சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
எமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில் ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான , ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும். ஆடுகால்கள் முன்பு பூவரசங்கதியால்களாலும் , பின்பு சீமந்தினாலும் உருவாக்கப்பட்டது . அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளிய…
-
- 34 replies
- 9.7k views
-
-
இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். வேர் களை ( VER KALAI) மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
அனைவரிற்கும் அன்பு வணக்கம், கடந்தமாதம் எனது அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது மரணம் ஏற்பட்டபோதும், அவர் உடல்நலம் தேறி சுகமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்தும், பின்னர் அவர் இரண்டு கிழமைகளில் இறந்தபோது அனுதாபங்களையும், ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பிறப்பும், இறப்பும் நாம் மாற்றமுடியாத இயற்கையின் நியதி. அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஆயினும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அசுரவேகத்தில் முன்னேறியுள்ள இந்தக்காலத்தில் ஒருவரின் வயதை காரணம் காட்டி அவரை சரியாக கவனிக்காமல் வைத்தியசாலையில் உதாசீனம் செய்வது என்பது (Age discrimin…
-
- 22 replies
- 2.6k views
-
-
இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமிலத் தாக்குதல்கள்: மறுக்கப்படும் காதல்களின் மறுபக்கம் எஸ். கோபாலகிருஷ்ணன் அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மற்றும் சென்னையைச் சேர்ந்த வித்யா ஆகிய இளம் பெண்கள் அமிலம் வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். காதலை மறுத்ததால்தான் இருவருக்குமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுக்கப்படும் காதலுக்கு இத்தனை கோரமுகமா என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களாக இவை அமைந்திருக்கின்றன. காதலுக்கு கண் இல்லை என்பதைக் காதல் சாதி மத வித்தியாசங்கள் பார்ப்பதில்லை என்றும் புரிந்துகொள்ளலாம். இதனால்தான் சாதி மத வேறுபாடுகள் நீங்க, காதல் திருமணங்கள் பெருக வேண்டும் என்று முற்போக்காளர்கள் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். காதலர் தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். கா…
-
- 1 reply
- 595 views
-
-
நீயா நானாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றி கலந்துரையாடல் ஓவியா, குட்டீரேவதி, சல்மா,கவின்மலர், சாலினி மற்றும் பலரின் கருத்துக்கள் .
-
- 0 replies
- 557 views
-
-
பெண்: மகள்… சகோதரி… காதலி… துணைவி… மனைவி…. தாய்… மாமி… அம்மம்மா அம்மா அவரது மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரைச் சந்திப்பதற்காக போனபோது குசினியில் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் இருப்பது எனக்கு ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் அவர் கூறியவாறு சிறுவயது முதல் இதைத்தான் செய்து வந்திருக்கின்றார். எனக்குத் தெரிந்தவரையிலும் அம்மா தனது பெரும்பான்மையான நேரங்களை குசினியில் தான் கழித்திருக்கின்றார். ஆகவே அவர் குசினியில் இல்லாதிருந்தாலே ஆச்சரியமாக இருந்திருக்கும். நான் இங்கு போகின்றபோதும் “என்ன சாப்பிடுகின்றாய்” என எப்போதும் கேட்பதற்கு மறந்ததில்லை அவர். இவ்வாறு கேட்டுவிட்டு இருக்கின்ற சாப்பாடுகளின் வகைகளை காட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருப்பா. என் மீது இவ்வாறு அக்கறை…
-
- 8 replies
- 912 views
-
-
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக் கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது. அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள் கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர். எனவே தான் ஆண்கள் எந்த ஒரு இடத்திலும் பெண்களுக்கு மதிப்பளிக்க…
