சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - சுப.சோமசுந்தரம் மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த …
-
-
- 5 replies
- 515 views
- 2 followers
-
-
குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ? by vithaiNovember 8, 2020 http://vithaikulumam.com/wp-content/uploads/2020/11/Kids-and-Casteism.jpg என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டி…
-
- 0 replies
- 514 views
-
-
அறிவும் உணர்வும் தடுமாறும் காதல் written by காயத்ரி மஹதிJuly 25, 2022 காதலில் தமக்கே தமக்கான கனவுக்கன்னியோ, கனவு நாயகனோ தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் என அறிவோம். இங்கு கனவுக்கன்னி, கனவு நாயகன் என்று அறியப்படுபவர்களின் அழகு, உடை, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு, உண்ணும் முறைகள், அவர்களுடைய உடல் எடை, அவர்கள் செய்யும் அலங்காரங்கள் ஆகியவற்றைத் தாமும் செய்து அந்த நபரை அப்படியே நகலெடுப்பார்கள். இப்படியாகத்தான் ஒவ்வொரு கனவு நாயகனும், கனவுக்கன்னியும் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய யூட்யூப் சமுகத்தில் அவர்களுக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்தும் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மீறி தற்போதைய கால…
-
- 0 replies
- 512 views
-
-
கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது எமிலி கஸ்ரியெல் பிபிசி Getty Images கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்? எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள். காதுகளால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களை நம்மால் பார்க்க முடியாதபோது, நிறைய விடியோ கால்கள் செய்யும்சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் காட்சிக் குறிப்புகள் இல்லாமல் உரையாடும்போத…
-
- 0 replies
- 512 views
-
-
தந்தையின் ஆசீர்வாதம் வேண்டி, உயிரிழந்த அவருடைய உடல் முன் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி - செல்வி தம்பதியரின் மகன் அலெக்சாண்டர் (30). இவரும், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (27) என்பவரும் மயிலத்தில் உள்ள தனியார் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். ஒரே இடத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 2ஆம் திகதி மயிலம்…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள். இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள். பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்க…
-
- 2 replies
- 510 views
-
-
"முதுமையில் தனிமை" / பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்பு கின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ?மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்…
-
- 0 replies
- 510 views
-
-
முடிதிருத்தும் பணி செய்து தனது குடும்ப வறுமையை போக்க முயற்சி செய்து வரும் எட்டாம் வகுப்பு மாணவி பிந்து பிரியா, பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்
-
- 0 replies
- 510 views
-
-
கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்" மேகா மோகன் பிபிசி உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் …
-
- 0 replies
- 507 views
-
-
மாறும் வாழ்வியல்: நிரந்தர உறவில்லாத காதலையும் காமத்தையும் தேடும் இளைய தலைமுறை - காரணம் என்ன? கேசி நோனிக்ஸ் பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "உறுதியான உறவாக மாறவாய்ப்பில்லாத ஒருவருடன் இருப்பது 'நேரத்தை வீணடிப்பதாகும்' என்ற கருத்துக்கு, சிச்சுவேஷன்ஷிப் எதிரானது" என்கிறார் எலிசபெத் ஆம்ஸ்ட்ராங். உறவுகளில் தன் துணையுடன் மிக மிக உறுதியாக இருப்பதற்கும் சாதாரணமாக இருப்பதற்கும் இடையே உள்ள நடுப்பகுதியை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். ஆனால் இளவயதினர் அதைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு ஜோடி தங்கள் உறவை இன்ன…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
வசைச் சொற்களில் ஒளிந்திருக்கும் சாதிகள் தீ.ஹேமமாலினி பொதுவாக நாம் சாதியச் சமூகங்களில் பார்க்கும் பொழுது சாதியை மேல்சாதி, கீழ்சாதி, தீண்டத்தகாத சாதி, கலப்புச்சாதி என பலவாறு பிரித்து வகைப்படுத்துவர். இதைத் தவிர இன்னும் நாம் சமூகத்தில் புழங்கும் சில சொற்கள் கூட சாதியோடு தொடர்பில் இருப்பதும் பலரும் அறியாமல் இருக்கலாம். பொதுவாக நம் சமூகத்தில் புழங்கும் வசைச் சொற்கள் யாவும் பெண்களை (உடலுறுப்பை) இழிவுபடுத்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரை மையப்படுத்தியே புழங்குவதைக் காணமுடியும். குறிப்பாக பெண்களை மிகவும் இழிவாகப் பேசும் தேவடியாள், வேசியர், தாசி, தேவதாசிஞ் உள்ளிட்ட சொற்களும் உண்டு. சண்டாளர்: சண்டாளர் என்ற இச்சொல் தாழ்ந்த சாதியரைக் கூடத் தீட்டுப்படுத்துபவன் என்ற பொர…
