சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
` எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள் தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இது…
-
- 14 replies
- 1.7k views
-
-
மனிதர்கள் சூழ் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல்வேறு அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சில உயிரினங்கள் மொத்தமாக அழிந்தேவிட்டன. உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றே கூறவேண்டும். காடுகள் ஆக்கிரமிப்பு, மனிதத் துன்புறுத்தல், உணவுப் பற்றாக்குறை, வேட்டை போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்தை விடுத்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்ந்து வருகின்றன. இப்படியான சூழலில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மனதை உலுக்கும் இந்தப் படத்தின் கதை கொடூரத்தின் உச்சம். ’இ…
-
- 21 replies
- 2.3k views
-
-
'உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினவன்தான் ஶ்ரீகாந்த. இறந்த பிறகும்கூட பல பேரோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்கான். இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அந்த மனநிறைவுதான் எங்களுக்கு கிடைச்ச ஒரே ஆறுதல்' என்கிறார் ராஜா. மூளைச்சாவு அடைந்த தன் அண்ணன் மகன் ஸ்ரீகாந்த் பற்றி ராஜா நெகிழ்வோடு பேசிய வார்த்தைகள் இவை. சென்னை அண்ணாநகர் புது காலனியைச் சேர்ந்தவர் பழனி, பெயின்டராக வேலை பார்க்கிறார், மனைவி மல்லிகா அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்துவருபவர். இவர்களின் மூத்த மகன் ஶ்ரீகாந்த். ஏழ்மை காரணமாக ஶ்ரீகாந்தால் மேல்படிப்பைத் தொடர முடியவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகம் தொழில் புரட்சிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் 90-களுக்குப் பிறகு நடைபெற்று இணையத்தின், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டு வருகிற புரட்சி. தொழில் புரட்சி நடைபெற மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் இணையப் புரட்சி இரு பத்தாண்டுகளிலே மிகவும் பரவலாக அனைவரையும் சென்றடைந்துவிட்டது. தொழில்நுட்பங்கள், இணையத்தின் வளர்ச்சி தடுக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒரு சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் உலக அரங்கில் பின்தங்கிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகமே ஒரு நகரத்தைப்போல ஆகிவிட்டது எனக் கூறுகிற அளவுக்கு இன்று இணையத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆனால், அதன் சாதகங்களோடு, சரி நி…
-
- 0 replies
- 328 views
-
-
-
தந்தையின் ஆசீர்வாதம் வேண்டி, உயிரிழந்த அவருடைய உடல் முன் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி - செல்வி தம்பதியரின் மகன் அலெக்சாண்டர் (30). இவரும், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (27) என்பவரும் மயிலத்தில் உள்ள தனியார் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். ஒரே இடத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 2ஆம் திகதி மயிலம்…
-
- 0 replies
- 509 views
-
-
-
சவால்களை சந்திக்காமல் உன்னால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது
-
- 1 reply
- 565 views
-
-
`அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் வருகின்றன. சமீபத்தில்கூட ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்த ஒருவர், அமெரிக்காவில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி படித்தேன். அமெரிக்காவின் என்னதான் நடக்கிறது..? ஏன் தற்கொலை அதிகமாகிறது' என்று விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார் சித்தார்த்தன் என்கிற வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது! ஜூன் 15, 2019. அமெரிக்காவில் உதவி தொலைபேசி 911-க்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது 10 மற்றும் 14 வயது சிறுவர்கள் இரண்டு பேரும் 32 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்ப…
-
- 0 replies
- 488 views
-
-
குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு பொருளாதார வல்லுநர் நமக்கு என்ன கற்பிக்க முடியும்? பேராசிரியர் எமலி ஆஸ்டர் குழந்தை வளர்ப்பு பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்பு செய்ததோடு, தரவுகளையும் ஆராய்ந்தார். அதன்படி கிடைத்த 13 முடிவுகள் இதோ. தாய்மாரின் அன்றாட வாழ்க்கை கவலை நிறைந்ததாக இருக்கலாம். அவர்களிடம் பல கேள்விகள் உள்ளன; பாலூட்டும் காலகட்டத்தில் மது அருந்தலாமா? எவ்வளவு நேரம் பாலூட்டலாம்? மருத்துவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், புத்தகங்கள், இணையம், அந்நியர்கள் என அனைவரிடம் இரு…
-
- 0 replies
- 333 views
-
-
போதைப் பொருள் வழங்கினால் மட்டுமே, தனது குழந்தைக்கு தாய்ப் பாலூட்டுவேன் என தாயொருவர் அடம்பிடித்த சம்பவம் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. மின்னேரியா, பட்டபிலிகந்த பிரதேச வீடொன்றுக்குள் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில், பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனைடுத்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், குறித்த பெண்ணின் ஒரு வயதுக் குழுந்தை இன்று காலை தாயிடம் பால் கேட்டு அழுதபோது, தனக்கு போதைப் பொருள் வழங்கும் வரை குழந்தைக்கு பாலூட்ட மாட்டேன் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தைக்கு பால்மாவை வழங்க பெண் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள…
-
- 1 reply
- 1.1k views
-
-
வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த அந்தப் புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "பிப்ரவரி 12-ம் தேதி, ஃபேஸ்புக் மூலம் என் நண்பரான ரிஷ்வந்த் என்ற சபரிராஜன், `அவுட்டிங் போகலாம்’ என்று சொல்லி என்னைக் காரில் அழைத்துச் சென்றான். திருநாவுக்கரசு என்பவன் காரை ஓட்டினான். பின் சீட்டில் நானும், சபரிராஜனும் அமர்ந்த…
-
- 0 replies
- 415 views
-
-
திருமணங்களின் நீண்ட ஆயுளுக்கு, 'அன்பு' எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு நம்பிக்கையும் அவசியம். இந்த இரண்டில், எது இல்லாமல் போனாலும் அந்தத் தாம்பத்யம் தடுமாற ஆரம்பித்துவிடுகிறது. பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகர் ஒருவர், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியொன்றைப் பதிவு செய்திருக்கிறார். "எனக்குத் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என் மனைவிக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்பது ஒரு பரிசோதனையில் தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தனக்குக் குழந்தை பிறக்காது என்ற விஷயம், என் மனைவிக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். இப்போது நான் என்ன செய்வது..?" - இதுதான் அவரின் கேள்வி. …
-
- 2 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் முது ஆருந்திவிட்டு ஒரு வயது குழந்தைக்கும், மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர் மது போதையுடன் ஒரு வயது குழந்தையை தாக்கியதாகவும் இவ்வாறு தினமும் மது போதையுடன் மனைவி பிள்ளைகளை சந்தேக நபர் தாக்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள…
-
- 1 reply
- 642 views
-
-
சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரே தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ் பெண் வைத்தியர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாண வைத்தியரே கனடாவில் குடியிருக்கிறார். அங்கு மருத்துவ பட்டம் பெற்று, ரொறொன்ரோ மருத்துவமனையில் கடமையாற்றி வந்தார். இதன்போது, புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு இலக்கானார். அது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. நீண்ட மௌனத்தின் பின்னர், தன்மீதான குற்றச்சாட்டை வைத்தியர் மறுத்து தன்னிலை வ…
-
- 15 replies
- 1.7k views
-
-
ஜொமோட்டோ வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, `உணவுக்கு எந்த ஒரு மதமும் இல்லை' எனப் பதில் வந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் நகரில் வசித்துவருபவர், அமித்சுக்லா. இவர் ஜொமோட்டோவில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், டெலிவரி கொடுக்கும் நபர் பெயரைக்கண்டதும், `ஆளை மாற்ற வேண்டும்' என நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஜொமோட்டோ சார்பில், `ஆளை மாற்ற முடியாது' என்று பதில் வந்ததால் அந்த நபர் உணவைக் கேன்சல் செய்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். டெலிவரி எக்ஸிகியூட்டிவின் பெயர் ஃபயாஸ் என்று இருந்ததால், ஆர்டரைக் கேன்சல் செய்தேன். இது `ஷர்வான்’ என்ற புனித மாதம். ஆகவே முஸ்லிம் நப…