-
- 9 replies
- 3.1k views
-
-
குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை - அ. மார்க்ஸ் - காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான் விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.” சுருங்கச் சொல்வதானால் மரண தண்டனை என்ன, எந்தத் தண்டனையுமே கூடாது என்பதுதான் தண்டனை குறித்த காந்தியின் கருத்தாக இருந்தது எனலாம். யாரையும் தண்டிப்பதற்கான தகுதி நமக்கு, அதாவது நமது சமூகத்திற்கு இல்லை என அவர் கருதுவதாகத் தெர…
-
- 0 replies
- 668 views
-
-
உலக மகளிர் தின சிந்தனை – மார்ச் 8 2013 ஓவியா – சென்னை ,இந்தியா இன்றைய தினம் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்ணியக் குரலின் முதல் ஒலி கேட்கத் துவங்கிய நூற்றாண்டு பதினெட்டாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். பெண்களுக்கான வேலை நேரம் நிர்ணயம் வாக்குரிமை கர்ப்பத் தடை உரிமை என்று பெண்கள் இயக்கத்தின் பயணம் நீண்டு வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமையும், சாதியடிமைத்தனமும் இணைந்து கிடக்கும் சூழலில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களே பெண்ணுரிமைக்கான குரலை தோற்றுவித்தன. தோள்சீலை போராட்டம் சுகாதாரத்துக்கும் மருத்துவ உரிமைகளுக்குமான போராட்டம் கல்வி கற்கவும் செல்லவும் நடத்தப் பட்ட போராட்டங்கள் தேவதாசி ஒழிப்பு போராட்டம் சுயமரியாதை திருமணத்திற்கான போராட்டம் ச…
-
- 0 replies
- 961 views
-
-
அலுவலகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லும் பெண் வீட்டில் தன் மாமியாரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே ஏன்? அலுவலகத்தில் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவள் மாமியாரிடமும், நாத்தனார்களிடமும் பகைமை பாராட்டுவது ஏன்? யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்? குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்வதாகச் சொல்லுபவளுக்கு அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதேன்? ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்? அடுத்தவர் குறைகளை …
-
- 3 replies
- 882 views
-
-
இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது. திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குட…
-
- 0 replies
- 640 views
-
-
பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ?? வேலை இடத்திலோ , பொது இடத்திலோ , வீட்டிலோ ஒரு சிலர் கூசமல் பொய் சொல்கிறார்கள் . அதை அவர்கள் ஒரு சாதனையாகவும் எண்ணிக் கொள்கின்றார்கள் . நேற்று இரவு எனது கணவர் ஒரு பட்டிமன்றத்தில் லயித்தபடி இருந்தார் . நானும் அவருடன் சேர்ந்து பார்த்தேன் . அதன் தலைப்பு நடைமுறை வாழ்வில் பொய் சொல்வது சுகமா ??சுமையா ?? எனது கணவர் எப்பொழுதும் நீதி நேர்மைக்கு உயிரை விடுபவர் . இறுதியில் பொய் சொல்லலாம் என்று அந்த பட்டிமன்றம் முடிந்தது . எனது கணவருக்கு ஒரே கடுப்பு . நானும் யோசித்துப் பார்த்தேன் . பொய் சொல்பவர்களுக்குத் தான் இந்த உலகமா ?? நீதி நியாயம் எல்லாம் சும்மா பம்மாத்துக்குத் தானா ?? என்று பலவாறு யோசித்தேன் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை . எனது கணவரோ , …
-
- 31 replies
- 3.7k views
-
-
எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர். நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால், தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா?. இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும…
-
- 19 replies
- 3.3k views
-
-
வழமையாக பார்த்துள்ளேன் தும்மினால் நூறாண்டு வாழ்க என குழந்தைகளை வாழ்த்துகின்றனாங்கள் அதே மாதிரி வெள்ளையலும் தும்மின உடனே "bless you" என்பார்கள் இப்படி வாழ்த்துவதனால் என்ன பயன்?
