உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26597 topics in this forum
-
வெளிநாட்டு மாணவருக்கு புதிய விசா நடைமுறைகள் -அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன் வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு ஏற்ற வகையில் பிரிட்டன் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் தமது பட்டப்படிப்பை அல்லது பட்டப்பின் படிப்பை நிறைவு செய்த வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு வழி வகுக்கும் நடைமுறை மே முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. குறிப்பிட்ட மாணவர்கள் இதற்கு மேலும் பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் பட்சத்தில், உரிய குடிவரவு நடைமுறையைப் பின்…
-
- 0 replies
- 830 views
-
-
கருக்கலைப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது மெக்ஸிக்கோ உலகில் இரண்டாவதாக அதிகளவு ரோமன் கத்தோலிக்கர்களை கொண்ட நாடான மெக்சிக்கோவின் சட்டவாக்க சபை கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 46 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இச் சட்டம் கருவுற்ற 12 வாரங்களில் கருவைக் கலைப்பதற்கு அனுமதி வழங்குகிறது. முன்னர் மெக்ஸிக்கோவின் சட்டவாக்க சபை வல்லுறவுக்குள்ளாக்கப்படல் தாயின் உயிருக்கு ஆபத்தெனக் கருதப்படல் மற்றும் கருவளர்ச்சியில் குறைபாட்டுக்கான அறிகுறிதென்படல் போன்ற காரணங்களுக்கு மட்டுமே கருவினை கலைப்பதற்கு அனுமதியளித்திருந்தது. மெக்ஸிக்கோவின் சனத்தொகையில் 90% மானோர் கத்தோலிக்கராவர். மெக்ஸிக்கோ பேராயர் இச் சட்டமூலத்தை எதிர்க்க வேண்…
-
- 0 replies
- 855 views
-
-
British Challenger 2 tank ஈராக்கின் பாஸ்ராவில் பிரித்தானியாவின் பிரதான சண்டைத் தாங்கி வீதியோரக் குண்டு வெடிப்பில் தகர்ந்து போனது. இது பிரித்தானிய இராணுவ தொழில்நுட்பத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6583607.stm ------------------------ Boris Yeltsin,76 இதற்கிடையே ரஷ்சியாவை அமெரிக்க முதலாளித்துவத்துக்கு விற்ற ரஷ்சிய முன்னாள் அதிபர் ஜெல்சின் மரணமாகிவிட்டார். http://news.bbc.co.uk/1/hi/world/europe/6584481.stm
-
- 4 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் சென்னை, ஏப். 23- சென்னை ஈக்காடுத் தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமை ஒரு போஸ்ட்கார்டு வந்தது. நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்த போஸ்ட்கார்டில், தமிழில் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டி ருந்ததாவது:- அரசை குறை கூறி ஜெயா டி.வி.யில் தொடர்ந்து செய்தி வெளியிடப்படுகிறது. இதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் விபரீத விளைவுகள் ஏற்படும். ஜெயலலிதா மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும். இது உறுதி. இவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் விடுதலைப்புலிகள், வெங்கடேசன், பாளை. என்.ஜி.ஓ. பி. க…
-
- 13 replies
- 2.1k views
-
-
மதுரை: 'சித்திரை திருவிழாவில் கார் குண்டு வெடிக்கும்'- கருணாநிதிக்கும் குண்டு மிரட்டல் ஏப்ரல் 24, 2007 மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா அன்று கார் குண்டு வெடிக்கும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகி ராஜாவுக்கு அல்-உம்மா அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதே போல முதல்வர் கருணாநிதி மதுரை வரும் போது அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் …
-
- 0 replies
- 728 views
-
-
குடிவரவு நடைமுறையை கடுமையாக்குகிறது பிரிட்டன் வேற்று நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு குடியேறுவது அடுத்த வருடம் முதல் கடினமாகவிருக்கும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளதைப் போன்று, புள்ளிகளின் அடிப்படையில், பிரித்தானிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக் கூடியவர்களுக்கே விசாக்களை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிரித்தானியாவில் குடியேற விரும்புவர்களின் தகுதி அடிப்படையில் விசாக்கள் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிப்பவர்களில் தொழில்சார் வல்லுநர்களுக்கும் தொழில் துறையினருக்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்சார் வல்லுநர்கள் தவிர்ந்த ஏனையவர்கள், மாணவர்கள் …
-
- 1 reply
- 826 views
-
-
சென்னை: சென்னை துறைமுகத்தை வெடிகுண்டுகள் நிரப்பிய படகு மூலம் தகர்க்கப் போவதாக வந்த தகவலால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் திருநெல்வேலியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகு மூலம் துறைமுகம் தகர்க்கப்படும் என எழுதப்பட்டிருந்தது. இதனால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துறைமுகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. துறைமுகத்திற்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரு அடுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதவிர கடலிலும் கடலோரக் காவல் படையினரின் ரோந…
