சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பூக்கள் சொல்லும் காதல் அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவிய…
-
- 2 replies
- 814 views
-
-
உணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி? அ.குமரேசன் விளைந்த தானியத்தில், முளைத்த காய்கனியில், அரிந்த இறைச்சியில் சாதி அடையாளம் ஏதுமில்லை. ஏனெனில் அவை பிரம்மனின் தலையிலிருந்தோ, தோளிலிருந்தோ, இடுப்பிலிருந்தோ, காலிலிருந்தோ பிறக்கவில்லை, பிரம்மனிடமிருந்தேகூடப் பிறக்கவில்லை. தானியத்துக்கும் காய்கனிக்கும் இறைச்சிக்கும் மதம் இல்லை. ஏனெனில் அதனை ஈஸ்வர-ஹரியோ, கர்த்தரோ, அல்லாவோ இன்னபிற கடவுள்களோ விளைவிக்கவில்லை. உணவில் சாதியில்லையே தவிர, உண்ணும் மரபில் சாதி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவை யார் சாப்பிடுகிறார்கள் என்பதில் இருக்கிற சாதி எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பதில் மட்டும் இல்லாமல் போகுமா? உண்ணும் நடைமுறைகள் பலவும் பழக்கத்தால் படிந்துபோனவை. அந்தந்த வட்டாரத்தில் எ…
-
- 0 replies
- 1.6k views
-
-
உள்ளூர் பெண் உரிமை குழுவைச் சேர்ந்த சலிஷ்கேந்திரா ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வன்புணர்வுகள் நடப்பதாக தெரிவித்தார். பழமைவாதம் மிக்க முஸ்லீம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ள நிலையில், பங்களாதேஷத்தில் காலை உணவில் தலை முடி இருந்ததைக் கண்டு மனைவிக்கு மொட்டையடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது, ஜாய்பூர் ஹாட்டின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி 35 வயதான பாப்லு மொண்டலை கைது செய்தனர். “அவர் தனது மனைவி தயாரித்த அரிசி மற்றும் பால் கலந்த உணவில் முடியைக் கண்டு கோபமடைந்தார்” என்று காவல்துறைத் த…
-
- 3 replies
- 587 views
-
-
அந்த ஆசிரியர்கள் வாரத்தின் தொடக்கத்தில் கூட அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து இருக்க வேண்டும்..... ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்... சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால் நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை …
-
- 8 replies
- 2.7k views
-
-
காதலிக்கிறவங்க எல்லாரும் சொல்லிக்கிறது "உண்மையாவே" காதலிக்கிறேன் என்று. ஆனால் காதலிக்கும் போது.. காதலன் அல்லது காதலிக்கு என்று பிரச்சனை உருவானால்.. உண்மையாகக் காதலிக்கிறவங்க என்ன செய்வாங்க..??! 1. ஓடி ஒளிப்பாங்க. 2. பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க. 3.இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க. இது தொடர்பில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து.. உங்கள் அனுபவங்கள் அல்லது கருத்துக்கள் அல்லது இரண்டையும் பகருங்கள். எதிர்காலக் காதலர்களுக்கு எது உண்மையான காதல் எது போலிக் காதல் என்று அடையாளம் காண இது உதவுவதோடு.. இவற்றை ஆரம்பத்திலேயே இனங்கண்டு விட்டால் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் தம் வாழ்வை சந்தோசமாக அமைக்க உதவுவதாகவும் அமையும்.
-
- 45 replies
- 8.5k views
-
-
உண்மையான அர்த்தம் என்ன..? ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்....???
-
- 4 replies
- 1.7k views
-
-
உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது....
