Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கைதான நிலையில் கியென் (கோப்புப் படம்) கோடிக்கணக்கான டாலர்கள் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வியட்நாமின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆடம்பரம் மிக்க தொழிலதிபர்களில் ஒருவருமான ங்யுயென் டுக் கியெனுக்கு (Nguyen Duc Kien) முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹனோய் நகரின் தலைசிறந்த கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக இருக்கின்ற கியென் வரி ஏய்ப்பு செய்ததாகவும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றங்காணப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு கியென் கைதுசெய்யப்பட்டபோது அவர் ஆரம்பித்திருந்த ஏசியா கமர்ஷியல் பேங்க் என்ற பெரிய வங்கியின் பங்கு விலைகள் சரிவைக் கண்டிருந்தன. முன்பு இவர் வியட்நாம் பிரதமர் ங்யுயென் டன் ஸுங்க்கு (Nguyen Tan Dung) நெருக்கமாக இருந்தவர்…

    • 0 replies
    • 409 views
  2. Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 12:59 PM மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது. வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்…

  3. வியட்நாமுக்கு அமெரிக்க ஜனாதிபதி முதல் தடவையாக விஜயம் 18 - November - 2006] அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வியட்நாமுக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். யுத்தத்திற்குப் பிந்திய வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இரண்டாவது ஜனாதிபதி புஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை இரண்டாக பிளவுபடச் செய்த வியட்நாம் யுத்தத்திற்கு 30 வருடங்களுக்குப் பின்னர் அந்த நாட்டிற்குத் தான் விஜயம் மேற்கொண்டுள்ளமை இரு நாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். கடந்தகால நெருக்கடிகளிலிருந்து மீளலாம் என்பதை புலப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். வியட்நாம் அனுபவங்கள், பிரிவுகளை காலம் புலப்படுத்தும் என்பதை புலப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். வியட்நாமிய தலைநகர் ஹ…

  4. வியட்நாமுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தங்கள்!- ட்ரம்ப் தெரிவிப்பு வியட்நாமுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான இரண்டாம்கட்ட சந்திப்பிற்காக, அமெரிக்க ஜனாதிபதி விட்நாம் சென்றடைந்துள்ளார். இந்நிலையில், வட கொரிய தலைவருடனான சந்திப்பிற்கு முன்னர் ஜனாதிபதி ட்ரம்ப், இன்று (புதன்கிழமை) வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த ட்ரம்ப், ”நாம் வியட்நாமுடன் பல பாரிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடவுள்ளோம். வியட்நாமின் உபசரிப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். வடகொரிய தலைவ…

  5. வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., …

  6. வியட்நாமைத் தாக்கிய சூறாவளி- பல இலட்சம் மக்கள் பாதிப்பு 48 Views வியட்நாமைத் தாக்கிய சூறாவளியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சூறாவளியின் காரணமாக 174 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை, உள்ளுர் நேரம் 11.00 மணிக்கு வியட்நாமில் வீசிய ஷமொலாவேஷ என்றழைக்கப்படும் சூறாவளி கடந்த இருபது வருடங்களில் தென்கிழக்கு ஆசியாவில் வீசிய சூறாவளிகளுள் மிகவும் பலமானது எனக் கருதப்படுகின்றது. இந்த சூறாவளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான மழைவீழ்ச்சி எதிர்வரும் நாட்களுக்குத் தொடரக்கூடும் என்றும் ஏற்கனவே பல இடர்களை அனுபவிக்கின்ற குடும்பங்களின் நிலைமை…

  7. ஹனோய்: வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை இவர் உடல் மோசமடைந்தது. இதன் காரணமாக இன்று காலை இவர் மரணம் அடைந்தார். கடந்த 2016 ஏப்ரலில் இவர் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்த நாட்டில் உள்ள 3 முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறார். இவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் வியட்நாமை சேர்ந்தவர். இவரது இரங்கல் காரணமாக அந்த நாட்டில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …

  8. வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக் சர்ச்சை அந்த வரலாற்று சிறப்புமிக்க படம் ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித…