-
- 1 reply
- 889 views
-
-
பாப் உல்மர் கொலை : கொலையாளி ரகசிய கேமிராவில் பதிவு!! பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட ரகசிய கேமிராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியுள்ளதாக ஜமைக்கா போலீசார் கூறியுள்ளனர். பாப் உல்மர் கடந்த மாதம் ஜமைக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்திய போது முதலில் சூதாட்டக்காரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் உல்மரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என ஜமைக்கா போலீசார் கூறினார். இந் நிலையில் கடந்த வாரம் லண்டலில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் நாளிதழில் உல்மருக்கு முதலில் விஷம் கொடுத்து பின…
-
- 0 replies
- 840 views
-
-
ஈராக் யுத்தம் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் தெரிவிப்பு வியட்நாம், ஈராக் யுத்தங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்டபிள்யூ. புஷ் விவாதத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் ஈராக் யுத்தம் தோல்வியில் முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒகியோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஈராக் யுத்தத்தை வியட்நாமுடன் ஒப்பிடுமாறு கேட்கப்பட்டதற்கு புஷ் 1975 இல் சைகோனின் வீழ்ச்சிக்கு பின்னர் வியட்நாமிற்கும் கம்போடியாவின் கெமருக்கும் இடையில் மோதல் மூண்டதைப்போல ஈராக்கிலிருந்து அமெரிக்கா அவசரமாக விலகுவது பாரிய குழப்பத்திற்கு காரணமாக அமையலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். வியட்நாமிலிருந்து நாங்கள் வெளியேறிய பின்…
-
- 0 replies
- 770 views
-
-
அமெரிக்க வேர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள campus of Virginia Tech university இல் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்து பலர் காயமைந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் கனடியப் பல்கலைக்கழகங்களில் நடந்த துப்பாக்கி வன்முறைகளில் மாணவர்கள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது..! Deadly shooting at US university At least 20 people have been killed and more injured after a gunman went on the rampage at the campus of Virginia Tech university in Virginia, US. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6560685.stm
-
- 24 replies
- 2.9k views
-
-
ரயிலில் திருமணம் செய்ய ரஷ்யாவில் வசதி ரஷ்யாவில் தங்கள் திருமணத்தில் புதுமையை விரும்பும் ஜோடிகள், திருமணத்திற்கு என விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயிலை தேர்ந்தெடுக்கலாம்.ரஷ்யாவில் புனித பீட்டர்ஸ் பெர்க்கில் உள்ளது மாஸ்கோவ்ஸ்கி ரயில் நிலையம். அங்கு அலங்காரத்துடன் ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தேவாலயத்தில் திருமணம் செய்வதை போல, அந்த ரயிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம். அங்கு 100 பேர் வரை தங்கி, திருமணத்தை கண்டு களிக்கலாம். அது தவிர, மணப்பெண் மணமகன், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வசதியாக தங்குவதற்கும் விருந்து பரிமாறுவதற்கும் அறைகள் உள்ளன. மேலும், திருமண தம்பதி அந்த ரயிலிலேயே தங்கள் தேனிலவை கொண்டாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினக்க…
-
- 1 reply
- 754 views
-
-
இராமர் அணை' சர்ச்சையில் இந்தியாவின் நான்கு சங்கராச்சாரியார்களும் தலையீடு `இராமர் அணை' உடைக்கப்படும் யோசனைக்கு எதிராக இந்தியாவின் 4 சங்கராச்சாரியர்களினது தலைமையின் கீழ் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி புதுடில்லியில் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியொன்று இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் சேது சமுத்திரத் திட்டத்தினால் பாக்குநீரிணைப் பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலம் பாதிக்கப்படுமென்ற சர்ச்சையின் தொடர்ச்சியாகவே இந்த கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த மக்கள் எழுச்சிக் கூட்டத்தின் பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி பெங்களூரிலிருந்து இராமேஸ்வரம் வரையான பேரணியொன்று நடைபெறவிருப்பதாகவும் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விவகாரத்தி…
-
- 0 replies
- 795 views
-
-
ஹூஸ்டன்: நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர் சுட்டுக் கொலை- கொலையாளியும் தற்கொலை ஏப்ரல் 21, 2007 ஹூஸ்டன்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார். இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத…
-
- 2 replies
- 1.3k views
-
-