-
- 0 replies
- 763 views
-
-
உண்மையான நண்பன் யார்? எந்த நேரத்திலும் உதவி செய்ய விருப்பம். நண்பனுக்கும் நண்பனுக்கும் உள்ள வேறுபாடு நம்பமுடியாத உண்மைகள் சிறந்த நண்பர்கள் கடன் வாங்குகிறார்கள் சிறப்பு இடம்எங்கள் வாழ்க்கையில். அவர்கள் புதிதாக "சிறந்தவர்" என்ற பட்டத்தைப் பெறவில்லை. இந்த பரிசை அவர்கள் வென்றனர் அதிக எண்ணிக்கையிலான மகிழ்ச்சி, முயற்சி, கஷ்டம், தொடர்பு மற்றும் அன்பு. மறுபுறம், உங்கள் சிறந்த நண்பர் உங்கள் மரியாதையை இறுதிவரை பாதுகாப்பார், ஏனென்றால் அவருக்கு விசுவாசத்தின் ம…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும்இ நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும்இ ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோஇ காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல. நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்தஇ பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும்இ அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி. …
-
- 10 replies
- 2.7k views
-
-
வாடிக்கையாளர்களால் வளர்ந்தேன் கோவையைச் சேர்தவர் ஆனந்த். வயது 27. கோவையில் பிடெக் படித்து முடித்ததும், அமெரிக்கா சென்று எம்எஸ் படித்துள்ளார். இந்த கல்வித்தகுதிக்கு ஆண்டுக்கு பல லட்சம் சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்திருக்க முடியும். ஆனாலும் தனது தம்பிகளோடு சேர்ந்து சொந்த தொழிலில் இறங்கி விட்டார். புதுமையான தொழிலுமல்ல. ஆனாலும் தனது புதிய வியூகங்களின் மூலம் இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக மாறியுள்ளார். இந்த வாரம் இவரைச் சந்தித்தோம். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், படிப்புக்கு ஏற்ற வேலை தேட வேண்டும் என்கிற யோசனை எதுவும் இல்லை. ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது என்பதில…
-
- 71 replies
- 32.1k views
- 1 follower
-
-
தொழில்முனைவோராக வெற்றிபெற மன உறுதியும் வைராக்கியமும் முக்கியம் என்பதை உணர்த்து கிறார் திருச்சி துறையூரைச் சேர்ந்த மீனா ஹரிகிருஷ்ணன். பள்ளி கல்லூரிகளுக்கான போர்டுகளை தயாரித்து வரும் இவரது கல்வித்தகுதி பிளஸ் 2. மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட இந்த குடும்ப தலைவி இன்று சொந்த வாகனம், வீடு, சொந்த கட்டிடத்தில் தொழிற்சாலை என வெற்றிகர மான தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது. நான் என் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இரண்டு வீட்டிலுமே கடுமையான எதிர்ப்பு இருந்தது. நான் பனிரெண்டாவதுதான் படித்திருக்கிறேன். என கணவர் எம்காம் வரை படித்திருந்தார். எ…
-
- 1 reply
- 731 views
-
-
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.... *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி ஜென்மங்கள்.* தனித்தனி பிறவிகள் தனித்தனி ஆன்மாக்கள் அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டு…
-
- 0 replies
- 720 views
-
-
உயர உயரப் பறந்தாலும்..... ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.’ என்பது உண்மைதான். ஆனால் இங்கே மனித ஊர்க்குருவிகள் ‘பருந்தாகி விடலாம்’ என்றல்ல ‘படைத்தவனை மிஞ்சிவிடலாம்’ என்றல்லவா கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்!. உயர உயரப் பறந்து ஊர்வலமாய் விண்ணில் வலம் வந்தாலும் மனிதன் மனிதன்தான். இறைவனாகிவிட முடியாது. ஏன் ஒரு ஊர்க்குருவியாகக் கூட மாறிவிட முடியாது. பிறப்புகளிலேயே மனிதப் பிறப்பு உயர்ந்தது. மனிதன் மற்ற உயிர்களைவிடச் சிறந்தவன். வல்லவன் வில்லவன் என்று மனிதன் தன்னைத்தானே மெச்சிக் கொள்கிறானே! அப்படி எந்த வகையில் இவன் சிறந்தவன். உயர்ந்தவன். வல்லவன். எந்தக் காலமாக இருந்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ள விரும்பாத ஒரு நிகழ்ச்சி நடந்தால் உடனே நம் அனைவர…
-
- 0 replies
- 4.8k views
-
-
உயர்கல்வி கற்பதற்கு பல்வேறு புலமைப்பரிசில்கள் பல நாடுகளால் வழங்கப்படுகிறது. புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இவை பயன் தராவிட்டாலும் ஈழத்தில் உள்ள உங்கள் உறவுகள் பயன் பெறமுடியும் எனும் நம்பிக்கையில் எனக்கு தெரிந்த புலமைபரிசில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இவற்றில் பெரும்பாலனவை முதுவிஞ்ஞானமானி |(MSc )பட்டத்துக்கானவை. எனவே இலங்கையில் இளமானி (BSc, BBA, BCom, BA)பட்டத்தை பெற்றவர்களே விண்ணப்பிக்கமுடியும். இப்பகுதிக்குள் பொதுநலவாயபுலமைபரிசில், ஜப்பான் நாட்டின் புலமைபரிசில் ,சார்க் புலமைபரிசில் பற்றிய விபரங்களை இணைக்கவில்லை. அவை இலங்கையில் அரசபணியில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்ககூடியவை. கீழே சொல்லபடுபவை அங்கு தற்கலிக பணி அனுபவமும், இளநிலை பட்டத்தில்…
-
- 16 replies
- 4.1k views
-
-
அனைவரிற்கும் அன்பு வணக்கம், கடந்தமாதம் எனது அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது மரணம் ஏற்பட்டபோதும், அவர் உடல்நலம் தேறி சுகமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்தும், பின்னர் அவர் இரண்டு கிழமைகளில் இறந்தபோது அனுதாபங்களையும், ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பிறப்பும், இறப்பும் நாம் மாற்றமுடியாத இயற்கையின் நியதி. அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஆயினும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அசுரவேகத்தில் முன்னேறியுள்ள இந்தக்காலத்தில் ஒருவரின் வயதை காரணம் காட்டி அவரை சரியாக கவனிக்காமல் வைத்தியசாலையில் உதாசீனம் செய்வது என்பது (Age discrimin…
