மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காமதகனர் "பூதப் படையுடைப் புண்ணியரே! புறஞ்சொற்கள் நும்மேல் ஏதப்பட எழுகின்றனவால்! இளையாளொடு உம்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீர்இறை செப்புமினே" - சேரமான்் பெருமாள் நாயனார் உலகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும். காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும் காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும். என்று காமத்தின் தன்மையைத் திருவிளையாடற்புராணம் தொகுத்துரைக்கின்றது.
-
- 25 replies
- 11.2k views
-
-
காமன் திருவிழா எனும் காமடித் திருவிழா இஸ்லாமிய மதத்தைத் தேசிய மதமாகக் கொண்ட மலேசியாவில் காமத்தை பொதுப்படையாகவும், வெளிப்படையாகவும் பேசுவதில் சிக்கல் இருக்கிறது. அது சட்டரீதியான பிரச்சனையில் கொண்டு போய் சேர்த்துவிடும். மலேசியத் தமிழ் மரபு, காமம் என்பதை மூடியிருக்கும் கதவுகூட அறியக்கூடாது என்று சொல்கிறது. அந்த அளவுக்கு புனிதம் காக்கிறார்கள். மலேசியத் தமிழர்களாக இருந்தாலும், காமனுக்கு விழா எடுத்துக் கொண்டாடிய மரபு வழி வந்தவர்கள் இல்லையா நாங்கள்? காமத்தின் அர்த்தம் புரியாமலேயே மேம்போக்கான ஓர் அர்த்தத்துடன் ஏதோ புரிந்து வைத்திருக்கிறோமே ஒழிய நாங்கள் காதலைக்கூட சரியாகத்தான் புரிந்திருக்கிறோமா என்றுகூடத் தெரியவில்லை. 'காமண்டித் தி…
-
- 0 replies
- 2.3k views
-
-
கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? #Tiruvannamalai தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப்பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோடு தொடர்புடைய இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்டதை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம். “நலமிகு கார்த்திகை நாட்டவரி…
-
- 2 replies
- 2k views
-
-
கார்த்திகை தீபத்திருநாள் நடத்துவது ஏன்? டிசம்பர் 04,2014 கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதி…
-
- 0 replies
- 823 views
-
-
கார்த்திகை தீபம்! தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. தமிழ் இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருக்கார்த்திகை நாள், தமிழர்கள் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போர் பல வருடங்களாக நடந்துவந்தது. இவர்களின் கர்வத்தை அட…
-
- 0 replies
- 848 views
-
-
[size=4]வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 9.பொலிவிய படையினரால் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார்.[/size] 1967: பொலிவிய படையினரால் மார்க்ஷிச புரட்சியாளர் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார். சே குவேராவின் மீதும் தானியாவின் மீதுமான, அதனோடு பிடல் காஸ்ட்ரோவின் மீதுமான வரலாற்றுக் கறைகள் அனைத்தையும் துடைத்தழித்தபடி 2005 ஆம் ஆண்டு தானியாவின் வாழ்வும் மரணமும் குறித்த ஒரு நூல் ஆஸ்திரேலியப் பதிப்பகமான ஓசன் பதிப்பகம் வழி வெளியானது. தானியாவின் காதலரும், கியூப உளவுத்துறை அதிகாரியும், ஆப்ரோ கரீபியரும், கியூப விடுதலைப் போராளியும் ஆன யுலிசஸ் எஸ்ட்ராடா இந்த நூலினை எழுதியிருக்கிறார். 356 பக்கங்கள் கொண்ட இந்த …
-
- 2 replies
- 1.4k views
-
-
கார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள். கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்…
-
- 0 replies
- 688 views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காலாந்தகர் "தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் சொல்ல அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே" - திருநாவுக்கரசர் கவுசிக முனிவரின் புதல்வராக விளங்கிய மிருகண்டு முனிவர் தம்மனைவி மருத்துவதியோடு இல்லறம் இயற்றிவரும் நாளில், ஆண்மகவு வேண்டி அருந்தவம் இயற்றிட அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு என்பது பிரமன் வகுத்த கணக்கு! மார்க்கண்டேயன் மனம் சிவபெருமானைப் பற்றியிருந்தது. நாளும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். வயது பதினாறு அடைந்தார். மார்க்கண்டேயனை…
-
- 5 replies
- 2.7k views
-
-
ஜென் துறவி லீன்சீ படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர். அவரிடம் ஒரு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார். சில வேளைகளில் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான். ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது. "என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப…
-
- 0 replies
- 941 views
-
-
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது, மகா காளேஷ்வரர் ஆலயம்! மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயத்தில், 11 இலட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சிவ ஜோதி அர்ப்பணம் மகோற்சவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்வை முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அகல் விளக்குகளை ஏற்றிவைத்துள்ளனர். இந்த நிகழ்வை 5 பேர் அடங்கிய கின்னஸ் குழுவினர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ் அளித்துள்ளனர். …
-
- 0 replies
- 398 views
-
-
“திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர். இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள் *திருநீறு இட்டார் கெட்டார்..* *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று எழுதி இருந்தார்கள். உடன் வந்தவர், “காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார். அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார். “சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார். அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார். “திரு நீற…