சனி 21-04-2007 03:00 மணி தமிழீழம் [தாயகன்] பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதற்கான காரணம் விளக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு, அந்த அமைப்புகள் பயங்கவாரதப் பட்டியலில் இணைப்பட்டதற்கான காரணத்தை விளக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. லக்ஸம்பேர்;கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் 50ற்கும் மேற்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. முகவரி இல்லாத அமைப்புகளுக்கு கடிதம் அனுப்ப முடியாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் அவை பற…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க, அவுஸ்திரேலிய அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சர்வதேச சட்டத்திற்கு `முரண்' *மனித உயிர்கள் வியாபாரப் பண்டமல்லவென சாடுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம் - அருளானந்தம் அருண் - அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் செய்து கொண்டுள்ள அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டவிதிகளுக்கு எதிரானதென அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் முன்னணி மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சாடியுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அவுஸ்திரேலியாவின் நௌரு தடுப்பு முகாமில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 83 இலங்கையர்களும் 7 மியான்மார் நாட்டவர்களுமாக 90 பேர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவர் என்றும் அதுபோல் குவான்டனாமோ வளைகுடாவில் அமெரிக்க கட…
-
- 2 replies
- 779 views
-
-
தாக்க வரும் எதிரியின் கரத்தை இராணுவம் துண்டித்து வீசும் என்கிறார் ஈரான் ஜனாதிபதி தாக்க வரும் எதிரிகளின் கைகளை தங்கள் நாட்டு இராணுவத்தினர் துண்டித்து எறிவார்கள் என ஈரான் நாட்டு ஜனாதிபதி முஹமது அகமதிநிஜாத் எச்சரித்துள்ளார். ஈரான் நாட்டு இராணுவ தினம், புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி முஹமது அஹமதிநிஜாத் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு; நமது இராணுவத்தின் வசம் உள்ள திட்டங்களும், ஆயுதங்களும் நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆனால், இவை அனைத்தும் எதிரிகளின் கைகளை துண்டிக்க தயாராக உள்ளன. நீங்கள் (இராணுவத்தினர்) அனைவரும் ஒவ்வொரு தினமும் மிகுந்த விழிப்புணர்வோடும், எச்சரிக்கையாகவும் இருப்பது …
-
- 0 replies
- 2.1k views
-
-
பாக்தாத் வன்முறைகளில் 200 பேர் பலி ஈராக் பிரதமர் கடும் கண்டனம் ஈராக்கின் பாக்தாத் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 200 பேர் பலியானமைக்கு ஈராக் பிரதமர் நூறி மாலிகி கண்டனம் தெரிவித்துள்ளார். பாக்தாத்தில் அமெரிக்க- ஈராக்கிய படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்திய பின்னர் இடம்பெற்ற அதிகளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகும். சட்றியா மாவட்டத்திலுள்ள சந்தை ஒன்றில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 140 பேர் பலியானதைத் தொடர்ந்து அம்மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதியை கைது செய்வதற்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இவ்வருட இறுதிக்குள் ஈராக்கிய படைகள் ஈராக்கினது பாதுகாப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுமென …
-
- 0 replies
- 630 views
-
-
அமெரிக்காவின் பொறுப்புணர்வில் உலகத்துக்கு நம்பிக்கை இல்லை உலக விவகாரங்களில் அமெரிக்கா பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமென நம்ப முடியாது என்ற கவலை சர்வதேச ரீதியில் காணப்படுவது சர்வதேச கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையை முன்னெடுக்கும் விதம் குறித்து சர்வதேச ரீதியில் அதிருப்தி காணப்படுகின்ற அதேவேளை, வாஷிங்டன் தன்னை சர்வதேச பொலிஸாக கருதுவதை கைவிட வேண்டும் என்று மிகச் சிலரே எதிர்பார்க்கின்றனர். சர்வதேச விவகாரங்களுக்கான சிக்காகோ கவுன்சில் 18 நாடுகளில் குறிப்பிட்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. வாஷிங்டன் தனது வெளிவிவகார கொள்கையை முன்னெடுத்து வரும் விதம் தொடர்பாக எதிர்மறையான உணர்வு அதிகரிப்பதை இது புலப்படுத…
-
- 0 replies
- 705 views
-
-
சீனாவில் விஷ வாயு தாக்கி 450பேர் பாதிப்பு பீஜிங்: தென்மேற்கு சீனாவில் ரசாயன உர தயாரிப்பு தொழிற்சாலை வெளியிட்ட கழிவுகளில் உள்ள ரசாயனங்களால் சுமார் 450 பேர் பாதிப்படைந்துள்ளனர்கள். தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுத்திகரிக்காமல் உர தொழிற்சாலை, ரசாயனக்கழிவுகளை சுற்றுப்புறத்தில் பாதுகாப்பில்லாமல் வெளியிட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த 450க்கும் மேற்பட்டோர் சுவாச பிரச்சினையால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆசிரியர்கள் 135 பள்ளிக்குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூலம் - தினமலர்
-
- 1 reply
- 810 views
-
-
