Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறது பழமொழி. அந்த திருமணபந்தத்தில் இணைந்து விட்ட இரு உடல்கள் விதி வசத்தால் இளவயதிலேயே உயிர் பறிக்கப்படுகிற போது அங்கு சமூக நீதி தடம் மாறிப்போகிறது. கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் பெண் பல இம்சைகளிற்கு ஆளாகிறாள். தனித்தே காலத்தை கடத்துபவளாக செத்து மடிகிறாள். உணர்வுகள் ;சமூகம் என்கின்ற பார்வைகளுள் சின்னாபின்னப்பட்டு பல துன்பங்களிற்கு ஆளாகி செத்து மடிய வேண்டிய ரணம் நிறைந்த வாழ்க்கை. இது சமூகத்தின் ஓர வஞ்சக சிந்தனை. ஆண் மனைவியை இழக்கும் போது அந்த ஆணிற்கு மறு திருமணத்தை செய்ய முண்டியடிக்கும் இந்த சமூகம் பெண்ணின் விடயத்…

  2. பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் ! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள் டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார். 01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது. 02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. 03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள்…

  3. ரகசியம் தற்போது....? எனக்குள் எழுந்த கேள்வியிது...? அணுஆயுதம் அல்லது அணுஆலைகள் என்பன மிகவும் ரகசியமான விடயமாக தற்போதுவரை இருந்தன. அவற்றின் இருப்பும் தன்மைகளும்மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஜப்பானின் பூகம்பத்தின்பின் ஜப்பானின் உலைகள் மாத்திரமன்றி உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளது உலைகளும் பகிரங்கத்துக்கு வந்துவிட்டன. இவை பற்றிய தகவல்கள் எல்லாநாடுகளுக்கும் ஏன் எல்லாவித தனிநபர்களுக்கும் கூட தெரிந்தவிடயமாகிவிட்டது. இதன் விளைவுகள்.....???

    • 10 replies
    • 1.7k views
  4. இந்த பூமியில் நம் வாழ்க்கை வித்தியாசமான ஒரு விஷயம்தான். ஏதோ ஒரு சில காலத்திற்காக இங்கே வருகிறோம்; எதற்கென்று தெரியாது; சில சமயங்களில் ஏதோ ஒரு (Perceive intuitively or through some inexplicable perceptive powers)உள்ளார்ந்த காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் தினசரி வாழ்க்கையில் நமக்குத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்: மனிதன் இருப்பது இன்னொரு மனிதனுக்காக - அதுவும் யாருடைய சிரிப்பிலும் நலத்திலும் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளதோ அவர்களுக்காகவே. அல்பேட் ஐன்ஸ்டீன்

  5. திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன....? .திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....? * தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அத…

  6. நீங்கள் காதலில் இருப்பவரா அல்லது காதலில் இருந்தவரா? காதலில் இருப்பவர்களின் வாக்கு மூலங்களைக் கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கு... இதெல்லாம் கொஞ்ச நாளுக்குத் தான், அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் தான் வரவேணும் என்று சொல்வது காதலால் எவ்வளவு கஷ்டங்களைத் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்று ஓரளவேனும் மனம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது... காதலில் இருப்பவர்களுக்கு அவர்கள் காதல் கைக்கூடி வாழ்கையில் கடைசி வரைக்கும் தொடர வாழ்த்துக்கள்! அதே நேரம் காதலில் இருந்தவர்கள், பழையதையே நினைத்து நினைத்து வாழ்கையில் விரக்தியடைந்து தம்மை அழித்துக் கொள்ளாது, தனிமையில் வாழாது, அவர்களும் தமக்கென ஒரு வாழ்கையை அமைத்துக் கொள்ள வாழ்த்துக்கள்!! http://www.yout…

  7. பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல ; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக் ö காண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும் புலம்புகிறார்கள். கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும் ஒரே உறவு, இந்தப்பெற்றோர் – பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும் முயற்சி மிகவும் அவசியம் அல்லவா! * தலைமுறை இடைவெளி என்பது என்ன? புரிந்துகொள்ளுதலில் இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள் இடையே மட்டும்தான் வருகிறதா? இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப் பாலம் அமைப்பது எப்படி? தலைமுறை இடைவெளி என்ப…

    • 0 replies
    • 1.1k views
  8. வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் மட்டும் தான்! டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பத…

  9. மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை. "ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது. யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங…

  10. இந்தத் தகவல்களை மீண்டும், மீண்டும் படியுங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்… 01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும். ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும். 02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போத…

