Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நக்கீரன், கவிஞர். தமிழ்ப் பசுமை இலக்கியச் சூழலில் இயங்கிவருபவர். ‘காடோடி’ இவரது முதல் நாவல். இந்தாண்டு ஜனவரி சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி அடையாளம் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அந்நாவலில் இருந்து ஒரு பகுதி... மறுநாள் காலையில் அலுவலக அறையில் வேலை. ஆயாக்... யாக்… யாக்… யாக்... இருவாசிகளின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இவை சிறு கூட்டமாக இங்கு தென்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சாலையின் விளிம்பிலும், பட்டை உரிக்கப்படும் திடல் ஓரங்களிலும் பூச்சிகளைப் பிடித்துத் தின்றுகொண்டிருக்கிறது. துவான்... துவான்... யாருடைய குரல்? வெளியே எட்டிப் பார்க்கிறேன். மரம் வெட்டுபவரின் உதவியாள். இவர் இந்நேரம் மரம் வெட்டும் இடத்திலல்லவா இருக்க வேண்டும்? ஆனாலும் சங்கிலி வாளின் ஒலியைத் தொடர…

  2. தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று பெருமிதம் மிக்க மரபு இருக்கிறது. நம்பிக்கையூட்டும் சிறுகதைகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. ஆனாலும், நம்பிக்கையூட்டும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கப் புறந்தருவது ஒரு கதை சொல்லியின் சாமர்த்தியம்தான். அது ஷோபாசக்திக்கு இருக்கிறது. அதை மறுபடியும் மெய்ப்பிக்க வந்து நிற்கிறான் ‘கண்டிவீரன்’. பத்துக் கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைக் கருப்புப் பிரதிகள் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது. யாரும் யாரையும் நம்ப முடியாத பதற்றமிகு பின்னணியில், சிங்கள ராணுவமும் போராளி இயக்கங்களும் சந்தேகத்தின் பேரில் எளிய உடல்கள் மீது நிகழ்த்திய குரூரங்களைத் தனது எழுத்தின் வழியாக வாசிப்பவரிடம் கடத்துகிறார் ஷோபா. உள்ளடக்கம் சார்ந்து இந்தக் கதைகள் எதிரும் புதிருமான அரசியல் வ…

    • 0 replies
    • 2.2k views
  3. http://inioru.com/?p=26837 ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன் நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன் - மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தேரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்…

  4. குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக் கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங் களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர் பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல். குழந்தைகள் போடும் சத்தமே பெற் றோருக்கு வேதனை தரக்கூடியது. இது பற்றிப் பேசும் கோச்சார்க், குழந்தை நடக்கும்போது நடக்கும், கடிக்கும்போது கடிக்கும் என்று சொல்கிறார். ‘எல்லா நரிகளும் தந்திரம் மிக்கதா, நி…

    • 1 reply
    • 833 views
  5. Road to Nandikadal வாசித்து முடித்துவிட்டேன். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரத்தின நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதல் வரை சொல்வதே இந்த நூல். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பிய புலி ஆதரவாளர்கள் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் கால் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூட- சிறிதும் மரியாதை கொடுக்காமல் இருப்பதை வாசித்திருந்தால், புகழைப் பதிந்தவர்கள் தம் பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள். புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இட…

  6. ஈழத்து எழுத்தாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான தீபச்செல்வன் அவர்களின் “பயங்கரவாதி” நாவல் அறிமுக விழா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 10.01.2024 (புதன்கிழமை) அன்று நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு.கு.துவாரகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம் அவர்களும், சிறப்பு அதிதியாக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். நூலின் சிறப்புப் பிரதியினை பிரதம அதிதி, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அவர்கள் வெளியிட்டு வைக்…

