உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது! உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது. பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. ரஷ்ய – யுக்ரைன் மோதலால் உயர்ந்து வந்த மசகு எண்ணெய் விலை, 2021 ஆம் ஆண்டுக்கு பின், இத்தகைய அளவுக்கு சரிந்துள்ளது. மோதலின் ஆரம்ப காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/245118
-
- 1 reply
- 419 views
- 1 follower
-
-
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் ப…
-
- 5 replies
- 778 views
- 1 follower
-
-
மாற்றுத்திறனாளி 'கடற்கன்னி'களுக்கு மன மகிழ்ச்சி தரும் திருவிழா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இது உலகின் மிகப்பெரிய கடற்கன்னி திருவிழா என்று கருதப்படுகிறது எல்லாவித திறனுடையவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கடற்கன்னியாக மாறி இந்த ‘மெர்மெய்டிங்’ விளையாட்டில் பங்கேற்கிறார் ச்சோபோ. இவர் பலருக்கும் உற்சாகம் அளிக்கும் இந்த திருவிழா பற்றிய வண்ணமயமான வீடியோ. https://www.facebook.com/BBCnewsTamil/videos/1237095993591126/ https://www.bbc.com/tamil/articles/c884qq705q2o
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
கல்லூரி அனுமதி கடிதம் போலி: கனடாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கும் 700 இந்திய மாணவர்கள் Published By: SETHU 16 MAR, 2023 | 11:25 AM சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. கனேடிய விசா பெறுவதற்காக, கனேடிய கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட கடிதங்கள் போலியானவை எனத் தெரியவந்தமையே இதற்கான காரணம். கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் இம்மாணவர்களுக்கு நாடு கடத்தல்; அறிவித்தலை வழங்கியுள்ளதுதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இம்மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரிலுள்ள முகவர் ஒருவர் ஊடாக 2018, 2019 …
-
- 0 replies
- 590 views
- 1 follower
-
-
அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள்: 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் திரும்புகிறதா? அமெரிக்காவில் நடப்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகியுள்ளன. இதனால், உலகையே உலுக்கிய 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப் போகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க வங்கிகள் திவாலானது ஏன்? அதனை சமாளிக்க அந்நாட்டின் மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) என்ன செய்கிறது? அதன் தாக்கம் உலகளவில் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி (SVB) திவாலாகியுள்ளத…
-
- 7 replies
- 941 views
- 1 follower
-
-
வெளிநாட்டு IT நிபுணர்கள் ரஷ்யாவில் தொழில் பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன: ரஷ்ய உள்துறை அமைச்சு Published By: Sethu 15 Mar, 2023 | 04:38 PM வெளிநாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர்கள் ரஷ்யாவில் பணியாற்றுவதற்கு வேலை அனுமதிப்பத்திரம் வதிவிட அனுமதி பெறும் நடைமுறைகளை தான் இலகுபடுத்தியுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வெளியேறிய தகவல் தொழில்நுட்பவியல் நிபுணர்களால் ஏற்பட்ட வெற்றிடங்களையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையடுத்து, ஆட்திரட்டல் திட்டமொன…
-
- 4 replies
- 786 views
-
-
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்! மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன. துண்டிக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்க இரு நாடுகளும் இடையே சீனா, மேற்கொண்ட நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது. நல்லிணக்கத்திற்கான முயற்சியில் முதலாவதாக, இரு நாடுகளும் இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாக தெரிவித்தன. அவர்கள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் நிறுவுவார்கள். இந்த அறிவிப்பை அமெரிக்கா எச்சரிக்கையுடன் வரவேற்றது. இதுகுறித்து கருத்த…
-
- 71 replies
- 3.9k views
-
-
சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் Published By: RAJEEBAN 15 MAR, 2023 | 11:04 AM ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து…
-
- 0 replies
- 568 views
- 1 follower
-
-
செளதி, இரான் இடையிலான நெருக்கம் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,கமலேஷ் மட்டேனி பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும் செயல் உத்தி கண்ணோட்டத்துடனும் பார்க்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, அ…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருட சிறை: ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் Published By: SETHU 14 MAR, 2023 | 06:20 PM கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்ற கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில், உக்ரேனுக்கு எதிராக வாக்னர் குழு எனும் தனியார் கூலிப்படையினரும் போரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தொண்டர் படையினரை' விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர். …
