மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உறவுகள் மேம்பட......... குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்...... 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். 2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். 5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங…
-
- 16 replies
- 3.4k views
-
-
இனக்ப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது. இது குறித்து 1948 ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 ன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் …
-
- 1 reply
- 852 views
-
-
வாழச் சொல்பவை..! ஒரு துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது. நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். "சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?" என்று கேட்டார். "குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி, அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்.. சீடர்கள் சிரித்ததைப் ப…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
ஒரு அம்மாக் குருவி நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அப்பாக் குருவி துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.நாட்கள் கடந்தன. நெற்பயிர் நன்றாக விளைந்துவிட்டது. அறுவடை செய்வதற்கு விவசாயி எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போகவேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? இதுதான் பெரிய குருவிகளின் கவலை.ஒரு நாள் அம்மாக் குருவி தன் குஞ்சுகளிடம் சொன்னது: “பிள்ளைகளே, விவசாயி வயலுக்கு வந்தால், அவர் என்ன சொல்கிறார் என்று …
-
- 0 replies
- 853 views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்கலியாணம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை
-
- 28 replies
- 2.7k views
-
-
நாம் நாளாந்தம் என்ன செய்தாலும் பரவாயில்லை, நமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, உயிர் உடலை விட்டு விட்டு சென்றுவிட்டால் ஒன்றுமே இல்லாமல் வெறும் பிணம்தான் இருக்கும். உடலை கவனியாது வேலை, வேலை என்று ஓடியவர்கள் கடைசியில் வேலைக்குப் போகாமல், உலகத்தையே விட்டு விட்டு போய்விட்டார்கள். பல சோலிகளின் மத்தியிலும் எது முக்கியமானது என்பதை நாம் மறக்ககூடாது. நான் இரசித்த வள்ளலார் பாடல் ஒன்றை இத்துடன் இணைக்கிறேன். இதில் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. நன்றி
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
இந்த நாள் இனிய நாள் http://www.youtube.com/watch?v=cx89nyROqu8&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
Feed a girl, she will feed and nurture everyone around her. Keep a girl healthy, she will protect the health of her entire family. Respect a girl, she will use her strength to benefit her community. Educate a girl, she will break the cycle of poverty. Empower a girl, she will change the world! http://plancanada.ca/becauseiamagirl/
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
தேங்காய் உடைப்பதன் தத்துவம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் …
-
- 8 replies
- 4.1k views
-
-
தேங்காய் உடைப்பதன் தத்துவம் ஆன்மீகம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதன…
-
- 3 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=Z2Kz8FzruvQ&feature=player_embedded
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 8 replies
- 2.4k views
-
-
சிக்கல் மிகுந்த உலக வாழ்வினை சமாளிப்பதற்கு உதவியாக எறும்புகளும், தேனீக்களும், பறவைகளும், மந்தைகளும் எளிய வழிகளை நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. பொறியியல் அறிவோ, படை நடத்தும் தளபதி அறிவோ, கட்டுமான அறிவோ ஒரு தனி எறும்புக்கு நிச்சயமாக இல்லை.. ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு உண்டு! "தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தால் தெரியும் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார். "எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப்…
-
- 6 replies
- 2.4k views
-
-
எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது. * பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள். * பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு. * மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும். * எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர…
-
- 5 replies
- 1.9k views
-
-
நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது நாம் செய்யும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதன் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு, மொழி, உண்முக ஆய்வு, பிரச்சைனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனிதர்கள், கருவிகளை வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியதாக அமைந்தது. மனிதர்கள் உலகம் ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
மிக நல்ல நாள் இன்று மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு மிகவும் வேண்டாதது வெறுப்பு மிகவும் தேவை சமயோசித புத்தி மிகவும் கொடிய நோய் பேராசை மிகவும் சுலபமானது குற்றம் காணல் கீழ்த்தரமான விடயம் பொறாமை நம்பக் கூடாதது வதந்தி ஆபத்தினை விளைவிப்பது அதிக பேச்சு செய்யக் கூடாதது உபதேசம் செய்ய வேண்டியது உதவி விலக்க வேண்டியது விவாதம் உயர்வுக்கு …
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
வாழ்க்கை சிறு கதையாக.. . ஒரு மனிதன் வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழு ஒன்றைக் கண்டான். ஒரு நாள் அதில் ஒரு சிறு துளை தோன்றியது. அவன் அமர்ந்து வண்ணத்துப் பூச்சியை பல மணி நேரம் கவனித்தான். அது அதன் உடலை சிறு துளை வழியாக வெளி வர போராடிக் கொண்டிருந்தது. மேலும் வெளி வர முடியாததால் அது சற்று நிறுத்தியது. ஆகவே அவன் வண்ணத்துப் பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான். ஒரு கத்திரிக் கோலை எடுத்தான். கூட்டுப் புழுவின் பிரிவு படாத துகள்களை வெட்டினான். வண்ணத்துப் பூச்சி எளிதாக வெளியேறியது, ஆனால் அதன் உடல் வீங்கியும், இறக்கைகள் சுருங்கியும் இருந்தன. எந்த நிமிடத்திலும் அதன் இறக்கைகள் பெரிதாகியும், விரிந்தும் அதன் உடலைத் தாங்கிப் பறக்குமென்று, அந்த மனிதன் தொடர…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும். வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா? 1. நிலம் தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப்பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான். மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா? ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்தி…
-
- 2 replies
- 1.8k views
-
-
மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள். மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அச…
-
- 1 reply
- 1.4k views
-
-
. http://www.youtube.com/watch?v=in2rjiTN-hw மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன், பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன், பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன், தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன், மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன். நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். சொல்லானாலும் ஓம் எ…
-
- 4 replies
- 5.2k views
-
-
மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான். ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் …
-
- 7 replies
- 2k views
-
-
அரசியல்வாதிகள் மேடையேறி விட்டாலே மடை திறந்த வெள்ளம் போல பேசுவார்கள். அவர்கள் பேச்சில் ஈட்டிகள் பறக்கும். வாள்கள் மோதும், பீரங்கிகள் முழங்கும். கேட்பவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விதிர்விதிர்த்து போவார்கள். சிலபேருக்கு உணர்ச்சி என்ற பாம்பு படமெடுத்து ஆடி வீரம் என்ற மாணிக்கத்தை கூட கக்கும். அதே அரசியல்வாதி மேடையை விட்டு இறங்கினால் பழம் வெட்டும் கத்தியை கூட கண்டு படபடத்தும் போவார்கள். மேடையில் வந்த வீரம் எங்கே போனது என்று நமக்கு தோன்றும். அவரிடமே உங்கள் வீரமெல்லாம் வெறும் வார்த்தை தானா? நடைமுறையில் கிடையாதா? என்று கேட்டால் சிரித்து மழுப்பி விடுவார்கள். அதற்கு காரணம் என்ன? மேடை மீது ஏறிவிட்டால் சுற்றிலும் மக்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களை கோபப…
-
- 0 replies
- 1.2k views
-