-
- 0 replies
- 507 views
-
-
சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம் - யதார்த்தன் by vithaiJuly 4, 2021 இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. வல்வெட்டித்துறை – துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும்…
-
- 0 replies
- 505 views
-
-
மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்! Feb 04, 2023 10:17AM IST ஷேர் செய்ய : சத்குரு மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, மன அழுத்தத்தில் உள்ளபோது உங்களுக்கு என்ன நேர்கிறது, மற்றும் மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது, அதை எப்படி வளர்ச்சிக்கான பாதையாக்கிக்கொள்வது என்பது குறித்து சத்குரு விளக்குகிறார். உங்களுக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது சத்குரு: மன அழுத்தம் எது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது? அடிப்படையில், நீங்கள் ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று எண்ணினீர்கள், ஆனால் அது நடக்கவில்லை. யாரோ, எதுவோ நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீ…
-
- 0 replies
- 504 views
-
-
இன்ஜினீயர் சாய் சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாய் என்கிற ராஜா சிவசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரைப் பிடித்தது எப்படி என்பதை போலீஸ் உயரதிகாரி நம்மிடம் விவரித்தார். ``மாணவியுடன் சாய் கடந்த 10 மாதங்களாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் செல்போனில் மாணவி ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது அவருடன் சாய் விளையாடியபோது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அந்த மாணவியிடம் சாய், தன்னுடைய பெயரை சஞ்சய் என்றும் போரூரில் உள்ள பிரபலமான பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியுள்ளார். அதை உண்மையென மாணவி நம்பியுள்ளார். அதன்பிறக…
-
- 1 reply
- 502 views
-
-
வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் தொனிப்பொருளில் பெண்களுக்கான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்றவீடுகள், சமூகங்கள், நாடுகள், உலகை உருவாக்க எழுவோம் எனும் செயல்திட்டத்தின் பெண்களுக்கானவன்முறைகளை தடுக்கும் வகையில் வீதியோர ஓவியங்கள், பறையடித்தல், வீதி நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்புமாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18)மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் நடைபெற்றது. "வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சூர்யா பெண்கள் நிறுவனம், மூன்றாவது கண் அறிவுத்திறன் குழுவினர், வன்முறையற்ற …
-
- 1 reply
- 502 views
-
-
லண்டன் தமிழர் கடைக்குள் நடந்தது தெரியுமா…? முக்கிய எச்சரிக்கை… கடந்த 3 தினங்களுக்கு முன்னர் லிவர்-பூல் பகுதியில் உள்ள ஒரு தமிழரின் கடைக்குள் , கத்தியோடு ஒருவர் புகுந்துவிட்டார். ஆனால் கடைக்குள் Till ல்(கஜானாவில்) நின்ற நபர் யார் தெரியுமா ? ஒரு பெண்ணும் அவரது கைக் குழந்தையும் தான். அங்கே வேறு யாரும் இல்லை. தனியாக ஒரு பெண் கடையில் நிற்பதே ஆபத்து. இதில் வேறு அவர் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கே நின்றுள்ளார். இதனால் திருடனுக்கு அடித்தது வாசி. உள்ளே புகுந்து பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டான். பிரித்தானியாவில் பல இடங்களில் தமிழர்கள் கடைகளை வாங்கிக் கொண்டு புறநகர்ப் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியுமாக கடைகளில் நிற்கிறார்கள். கணவன் எப்போது காஷ் & கரிக்கு …
-
- 0 replies
- 501 views
-
-
நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா? தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது. பாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது. மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது: சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த …
-
- 0 replies
- 501 views
-
-