    • 0 replies
    • 455 views
  7. யாழ் நூலின் தோற்றம் November 15, 2023 ( செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.) சுவாமி விபுலானந்த அடிகளாரைப் பற்றிய வாசிப்பு அனுபவங்களினூடாகப் பயணிக்கும்போது யாழ்நூலின் தோற்றத்திற்கு அடிகோலிய இரண்டு காரணிகளை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒன்று ‘சிலப்பதிகாரம்’ மீது அடிகளாருக்கு இருந்த அதீதபற்று. மற்றது மட்டக்களப்பு வாவியின் ‘பாடும்மீன்’ இசையில் அடிகளார் தன் மனதைப் பறிகொடுத்தமை. கிழக்கிலங்கையில் அடிகளார் பிறந்த பூமியான காரைதீவுக் கிராமத்தில் அமைந்துள்ள ‘கண்ணகை அம்மன் ஆலயம்’ பிரசித்தமானது. இளமைப்பருவத்தில் தன் தாயாரான கண்ணம்மையுடன் இவ்வாலயத்திற்குச் சென்று வழிபட்டதோடு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவிலே – கண்ணகை அம்மன் குளுர்த்திச் சடங்கிலே…

  8. முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவே அவன் தீக்குளித்தற்கு காரணம் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். மாநில அளவில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஒருவனால் வெறும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல. குடிகார அப்பா, குடும்பத்தை சுமக்கும் தாய், படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச்செல்லும் பிள்ளைகள். இது சினிமா கதையல்ல. முத்துக்குமாரின் செயல் போலவே அவன் வாழ்க்கையும் வியக்கத்தக்கது!

    • 1 reply
    • 2.6k views
  9. மகள் சோம.அழகுவின் 'அனுமன் பாரதம்' நூல் காவ்யாவின் வேறு சில நூல்களுடன் ஐயா பேரா.சாலமன் பாப்பையா அவர்களின் திருக்கரங்களால் நேற்று (19 அக்டோபர் 2023) மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் அரங்கத்தில் வெளியிடப்பட்டது அழகுவின் பெருமை. 'மூட்டா (பேரியக்க) விஜயகுமார்' என்று அறியப்பெறும் பேரா.பெ.விஜயகுமார் அவர்கள் நூலினை மேடையில் பெற்றுக் கொண்டமை அவளுக்கு மற்றுமொரு பெருமை. புதுமைப்பித்தன் தமது காலத்து அரசியல் சூழலை 'நாரத ராமாயணம்' என்று தலைப்பிட்டு ஒரு சிறிய அரசியல் அங்கத (political satire) நாடகமாக அரங்கேற்றியிருந்தார். அப்போதிருந்து இப்போது வரையுள்ள அரசியலை புதுமைப்பித்தனின் விரல் நுனியைப் பிடித்துக் கொண்டு சோம.அழகு அங்கத நடை பயின்றமை 'அனுமன் பாரதம்' என்ற பெயரில் 'நூறு பூக்கள்' பதிப…

  10. ஐந்து நூல்கள் விமர்சன விழா

  11. குமிழி நாவல் மீதான உள்ளடக்க உரையாடல்: அசுரா நாதன் ஆயுதப் போராட்ட அனுபவங்களை சுமந்து வரும் இலக்கியப் பிரதிகளின் தொடர்ச்சியாக ‘குமிழி’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. 1985ம் ஆண்டில் வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் நாவலின் உரையாடல் பகுதியாகவும், தனித்துவமாகவும் ரவியின் ‘குமிழி’ நாவலின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது. கோவிந்தனும், ரவியும் இருப்பினும் ‘புளட்’ இயக்க தோழர்களான இரண்டு படைப்பாளிகளின் காலமும், தேர்வும் வெவ்வேறானவை. கோவிந்தன் இலட்சிய வேட்கையுடன் புரட்சிகரமான ஒரு ‘மாளிகையை’ கட்டியெழுப்பியவர். தாம் மேற்கொள்ளும் விடுதலைப் போராட்டமே சர்வதேசப் புரட்சிக்கும் சாதகமாக அமையப்போகிறது, அதற்காகக் கட்டப்பட்ட ‘மாளிகையே’ புளட் எனும் அமைப்பாக நினைத…

  12. இடைவெளிகளை நிரப்பும் எழுத்து: ஆர். காளிப்பிரஸாத் வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின் ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன. ஜெப்னா பேக்கரி நம் தலைமுறையில் நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இரு…

  13. தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என்.செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்ல நாவல் எது என தேடினேன். ஆனந்த விகடன்படித்ததில் டாப் டென் என்ற தலைப்பில் 2006ல் பல எழுத்தாளர்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். சி மோகன் டாப் 10 நாவல்கள் 1.இடைவெளி 2. புயலிலே ஒரு தோணி 3. விஷ்ணுபுரம் 4. நினைவுப் பாதை 5. நாளை மற்றுமொ…