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
உலகின் வலுவான ராணுவம் : சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேச்சு… ‘சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு அதிபராகவும், ராணுவ தலைவராகவும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தேர்வானார். அந்நாட்டில் அதிபர் பதவி வகித்த கம்யூ., தலைவர் மாசேதுங் உட்பட, வேறு எந்த தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் நீடித்தது இல்லை. இந்நிலையில், சீன பார்லி மென்டின் நிறைவு விழாவில், 3,000 உறுப்பினர்கள் முன்னிலையில் அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான்…
-
- 3 replies
- 700 views
- 1 follower
-
-
ஊபர், லிப்ட் நிறுவனங்களின் சாரதிகள் ஒப்பந்தக்காரர்களே: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு Published By: SETHU 14 MAR, 2023 | 10:26 AM ஊபர், லிப்ட் மற்றும் ஏனையை செயலிகள் அடிப்படையிலான நிறுவனங்கள், தமது சாரதிகளை ஊழியர்களாக அல்லாமல், சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்தலாம் என அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளி;ததுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் ஊபர், லிப்ட் (Uber, Lyft) போன்ற நிறுவனங்கள் சாரதிகளை சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்துவதற்னு அனுமதி வழங்கும் திட்டத்துக்கு 2020 நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் இந்நிறுவனங்கள் ஊழியர்களு…
-
- 0 replies
- 674 views
- 1 follower
-
-
பாரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரண்ட் பனிக்கட்டியை உடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பாரிய பனிப்பாறைகள் பிரித்தானிய விஞ்ஞானிகள் உலகின் பாரிய இரண்டு பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று கிரேட்டர் லண்டன் அளவுடையது என்றும், மற்றொன்று கார்ன்வால் அளவுடையது என்றும் கூறப்படுகிறது. பிரித்தானிய அண்டார்டிக் சர்வேயின் ஹாலி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிய பனிப்பாறை நிபுணர் மருத்துவர் ஆலிவர் மார்ஷ், இது கன்றை ஈன்றுவது போன்ற இது எங்களுக்கு தெரிந்தது என குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், A81 என்ற பாரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பிரண்ட் ஐஸ் ஷெல்ஃப்பில் இருந்து விட…
-
- 1 reply
- 462 views
-
-
பனியில் உறைந்த காருக்குள் சிக்கிய 81 வயது முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்பு மற்றும் குரோசண்ட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார். பனியில் காருக்குள் சிக்கித் தவித்த முதியவர் கலிபோர்னியாவில் பனி மூடிய சாலையில் சிக்கித் தவித்த முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பாண்களை சாப்பிட்டு உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 81 வயதான ஜெர்ரி ஜோரெட் (Jerry Jouret), கலிபோர்னியாவின் பிக் பைனில் உள்ள தனது வீட்டிலிருந்து நெவாடாவின் கார்ட்னெர்வில்லில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். Inyo County Sheriff's Office இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பிப்ரவரி 24 அன்று தனது…
-
- 0 replies
- 751 views
-
-
சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு Published By: Sethu 10 Mar, 2023 | 09:42 AM சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார். 69 வயதான ஸீ ஜின்பிங்,…
-
- 37 replies
- 2.1k views
- 1 follower
-
-
3 படகுகளில் தத்தளித்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் இத்தாலிய படையினரால் மீட்பு Published By: SETHU 12 MAR, 2023 | 11:33 AM அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்டிருந்த 3 படகுகள் மத்திய தரைக்கடலில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதால், ஆயிரத்துக்கும் அதிகமான குடியேற்றவாசிகள் இத்தாலியின்; இரு துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர் இத்தாலிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இத்தாலிய கடற்பகுதியில் 3 படகுகள் தத்தளிப்பதை அவதானித்ததை அடுத்து, நேற்றுமுன்தினம் பாரிய மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என இத்தாலிய கரையோர காவல் படை தெரிவித்துள்ளது. பெரும் எண்ணிக்கையானோர் ஏற்றப்பட்ட மீன்பிடி படகு, கடும் அலைகளினால் அச…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது : அமெரிக்கா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுடனான உறவை இந்தியா விரைவில் முடித்துக் கொள்ளப் போகிறது என அமெரிக்கா நினைக்கவில்லை. உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடனான தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இந்தியா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனின் எதிர்வரும் விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர்…