சிங்கப்பூரில் பாடசாலைகளில் மாணவர்களுக்கான வீட்டுப்பாடத்தை குறைத்து வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது தொடர்பான புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிங்கப்பூர் பாடசாலைகள் உலக கல்வித்தரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்ற நிலையில் பரீட்சை மதிப்பெண்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையினை மாற்றி வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது; தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் தற்போது மீளாய்வு செய்கிறது. இதன் மூலம் மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும் எனவும் ஆரம்பப் பாடசாலைத் தேர்வுகளுக்காக மாணவர்கள் கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பபடும் நிலையும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/258…
-
- 0 replies
- 500 views
-
-
பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?, பெண்களை மதிப்பது எப்படி? பெண்கள் தற்காப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி ? போன்றவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங…
-
- 0 replies
- 499 views
-
-
முள்வேலி -புஷ்பராணி- ஈழத்தில் இருந்து புலம் பெயரும்போது ,உறவுகள், சொத்துகள் , வீடுவாசல்கள்….அழிக்க முடியாத பல நினைவுத்தடங்கள் என்று எல்லாவற்றையும் தடாலடியாக அங்கேயே விட்டுவிட்டு வந்த நம்மவர்கள் சாதியையும் அதனோடு சேர்ந்து விடுவிக்கமுடியாத வீணாய்ப்போன கலாசாரங்களையும் ,மேலோங்கி எண்ணங்களையும் முன்பிருந்ததைவிட மிக அதிகமாகவே புதையல் போலப் பொத்திக்கொண்டு வந்து தாம் தஞ்சமடைந்த நாடுகளிலும் பேணி வளர்க்கும் அநாகரிகத்தை மிக உன்னதமாக நினைத்துப் பெருமை வேறு கொள்கின்றார்கள். இதுபற்றி எழுதும்போதே என் காதில் விழுந்த …கண்ணால் கண்ட பல சம்பவங்கள் வரிசை கட்டிக் கண்முன்னே விரிகின்றன…தாம் வாழும் நாடுகளிலுள்ள பலவித பழக்கவழக்கங்களை முக்கித் தக்கிப் பின்பற்றி நாகரிக நடைபோடப் பிரயத்தனப…
-
- 0 replies
- 499 views
-
-
நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம். ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யா…
-
- 0 replies
- 498 views
-
-
டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை! குல்ஃபி என்ற பெயரைக் கேட்ட உடனே, உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? மொபைல் ரிங் சத்தத்தைவிட, காலிங்பெல் சத்தத்தை விட, டிங், டிங், டிங் என்று அடிக்கும் குல்ஃபி விற்பவர் எழுப்பும் சத்தத்துக்குக் காத்திருந்து சந்தோஷப்படுபவரா நீங்கள்? அப்ப, சியர்ஸ் போடுங்க... குல்ஃபி ஆர்மியில் இருக்கும் கோடானு கோடிப் பேரில் அடியேனும் ஒருவன். இளையராஜாவுக்கு அடுத்ததாக, என் இரவுகளை இனிமைப்படுத்தியது இந்த குல்ஃபி-க்கள்தான். ஒவ்வொரு முறை குல்ஃபி சாப்பிடும்போதும், சொர்க்கத்தின் வாசலை எட்டிப்பார்த்துவிட்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் அந்த குல்ஃபி விற்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக…
-
- 1 reply
- 498 views
-
-
அன்று தனது முதல் வேலையில் இணைந்து கொண்ட கேட்டிற்கு என்ன சொல்வது என தெரியாத நிலையேற்பட்டது. தற்போது வெற்றிகரமான அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் அன்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதற்காக எவ்வளவு கடினமான வேலையையும் செய்வதற்கு தயாராகயிருந்தார். ஆனால் அவர் தொடர்ச்சியான -பாலியல் ரீதியிலான மறைமுக கேலிகளை எதிர்பார்க்கவில்லை. அவர் சிவப்பு நிற ஹீல்ஸ் அணிந்த போதெல்லாம் அவரது மேலதிகாரிகளில் ஒருவர் ஆபாசமான கேலிகளில் ஈடுபட்டார். ஏனைய கூட்டங்களில் சிரேஸ்ட ஆண் ஊழியர்கள் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவது வழமை. அவர் தான் வேலையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்த பின்னர் மனிதவள பிரிவினரை சந்தித்தவேளை இவ்வகையான பாலியல் கேலிகள் - காரணமாக நான் தற்கொலை செய்ய நின…
-
- 0 replies
- 497 views
-
-
இழிவுபடுத்திய ஆண்களுக்கு பதிலடி கொடுத்த கிளிநொச்சி வீரபெண்கள் சர்ச்சைகளையும் சாதனையாக்கும் தமிழ் பெண்கள் https://fb.watch/hGShs2GZZU/
-
- 2 replies
- 496 views
-
-
நவீனக் கல்வி நம்மை தீயவர்களாக்குகிறதா? – ஆர். அபிலாஷ் May 31, 2022 - Uyirmmai Media · இலக்கியம் கட்டுரை கல்வி இல்லை, நாம் ஏற்கனவே தீயவர்கள் தாம். இதை நான் சொல்லவில்லை. மிகச்சிறந்த தத்துவவாதிகளில் ஒருவரான இமானுவெல் கேண்ட் தனது “கல்வியியல் குறித்த உரைகளில்” சொல்கிறார். என்னுடைய கருத்து ஏற்கனவே கடைந்தெடுத்த கொடியவர்களான நம்மை இந்த சமூக, பொருளாதார அமைப்பும், கூடுதலாக கல்வியமைப்பும் மேலும் கொடியவர்களாக, அறம் பிறழ்ந்தவர்களாக மாற்றுகிறது என்பதே. ஒரு உதாரணத்துக்கு, இந்த உலகின் ஆகக்கொடூரமான, மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டு வந்துள்ள குற்றங்களை இழைத்தவர்கள் யாரென்றால் அதிகமாகப் படித்தவர்களே. கல்வி நமது தீய சுபாவத்துக்கு ஒரு கூர்மையை, முனைப்பை அளிக்கிறது, தெளிவான இ…
-
- 2 replies
- 496 views
- 1 follower
-