  11. அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓ…

  12. காதலர் தின சிறப்புக் கட்டுரையும் சிறப்பு கீதை உபதேசமும் 2011-02-13 02:37:11 கீதை சொன்ன கண்ணன் இன்று இருந்திருந்தால் யாழப்பாணக் காதலருக்கு இவ்வாறு சொல்லியிருப்பான் என பலராலும் கூறப்படுகின்றது. காதலர் கீதையுபதேசம் ஓடல் நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது கூடல் நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது வயிறு நிறம்பியதோ, அதுவும் நன்றாகவே நிறம்பியது கருவைக் கலைக்கப் போகிறியோ, அதுவும் நன்றாகவே கலைக்கப்படும் உன்னுடைய கற்பை நீ இழந்தாயோ? எதற்காக நீ அழுகிறாய்? உன்னை மட்டுமா இவ்வாறு செய்தான், நீ அழுவதற்கு? நீயும் அவனை மட்டுமா நம்பியிருந்தாய் இவ்வாறு கவலைப்படுவதற்கு நேற்று அவனுக்கு கொடுத்த கடிதத்தை நாளை இன்னொருவனுக்கு கொடு இன்று அவளுடன் இருப்பவன் நா…

  13. அந்த ஆசிரியர்கள் வாரத்தின் தொடக்கத்தில் கூட அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து இருக்க வேண்டும்..... ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்... சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால் நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை …

  14. கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும். குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவ…

  15. கன நாளைக்கு பிறகு வந்த நான் ஏதாவது தலைப்பை போட்டுத்து போவம் என்றுதான் இந்த தலைப்பு விளம்பரம் இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் சின்ன பிள்ளைகளாகலாம்,நடுத்தர வயதினர்,வயது போனவர்கள் கூட ஆனால் இந்த விளம்பரங்களால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?? என்பதுதான் எனது கேள்வி நான்.......இந்த பேயரன் லவ்லியை போட்டு தேச்சி தேச்சி கன்னத்தில் கறுப்பா போனதுதான் மிச்சம் அடுத்து சோப்[சவர்க்கரம்] ஐஸ்வர்யா ராய் வந்து லக்ஸ் சோப்பு போட்டு காட்டுவா பாருங்கள் அன்றுமுதல் அந்த சோப்புக்கு காசு கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம் பெண்களை எடுத்துக்கொண்டால் சொல்லவே தேவையில்லை இன்றைய விளம்பரங்களால் அதிகம் ஏமாற்றபடுவர்கள் பெண்கள்தான் இது பற்றி உங்கள் க…

  16. உயர உயரப் பறந்தாலும்..... ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.’ என்பது உண்மைதான். ஆனால் இங்கே மனித ஊர்க்குருவிகள் ‘பருந்தாகி விடலாம்’ என்றல்ல ‘படைத்தவனை மிஞ்சிவிடலாம்’ என்றல்லவா கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்!. உயர உயரப் பறந்து ஊர்வலமாய் விண்ணில் வலம் வந்தாலும் மனிதன் மனிதன்தான். இறைவனாகிவிட முடியாது. ஏன் ஒரு ஊர்க்குருவியாகக் கூட மாறிவிட முடியாது. பிறப்புகளிலேயே மனிதப் பிறப்பு உயர்ந்தது. மனிதன் மற்ற உயிர்களைவிடச் சிறந்தவன். வல்லவன் வில்லவன் என்று மனிதன் தன்னைத்தானே மெச்சிக் கொள்கிறானே! அப்படி எந்த வகையில் இவன் சிறந்தவன். உயர்ந்தவன். வல்லவன். எந்தக் காலமாக இருந்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ள விரும்பாத ஒரு நிகழ்ச்சி நடந்தால் உடனே நம் அனைவர…

    • 0 replies
    • 4.8k views
  17. மூடநம்பிக்கையை மூலதனமாக்கி... இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும். ‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒர…

  18. நானும் புலம் பெயர் தேசத்தில் ஒரு பிறந்தநாள் விழா செய்தேன் இதையும் ஒருக்கா பாருங்கோ ஏதும் இருந்தா எடுத்துக்கொள்ளுங்கோ (சொல்லுங்கோ). எனது மகனுக்கு 18 வயது வந்தது. அந்த வயதில் ஏதாவது விசேசமா அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆட்கள் சொன்னார்கள் இங்கு அதைக்கொண்டாடுவினமாம். அதுக்கென்ன கொண்டாடலாம். அதுக்கு அந்த பிள்ளை அந்த வயதுக்கு ஏற்றதை சாதித்திருக்கவேண்டும் அல்லவா. அப்படியாயின் செய்யலாம். ஆம் 18 வயதுக்கு முன்பே பல்கலைக்கழகத்துக்கு சென்றுவிட்டான். அப்போ செய்யலாம். செய்தேன். அவனுக்கு தெரியாமல். அவனுடன் சின்னலிருந்து படித்தவர்கள் வெள்ளை கறுப்பு - ஆண் பெண் உட்பட. தற்போது படிப்பவர்கள். அவனுடன் அதிகம் பழகுபவர்கள். அவனுடன் கால்பந்து விளையாடுவோர் என ஒரு 90…

