Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர். அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்…

  2. வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்! உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது. 79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது. வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல. கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உ…

  3. வரி அதிகரிப்பை சமரச ஒப்பந்தம் பிரதிநிதிகள் அவையிலும் நிறைவேற வேண்டும்! அமெரிக்காவில் வரி அதிகரிப்பு மற்றும் செலவுக் குறைப்பு சிக்கன நடவடிக்கை ஆகியவை தொடர்பில் நாட்டின் செனெட் மன்றத்தில் நிறைவேறியுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்ததின் கீழ் மில்லியனேர், பில்லியனேர் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் தாங்கள் நியாயமாக செலுத்த வேண்டிய வரியை இனிமேல் செலுத்த ஆரம்பிப்பார்கள் என ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் சரிவுப் பாதையில் தள்ளிவிடக்கூடியது என்று அஞ்சப்படும் மிகப் பெரிய வரி அதிகரிப்பும், பெருமளவான சிக்கன நடவடிக்கைகளும் நாட்டில் தானாக ஆ…

    • 2 replies
    • 333 views
  4. வரி ஏய்ப்பு செய்து வாழ்வை முடித்த பணக்கார முட்டாள். Anti virus மென்பொருள் உலகின் முதல் கால் பதித்தவர், John Macfee. Macfee என்ற பெயரில் இவர் 1980களில் அறிமுகப்படுத்திய மென்பொருள், சந்தையில் சக்கை போடு போட்டது. இறுதியில் அதனை intel நிறுவன,$7.6 பில்லியன் க்கு வாங்கியது. இவரும் பெலிஸ் நாட்டுக்கு சென்று அங்கெ 17 வயது இளம் பெண்ணுடன் தங்கி இருந்தார். நாய் வளர்ப்பில் பிரியமான இவர் வளர்த்த நாய்களில் ஒன்றை பக்கத்து வீட்டு காரர் நஞ்சு வைத்து கொன்றதாக குற்றம் சாட்டி வந்தார். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர், சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவரோ கௌதமாலா நாட்டுக்கு ஓடி விட்டார். இவர் இருந்த வீட்டினுள் பல துப்பாக்கிகள் இருந்தன என்று போலீசார் சொன்னார்கள்…

  5. வரி ஏய்ப்பு மோசடி குறித்து கூகுள் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை அமெரிக்காவின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் தலைமையகத்தில் வரி ஏய்ப்பு மோசடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி உள்ளனர். மத்திய பாரீஸில் இருந்த கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் இன்று அதிகாலை சுமார் 100 வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 12,186 கோடி ரூபாய்) வரி பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. http://www.bbc.com/tamil/global/2016/05/160524_google_tax

  6. சென்னை: மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் இங்கு தயாரிக்கும் செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி, வரிச்சலுகை பெற்ற நிலையில், அந்த செல்போன்களை இங்கேயே விற்று ரூ.2,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி வாய்ப்பு செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, 8 வாரத்திற்குள் பணத்தை…

  7. வரி விதிப்பு: "அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா பின்வாங்காது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா "ஒரு போதும் பின்வாங்காது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு …

  8. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப் பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்…

  9. வரியும் செலுத்துவதில்லை, அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாகப் பயன்படுத்துகிறது: அமேசான் மீது அதிபர் ட்ரம்ப் கடும் சாடல் படம். | ஏ.எஃப்.பி. மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி என்று எதையும் அமேசான் நிறுவனம் கட்டியதில்லை என்று ஆத்திரமடைந்த ட்ரம்ப் அமேசான் நிறுவனத்தை கடுமையாகச் சாடினார். இன்னும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. “அமேசான் பற்றி எனது கவலைகளை நான் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே தெரிவித்துள்ளேன், இந்த நிறுவனம் வரிகளே செலுத்துவதில்லை. நம் நாட்டு தபால் ஊ…