  9. வியட்நாம் போர் நாயகனும் அமெரிக்க செனட்டருமான ஜான் மெக்கைன் காலமானார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜான் மெக்கைன், வியட்நாம் போரின் நாயகனாகவும் பின்னர் அமெரிக்க செனட்டராகவும் இருந்த குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. படத்தின் காப்புரிமைEPA கடந்த ஜூலை 2017-ல் அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி தீவிரமான அளவில் இருப்பத…

  10. வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மார்க் ஷீ பதவி,பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறியது என்பதும் அதன் இராணுவமும் அதே போல சக்திவாய்ந்ததாகக் கருதப்பட தொடங்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும்கூட, ஏறக்குறைய எட்டு ஆண்டுகாலப் போரில் பெருமளவிலான பணத்தையும் இராணுவ வளங்களையும் கொட்டிய போதிலும், அமெரிக்கா வடக்கு வியட்நாமியப் படைகள் மற்றும் அவர்களின் கொரில்லா கூட்டாளிகளான …

  11. பட மூலாதாரம்,MICHAEL HAYES படக்குறிப்பு, ஹின் நீ ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் போதகர் ஆவார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி நியூஸ் 21 ஆகஸ்ட் 2023, 12:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 75 வயதான பாஸ்டர் ஒய் ஹின் நீ, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள தனது தேவாலயத்தில் வசதியாக இருந்து நற்செய்தியை பிரசங்கித்தார். ஆனால் ஒரு இளைஞனாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காட்டில் உயிர் வாழ்ந்துவந்தார். போர் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வியட்நாமிய ராணுவத்துடன் போரிடும் தோழர்களுக்கு பிரசங்கம் செய்தார் -…

  12. வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின் படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பு என தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு By SETHU 07 FEB, 2023 | 05:56 PM வியட்நாம் யுத்தத்தின்போது, வியட்நாமில் தென் தென்கொரிய படையினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் தென் கொரிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. 1960கள் மற்றும் 1970களில் கம்யூனிஸ வடக்கு வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தின்போது, அமெரிக்கப் படையினருக்கு உதவுவதற்காக தென் கொரியா தனது படையினரை வியட்நாமுக்கு அனுப்ப…

  13. வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது. சில பாரம்பரியங்கள் தொடர்ந்தாலும், பல தொலைந்துவிட்டன. 2000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சம்பா சமூகம் இன்னும் நிலைத்திருக்கிறது ஆனால் அதற்கும் முந்தைய இந்து மதம் இங்கே அழிவின் விளிம்பில் உள்ளது. பண்டைய காலத்தில் இந்து அரசின் ஒரு பகுதியாக இருந்த சம்பா பகுதி இந்து மதத்தின் கோட்டையாக திகழ்ந்தது. சம்பாவில் இருக்கும் புராதனமான கோவில்களில் எஞ்சியிருக்கும் சில அதற்கான சாட்சியங்களாகிவிட்டன. வேறு சில கோயில்கள் இடிபாடுகளாக எ…

  14. வியத்நாம் போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் ஆங்காங்கே மறைந்து கிடக்கும் குண்டுகள் அவ்வப்போது வெடித்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு கிராமத்தில் கிடந்த குண்டு வெடித்து, 4 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. வியத்நாமின் வின் லாங்க் மாகாணத்தில் உள்ள ஹியூ ஜியா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மூங்கில் குவியலுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். விவரம் அறியாத அந்தக் குழந்தைகள் அதை வைத்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் குண்டு வெடித்தது. இதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 ம…

  15. வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. வியட்நாம் போரில் போராளிகளின் இழப்பே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் உறுதி தளராது போரில் வெற்றி பெற்றவர்கள் வடக்கு வியட்நாமியப் போராளிகளே. http://www.bbc.co.uk/news/in-pictures-32483307

    • 0 replies
    • 1.8k views
  16. வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் - என்ன நடந்தது? 3 நவம்பர் 2020, 04:34 GMT பட மூலாதாரம், GETTY IMAGES ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் மற்றொரு கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நகரில் பெரும்பாலான ப…

