மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழாவின் இறுதிநாளான தீர்த்ததிருவிழா அன்று 'கண்டறியா விழா' என்று அறியப்படுகின்ற இந்திரவிழா, திங்கட்கிழமை (04) கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறை ஊறணி தொடக்கம் ஊரிக்காடு வரையிலான 03 கிலோமீட்டர் தூரத்துக்கு வீதியின் இரு மருங்கிலும் வாழைகள், மூங்கில்கள் கட்டப்பட்டு பிரமாண்டமான மின்னலங்காரங்களுடன் மக்கள் வெள்ளம் திரள 08 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன. ஊறணி தீர்த்தக் கடற்கரையில் கடலுக்குள் மேடை அமைக்கப்பட்டும் குச்சம் ஒழுங்கைக்கு முன்னால் தொங்குபாலம் அமைக்கப்பட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், நெடியகாட்டில் பிரமாண்ட பிள்ளையார் உருவமும் வேம்படியில் சிவனும் வல்வெடித்துறை சந்தியில் பிரமாண்ட சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 ஜோதிலிங்கங்கள் நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரபித்து வைத்தார். சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்), மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீ சைலம் (ஆந்திரா), மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்), ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்), வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்), பீமாநாதேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்), இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு), நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்), விசு…
-
- 1 reply
- 808 views
-
-
இன்றைய காலகட்டத்தில் கோயில்கள் அனைத்தும் நவநாகரீகத் தன்மை மிக்கதாகவும் பொருளாதார ரீதியில் உயரிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களையும் மாறியுள்ளதோடு வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு அதனை பயன்படுத்தும் வகையில் அமைவதோடு கோயில்சார் நிர்வாகக் குழுக்களுக்கு இடையேயான சுரண்டலும் அதன் காரணமான மனக்கசப்புக்களும் போட்டி மனப்பாங்குகளும் மிகஅதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் இங்கு தெய்வங்களின் அருள்வாக்குகள் தெய்வங்கள் பேசுவது என்பது இவ்வகை கோயில்களில் மந்தகதியாகவே காணப்படுகிறன. ஆனாலும் பழமை வாய்ந்த ஆடம்பர, அலங்காரங்கள் இல்லாத எளிமையான கோயில்களில் காணப்படும் மனச்சந்தோஷம் மேற்குறித்த வகைக்கு உட்ப்பட்ட கோயில்களில் கிடைப்பத…
-
- 0 replies
- 737 views
-
-
வர்ணமும் ஆஸ்ரமமும் செம்பரிதி அறிமுகம் பண்டைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நான்கு அடுக்குகளைக் கொண்ட இரு வகைச் சமூகப் பகுப்பமைப்பு என்று வர்ணாசிரம தர்மத்தைக் கூறலாம் இங்கு வர்ணம் என்பது வர்க்கத்தையும், ஆஸ்ரமம் என்பது தனிமனித வாழ்வுநிலையையும் குறிக்கின்றன. இந்த இரட்டைக் கோட்பாடு நடைமுறை இந்து சமயத்தின் தூண்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. நான்கு வர்ணங்கள் இவை- 1.பிராமண 2.க்ஷத்திரிய 3.வைஸ்ய 4.சூத்திர நான்கு ஆஸ்ரமங்கள் இவை 1.பிரம்மச்சரியம் 2.கிருஹஸ்தம் 3.வனபிரஸ்தம் 4.சந்நியாசம் ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்ற…
-
- 1 reply
- 1.9k views
-
-
இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..! அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியப…
-
- 0 replies
- 2.8k views
-
-
திருக்கோணஸ்வர கோவில் ரத பவனி... வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் கடந்த மூன்றாம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. (படங்கள்: எஸ்.சசிகுமார்) http://www.tamilmirror.lk/144237#sthash.zjcXAiaR.dpuf
-
- 1 reply
- 860 views
-
-
வெளியில் தெரியாத விஞ்ஞானிகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் உள்ளனர். அதுவும் விவசாயத் துறையில் அந்த எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒருவர்தான் சதாசிவம். இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மரம் வளர்ப்புக்காக 1997-ம் ஆண்டு இந்திய அரசின் 'இந்திரா பிரியதர்ஷினி விருஷ்சமித்ர விருது' பெற்றுள்ளார். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்க, மரங்களை வளர்த்து லாபம் பெறும் நுணுக்கத்தை நிரூபித்துள்ளார். தமிழ்நாடு முழுக்க பல நூறு ஏக்கரில் பலன் தரும் மரங்களை நட்டு, அவற்றை காடுகளாக உருவாக்கியுள்ளார். பலரையும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்…
-
- 3 replies
- 2.6k views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தோத் திருவிழா கடந்த பதின்மூன்று வருடங்களின் பின்னர் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்று காலை இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுகப் பிள்ளையார் உள்வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்று முற்பகல் 10 மணிக்கு சுவாமி அழகிய திருத்தேரில் ஆரோகணித்தார். தேரில் சுவாமி ஆரோகணித்ததும் தேரின் முன் தேங்காய்கள் உடைக்கப்பட்டு முற்பகல் 11 மணிக்க சுவாமி தேரில் வெளிவீதயுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது. அடியவர்கள் பக்திப்பரவசமாக தேரின்வடம் பற்றி இழுத்து வர அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். http://www.malarum.com/article/tam/2015/04/14/9607/13-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%…
-
- 3 replies
- 1.5k views
-
-
மறுபேச்சின்றி கீழ்ப்படிதல் - விவேகானந்தர் யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும்போது…
-
- 15 replies
- 4.4k views
-
-
அளவெட்டி கும்பழாவளை அருள்மிகு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் நேற்று புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓத மேளவாத்தியங்கள் முழங்க தேவார திருவாசகங்கள் பாடப்பட்டு இராஜ கோபுரத்திற்கு குடமுழுக்கு அந்தணர்களினால் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகளவான அடியவர்கள் பல இடங்களில் இருந்தும் வருகைதந்து கலந்துகொண்டார்கள். http://www.malarum.com/article/tam/2015/04/09/9544/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%…
-
- 1 reply
- 652 views
-
-