-
- 22 replies
- 2.6k views
-
-
உயிரான உறவு... மனைவியுடன் சுமுகமான உறவு எப்போதும் வேண்டுமென விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது. ‘இவள் என் மனைவி’ என்று நீங்கள் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே எங்கோ அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்குச் சொந்தமான சொத்து என்றவுடனேயே உங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக ஆகிவிடுகிறது. ஒருவரை நீங்கள் உங்களுடைய உரிமைப் பொருளாகக் குறைத்துவிடும் கணத்திலேயே அவருடன் இணைந்து வாழ்வதில் உள்ள அழகு மறைந்துவிடுகிறது. வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம். ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தா…
-
- 9 replies
- 1k views
-
-
உறுப்பு தானம் செய்த ஆர். லோகநாதனின் தாயார் ராஜலட்சுமியை கௌரவிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின் ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருஷத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக் காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர, உறுப்பு கள் முழுச் செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் …
-
- 0 replies
- 1.4k views
-
-
உயிர் மெய் - புதிய தொடர் - 1 மருத்துவர் கு.சிவராமன் கடைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே! இன்று, குழந…
-
- 26 replies
- 24.6k views
-
-
சாதிக்க துடிப்பவர்களின் வாழ்வில் சிலசமயம் சறுக்கி விழுவது போன்ற விபத்துகள் நேர்கின்றன. அது காலத்தின் கோலமாகவும், கவனக்குறைவின் விளைவாகவும் உடலியல் பின் உபாதைகளாகவும் பலநேரங்களில் உருவெடுத்து நிற்கின்றன நம்மில் பலருக்கும். நாட்டியத் தாரகையாக மின்னவேண்டிய 7 வயதேயான தமிழகத்தின் சுபிக்ஷா சந்திரனுக்கு கல்லீரல் பழுதாக ஆரம்பித்ததால் அவளது உற்சாகம் பாதியில் அறுந்துவிடுகிறது. தடகளப்போட்டியில் தங்கம் வெல்லத்துடிக்கும் 19 வயதேயான பஞ்சாப் வீராங்கனை ரூபிசிங்கின் இதயம் ஏனோ திடீரென செயலிழக்க ஆரம்பித்துவிட வெற்றி, ஆசைகள் வெற்று ஆசைகளாகும் ஆகிவிடுகிற வேதனை. காண்போர் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பி கனவுகளைக் குழைத்து காட்சிகளாய்த் தீட்டும் 37 வயதான மேற்கு வங்கத்தின் வண்ணத் தூரிகைக் …
-
- 0 replies
- 545 views
-
-
கிளிநொச்சி – உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வழக்கு - சட்டத்தரணி கே.ஜீ. ஜோன் இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இங்கிருந்த பிள்ளையார் கோவிலில் பூசகராக காசிலிங்க சர்மா விளங்கினார். இவரது தகப்பனாரும் ஒரு பூசகராவார்.…
-
- 18 replies
- 3k views
-
-
உரையாடல் கலை: முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சந்தேகத்திற்குரிய இந்த உலகில், நம்மில் பலர் அந்நியர்களுடன் தொடர்புகொள்ள தயங்குகிறோம். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத நபர்களோடு உரையாடுவது நம்மை புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1980களில் அமெரிக்காவில் வளர்ந்த மற்ற குழந்தைகளைப் போலவே அந்நியர்கள் குறித்த பயத்துடனே நானும் வளர்ந்தேன். அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்து அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. பெற்றோரின் அக்கறையும், மனிதர்களின் இயல்பான எச்சரிக்கை உணர்வும் ஊடகங்கள் மற்று…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
கடன் கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள். அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். …
-
- 22 replies
- 2.9k views
-
-
உறவில் திருமணம்: எதிர்க்கும் தைரியம் பெண்களுக்கு இருக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBBC THREE/GETTY IMAGES எனது தந்தையின் தலைமுறை மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையில் உறவினரை திருமணம் செய்து கொள்ளும் முறை எனது குடும்பத்திலும் நிலவியது. தற்போது காலம் மாறிவிட்டாலும், பெரும்பாலான மக்கள் இதனால் உண்டாகும் சிக்கல்களில் இருந்து பாடம் கற்றுக் …
-
- 6 replies
- 514 views
-
-
உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்! செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல். இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்க…
-
- 0 replies
- 819 views
-
-
சிட்னி, டிச.22- பிரபல சமூக வலைதளமான யூ டியூபில் உறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம் ஒன்று 4 கோடி பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது. இன்னும் 2 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கள் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் வலியை உணர்த்தும் இந்த வீடியோ காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. https://www.youtube.com/watch?v=V6-0kYhqoRo
-
- 0 replies
- 1.1k views
-