• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

கனடா பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் யாழில் வெளியீடு!

Recommended Posts

Writer-Nirupa-s-Idaaveni-Book-Release-in-Jaffna.jpg

கனடா பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் யாழில் வெளியீடு!

கனடாவில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் என்பவர் நிகழ்த்தியதுடன் கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையை மதுஷா மாதங்கியும் வாசிப்பு அனுபவத்தை பிறைநிலா கிருஷ் ஆகியோரும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலம்பெயர் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுனைக்குது, அச்சாப்பிள்ளை ஆகிய இவரது முன்னைய படைப்புக்கள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் புதிய கோணங்களில் பெண் எழுத்துக்களும் வாசிப்புக்களும் பெருகவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றுவதாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Writer-Nirupas-Idaaveni-Book-Release-in-Jaffna-9.jpg

http://athavannews.com/கனடா-பெண்ணிய-எழுத்தாளர்/

Share this post


Link to post
Share on other sites

ஆண்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிட்டாங்களா?

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, Kavi arunasalam said:

ஆண்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிட்டாங்களா?

அவர்கள் ஆணிய வெளியீட்டுக்குப் போய் இருப்பார்கள்.

எமது சமூகம் 7 சமுத்திரம் தாண்டி வாழ்ந்தாலும்.. ஆண் பெண் பிரிவினை.. சாதிப் பிரிவினை.. மதப் பிரிவினை.. பிரதேசப் பிரிவினை இவற்றை கட்டிக்காப்பதில் கண்ணும் கருத்துமானோர்.

முதலில்.. இந்தப் பெண்ணியம்.. ஆணியம்.. என்ற கருத்துருவாக்கங்களை அழிக்காமல்.. ஆண் பெண்.. மனிதர்களிடையே இயற்கையான இயல்பான ஒன்றிப்பை இயல்பாகக் காண முடியாத சூழலோ தொடரும். 

கற்காலத்தில் வாழ்ந்த மனிதனிடம்.. இப்படியான கருத்துருவாக்கங்கள் இருக்கவில்லை. அவன் பிற உயிர்களைப் போல.. ஆண் பெண் இயற்கையான வேறு பாடுகள் தவிர இதர மறந்து வாழ்ந்தான். ஆனால்.. இன்று.. அந்தப் பிரிவினையே.. பலருக்கு.. வெட்டிப் புகழுக்கும்.. வீராப்புக்கும் வழிவகுக்குது. இதில சமூகத்துக்கு ஒவ்வாத சமூகப் பிறழ்வுகளை செய்யவும் வழிதவறி போவதற்கும் புரட்சி என்று பதம் வேறு,

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

84406209_10219958461768078_6845384761163

ஆண்களும் வந்துதான் இருக்கின்றனர்

 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்களும் வந்துதான் இருக்கின்றனர்

படம் பார்த்தேன். 16 பெண்களும் 17 ஆண்களும். (Photo எடுத்தது ஆணா பெண்ணா என்று  தெரியாததால் கணக்கில் சேர்க்கவில்லை)

கேள்வி -  பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவில் உங்கள் சாடை தெரிகிறது. உறவா?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்
  • இதையே மாத்தி இப்படிப் போட்டால் என்ன தமிழ் சிறி? புத்திசாலிக்கு அவன் முட்டாள் என்பது தெரியும் முட்டாளுக்கு அவன் புத்திசாலி என்பது தெரியாது
  • தலைப்பு சற்று சலனமாக இருக்கிறது  இதை நல்ல தமிழில் மாற்ற முடியாதா? 
  • நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். வந்த பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது. கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவர்கள் வியாபாரிகள் அல்ல மாறாக நுகர்வோரே அவைகளை அதிகமாக வாங்கி வீட்டில் வைப்பில் வைத்துக் கொள்கிறார்கள். பதுக்கி வைத்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்று இலாபம் பார்ககலாம் என்று சிலர் எண்ணக் கூடும் ஆனால் நிலைமையைப் பயன்படுத்தியும் இலாபம் பார்க்கலாம் என்றும் சிலர் செய்து காட்டுவார்கள். ரொயிலற் ரிசு வாங்குவதற்கு யேர்மனியில் சனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது Dortmund நகரில் உள்ள Schuerener Backparadies பேக்கரி உரிமையாளர் Timo Kortuemக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது பேக்கரியில் செய்யப்படும் கேக்குகளை ரொயிலற் ரிசு வடிவத்தில் உருவாக்கி கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைத்தார். அந்தக் கேக்குகளைப் பார்த்த வாடிக்கையாளர்கள் “இதென்ன பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு?” என்று வியந்து போனார்கள். அந்தளவுக்கு அவை அச்சு அசலாக ரொயிலற் ரிசு போலவே இருந்தன. Timo Kortuem முதலில் மாதிரிக்கு எட்டு கேக்குகளைத்தான் செய்து பேக்கரியில் விற்பனைக்கு வைத்தார். அவை உடனடியாக விற்றுவிட இப்பொழுது நாளொன்றுக்கு எண்பது கேக்குகளைச் செய்கிறார். அத்தனையும் விற்றுவிடுகின்றன. “ஒரு நாளில் எண்பது கேக்குகளை வடிவமைப்பதற்கே அதிக நேரம் எடுக்கிறது. எங்களிடம் மா, மற்றும் தேவையான பொருட்கள் போதியளவில் இருக்கின்றன. வாரத்தில் ஏழு நாட்களும் எங்கள் பேக்கரி மக்களுக்காகத் திறந்திருக்கும்” என்று Timo Kortuem சிரித்தபடி தொலைக்காட்சியின் நேர்காணலில் சொல்கிறார்.  
  • இந்த முறையில் செய்து சாப்பிடவில்லை, செய்து பார்க்கனும், frozen மரவள்ளியும் முடிந்துவிட்டது