  10. உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு வருகிற பிப்ரவரி 6‐7ல் இடம்பெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். உலகத் தமிழர் மாநாடு குறித்து நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணயம் கேட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் போராடியும் அந்த உரி்மை கிடைக்கவில்லை. இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஐரோப்பியா, அமெரிக்கா உள்பட ஐநா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்திய அரசு இதுவரை எவ்வித கண்டனமும் தெரிவிக்கவிலலை. தாய் தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி கர்நாடகாஇ மகாராஷ்டிரா செல்லும் தமிழர்கள் மிக எளிதாக தாக்கப்படுகின்றனர். மக்களின் வாழ்வுரி்மை பிரச்சனை எதுவும் தீ்ர்க்கப்படவில்லை. குறிப்பாக ஆந்திராவில் பாலாறு, கர்நாடகாவில் காவேறு,…

  11. வருங்கால அறிவியல்: உலகத்தின் சாலைகள் அனைத்தும் நிலத்தடிக்கு மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? லாரா பேடிஸன் பிபிசிக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ZHUANG WANG/GETTY சாலைகள் நகரங்களை மாசுபடுத்துகின்றன. பொது இடங்களையும் ஆங்காங்கே துண்டுகளாக இருக்கும் வாழ்விடங்களையும் விழுங்கிவிடுகின்றன. அத்தகைய சாலைகளை நிலத்தடி சுரங்கச் சாலைகளாக மாற்ற முடியுமா? அது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுமா? 1863-ஆம் ஆண்டில், தெருக்களில் இருக்கும் போக்குவரத்தைக் குறைக்கும் முயற்சியில், உலகின் முதல் சுரங்கப் பாதையான மெட்ரோபோலிட்டன் ரயில்பாதையை லண்டன் திறந்தது. அதற்கு இருபது ஆண்டுகளுக…

  12. நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேண்னே நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்... எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்து…

    • 4 replies
    • 1.9k views
  13. அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது.செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதை அமெரிக்கர்கள் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர். இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் 5,886 கோடி கிலோ எடையுள்ள உணவு பொருட்களை இங்கு வாழும் மக்கள் வீணடிக்கின்றனர். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.11 லட்சம் கோடி (160 மில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து அமெரிக்க அரசு கவலைப்படுகிறது. எனவே அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு மீறி உணவு பொருட்கள் தயாரிப்பதால் சாப்பிட முடியாமல் காலாவதி ஆ…

  14. டெல்லி: வருடா வருடம் இந்தியாவில் உள்ள என்ஜிஓக்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ரூ. 10,000 கோடி அளவுக்கு நிதியுதவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத் தகவல் தெரிவிக்கிறது. கடந்த 2009-10ம் ஆண்டு இந்திய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22,000 தொண்டு நிறுவனங்கள் இந்த வெளிநாட்டு உதவியைப் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 3218 ஆகும் என்று அத்தகவல் தெரிவிக்கிறது. தமிழக நிறுவனங்கள் மட்டும் கடந்த 2009-10ல் ரூ. 1663.31 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது. …

    • 1 reply
    • 488 views
  15. காங்கிரஸ் தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டு தோறும் வெளிநாடு சென்று வருவது வழக்கம். அதாவது 2011ல் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுவருகிறார்.கடந்த ஆண்டும் இதே போல் செப்டம்பர் மாதம் ‌சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் திங்களன்று லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலின் போது அதில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நெஞ்சுவலியால் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மரு்த்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 மணி நேர சிகிச்சைக்கு பின் செவ்வாய் அன்று அதிகாலை வீடு திரும்பினார். அதன் பின்னர் சனிக்கிழமை மாலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். கண் ‌நோய், எ…

  16. வருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன : February 15, 2019 உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசி பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்னும் தொனிப் பொருளுடன் இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடிய…

  17. வருபவர்களை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?: அழகிரி அதிரடி மதுரையில் மு.க. ஸ்டாலின் நடத்திய திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்தும், அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் குறித்தும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார். முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர். பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அ…