-
- 3 replies
- 1.6k views
-
-
அடியார்களின் புகழ் பாடும், கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
-
- 0 replies
- 959 views
-
-
கிருபானந்த வாரியார் சொற்பொழிவு http://www.youtube.com/watch?v=kASCdHAzeYA&feature=related http://www.youtube.com/watch?v=kASCdHAzeYA&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=lWGUBXwXNwI&feature=related http://www.youtube.com/watch?v=BvDo9nsDCvk&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=lqVrxzDCq70&feature=related
-
- 5 replies
- 3.4k views
-
-
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? ஜெயமோகன் அன்புள்ள ஜெ, இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? சத்யா *** அன்புள்ள சத்யா, மிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கி…
-
- 2 replies
- 1.6k views
-
-
இப்பதிவு ஏற்கனவே இங்கே பதிக்கப்பட்டிருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அப்படி பதிக்கப்பட்டிருந்தால் மட்டுறுத்தனர் நீக்கிவிடவும். கிருஷ்ணன் கிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது. ஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்று…
-
- 6 replies
- 6.1k views
-
-
கேள்வி : “சூனியகாரி” என்பவள் யார் ? “சூனியக்காரி” என்பது மிகவும் மரியாதிக்குரிய ஒர் சொல் அதைக் கிறிஸ்தவம் கேவலப்படுத்தி இருக்கிறது. அதன் மூல அர்த்தம் “ஞானப்பெண்” (wise woman) என்பதே. ஆனால் கிறிஸ்தவ மதம் அதற்கு மிகவும் திரிபான அர்த்தத்தைக் கொடுத்தது. ஏனென்றால் கிறிஸ்த்தவ மதத்தின்படி சாத்தான் முதலில் ஏவாளின் மனதைக் கெடுத்தான். அன்றிலிருந்து அவன் பெண்ணுடன் சேர்ந்து கூட்டுசதி செய்துவருகிறான். ஆகவே பெண் ஞானமுள்ளவளாக இருக்க முடியாது. ஏனென்றால் அவளுடைய ஞானம் கடவுளிடமிருந்து வரவில்லை. சாத்தானிடமிருந்தே வருகிறது. இந்த அர்த்தத்தை அவர்கள் ஏற்றியதுமே பெண்ணை அதிகமாக சபிப்பதற்கான வழி செய்ததாகிறது. உண்மையில் ஞானமுள்ள பெண்கள் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக சித்தர் மரபில் அல்லத…
-
- 0 replies
- 886 views
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம், புதன்கிழமை (மார்ச் 1) சாம்பல் புதன் தினத்துடன் தொடங்குகிறது.உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் வகையில் இந்தத் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.சாம்பல் புதன் நாளில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்படுகின்றன. தவக்கால நாள்களில், கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல், ஜெபம், தவம், தர்மம் ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளும் எளிமையாக நடத்தப்படுகின்றன. மேலும், ஆலயங்களிலும், வீடுகளிலும் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மா…
-
- 2 replies
- 1.1k views
-
-
இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. தவக்காலத்தின் போது ஒரு வேளை மட்டும் உண்பது, இரு வேளை பட்டினி கிடப்பது, மாமிசம் உண்ணாமலும் மது அருந்தாமலும் இன்ன பிற கேளிக்கைகளில் ஈடுபடாமலும் இருப்பது வளமையாகும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 1 reply
- 1.8k views
-
-
கிறிஸ்துமஸ் சிறப்பு : இயேசு கிறித்துவின் பிறப்பு டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வரும் பண்டிகை கிறிஸ்துமஸ். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இப்பண்டிகையைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெப்உலகம் வாசகர்களுக்காக ஆன்மீகம் - கிறிஸ்துமஸ் சிறப்பு பகுதியில் அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதியில் இயேசு கிறித்துவின் பிறப்பு, இயேசு பிறப்பின் தூது, இயேசுவின் பொன்மொழிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், விசேஷ ஆல்பம்..... என இன்னும் பல சிறப்பு பகுதிகள் ஒவ்வொன்றாக இடம் பெற உள்ளது. இனி, கட்டுரைக்குச் செல்வோமா... உலக வரலாற்றில் புகழ்பெற்ற பேரரசர்களில் இஸ்ரவேலை (ஈச்ரஎல்) ஆண்ட சாலமோன் (Kஇங் ஸொலொமொன் - 975 BC) ஒருவர் என்பதை யாவரும் அறிவோம். அவருக்குப் பின் இஸ்ரவேல…
-
- 0 replies
- 1.9k views
-
-
கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம் ‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது. உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும…
-
- 0 replies
- 959 views
-
-
படத்தின் காப்புரிமை Universal History Archive Image caption கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர் அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள். ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள். …
-
- 0 replies
- 612 views
-
-
கிறிஸ்துவின் தானியங்கள் 1: இறை வார்த்தை என்னும் விதை இயேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார். விவசாயி தூவிய விதைகள் “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோர…
-
- 32 replies
- 10.1k views
-
-
கிறுக்கலும் நன்றே நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்…
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள் By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு. இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியம…
-
- 0 replies
- 1.6k views
-