  14. பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" தமிழீழ விடுதலைப் போர்பற்றிய அற்புதப் படப்பிடிப்பு! - பேரா. அய்யாசாமி நன்றி : தென்செய்தி கடந்த ஆண்டில் நான் படித்த நூல்களில் என்னைக் கவர்ந்தது எது என்று கேட்டால் அன்றன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்று தயங்காமல் விடை கூறுவேன். இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நடத்தி வரும் உரிமைப் போராட்டங்களை எடுத்துக்கூறி அவை வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறார் பாலசிங்கம். இவற்றை யெல்லாம் சர்வதேச அரசியல்வாதிகளுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் அவரே அதனைத் தமிழாக்கியிருக்கிறார். சிங்களவர்கள் திருப்பித் திருப்பிக் கூறுவதைப்போல் தமிழர்கள் க…

  15. எனது பார்வை ------------------------- பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். அமெரிக்காவில் பிறந்த John Perkins ஒரு பொருளாதார அடியாளாக வேலை செய்து பின்னர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அந்த வேலையை விட்டு வெளியே வந்து இந்த புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் ஆரம்பத்தில் ஒரு ஜெம்ஸ் பாண்ட் கதை போல் தோன்றினாலும் அடுத்து வந்த ஒவ்வொரு பகுதியும் நாமும் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க பேரரசின் அடியாள் வேலையை தான் செய்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வையே ஏற்படுத்துகின்றது. இதுவரை நாம் பார்த்து வந்த உலகை வேறொரு கண்களால் பார்க்க தூண்டியது. எம் கண்முன்னே…

  16. பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது: 1. பூர்வகாலம் - குமரி நாடும் ஈழமும் 2. ஈழமும் வரலாறும். ஐ) இலங்கை ஐஐ) ஈழமும் விசயனும் ஐஐஐ) ஈழமும் சிங்களமும் ஐஏ) ஈழமும் பழைய நூல்களும் ஏ) தமிழரும் திராவிடரும் ஏஐ) சூரன், சிங்கன், தாரகன் 3. விசயன் வருகை ஐ) விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும் ஐஐ) படை எழுச்சிகளும் விளைவும் ஐஐஐ) கலிங்கமாகன் படை எழுச்சி ஐஏ) ஈழமும் தமிழர் ஆதிக்கமும். மேலும் இந்நூல் பற்றிய தகவலுக்கு http://www.unarvukal.com/forum/lofiversion....php?t3534.html

    • 0 replies
    • 1.9k views
  17. –மலையகத் தமிழர்களின் போராட்டங்களை எடுத்துக்கூறும் ”வெந்து தணியாத பூமி” -அ.நிக்ஸன்- இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் வாழும் வரதன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்த ஒருவர். மலையகத் தமிழர்களின் விடுதலையும் போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்தைக் கொண்ட வரதன். ஆரம்பகாலங்களில் மலையகத்தில் வாழ்ந்த காலங்களில். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறைகள் பற்றி இந்த நூலில் விபரிக்கிறா…

  18. ஜெயமோகனின் 'வெண்கடல்' இளங்கோ வெண்கடலில் இருக்கும் கதைகளை ஏற்கனவே ஜெயமோகனின் தளத்தில் வாசித்தவையென்றாலும், நூல் வடிவில் இன்னொருமுறை பொறுமையாக கடந்த சில நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தேன். பலருக்குப் பிடித்த 'அறம்' கதைகளின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட கதைகள் என்பதால் இவையும் 'உணர்ச்சி' பொங்க எழுதப்பட்டிருக்கின்றன. ஜெயமோகனின் கதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர்க்கு இதில் ஜெயமோகன் பாவித்த எழுத்து நடையை எளிதாக வித்தியாசம் கண்டுகொள்ளமுடியும். தற்கால சிறுகதைக்கான வழியை விட்டு பின்நகர்ந்து, இதிலுள்ள அநேக கதைகள் உரையாடல்களால் மட்டும் நகர்த்திச் செல்லப்படுகின்றது. எனவே எளிமையும், பாத்திரங்களிடையிலான மெல்லிய முரண்களும் எந்த வாசகரையும் எளிதில் உள்ளிழுத்துக்கொள்ளும். …