    • 0 replies
    • 513 views
  18. அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி கேட்டுள்ளார். அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபமா தெரிவித்தார். அமெரிக்காவின் நிலை குறித்து வருடந்தோறும் அமெரிக்க ஜனாதிபதி நிகழ்த்தும் state of the union உரையை ஒபாமா நேற்றிரவு நிகழ்த்தினார். மிகச் சிலர் அதிக வருமானத்தைப் பெறும் அதேவேளையில் பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கு சிரமப்படும் நிலை தற்போது உள்ளதாக அவர் கூறினார். அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டுமென அவர் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட…

  19. வருமான வரி அலுவலகம் மீது விமானத்தை மோதியது ஏன்? வாஷிங்டன் : குட்டி விமானத்தை வருமான வரி அலுவலகம் மீது மோதி தகர்த்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவில் தீவிர விசாரணை நடை பெறுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் வருமான வரி அலுவலகம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் 200 ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுவேகத்தில் பறந்து வந்த குட்டி விமானம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. உடனே, விமானமும், அலுவலகமும் தீப்பற்றி எரிந்தன. கட்டிடம் மீது விமானம் மோதியதால் தீவிரவாத தாக்குதல் என்ற பீதி ஏற்பட்டது. வருமான வரி அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் தலைதெறிக்க வெளியே ஓடினர…

  20. புதுடெல்லி: வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ‘நேஷனல் ஹெரால்டு’ நாளேட்டுக்கு சொந்தமான சுமார் ரூ.1.600 கோடி சொத்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தன…

  21. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான சுவீட் கடைகள் உள்ளன. அதில் அல்வா விற்பனையில் பிரபலமாக திகழும் சாந்தி சுவீட் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகள், கார வகைகளின் விற்பனை மும்முரமாக நடந்து வந்த நிலையில் மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மருது பாண்டி தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று இரவு 7 மணிக்கு சாந்தி சுவீட் கடைக்கு வந்தனர். பின்பு அவர்கள், வியாபாரத்தை நிறுத்துமாறும், கடை ஊழியர்கள் வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். பின்னர் கடையில் உள்ள சரக்கு இருப்பு, விற்பனை மற்றும் ரசீது உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடை உரிமைய…

    • 0 replies
    • 936 views
  22. [size=4]கனடிய மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காக வரியில்லா சேமிப்பு கணக்கு என்ற ஒரு புதிய திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனடிய அரசாங்கம் கொண்டு வந்தது. இந்த புதியவகை சேமிப்பு கணக்கில் சேமிக்கும் பணத்திற்கு வரிகட்ட தேவையில்லை. இதனால் மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை கொண்டுவருவதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று அரசு உறுதியாக நம்பியது. ஆனால் தற்போது இந்த கணக்கை சேமிக்கும் பழக்கத்திற்கு பதிலாக, வரி கட்டாமல் அரசை ஏமாற்றுவதற்காக பலர் போலியாக கணக்கை துவக்கி, அதில் ஏராளமான பணத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளதுள்ளதாக கனடிய வருமான வரித்துறைக்கு கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டு வந்தது. எனவே போலியாக கணக்கு துவக்கியவர்களை கண்டறிந்து அதில் சுமார் 72.000 பேர்களு…

  23. [size=4]ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆட்குறைப்பில் இறங்கிய Research In Motion ( RIM ) நிறுவனம் இந்த மாதத்தில் வட அமெரிக்காவில் உள்ள பல சில்லறை வர்த்தக கடைகளை மூடுவதென தீர்மானித்துள்ளதால் 1,000 பேரின் பணியிடங்கள் பறிக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது. [/size] [size=4] [/size] [size=4]ப்ளாக்பெர்ரி கைபேசிகளை தயாரித்து வரும் இந்நிறுவனம் பெரும் நட்டமடைந்துள்ளதால் எதிர்வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பலருக்கு வேலை பறி போகலாம் என இணைய இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் ஒண்டோரியோ வாட்டர்லூ பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவன அதிகாரிகள் இந்த செய்தியை மறுத்துள்ளனர். [/size] [size=4] [/size] [size=4]RIM நிறுவன கையடக்கத் தொலைபேசிகளுக்கு வட அமெரிக்காவில் ம…

    • 1 reply
    • 718 views
  24. 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர் நகர் அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் வாழும் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.