  19. வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

  20. இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. * காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி * சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன் * காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங் * காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி * ஒருவனுக்குக் காதல் எ…

  21. Started by ரதி,

    காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...காதல் என்பது ஓர் உணர்வாகும் அந்த உணர்வு நேரத்திற்கு நேரம் மாறும்...காதல் நிறைவேறாமல் காதலுக்காய் இறந்தவர்கள் இருந்தது அந்தக் காலம்... நீ இல்லா விட்டால் வேறொருவனுடன்/வேறொருத்தியுடன் வாழ்ந்து காட்டுவேன் என்பது இந்தக் காலம். ஒருவனை/ஒருத்தியைப் பார்த்தவுடன் வரும் காதல் நல்லதா அல்லதா அவர்களுடன் நன்றாகப் பழகிய பின் வரும் காதல் நல்லதா?...நன்றாகப் பழகிய பின் காதலித்தால் அவர்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும்.அவனது பலம்,பலவீனம் அவளுக்கும்,அவளது பலம்,பலவீனம் அவனுக்கும் தெரிய வரும் போது இருவரும் இல் வாழ்க்கையில் இணையும் போது பிரச்சனைகள் ஏற்படாது என நினைக்கிறேன்...பொதுவாக பெற்றோர்கள் ஒரு பெண்ணை முகம் தெரியாத ஆணுக்கு கட்டிக் கொடுப்பதை விட பெண…

    • 21 replies
    • 3.4k views
  22. தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனது பெற்றோருக்கு காவல்துறையினரால் நிகழ்ந்த கொடுமைகளுக்கு தீர்வு தேடி வழக்காட முன்வந்துள்ளார் பாதிக்கப்பட்டோரின் முதல் மகனான மலைச்சாமி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற விவசாயியையும் அங்கம்மாள் என்ற அவரது மனைவியையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்காமல் சிறு விவசாயியான குருவையா இறந்து விட்டார். காவல்துறையின் பிடியில் இருந்த போது தனது கணவர் கண் முன்னே அங்கம்மாள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அங்கம்மாளின் மகனான மலைச்சாமி தற்…

    • 0 replies
    • 728 views
  23. பெயரும் ஆண் அல்லது பெண்ணும் எனக்கு ஒரு சந்தேகம் இங்கு மட்டுமல்ல பல இணையத்தளங்களிலும் கருத்துக்களங்களில் எழுதுபவர்கள் ஆண்கள் பெண் பெயருடனும் பெண்கள் ஆண் பெயருடனும் தம்மை பதிந்துவிட்டு எழுதுகின்றார்கள். நாம் வேறு எங்கும் போகவேண்டியதில்லை யாழிலேயே அது தற்போது அதிகரித்துவருகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆளையாள் தேடுவதையும் தனி மடல் போடும்படி கேட்பதையும் தற்போது கூடுதலாக பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை ஆண் பெண் இருபாலாருக்கும் மனதளவிலும், எழுத்தளவிலும், ஏன் சிந்திக்கும் அளவிலும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக (ரதி மன்னிப்பீர்களாக) சாதாரணமாக ரதி படுக்கத்தான் கூப்பிடுகின்றேன் என்று எழுதுவார். என்னைப்பொறுத்தவரை ஒரு பெண் இப்படி …

    • 2 replies
    • 1.7k views
  24. ஐரோப்பா, கனடா நாடுகளில் சிறு பிள்ளைகளின் பேரில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்கள் மதுபானக் குளத்தில் பாயும் விழாக்களாக மாறி வருவதாக பல நாடுகளிலிருந்தும் கவலையோடு சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இந்தவகையில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நோர்வேயில் இருந்து பிறந்த நாட்கள் பற்றிய ஒரு பார்வை இங்கே வருகிறது.. சுமார் 300 பேரில் இருந்து 500 பேர்வரை கலந்து கொள்ளும் இந்த விழாக்களில் இலட்சக்கணக்கில் பணம் விரயம் செய்யப்படுகிறது.. இவற்றின் சில முக்கிய இயல்புகள்.. கட்டவுட் கலாச்சாரம் பிறந்தநாளில் பழைய காலங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பாரிய கட்டவுட்கள் வைக்கப்பட்டது போல இப்போது பிறந்த நாளுக்கு சுமார் 12 அடி உயரத்தில் பிள்ளையின் கட்டவுட் வைக்கப்படுகிறது. மாலை 6.00 மணி…

    • 21 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.