-
- 4 replies
- 933 views
-
-
ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்! உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாகச் சேதப்படுத்தப்பட்டன. ஆனாலும், இன்னும் உக்ரைன் – ரஷ்யா இடையே எந்தச் சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வெளியிட்டிருக்கிற அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது …
-
- 132 replies
- 7.6k views
- 2 followers
-
-
ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்! ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார்…
-
- 13 replies
- 1.4k views
-
-
தென் சீனக் கடலில் ஊடகவியலாளர்களுடன் பறந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை வெளியேறுமாறு உத்தரவிட்ட சீனக் கப்பல் Published By: SETHU 10 MAR, 2023 | 04:31 PM தென் சீனக் கடல் பகுதியில், ஊடகவியலாளர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் கரையோரக் காவல் படையின் விமானமொன்றை அங்கிருந்து வெளியேறுமாறு சீனக் கப்பலொன்றிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதிகளுக்கும் அங்குள்ள தீவுகளுக்கும் சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் உரிமை கோருகின்றன. இந்நிலையில், ஸ்பிராட்லி ஐலன்ட்ஸ் எனும் சிறிய தீவுப்பகுதிகளை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் குழுவொன்றை பிலிப்பைன்ஸின் கரையோர காவல் படை விமானமொன்று நேற்ற…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
கடலில் 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்: உயிர்க் குலத்தை அச்சுறுத்தும் 'மிதக்கும் நோய்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜியார்ஜினா ரன்னார்டு பதவி,பிபிசி கால நிலை, அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலக பெருங்கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் மொத்த எண்ணிக்கையை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு வேலையற்ற வேலை என்று தோன்றுகிறதா? அந்த பிளாஸ்டிக் உங்களை, நம்மை என்ன செய்யும் என்று படித்துவிடுங்கள். பிறகு அப்படி நினைக்கமாட்டீர்கள். சரி மீண்டும் எண்ணிக்கைக்கு வருவோம். …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் ஆளுனர் அலுவலகத்திற்குள் வெடிவிபத்து- 3 பேர் பலி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுனர் அலுவலகத்திற்குள் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆளுனர் உட்பட 3 பேர் பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற நிலையில், அங்கு, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதையடுத்து, பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு, பொதுஇடங்களில் ஹிஜாப் அணிந்து செல்லல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி, அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்து வருவது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் மாகாணத்தின் தலைநகர் மஸார் –இ ஷெரீப்பில் உள்ள ஆளுனர் அலுவலகத்திற்…
-
- 0 replies
- 469 views
-
-
5,000 மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் – கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான் சுமார் 5,000 பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகளில் ஈரான் இறங்கி உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகள் பயிலும் பாடசாலைகளில் மர்ம பொருள் வீசப்பட்டதாகவும், அதிலிருந்து வெளியான ந…
-
- 0 replies
- 331 views
-
-
சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம்: அமெரிக்க வலுசக்தி முகவரகம் Published By: SETHU 27 FEB, 2023 | 03:54 PM சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என அமெரிக்காவின் வலுசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் அவ்ரில் டேனிக்கா ஹெய்ன்ஸின் அலுவலகத்தின் இரகசிய அறிக்கையொன்றில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வோல் ஸ்ரீட்ட் ஜேர்னல் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எவ்வாறு வெளிவந்தது என்பது தீர்மானிக்கப்படவில்லை என அமெரிக்க வலுசக்தி திணைக்களம் முன்னர் கூறியிருந…
-
- 5 replies
- 949 views
- 1 follower
-
-
ரஸ்யாவின் யுத்தகுற்ற ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்க பகிர்ந்துகொள்வதை பென்டகன் தடுக்கின்றது - நியுயோர்க் டைம்ஸ் Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 11:48 AM உக்ரைனில் ரஸ்யாவின் பாரியமனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதி;மன்றம் ரஸ்யாவிற்கு எதிரான விசாரணைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா உதவினால் அது ஒரு முன்னுதாரணமாக அமைந்து எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ப…
-
- 1 reply
- 680 views
- 1 follower
-