  17. வியன்னா விமான நிலையம் ஊடாக இலங்கை அகதிகள் கடத்தல்! - ஊழியர்கள் உடந்தை [Wednesday 2015-05-27 07:00] வியன்னா விமான நிலையத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையர்கள் உட்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் தோரணையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளை அனுப்புவதாக அவுஸ்திரேலிய செய்தி ஒன்று கூறுகிறது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வியன்னா விமான நிலையத்தில் பணி புரியும் 13 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தனியார் பாதுகாப்பு பணியாளர் ஒருவரால் சட்டவிரோதமாக அனுப்பப்படவிர…

  18. வளைகுடா வளம் பெறும் வாய்ப்பு எண்ணெய் கிணறுகளால் என்றால் மிகையல்ல. சில நாடுகள் தங்கள் நாட்டின் வளத்தைக் கொண்டும் சில நாடுகள் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டும் முன்னேறி வருகின்றன. வளைகுடாவைப் பொறுத்தவரை எண்ணெய்க் கிணறுகள் தான் இதன் வளம். இதனைக் கொண்டே வளைகுடாவில் உள்ள அத்தனை நாடுகளும் முன்னேறி வருகின்றன. ஐக்கிய அரபு அமீ்ரகம் வளைகுடாவில் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E) . இந்த அமீரகத்தில் மொத்தம் 7 மாநிலங்கள் உள்ளன. இதன் தலைநகரம் அபுதாபி. துபாய், சார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா, மற்றும் ராசல்கைமா என்பது இதன் மற்ற மாநிலங்கள். அபுதாபியை அடுத்து துணைத் தலைநகரம் போல் இருப்பது துபாய். ஐக்கிய அரபு அமிரகம் ஏறக்குறைய எண்ணெய் வளமே பிரதான வளம் என்ற போதிலும் துபாய் மாநில…

  19. விரல் சொடுக்கும் வடகொரியா கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12…

  20. கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12 அன்று வட கொரியா ஒரு புதிய செயற…

  21. விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன? இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன…

  22. விரிசலடையும் அமெரிக்கா - பாக். உறவுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த பல மில்லியன் டாலர்கள் கணக்கான இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களையே காட்டுகின்றது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கடமையில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது. மறுபுறத்தில், பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனின் தங்குமிட வளாகத்துக்குள் அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய முற்றுகைத் தாக்குதல், இது தவிர அமெரிக்கப் படையினரின் சர்ச்சைக்குரிய ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் அளவு கடந்த சுதந்திரத்துடன் செயற்படுவதாக அங்கு பெரும் கொந்தளி…

    • 1 reply
    • 525 views
  23. விரிவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் எகிப்தில் இன்று போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம் பிரதான கால்வாய் ஆழப்படுத்தப்பட்டிருப்பதோடு, அந்தக் கால்வாய்க்கு இணையாக 22 மைல் தூரத்திற்கு கூடுதல் கால்வாயும் வெட்டப்பட்டிருக்கிறது. விரிவாக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாயின் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்குமென எகிப்து எதிர்பார்க்கிறது. இதன் துவக்கவிழாவில் மேற்கொள்ளப்பட்ட கப்பல் பயணத்தில் எகிப்தின் அதிபர் அப்தேல் ஃபடா அல் - சிசியுடன் வெளிநாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமிட்டன. சூயஸ் கால்வாயில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திறப்பு விழாவின்போ…

  24. விருது நிகழ்வுக்குப்பின் பாலியல் வல்லுறவு செய்தார் வைன்ஸ்டீன்: நார்வே நடிகை புகார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைAFP Image captionஎலெக்ட்ரா மற…

  25. மோடி விரும்பி அழைத்து சென்றால் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலின் போது வதோதரா தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு மனைவி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் இந்த தகவலை மறைத்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் மோடியின் மனைவி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாயின. குஜராத்தை சேர்ந்த யசோதாபென் என்பவருக்கும் மோடிக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்தார். தற்போது 62 வயதான யசோதா பென் ஆசிரியைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.