எது உன்னுடையது..? ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள், "வா மகனே, நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா..? இவ்வளவு சீக்கிரமாகவா..? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது..?" "மன்னித்துவிடு மகனே, உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது..?" "உன்னுடைய உடைமைகள்..!" "என்னுடைய உடைமைகளா..!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.....?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா...?" "அவை கண்டிப்பாக உன்னுடை…
-
- 9 replies
- 1.3k views
-
-
வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது. . 1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது. . வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம். . புறாப்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
கல்முனை நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு அபிஷேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி காலை 6 மணிக்கு எம்பெருமான் தேர் பவனி ஆரம்பமானது. கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும் விநாயகப் பெருமான் மற்றொரு தேரிலும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற நிகழ்வு அனைத்து பக்த அடியார்களின் உள்ளங்களையும் பரவசப் படுத்தியது. பிரம்ம ஸ்ரீ சுந்தர செந்தில் ராஜகுருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றதுடன் காவடிகள், கரகாட்டம், பால்குட பவனியுடன் நாதஸ்வர தவில் முழக்கம், பறை மேள முழக்கத்துடன் இத்தேர் திருவிழா கல்முனை பிரதான வீதி வழியாக இடம்பெற்று ஆலயத்தை…
-
- 0 replies
- 635 views
-
-
சிட்னி முருகன் தேர்திருவிழா ஒளிப்பதிவு இந்த இணைப்பில் பார்வையிடலாம் நன்றிகள் ரவி glory .....
-
- 9 replies
- 1.2k views
-
-
இன்று புனித வெள்ளி - இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் ! [Friday 2015-04-03 12:00] புனித வெள்ளி, கிறிஸ்துவர்கள் கொண்டாடும் விழாக்களில் இதும் ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்து கி.பி.33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் என்பது சான்றோர்களின் கருத்து. முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் …
-
- 1 reply
- 5.8k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்று மீசாலை தட்டாங்குளம் நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பண்டங்கள் கொண்டு செல்லப்பட்டன. கடந்த திங்கட்கிழமை மாலை நாகதம்பிரான் ஆலயத்தில் விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து மீசாலை தட்டாங்குளம் நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பொங்கல் திருவிழாவுக்கான வழுந்துப் பானைகள், பழங்கள் மற்றும் பூசைக்கு தேவையான பண்டங்கள் மரபு முறைப்படி மாட்டுவண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன். நேற்று இரவு பரந்தன் சந்தியை அடைந்த பண்ட ஊர்வலம், இன்று காலை கண்டாவளை நோக்கிப் புறப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டாவளை சந்தியை அடையும் ஊர்வலம், மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலயத்தை நோக்கி செல்லும…
-
- 9 replies
- 3.4k views
-
-
http://virakesari.lk/content/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE
-
- 0 replies
- 666 views
-
-
பொய்யால் விளைகிற வன்முறைகள் தமிழ்மணி. பெரு. அ. என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன. மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே ஒழிய மனம் என்ற வடிவம் ஏது? இதய வடிவம் என்று ஒன்று இருக்கிறதேயொழிய, மனசாட்சி என்ற உருவம் இருப்பதில்லை. பொய்சாட்சியென்று ஒன்று புறப்படலாமேயொழிய, மனசாட்சியென்று ஒன்று புறப்படுவதில்லை. எனவே பொய்க்கு உள்ள வலிமை, பெரும்பாலும் உண்மைக்கு இருப்பதில்லை. இந்த உலகம் …
-
- 0 replies
- 599 views
-
-
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்..!!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பத…
-
- 8 replies
- 3.7k views
-
-
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்;று புதன்கிழமை (25) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமன இரா.சம்பந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உட்பட பெரும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/142601#sthash.PT0dlcTe.dpuf
-
- 2 replies
- 744 views
-
-
வள்ளலாரின் திருவருட்பா 'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்…
-
- 2 replies
- 11.7k views
-
-
'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவா…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று சிட்னி முருகனின் கொடியேற்றம்..... சிட்னி முருகனின் முகப்புத்தகத்திற்கு சென்று நீங்களும் அவரின் அருளை பெறுங்கள்..https://www.facebook.com/pages/Sydney-Murugan-Temple/1405985642964361
-
- 3 replies
- 769 views
-
-
தேவார முதலிகளில ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார்> தருமசேனர்> வாகீசர்> அப்பர்> தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு. இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர். அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும். இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது. அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது. அவரின் து}ய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது. அபசுரம் தட்டாத> பழுதுபடா மாசி…
-
- 5 replies
- 18.1k views
-
-
வேதாகமத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்! http://www.marumoli.com/2014/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/ வரலாற்றை எழுதிய விதத்தில் வேதாகமம் தவறிழைத்திருக்கிறது – சொல்கிறார்கள் ரெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர். இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு 9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் என இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பழைய ஏற்பாடு (ஹீப்ரூ வேதாகமம்) ஆபிரகாம் காலத்…
-
- 13 replies
- 4.5k views
-