலைசெய்தவரும் ரிரின் மற்றும் தீபம்தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியருமான கந்தசாமி அவர்களும் 2- டானியல் பற்றி வண்ணை தெய்வம் அவர்களும் 3-பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் பற்றி நடிகர் கோமாளிகள்புகழ் அப்புக்குட்டி அவர்களும் 4- எல்லோருக்கும்இனிய மனிதர் சிவகுருநாதன் பற்றி அவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும் கதையெங்கும் இழையோடி நிற்…
-
- 0 replies
- 514 views
-
-
பயங்கரவாத்திற்கு எதிரான போர், இறுதி யுத்தம் என்றெல்லாம் இராசபக்சேக்களால் சித்தரிக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு முடிவடைந்துவிட, அதன் பின்நிகழ்வுகள் நீடித்துவரும் ஒன்றாக, நேற்றுவரை போராளிகளாகவும், மாவீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் இருந்து வந்தவர் மீதான போற்றிப்பாடல்கள் இன்று வசைகளாக மாறிவிட்டன. விடுதலையின் மீட்பர்களான தமிழ் ஆயுத தாரிகள் குறிப்பாக பெண் விடுதலைப் போராளிகள் களச்சாவடைந்தது பற்றியல்ல அவர்கள் சோதனை சாவடிகளில் வைத்து காட்டிக் கொடுத்தவர்களால் கைது செய்யப்பட்டதோ, சிங்களப்படையிடம் சரணடைந்த பின்னர் தடுப்பு முகாமுக்குள் வைக்கப்பட்டதன் பின்னரானவையே முக்கியத்துவம் பெறுவதாய் இருக்கின்றன. இவை ஒருபடித்தான அல்லது நிலைத்த பார்வை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தந்த…
-
- 0 replies
- 694 views
-
-
புலம்பெயர் இலக்கியம் முனைவர் க.பூரணச்சந்திரன் பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகர…
-
- 0 replies
- 3.7k views
-
-
“தியாகமும் வீரமும் மலையென குவிந்தது தோல்வி அதளபாதாளத்திற்கு சென்றது” ஏன் கேட்டுப்பாருங்கள்..... தமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற நூல் அண்மையில் அவுஸ்திரேலியா வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவ் அறிமுக விழாவின் போது நூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய ஏற்புரை.நன்றிவெளியீடு தமிழாய்வு மையம் லண்டன்.
-
- 0 replies
- 625 views
-
-
ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின. வானொலி ஒலிபரப்புகள் கேட்பவர்களை வந்தடைய மூல காரணமாக விளங்குபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள். அறிவிப்பாளர் என்பதை விட ஒலிபரப்பாளர் என்ற சொல் இவர்க ளின் பணியை முழுமையாக எடுத்துக் கூறும். ‘இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்’ என்ற நூல் இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கை வானொலிய…
-
- 0 replies
- 493 views
-