உலகின் முதலாவது மிதக்கும் அணுசக்தி உற்பத்தி நிலையம். ரஷ்யாவானது உலகின் முதலாவது மிதக்கும் அணுசக்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையமானது பின்தங்கிய பிரதேசங்களுக்கு மின்சக்தி வழங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 200 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்படும் இந்த அணுசக்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2010ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையத்தின் அடிப்படை அலகு ரஷ்யாவின் வடக்கிலுள்ள ஸெவெரொட்வின்ஸ்கில் தயாராகியுள்ளதாக ரஷ்யாவின் அணுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அகடெமிக் லொமொனோஸொவ் என அழைக்கப்படும் இந்த மிதக்கும் அணுசக்தி நிலையமானது கப்பலில் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனமான ஸெ…
-
- 1 reply
- 729 views
-
-
அல்-ஹைய்தாவின் அச்சுறுத்தலை 2001 இல் அறிந்திருந்த பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவு அல்ஹய்தாவினால் அமெரிக்காவிற்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து பிரான்ஸின் புலனாய்வு பிரிவினர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஒன்பது முறை எச்சரித்திருந்ததாகவும் விமானமொன்று கடத்தப்படலாம் என்பது அவர்களிற்கு தெரிந்திருந்ததாகவும் பிரான்ஸின்` லீ மொன்டே' குறிப்பிட்டுள்ளது. அல்ஹய்தாவிற்குள் ஊடுருவிய வெளிநாட்டு புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்பதை நிரூபிப்பதற்கான 328 பக்க ஆவணம் தன்னிடமுள்ளதாக குறிப்பிட்ட செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜனவரி 2001 இல் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயல்வது குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. 2000 ஆம் ஆண்டு இது…
-
- 0 replies
- 682 views
-
-
பொலிஸாரின் தடுப்புக் காவலிலிருந்தவர் இறந்ததால் மாலைதீவில் பதற்ற நிலை மாலைதீவில் பொலிஸாரின் தடுப்புக் காவலில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட நபரை பொலிஸாரே கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். ஹூசைன் சனா என்பவரின் உடல் தலைநகரின் துறைமுகப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அரசாங்கம் குறிப்பிட்ட நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட பின்னரே அவர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் அலைந்து திரிவதாகவும் பலரை கைது செய்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அமைதியின்மையை உருவாக்கின…
-
- 0 replies
- 709 views
-
-
காலநிலை மாற்றம் தொடர்பாக வரலாற்றில் முதற் தடவையாக விவாதிக்கிறது ஐ.நா. பாதுகாப்புச் சபை உலகப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை வரலாற்றிலேயே முதன் முதலாக நேற்று செவ்வாய்க்கிழமை கூடியுள்ளது. பிரிட்டனால் ஆரம்பித்து வைக்கப்படும் இவ்விவாதத்தின் கருப்பொருள் சக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை என்பன பற்றியதாகும். சர்வதேச நிகழ்ச்சி நிரலில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றுவரும் ஓர் விடயம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது தொடர்பாக நாம் ஆராயவுள்ளோமென தனது பெயரை குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்காலநிலை மாற்றத்திற்கெதிராக செயற்படாமல் இருப்பதன் மூலம்…
-
- 1 reply
- 766 views
-
-
போக்குவரத்து தகவல் தொடர்புகளுக்கு உதவும் 5 ஆவது புவி நிலை செயற்கைக் கோளை செலுத்தியது சீனா போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் இயற்கைப் பேரழிவு தடுப்பு போன்றவற்றுக்குப் பயன்படக் கூடிய, ஐந்தாவது புவி- நிலை செயற்கைகோளை சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா. `பெய்து' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோள், தென்மேற்குச் சீனாவின் சிசுவின் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.11க்குச் செலுத்தப்பட்டது.பூமியில் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு நேர் மேலாக புவி சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் சரியாக அந்த செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டது என்று சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
- 4 replies
- 4.8k views
-
-
ஜப்பானில் நில நடுக்கத்தால் 400 ஆண்டு பழைமையான சுவர் சேதமடைந்தது மத்திய ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.19 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.4 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இருவர் காயம் அடைந்தனர். 400 ஆண்டுகால பழைமையான சுவர் சேதமடைந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 320 கிலோமீற்றர் தொலைவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கேமியமா நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஓர் பெண்ணும், 60 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணும் காயம் அடைந்ததாக அந்நகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடல்கோள் அபாயம் எதுவும் இல்லை என பூகம்ப ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது…
-
- 0 replies
- 623 views
-