  19. வணக்கம் ஆயுத எழுத்து.பாகம் 2.அடுத்த வாரத்திலிருந்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். பக்கம் .288 அட்டை.நூல் வடிவமைப்பு. ஜீவமணி விற்பனை உரிமை பூபாளம் புத்தகப் பண்ணை பிரதியின் விலை. 350 இந்திய ரூபாய்கள். ஐரோப்பா இங்கிலாந்து தபால் செலவுடன் 15 யூரோக்கள் கனடா, அமேரிக்கா தபால் செலவுடன் 25 டொலர்கள். அவுஸ்திரேலியா. நியூசிலாந்து தபால் செலவுடன் 25 அவுஸ்திரேலிய டொலர்கள். தொடர்புகளுக்கு. சிராஜுதீன். வாட்ஸ் அப். +91 94430 66449 வங்கி கணக்கிலக்கம். Mohammed sirajudeen, INDIAN BANK, ASHOK NAGAR BARANCH, A/C NO: 786149344 IFSC CODE: IDIB000A031 கனடாவில் காலம் செல்வம் அவர்களிடமும். இலங்கையில் வடக்கில் கவிஞர் கருணாகரனிடமும். கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் அனைத்துக்கும் பாத்திமா புத்தக…

  20. இந்த வருடத்தின் முதல் நாள். சோமிதரனோடு பேசிக் கொண்டிருந்த போது தமிழகத்தின் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடத் தயாராயிருந்த நண்பர் அகிலனது புத்தகமொன்று வெளிவரமுடியாத சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். காரணம் அப் புத்தகத்தின் பெயர்! மரணத்தின் வாசனை ! பெயரினை மாற்றுவது குறித்த தமிழக பதிப்பகம் ஆலோசித்ததாகவும் அதற்கு உடன்படவில்லையெனவும் அகிலன் சொன்னார். ஓ.. அப்படியா எனப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நாங்களே வெளியிட்டால் என்ன என்ற யோசனை உதித்த போது பதிப்பக ஐடியாக்கள் எதுவும் இல்லை. சோமிதரன் வேறு எட்டாம் திகதி கண்காட்சி - பத்தாம் திகதி புத்தகத்தைக் கொண்டு வரலாம் என மூன்றாம் திகதி சொன்ன போது புளுகம் வேறு பிடிபடவில்லை. சரி செய்வம் எனக் களம் இறங்கியபோது விநியோகம் விற்…

  21. ‘உலகம் பலவிதம்’ : நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு- சில குறிப்புகள் இந்த மாதம் 4ஆம் திகதி (04.03.18) ஒஸ்லோவில் ஒரு புத்தக அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 80 – 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகளின் மீள்பதிப்புப் புத்தகம் அது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1855- 1955) எழுதிய பத்திரிகை எழுத்துகள், புதினங்கள், உரைச்சித்திரங்கள், சிறுகதைகள், நாவல்கள் உள்ளடங்கிய 700 பக்க தொகுப்பு நூல் ஆகும். ‘நூலகம்’ அமைப்பினரும், யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் இணைந்த முன்னெடுப்பிலும் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் உருவாக்கத்தில் நோர்வேயைச் சேர்ந்தவர்கள் சிலரின் கணிசமான பங்களிப்பும் இருந்திருக்கிறது. இந்தப் பதிவு, …

  22. புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! தமிழில் எத்தனையோ புத்தகங்கள் தற்போது மறுபதிப்பு இல்லாமல் நின்று விட்டது. ஆங்கிலத்தில் கிடைக்காத புத்தகங்களையும் வாங்குவதற்கு வசதி உள்ளது. தமிழிலும் இது போன்ற வசதியை ஏற்படுத்த http://tamilbookmarket.com/ என்ற வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. புதிய புத்தகங்கள், அரிதான புத்தகங்கள், அதிகளவில் பிரபலம் இல்லாத புத்தகங்கள், பரவலாக அறியப்படாத எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் என அனைத்துப் புத்தகங்களையும் இந்த "தமிழ் புத்தகச் சந்தை' வெப்சைட்டில் வாங்க முடியும்.

  23. கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.