-
- 0 replies
- 427 views
-
-
ஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’. இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மகான் ஆவது கிடையாது, தகுதியுடைய ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பேறு கிட்டுகிறது. அவர்களிலும் ஒரு சிலரை மட்டுமே இவ்வையகம் நினைவில் வைத்துப் போற்றிக் கொண்டாடுகிறது. ‘கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.’ இன்றைய இளைஞர்களை இவரை விட அதிகமாக நம்பியவர்கள் கிடையாது. இளைஞர் சக்தியின் மூலம் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை கனவாகக் கொண்டிருந்தார். ஆனால் நம் இளைஞர்களின் செயல்களை அவர் இன்று கண்டிரு…
-
- 1 reply
- 530 views
-
-
எதற்கெடுத்தாலும் செல்பிதான். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரின் பழக்க தோஷம் ஆகிவிட்டது இது. அதிலும் புது பைக் வாங்கினால், புது கார் வாங்கினால் உடனே பேஸ்புக்கில் செல்பி எடுத்து போட்டு லைக் அள்ளுகின்றனர். டூர் போனால் அலப்பறை தாங்க முடியாது. அதிலும் பாரின் டூர் என்றால் கேட்கவே வேண்டாம். தொடர்ச்சியாக செல்பி எடுத்து பேஸ்புக், இன்ட்ராகிராம், ட்விட்டர் என தங்கள் வலை தள பக்கங்களில் பதிவேற்றம் செய்து மொத்தமாக போட்டாவால் நிரப்பி விடுவார்கள். இப்படி, சமூக வலைதளங்களில் செல்பி எடுத்து போடுவதை வருமான வரித்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்ற தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வகையாக தகவல் திரட்டி, வ…
-
- 0 replies
- 634 views
-
-
-
- 0 replies
- 380 views
-
-
மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில் எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம்) -நந்தினி ஆனந்தன்-குணா ஜோதிபாசு..
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
தனமல்வில பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தமாலி எனும் யுவதியே வறுமையால் வாழ்கையை தொலைத்தவள் ஆவாள். தாய், தந்தை சகோதரர்கள் என அனைத்து குடும்ப அம்சங்களும் நிறைந்த நல்லதோர் குடும்பத்தில் பிறந்த சந்தமாலி சாதாரண தரம் வரை கல்வி கற்றார். அவரது குடும்பத்தில் காணப்பட்ட வறுமை சந்தமாலியின் வாழ்கையை திசைதிருப்பியது. வறுமையை இல்லாதொழிக்க கொழும்பிற்கு வேலைக்கு வருகிறாள்... பல இடங்களில் தொழில் புரிகின்றாள். ஆனால் சமூகத்திற்கோ தனது குடும்பத்திற்கோ கரை படியும் வகையில் எந்தவிதமான கூடாத தொழிலும் ஈடுபடவில்லை. ஆனால் வறுமை சந்தமாலிகறையை துரத்திக்கொண்டே இருந்தது. சந்தமாலியும் வறுமையிலும் வருமானம் தேடி ஓடிக்கொண்டே இருந்தாள் பொருளாதார சுமை அவள் வாழ்க்கையை ஒரு கட்டத்திற்கு பாரிய தடையாக…
-
- 0 replies
- 492 views
-
-
பெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இப்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துவதாகவும் இதன் மூலம் சிகெரட், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் போதை பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000க்கும் அதிகமானோர் சிறைக்குச் செலவதாகவும் இதில் அதிகமானோர் பெண்கள் என்றும் சனாதிபதி தெரிவித்தார். http://www.tam…
-
- 0 replies
- 315 views
-
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ! - சுப. சோமசுந்தரம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எத்துணையோ நல்ல விடயங்கள் அமைவதுண்டு. பொதுவாக நாம் அமையாதவற்றை நினைந்து ஏங்குவதும், அவற்றின் தேடலுக்கான முயற்சிகளில் இறங்குவதுமாக எப்போதும் எதையாவது விரட்டிக் கொண்டே வாழ்வைத் தொலைப்போம். இந்த விரட்டுதலை நியாயப்படுத்த ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை என்று நம்மில் சிலர் வள்ளுவனை வேறு துணைக்கு அழைப்பதுண்டு. இவ்வாறெல்லாம் இவற்றைப் பயன்படுத்துவோம் என்று தெரிந்திருந்தால் வள்ளுவன் இவ்வதிகாரங்களை அமைத்தே இருக்க மாட்டானோ, என்னவோ ! எனது இந்த பீடிகையைப் பார்த்து நான் ஏதோ பெட்ரன்ட் ரஸலைப் பின்பற்றி ‘சோம்பலுக்குப் புகழ்மாலை’ (‘In Praise of Idleness’ by Bertrand Russell) பாடப்…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
தந்தையர்தின சிறப்பு வெளியீடு ஒரு தந்தையின் யாத்திரை குறுந்திரைப்படம்
-
- 1 reply
- 1.1k views
-