-
- 6 replies
- 1k views
-
-
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று? புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் அவளது அறையில் …
-
- 1 reply
- 894 views
-
-
அண்மையில் மலேசியாவில் சீமான் அவர்களது பேச்சைக்கேட்டபோது......... நீங்கள் என்ன மதமாகவும் இருக்கலாம் நீங்கள் என்ன சாதியாகவும் இருக்கலாம் அவற்றை பின்னால் வையுங்கள் முதலில் நாம் தமிழர்கள் அதன் கீழ் ஒன்றுபடுவோம் அதன் பின் உங்கள் மதம் சார்ந்து உங்கள் சாதி சார்ந்து சிந்திக்கலாம் என்று ஒரு வசனத்தை அவர் பாவித்தார். தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த மதத்தை சேர்ந்தவன் தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த சாதியைச்சேர்ந்தவன் என்றார். இதன்படி சீமான் தனது சீற்றத்தை குறைத்து அல்லது இவற்றோடு முட்டி வெல்வதைவிட அவற்றை அங்கீகரித்து செல்ல முற்படுகின்றாரா??? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நீங்களும் கேட்டிருப்பீர்கள் அல்லது கேளுங்கள். (6 இலிருந்து 8 நிம…
-
- 2 replies
- 803 views
-
-
அலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் நோர்வே தொலைக்காட்சியான என்.ஆர்.கே நிறுவனத்தில் இருந்து நண்பர் ஒருவர் பேசுகிறார். சிந்து பைரவி படத்தில் வரும் பாடல் ´´ நானொரு சிந்து காவடிச் சிந்து ´´என்கிற பாடலின் சில வரிகளின் தமிழாக்கம் மற்றும் அதன் உள்ளூடே விளங்கும் அர்த்தங்களை விளக்குமாறு வினவுகிறார். விளக்கியதும்,பணி நிமித்தம் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. ஏன் இந்தப் பாடலை இவர்கள் கேட்கிறார்கள் என குழம்பியவாறே இருந்தேன் பிறகுதான் அதற்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டேன். கடந்த 2003 ஆம் ஆண்டு புலிப்படையில் இணைத்தவர் வினோதா நேசராஜா. ஆறு மாதம் கழித்து தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பில் வந்துள்ளார். நான்கு பிள்ளைகள் கொண்ட நேசராஜா தம்பதியினரின் மூத்த பிள்ளை என்பதால், …
-
- 2 replies
- 830 views
-
-
வன்பாலுறவும் பெண்நிலைவாதமும் யமுனா ராஜேந்திரன் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில்…
-
- 0 replies
- 758 views
-
-
எப்பையோ இதைப் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தன். இப்பவாவது கதைப்பம் என்று நினைக்கின்றன். இது ஒரு மிக மிக சாதாரண விடயம். ஆனால் இந்த விடயம் கூட விவாதிக்க வேண்டி இருக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் இருக்கின்றோம். என் அப்பா எனக்கு சொல்லித் தந்த முக்கியமான சில பழக்கவழக்கங்களில் ஒன்று 'நீ சாப்பிட்ட கோப்பையை நீயே கழுவு" என்பதும் ஒன்று. என் அப்பா ஒருக்காலும் தான் சாப்பிட்ட கோப்பையை அம்மாவை கழுவ விடமாட்டார். "ஏன் நான் இவ்வளவு நேரமும் சாப்பிட்ட கோப்பையை என்னால் கழுவ ஏலாதா" என்று கேட்டு கழுவுவார். "ஒருவரின் எச்சிலை இன்னொருவர் கழுவுவது பாவம்" என்பார். ஒரு நாள் நான் சின்ன வயதில் என் கோப்பையை கழுவாமல் அம்மாவிடம் கொடுத்த போது அப்பா விட்ட பொய்ட்டார் (அடி என்பதை இப்படியும் …
-
- 36 replies
- 2.4k views
-
-
நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள், "அப்பா, அது என்ன?" "இது ஒரு பரிசு" "இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???" "இல்லம்மா" "அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???" "இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க" "அப்பா, காதல்னா என்ன???" மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். "உனக்கு பப்பியைத் தெரியும் தானே?" "தெரியும்ப்பா!!!" "பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடிய…
-
- 62 replies
- 6k views
-
-
1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள் 2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்? 3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
- 62 replies
- 7.1k views
-
-
திரைப்படங்கள் பெண்களை பெருமைப்படுத்துகிறதா சிறுமைப்படுத்துகிறதா??
-
- 0 replies
- 735 views
-
-
-
தயவுசெய்து பொறுமையாக முழுமையாகப் பாருங்கள். விளங்கும்.
-
- 3 replies
- 974 views
-